போத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றால் எவ்வளவு சட்டைகளை பார்க்கிறீர்கள், சுமார் ஐந்தாயிரம் இருக்குமா.... அதை சற்று விரிவுபடுத்தி பார்ப்போமே, அந்த ஊரில் இருக்கும் ரெடிமேட் சட்டை கடை எத்தனை இருக்கும்..... சுமார் ஆயிரம், அவற்றில் இருக்கும் சட்டைகளையும் எண்ணி பார்த்தால் சுமார் ஐந்து லட்சம், அப்போது எல்லா ஊர்களையும் சேர்த்தால் சுமார் ஐம்பது கோடி, அப்போ எல்லா மாநிலத்தையும் சேர்த்தால்...... எத்தனை கோடி ரெடிமேட் சட்டைகள் வேண்டும் ?! இப்படி கோடி கோடியாக விற்ப்பனைக்கு சட்டை வேண்டும் என்றால் அது எங்கு தயாராகிறது என்று தெரியுமா....... மதுரையில் இருந்து சுமார் நாற்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நத்தம் என்னும் ஊரில் !! இந்த ஊர் ஸ்பெஷல் பகுதி எழுதும்போது எல்லோரும் கேட்க்கும் ஒரு கேள்வி "எப்படி தெரியாத ஒரு ஊருக்கு போய் அங்க இப்படி ஸ்பெஷல் என்று சொல்வதை சேகரிக்கிறீர்கள், அதுவும் அவர்கள் எப்படி உங்களை படம் எடுக்க விடறாங்க என்பதுதான்...... அதை
"யாதோ ரமணி" என்னும் தளத்தில் கவிதைகளில் கலக்கும் ரமணி சாரும் கேட்டார், ஊர் ஸ்பெஷல் பகுதிக்கு செல்லும்போது தானும் வருவதற்கு விருப்பம் தெரிவித்தார்......... இந்த முறை எனக்கு தெரிந்த ஒரே செய்தி "நத்தம் அப்படின்ற ஊர்ல ரெடிமேட் சட்டை பேமஸ்" என்பதுதான், இதில் ரமணி சாரும் இணைந்து எனது செய்தி சேகரிப்பை பார்த்தது சந்தோசம் !!
 |
நத்தம் "ரெடிமேட் சட்டை" உலகம் !! |
 |
தெருவுக்கு தெரு ரெடிமேட் சட்டைகள் தயாரிக்கும், விற்கும் கடைகள் |
திண்டுக்கல்லில் இருந்து காரைக்குடி செல்லும் சாலையில் 32 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது நத்தம். ஊருக்குள் நுழையும்போது எந்த வித்யாசமும் தெரியவில்லை, எல்லா ஊரிலும் இருப்பது போன்ற கடைகள்தான். நத்தம் பேருந்து நிலையத்திற்கு எதிரில் இருக்கும் எந்த தெருவிலும் நுழைந்து சற்று நடந்து சென்றால் எங்கும் ரெடிமேட் சட்டை தயாரித்து கொண்டு இருக்கின்றனர். எல்லா தெருவிலும் நீங்கள் தையல் மெசின் ஓடும் சத்தத்தை கேட்க முடிகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் சட்டைகள் தயார் செய்யப்படுகின்றது. ஒரே மாதிரியான சட்டைகள் எடுக்கவேண்டும் என்று விரும்பும் கல்லூரி மாணவர்களாகட்டும், திருமணம் போன்ற விசேஷங்களுக்கு விலை மலிவாகவும் அதேசமயம் தரமானதாகவும் சட்டைகளை வாங்க நினைப்பவர்களாகட்டும், அனைவருக்கும் ஒரே 'சாய்ஸ்’ நத்தம்தான் !!


