ஊரும் ருசியும்...... இந்த பகுதியை நிறைய பேர் படித்து "அட, இது ரொம்ப நாளா எனக்கு தெரியாம போச்சே" என்று ஆச்சர்யப்பட்டது நடத்தது, இன்னும் சிலர் நான் அந்த ஊரை விட்டு வந்து ரொம்ப நாள் ஆச்சு ஆனால் அதுதான் எனது சொந்த ஊர் அங்க என்ன பேமஸ் என்று கேட்டனர்.... இதற்கெல்லாம் விடை தேடித்தான் இந்த பயணம் ! இந்த முறை கிருஷ்ணகிரி.......அங்க என்ன பேமஸ் ?! புட்டு பணியாரம்..... புட்டு என்பதை கேள்வி பட்டிருக்கிறோம், பணியாரம் என்பதை கேள்வி பட்டிருக்கிறோம், ஆனால் என்ன புட்டு பணியாரம் என்று கேட்பவர்களுக்கு.............. கொஞ்சம் பொருங்க சார், எச்சில் வடியுது கொஞ்சம் தொடைசிக்கறேன் !!
பணியாரம் தமிழர்களின் தொன்ம பலகார வகைகளில் ஒன்று. சிறு தெய்வ வழிபாடுகளில் பணியாரம் சுட்டு வழிபடுவது முக்கிய சடங்கு. நீத்தார்களுக்கான நினைவேந்தல்களிலும் இது பிரதான இடம் வகிக்கும். தமிழகத்தில்வாழும் பல இனங்களுக்கு பணியாரம் என்பது பாரம்பரியத்தின் குறியீடாக விளங்குகிறது. செட்டிநாட்டில் எல்லா விழாக்கள்,பண்டிகைகளிலும் வெள்ளைப் பணியாரம் தவறாது இடம்பெறும். குழிப்பணியாரம் தென் மாவட்ட மக்களின் விருப்ப உணவு. டெல்டா பகுதி மக்களின் வாழ்க்கையில் கலந்தது பருப்பு பணியாரம். ஈழத்தில் பனங்காய் பணியாரம் முக்கிய சிற்றுண்டி.வெளி நாடுகளில் இருந்து வந்து குவியும் விரைவு உணவுகள், தமிழர்களின் பாரம்பரியமும் சத்தும் மிகுந்த பல கிராமிய உணவுகளை வழக்கொழியச் செய்து விட்டன. பணியாரமும் அந்த அலையில் அடித்து செல்லப்பட்ட பதார்த்தம்தான்.ஆனால், கிருஷ்ணகிரியில் புட்டுப்பணியாரம் தான் பிரதான உணவு. பரோட்டாக் கடைகளுக்கு இணையாக பணியாரக்கடைகள் !!
பாட்டி வடை சுட்ட கதையை கேட்ட உங்களுக்கு இங்கு பாட்டி புட்டு பணியாரம் சுடும் கதை ! கிருஷ்ணகிரியில் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்தாலே புட்டு பணியாரம் சுடுவதை பார்க்கலாம். இருந்தாலும் நல்ல பணியாரம் சாப்பிட வேண்டும் என்றால் மார்க்கெட் ரோட்டில், பழைய போஸ்ட் ஆபிஸ் எதிரே இருக்கும் தெருவில் ஒரு மரத்தின் அடியில் ஒரு பாட்டி இதை சுடுகிறார்..... இதைதான் எல்லோரும் விரும்பி சாப்பிடுகின்றனர். இவரது பெயர் சந்திரா, சுமார் 19 வருடங்களாக இந்த புட்டு பணியாரம் விற்கிறார் !! நான் இந்த இடத்திற்கு செல்லும்போது தூரத்தில் இருந்து பார்த்தபோதே பலரும் வந்து வாங்கி செல்வதை காண முடிந்தது. காலை 9 மணி முதல் பொழுது சாயும் வரை வியாபாரம் நடக்கிறது என்றால் இது இங்கு எவ்வளவு பிரபலம் என்று புரிந்து கொள்ளுங்கள் !
நான்கு பங்கு பச்சரிசி. ஒரு பங்கு புழுங்கல் அரிசி. புழுங்கல் அரிசியின் கால் பங்குக்கு உளுந்து. கொஞ்சமாக வெந்தயம். அரிசி வகையறாக்களை 1 மணி நேரமும், உளுந்து, வெந்தயத்தை அரை மணி நேரமும் ஊறவைக்க வேண்டும். முதல் நாள் இரவு அரைத்து, எல்லாவற்றையும் ஒன்றாக்கி கரைத்து வைத்தால் நல்லது. பணியாரத்தின் உப்பல் தன்மைக்கு புளிப்பு அவசியம். வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி, புதினா இவற்றை வதக்கி வைத்துக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாகப்
போட்டுக் கலந்து புட்டுக்கல்லில் ஊற்ற வேண்டும். பெரும்பாலும் பெரிய இட்லித்தட்டு கணக்கான 21கண்μள்€ புட்டுக்கல்லையே எல்லோரும் வைத்துள்ளார்கள். பாட்டி கொஞ்சம் மாவை எடுத்து கொஞ்சம் பணியார தட்டை எடுத்து தண்ணி தெளிக்க இங்கே எனக்கு எச்சில் ஊறியது ! கொஞ்சம் கொஞ்சமாக பதமாக குழியில் விட்டு அந்த பணியார சட்டியை மூடி வைக்கிறார். சிறிது நேரம் கழித்து அதை திறந்து பணியாரத்தை திருப்பி போட ஒவ்வொன்றும் தங்கம் போல தக தகவென மின்ன ஆரம்பிக்கின்றது. கண்கள் எனக்கு பெரிதாக விரிய ஆரம்பிக்க.... இன்னும் சிறிது நேரத்தில் முழுதாக வெந்த பணியாரத்தை (6 பணியாரம் 10 ரூபாய்) எடுத்து வைத்து அதற்க்கு தக்காளி சட்னி, பொட்டுக்கடலை சட்னி, சாம்பார் என்று ஊற்ற இங்கே ஒரு எச்சில் ஆறு ஓட ஆரம்பித்தது !