சட்டை..... இதை பற்றி என்ன தெரியும் நமக்கு ?! இந்த பயணத்தில் நிறைய தெரிந்து கொண்டேன். பொதுவாக எனக்கு சட்டை என்றால் அது முழுக்கை சட்டை அல்லது அரைக்கை சட்டை என்று மட்டுமே தெரியும். அங்கே சென்று எனது சைஸ் என்னவென்று தேர்ந்து எடுத்துவிட்டு பணம் கொடுத்து வாங்கி வர தெரியும் அவ்வளவுதான்..... இதுவரை சட்டையை நான் கூர்ந்து பார்த்தது இல்லை !! நத்தம் சென்று இருந்தபோது ஒரு சட்டை உருவாவதை நுணுக்கமாக, நெருக்கமாக பார்க்க முடிந்தது. ஒரு சட்டையை பகுதி பகுதியாக பிரித்து பார்த்தால், ஆச்சர்யம்தான்..... ஒவ்வொன்றும் சிறிது சிறிதாக சேர்ந்து உங்களுக்கு வந்து சேரும்போது அழகுதான்..... நீங்களும், சட்டையும் !! கீழே இருக்கும் ஒவ்வொரு படமும் சட்டையின் ஒவ்வொரு பகுதியையும் உங்களுக்கு சொல்லும் !
 |
சட்டையின் பகுதிகள்...... ஆச்சர்யமாக இல்லை ! |
 |
சட்டையின் ஒவ்வொரு பகுதியின் பெயர் ! |
 |
ஒரு சட்டை உருவாக இத்தனை பகுதியை கட் செய்ய வேண்டும் ! |
ஒரு சட்டையை பார்த்தாகிவிட்டது, ஆனால் ஒவ்வொரு சட்டையிலும் ஒவ்வொரு பகுதிக்கும் நிறைய டிசைன் வித்யாசம் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா ? உங்களது சட்டை காலரை என்றாவது கவனித்து இருகிறீர்களா ? அதன் ஸ்டைல் பெயர் என்னவென்று தெரியுமா ? காலரிலேயே பல வகை இருக்கிறது, கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசம்தான், ஆனால் ஒவ்வொன்றும் உங்களது ஸ்டைலை சொல்லும். முழுக்கை சட்டை போட்டு இருப்பவர்கள் கொஞ்சம் கவனித்தால் உங்களது கை பகுதியிலும் நிறைய ஸ்டைல் உண்டு ! அது மட்டுமா பாக்கெட் கூட நிறைய வகை உண்டு சார் !! இப்படி ஒவ்வொரு சட்டையும் ஒவ்வொரு வகையில் வித்யாசம். இனிமேல் கடைக்கு சென்றால் கொஞ்சம் கவனித்து பாருங்களேன்....... எடுத்தோம், பணம் கொடுத்தோம், போட்டு கொண்டு சென்றோம் என்று இல்லாமல் அது உங்களுக்கு எப்படி தைக்கப்பட்டு இருக்கிறது என்றுதான் பாருங்களேன் !
 |
நீங்கள் அணிந்து இருக்கும் சட்டையின் காலர் எந்த ஸ்டைல் தெரியுமா ?! |
 |
முழுக்கை சட்டையின் கை பகுதி இவ்வளவு வகையாக இருக்கும் |
 |
சட்டென்று சொல்லுங்கள் உங்களது சட்டை பாக்கெட் என்ன ஸ்டைல் ! |
 |
சட்டை பட்டன்தானே என்று சும்மா நினைக்காதீங்க, இவ்வளவு வகையான சட்டை இருக்கு !! |
நத்தம் பகுதிக்கு துணிகள் எல்லாம் கொண்டு வரப்பட்டு, அதை ஒருவர் மொத்தமாக வாங்கி அதன் டிசைன் எல்லாம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்துக்கொண்டு அதை காண்டராக்ட் அடிப்படையில் ஒவ்வொரு கடைக்கும் அல்லது மொத்தமாக ஒருவருக்கும் என்று ஆர்டர் கொடுத்து விடுகிறார். ஆர்டர் கிடைத்தவுடன் ஒருவரே சட்டையின் மொத்த பகுதியையும் செய்வதில்லை !! ஒவ்வொருவரும் ஒவ்வொரு பகுதியை செய்கின்றனர், உதாரணமாக சட்டை காலரை மட்டுமே ஒருவர் செய்கிறார், ஒருவர் சட்டையின் கை பகுதி மட்டும் என்று. இது குடிசை தொழில் போல ஒவ்வொருவரும் ஒவ்வொரு பகுதியை செய்து அது ஒரு இடத்திற்கு வருகிறது. அந்த இடத்திலும் கூட ஒவ்வொரு பகுதியையும் எல்லோரும் இணைப்பதில்லை, ஒரு சில பகுதிகள் மட்டுமே இணைக்கப்படுகிறது, அது இன்னொரு இடத்திற்கு சென்று ஒரு முழுமையான சட்டையாக உருவாகிறது !
 |
சட்டையின் ஒரு பகுதி இங்கே தயாராகிறது ! |
 |
சட்டையின் இன்னொரு பகுதி இன்னொரு இடத்தில...... |
 |
ஒவ்வொரு வீதியிலும், ஒவ்வொரு கடையிலும் இப்படி சட்டையின் பகுதிகள் தயாராகிறது. |
 |
சட்டையின் எல்லா பகுதிகளும் இங்கே ஒரு சட்டையாக உருவாகிறது !! |
 |
மேஜிக் நடக்கும் இடம் ! |
 |
செய்திகள் சேகரித்தது உங்கள் சுரேஷ் ! |
கொஞ்சம் நுணுக்கமாக சட்டையின் ஒரே ஒரு பகுதியை மட்டும் பார்ப்போமே, அதை புரிந்துக்கொண்டாலே இந்த சட்டையினை நீங்கள் ஆச்சர்யமாக பார்ப்பது உறுதி ! நீங்கள் பெருமையாக நினைக்கும்போது காலரை தூக்கி விட்டு கொள்வது உண்டு இல்லையா, அந்த காலரில் எத்தனை பகுதிகள் இருக்கின்றன என்று தெரியுமா ? கீழே இருக்கும் படத்தினை பாருங்களேன்..... ஒரு காலரில் மட்டும் ஏழு பகுதிகள் இருக்கின்றன. நீங்கள் காலரின் நுனி பகுதியை தொட்டு பார்த்தால் கொஞ்சம் புடைப்பாக தெரியுமே அது டிப் எனப்படும் ஒரு பிளாஸ்டிக். அதை சரியாக வைத்து தைக்காவிட்டால் நீங்கள் பெருமையாக தூக்கி காட்ட முடியாது !! ஒரு காலரிலேயே இவ்வளவு என்றால் மொத்த சட்டைக்கும் எவ்வளவு இருக்கும்..... அப்போ காலரை தூக்கி விடுவதில் தப்பே இல்லை !
 |
சின்ன காலர், பெரிய வேலை ! |
 |
காலரில் வைக்கப்படும் பிளாஸ்டிக் டிப் பகுதி ! |
சரி சட்டை ரெடி, ஆனால் இதை அயன் செய்து உள்ளே அட்டை வைத்து, குண்டூசி குத்தி என்று ஒரு வேலை இருக்கிறதே, அது எவ்வளவு பெரிய வேலை தெரியுமா ? சட்டை தைப்பது கூட உட்கார்ந்து செய்து விடலாம், ஆனால் இந்த வேலையை நின்றுகொண்டேதான் செய்ய வேண்டும். ஒரு சட்டையை எடுத்து எப்படி மடிக்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா ? கீழே இருக்கும் படத்தை பாருங்களேன், அதன்படியே செய்து அயன் செய்து பிளாஸ்டிக் கவர் போட்டு தர வேண்டும். மிகவும் கடினமான வேலை இது ! ஒரு சட்டையை இனிமேல் எடுத்து கசக்குவதுர்க்கு முன் இனி சற்று யோசியுங்களேன் !