முதலில் அதை ஒரு வாய் பியித்து சூடு பறக்க முதலில் தக்காளி சட்னியில் அதை தொட்டு ஒரு வாய் வைக்க..... ம்ம்ம்ம்ம்ம் சும்மா அதிருதுல்ல !! கார பணியாரம் என்பதை வீட்டில் சுடும்போது சிறியதாக இருக்கும், இரண்டு முறையில் ஒரு பணியாரம் காலியாகும். இங்கு பணியாரம் பெரிய சைஸ், பணியாரத்தில் நிறைய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் ஒவ்வொரு கடிக்கும் வருகிறது. நான்கு பணியாரம் சாப்பிடும்போதே வயிறு நிரம்பி விடுகிறது ! அடுத்த வாய் தேங்காய் சட்னி, பின்னர் சாம்பார் என்று சாப்பிட முதலில் பணியாரத்தின் வெளி மொறுமொறுப்பு தட்டுப்பட அடுத்து உள்ளே இருக்கும் மெதுமெதுப்பு தெரிய ஆரம்பிக்கிறது. சட்னியில் தொட்டு தின்க்கும்போது அட நல்லா இருக்கே என்று தோன்றுகிறது. சட்டி சட்டியாய் பணியாரம் சுட்டு வைத்தாலும் நிறைய பேர் வந்து வந்து வாங்கி செல்கின்றனர். கிருஷ்ணகிரி மக்களே..... நீங்க ரொம்பதான் கொடுத்து வைச்சவங்க !
அடுத்த முறை கிருஷ்ணகிரி பக்கம் செல்பவர்கள் நிறுத்தி நிதானித்து இதை சாப்பிட்டு செல்லுங்கள். உங்களது வசதிக்காக மேப் கீழே கொடுத்து இருக்கிறேன்........ எனக்கும் அப்படியே பார்சல் கொடுக்கலாமே !! :-)
Labels : Oorum Rusiyum, Krishnagiri, Puttu Paniyaaram, Suresh, Kadalpayanangal, District special food
எங்க வீட்டுலயும் பணியார சட்டி இருக்கு. என்ன அதை கேஸ் ஸ்டவ்ல வச்சா ஒரு பக்கம் வேகுது. மறுபக்கம் மாவா இருக்கும். அதனால, தூக்கி பரண்ல தூரப்போட்டுட்டேன். பதிவு போடவாவது அதை தேடி எடுக்கனும்.
ReplyDeleteplease try and write about இளம்பிள்ளை என்ற ஊரில் கிடைக்கும் முட்டை பணியாரம், it is located in salem dt
ReplyDeleteசுவை ஊட்டுகிறது பதிவு! பணியாரம் செய்ய சொல்லிட வேண்டியதுதான் நாளைக்கு!
ReplyDeleteBoss try this one (http://www.chennaifoodie.com/2013/08/iftar-mosque-road-frazer-town-bangalore.html)
ReplyDeleteits Ramzan month and its open now. I am in Bangalore for past 8 years and came to know about this recently and tried yesterday this is really awesome.
தீணிக்கு என்று ஒரு வரைபடமே இருக்கிறதா
ReplyDeleteசபாஷ்
என்னோட பிறந்த மாவட்டம் தான் ... அங்கே பல கடைகள் பார்த்திருக்கிறேன். என்றோ ஒரு நாள் அப்பா வாங்கி வந்து சாப்பிட்டும் இருக்கிறேன்... ஆனால் அங்கு இதுதான் ஸ்பெஷல் என்பதை நீங்கள் சொல்லித்தான் கேள்விப்படுகிறேன்... எங்க வீட்லயே செய்வோம் ... நீங்க சொன்ன மாதிரி குட்டி குட்டியாய்...
ReplyDeleteவணக்கம
ReplyDeleteஅண்ணா.
எப்படியான கடைகளை தேடி எடுக்கின்றீர்கள் என்று நான் பல தடவை சிந்தித்துள்ளேன்... தேடலுக்கு முதலில் பாராட்டுக்கள்.. அண்ணா. இருந்தாலும் எங்களை விட்டுப்போட்டு சாப்பிடுவது.... கவலையாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நல்லதா தேடித்தேடி சாப்பிட்டு ஒங்க கன்னமே பணியாரம் மாதிரித்தான் இருக்கு.....................
ReplyDeleteஏங்க நல்லா உப்புன பூரி மாதிரி இருக்க கன்னத்த பாத்து, பனியாரம்னு சொல்ரிங்க.
Deleteஅவரும் ரொம்ப இளைச்சுட்டோம்னு நெனச்சுக்க போறாரு...
என் விருப்பம் கார பனியாரம். உங்கள் நினைச்சாலே பொராமையா இருக்கு ஜி. எவ்ளோ இடங்கள் எவ்வளவு உணவுகள்.. அசத்துங்க !!!!
ReplyDeleteஇதுக்குப் பேரு குழி பணியாரம்.
ReplyDeleteஇந்த குழி பணியாரததிணை 1968 வருடம் எனது 8 வது வயதில் கிருஷனகிரியில் தினமும் சாபிட்டது எனக்கு இன்னமும் நினைவில் உள்ளது
ReplyDelete