 |
சட்டையை நல்லா பளபளன்னு தயார் செய்யலாம் வாங்க ! |
 |
சட்டையை இப்படிதான் மடிக்கணும் ! |
 |
வாங்க சார், சட்டையை மடிப்போம் ! |
 |
சட்டை ரெடி சார்..... நீங்க ரெடியா ! |
இப்போ சட்டை ரெடி, அதை மொத்தமாக வெளியே அனுப்பியது போக மிஞ்சும் துணிகளில் செய்தவற்றை அவர்களது கடைகளில் வைத்து விற்க்கின்றனர். வெளியில் 900 ரூபாய்க்கு கிடைக்கும் சட்டைகள் இங்கே வெறும் 250 ரூபாய்க்கு கிடைக்கிறது. இங்கே எந்த கடைகளில் நுழைந்தாலும் நிறைய வகைகள் கொட்டி கிடக்கின்றன...... வகை வகையாய் ! எந்த கடையினில் நுழைந்தாலும் கண்ணை கட்டுகிறது. ஒவ்வொரு கடையாய் ஏறி இறங்கி நீங்கள் வாங்கி இறங்கி வரும்போதுதான் தெரியும் எவ்வளவு பணம் மிச்சம் ஆகி இருக்கிறது என்று :-)
 |
சட்டைகளின் உலகம் ..... நத்தம் ! |
 |
நான் போட்டு இருக்கும் சட்டையை நான் பெருமையாக பார்க்கிறேன்..... இன்று முதல் ! |
எப்போதுமே எல்லோரும் சட்டையின் அளவை மறந்து விடுவர். சட்டையில் எத்தனை வகை அளவு இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதில் ஆண்கள் பெண்கள் என்று இருவகை உண்டு. கீழே இருக்கும் படம் உங்களுக்கு சட்டையின் அளவை பற்றி சிறிது சொல்லும்..... அடுத்த முறை சட்டை எடுக்க செல்லும்போது கொஞ்சம் சட்டையை காதலுடன் பாருங்களேன்....... அதுவே அதை செய்தவரின் உழைப்புக்கு மரியாதை !
Labels : Suresh, Kadalpayanangal, Oor special, District special, readymade, shirts, natham, Madurai, dindigul, special
எப்படீங்க இப்படி...? ஒவ்வொரு விளக்கமும் பிரமாதம்...
ReplyDeleteஎங்க ஊர் வழியாக நத்தம் செல்லவில்லையாதலால் உங்களிடம் டூ... ஹிஹி...
அண்ணா நீங்கள் எந்த ஊர்? திண்டுக்கல்தானே?. நான் நத்தம். மண்ணின் மைந்தனயே விட்டுவிட்டு சென்றுவிட்டார். நானும் அவருடன் டூ !!!
Deleteதங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன் சார் ! இது அநியாயம், உங்களை போன் பண்ணி கூப்பிட்டேன், நீங்கதான் வரமுடியலை அப்படின்னு சொன்னீங்க.... நாம ரெண்டு பேரும் இன்னும் ஒரு பெரிய ட்ரிப் போடலாம் வாங்க !
Deleteமண்ணின் மைந்தர் ஜெகதீஷ் அவர்களே, வாங்க நாம ரெண்டு பேரும் இன்னும் புதுசா தேடலாம்.... வம்பிலே ஏன் மாட்டி விடறீங்க :-)
Deleteநாம் உடுத்தும் சட்டையில் இவ்வளவு வேலை இருக்கிறதா? அடேயப்பா!
ReplyDeleteஅதை விட தகவல் சேகரிக்கும் வேலை.. கண்ணை கட்டுதே..
மிக்க நன்றி..
தங்கள் வரவுக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி தாஸ் ! உண்மைதான் செய்தி சேகரிப்பது என்பது எளிதான காரியமாக இல்லை !
Deleteexcellent collection.
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே !
DeleteThis city is next to singampunari ? Can you give me the address of the SHOP. I have been passed that city lot of times on way to my native, but i never know this information. Can you give me the shop address
ReplyDeleteYes. Senthil Muthiah. It's Near by Singampunari. No need of any shop address. You ask them Bagavathi Amman Kovil and you find so many shops near by that.You can Purchase, Where ever you like. Some shop's may not be interested on retail selling...
Deleteதங்கள் வரவுக்கும், கருத்திற்கும் நன்றி முத்தையா !! ஆம், ஜெகதீஷ் சொல்வது சரிதான், ஒரு கடை இரண்டு கடையல்ல காணும் எல்லாமே கடைகள்தான். சல்லிசாக வாங்கலாம்.
Deleteநன்றி ஜெகதீஷ், ஊர் பெருமையை நன்கு பெருமையோடு சொல்வதை கண்டு சந்தோசமாக இருக்கிறது !
என் ஊர் என் பெருமை !!! :)
DeleteThank you very much for your reply. But still i can't believe :) And also searched in the google with Natham and Shirts keywords
Deleteஎங்கள் ஊரின் சிறப்பை பற்றி பதிவிட்டமைக்கு கோடானு கோடி நன்றிகள் திரு.சுரேஷ் அண்ணன் அவர்களே !!!. அடுத்த முறை செல்லும் பொழுது கண்டிப்பாக எனக்கு தெரிய படுத்தவும்.
ReplyDeleteநன்றி ஜெகதீஷ், உங்கள் ஊருக்கு சென்று நீங்கள் சொன்ன இடத்தில சாப்பிட அடுத்த முறை சேர்ந்து போவோம் வாருங்கள் !
Deleteகண்டிப்பாக போகலாம். திண்டுக்கல் தனபாலன் அவர்களையும் அழைத்து செல்லலாம்.
Deletenatham is famous for parotta also. have u tried?
ReplyDeleteஇல்லை நண்பரே, எனக்கு அது தெரியாமல் போய் விட்டது, அடுத்த முறை அங்கு செல்லும்போது தவறாமல் ருசிக்கிறேன், தகவலுக்கு நன்றி !
Deleteசட்டை தானே அசட்டையாய் இருந்தேன் ,சட்டையைப்பற்றி ,சட்டையை அக்கு வேறு ,ஆணி வேறாய் பிரித்து காட்டி விட்டீர்கள் ,அருமை !
ReplyDeleteமனுஷனுக்கு தேவை மூன்று ...உணவை முடிச்சாச்சு ,இப்போ உடையை முடிச்சாச்சு ,அடுத்தது வீடுகள் பற்றிய ஆராய்ச்சி செய்வீர்களா ?
த ம 2
உங்களுக்கான என் நன்றி ,காண்க >>>http://www.jokkaali.in/2014/07/blog-post_8.html
உணவை முடிச்சாச்சா, தொட தொட அது அனுமார் வால் மாதிரி நீண்டுக்கொண்டே இருக்குது ஜி ! ஆனாலும் நீங்க சொல்வது சரிதான் அதையும் ஒரு கை பார்த்திடறேன்..... தங்கள் வரவுக்கும், கருத்திற்கும் நன்றி !
Deleteகட்டாயம் அடுத்த முறை திண்டுக்கல் செல்லும் போது நத்தம் செல்வேன். அசத்தல் சுரேஷ்.
ReplyDeleteமிக்க நன்றி மேடம் !
Deleteஅட்டகாசம் சார் ! ! எவ்வ்வ்வ்வ்வ்ளவு தகவல்கள் ! ! பிரமிப்பாக இருக்கிறது
ReplyDeleteநன்றி பொன் சந்தர்...... இந்த பிரமிப்பு என்ற இந்த வார்த்தைகளுக்குத்தான் இவ்வளவு சிரம பட்டேன் !
Deleteஒரு சட்டைக்குள் இத்தனை தகவல்களா? வியக்க வைத்தது! மதுரை சந்திப்புக்கு வந்தால் கட்டாயம் நத்தம் சென்று வர வேண்டும்! நன்றி!
ReplyDeleteதங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே, மதுரை பதிவர் சந்திப்பில் உங்களை சந்திக்க ஆவலாய் இருக்கிறேன் !
Deleteஉங்கள் பிடிவாதம் எனக்கு ரொம்பவே பிடிக்கின்றது. மற்றவர்கள் எப்படி வேண்டுமானாலும் எழுதிட்டு போகட்டும். ஒரே பாதை. ஒரே நோக்கம் என்று பயன் உள்ள தகவல்களுக்காக ஊர்சுற்றியாக இருக்கும் உங்களுக்கு என் வாழ்த்துகள். இந்தப் பதிவு எனக்கு மிக முக்கியமான ஒன்று. சேமித்து வைத்துக் கொள்ள வேண்டிய ஒன்று. தொழில் முனைவோர் பலருக்கும்நிச்சயம் உங்கள் பதிவு பலன் உள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ReplyDeleteஉங்கள் பார்வைக்கு சில தகவல்கள்.
எந்த இடத்தில் இருந்து உங்கள் முகத்தை வைத்து எடுத்தாலும் சற்று கவனமாக புகைப்படம் எடுக்க முயற்சிக்கவும். ஒவ்வொரு முறையும் அதில் மட்டும் கோட்டை விட்டுக் கொண்டே இருக்குறீங்க. கொஞ்சம் மெனக்கிட்டு உங்கள் அழகான முகத்தை பதிவு செய்யவும்.
ஒவ்வொரு புகைப்படத்தையும் எடுத்து முடித்து விட்டு அதன் அளவை சுருக்கி அதன் பிறகு பதிவில் ஏற்றவும்.
கட்டாயம் தொடர்பு கொள்ள அலைபேசி எண்கள் போன்றவற்றை கொடுத்தால் பலருக்கும் உதவியாக இருக்கும். தொழிலில் இருப்பவர்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும்.
நல்வாழ்த்துகள் நண்பரே.
நன்றி சார் ! உங்களோடு நேற்று பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, உங்களது எழுத்துக்களை ரசிப்பவன் நான், நீங்கள் எனது முயற்சியை பாராட்டியது கண்டு மகிழ்கிறேன். நமது ஊரில் இப்படி நிறைய இருக்கிறது என்று தெரிந்த பின்பு இதை கண்டுபிடித்து செல்வது மிகவும் சந்தோசமாக இருக்கிறது, அந்த முயற்சியை நீங்கள் சொன்னதுபோல தொடர்ந்து கொண்டே இருக்க உங்களது உற்சாகம் கொடுக்கும் வார்த்தைகள் உறுதுணையாக இருக்கும் !
Deleteகண்டிப்பாக நான் இனிமேல் புகைப்படம் எடுக்கும்போது கவனமாக இருக்கிறேன். அளவையும் சுருக்கி இனி ஏற்றுகிறேன்.
இனி விலாசத்தையும், போன் நம்பர் கிடைத்தால் கொடுக்கிறேன், அது பயன் கொடுத்தால் சந்தோசமே.
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி சார் !
தங்கள் பதிவுகளின் தீவீர ரசிகன் நான்
ReplyDeleteஎப்படி இப்படி நுணுக்கமாகத் தகவல்களைச்
சேகரிக்கிறீர்கள் என்கிற மலைப்பு எனக்கு
உங்கள் ஒவ்வொரு பதிவைப்படிக்கையிலும் தோன்றும்
அதற்காகவே ஒருமுறையேனும் தாங்கள்
தகவல் சேர்க்கும் முறையைப் பார்த்தால்
நாமும் ஒன்று இப்படி முயலலாமே என்கிற
எண்ணம் இருந்தது,அதற்காகவே ஒருமுறை
உங்களுடன் வர விரும்பி நத்தம் தங்களுடன்
வந்தேன்..
இப்போது இந்தப் பதிவைப் படித்ததும் நிச்சயமாக
உங்களுடன் நூறு முறை வந்தாலும் என்னால்
தங்களைப்போல ஒரு பதிவு கூடத் தரமுடியாது
ஆண்டவன் உங்களுக்குக் கொடுத்துள்ள
தனித்திறமையை மிக அருமையாகப்
பயன்படுத்துகிறீர்கள்
ஆர்வமும் அதி அற்புதப் பதிவுகளும் விடாது
தொடர மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
நன்றி ரமணி சார் ! நீங்கள் என்னுடன் வந்தது எனக்கு மிகவும் சந்தோசம். உங்களோடு சென்று வந்த அந்த பயணம் நான் மிகவும் ரசித்தேன். நான் கொடுத்த தகவல்கள் எல்லாமே அங்கு சத்தம் இல்லாமல் பார்த்து வந்தது, அது இன்று இந்த வடிவம் எடுத்து இருக்கிறது.
Deleteஉங்களது பதிவுகளை பார்த்து வியப்பவன் நான், நீங்கள் எனது பதிவுகளை கண்டு வியப்பது கண்டு மகிழ்கிறேன். மிக்க நன்றி சார் !
ரமணி சாருடன் நத்தம் பயணம் அருமை நண்பரே
ReplyDeleteநாம் அணியும் சட்டை ஒருவர் தைத்தத என்றுதான் இதுவரை
நினைத்து வந்தேன். இத்துனைபேர் உழைப்பு இதில் அடங்கியிருப்பதை
இன்றுதான் அறிந்து கொண்டேன்
நன்றி நண்பரே
தங்களின் பயணங்கள் தொடரட்டும்
மிக்க நன்றி ஜெயக்குமார் ஜி ! ஒவ்வொரு பயணமும் உங்களுக்கு சந்தோசத்தை கொடுக்கிறது என்பது கண்டு மகிழ்கிறேன், வாழ்த்துக்கு நன்றி !
Deleteதங்களுடன் பயணித்தது போன்ற உணர்வை தந்தது உங்கள் கட்டுரை. வாழ்த்துக்கள். அருமை ! தொடரட்டும் உங்கள் பயணம்....
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே.... தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !
Deleteசுரேஷ்,
ReplyDeleteஉங்க பதிவுகள் அனைத்திலும் மகுடம் சூட்டிக்கொள்ளும் தகுதி இந்தப்பதிவுக்குத்தான் என்று என் மனம் சொல்லுது!
காலர் தைப்பது இன்னமும் எனக்குக் கொஞ்சம்(!) சிரமமே:( ரெண்டாயிரம் துணிகளைக் கெடுத்து முழு டெய்லர் ஆனவள் சொல்கிறேன், நம்புங்க!
அதி சூப்பர்!
ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன்..... அது போலவே நீங்களுமா :-) உங்களது மனம் திறந்த பாராட்டிற்கு நன்றி !
Deleteநுணுக்கமான தகவல்களுடன் சிரப்பான பகிர்வுகள்.பாராட்டுக்கள்.!
ReplyDeleteமிக்க நன்றி மணிகண்டன்..... நீங்கள் இந்த பதிவை ரசித்தது கண்டு மகிழ்ச்சி !
Deleteஅருமை...உங்கள் உழைப்பும்,தகவலும்.
ReplyDeleteநன்றி நண்பரே, தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் !
DeleteExcellent post. Thanks for sharing.
ReplyDeleteபிள்ளையார்பட்டி கோவில் செல்லும் வழியில் இந்த ஊரை பலமுறை கடந்து சென்று இருக்கிறேன். ஆனால் இப்படி ஒரு சிறப்பு நத்தம் நகருக்கு உள்ளது தெரியாமலே போய்விட்டது. பதிவிற்கு மிக்க நன்றி. அடுத்த முறை டிரஸ் பர்ச்சேஸ் நத்தம் தான்.
ReplyDeleteThanks to your posting
ReplyDeleteஎத்தனை பேரின் உழைப்பு ஒரு சட்டையில்.....
ReplyDeleteஅடுத்த தமிழகப் பயணத்தின் போது இங்கே செல்லும் உவகை வந்துவிட்டது சுரேஷ்.
மிக கடினமான வெகு நேரத்தை உள்வாங்கி கொண்ட பதிவு .உழைப்பு உள்ள பதிவுகள் காலத்தால் மறக்கவும் புறக்கணிக்கவும் முடியாதவை .அற்புதம் .மிக பபயனுள்ள பதிவு .
ReplyDeleteExcellent Writing!!!!!!! Thanks for the Information, Expecting More From you
ReplyDeleteஅசட்டையாக படிக்க ஆரம்பித்தேன் .முழுதும் விடாமல் படித்தேன் .
ReplyDeleteதையல்காரரின் உழைப்பு , வடிவமைப்பவர் , இஸ்திரி போடுபவர் ,
ஒருவரையும் விடாமல் யாவருடைய உழைப்பையும் உதாசீனப்படுத்தாது
உன்னதமான முறையில் வெளிக்கொண்டு வந்து உள்ளீர் நீங்கள்.
Hats off to you .
மணியன்
மிகவும் அருமையான தகவல்
ReplyDeleteசூப்பர் அருமை
ReplyDelete👍👍👍👍👍👍👍
ஃபோன் நம்பர் கூடுங்க
ReplyDeleteSuper tothgoodjob
ReplyDelete