Monday, July 7, 2014

இந்த பொறப்புதான்... நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது !!

"உன் சமையலறையில்" படம் வெளிவந்ததில் இருந்து ஒரே ஒரு பாட்டு மட்டும் மீண்டும் மீண்டும் பார்க்கவும், கேட்கவும் தூண்டியது அது.... "இந்த பொறப்புதான்...... நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது". அதை பார்த்துவிட்டு என்னுடைய மனைவி பிரகாஷ்ராஜ் பதிலா அங்க நான் உங்களைதான் பார்க்கிறேன் அப்படின்னு சொல்லிகிட்டே இருப்பாங்க. அந்த பாடலில் ஒவ்வொரு உணவையும் அப்படி காட்டி இருப்பார்கள் !! நேற்று என்னுடைய பதிவில் ஒரு முகம் தெரியாத நண்பர் ஒருவர் "a foodie project based on your foodventure" என்று சொல்லி ஒரு யூடியூப் வீடியோ ஒன்றை கொடுத்து இருந்தார்..... முதலில் அசுவாரசியமாக பார்க்க ஆரம்பித்த நான் வீடியோ முடியும்போது துள்ளி குதித்தேன் !!

 இந்த பொறப்புதான்... click this link to watch the video


இந்த வீடியோவில் ஆரம்பம் முதல் முடிவு வரை எனது பதிவுகளில் நான் போட்டு இருந்த அறுசுவை உணவகத்தை பற்றிய படங்கள், இதை அந்த பாட்டோடு பார்க்கும்போது சந்தோசமாக இருந்தது ! இதை உருவாக்கிய நண்பருக்கு நன்றி !! கலக்கிட்டீங்க நண்பரே !! ஆனா என்ன, என்னோட போட்டோவையும் கொஞ்சம் கொஞ்சம் போட்டு இருக்கலாம் :-), அது சரி Volume 1 என்றால் இன்னும் கொஞ்சம் வருமோ ?!


முகபுத்தகத்தில் சமீபத்தில் பிரெண்டு ரிக்வெஸ்ட் அனுப்பிய நண்பர்  Manik Kandan அவர்கள்               "தல நான் உஙக உணவுவேட்டையின் ரசிகன்......கடல் பயணங்களின் நீண்டகால ரீடர்..." என்று சொன்னபோது அவர் சொன்ன "உணவு வேட்டை" என்ற பதம் எனக்கு பிடித்து இருந்தது..... உண்மைதான் நான் தேடி தேடி சென்று ருசித உணவகங்கள் எல்லாம் ஒரு அழகான ருசியான வேட்டை, அதை ரசிக்க உங்களை போல நிறைய நண்பர்கள் உண்டு என்பது சந்தோசம்தான் !! இந்த நேரத்தில் பல பல நண்பர்களது பெயர்கள் நினைவுக்கு வருகின்றன, அவர்கள் எல்லோரும் எனது உணவு வேட்டையின்போது உடன் இருந்து ரசித்தவர்கள்......... நண்பர்களே உங்களுக்கும் எனது நன்றிகள் !!
 
 
 
Label : Suresh, Kadal payanangal, un samayal araiyil, arusuvai, others

13 comments:

  1. Replies
    1. ஜி, நாம போன உணவகத்தை பற்றி விரைவில் எழுதறேன் !

      Delete
  2. வணக்கம்
    அண்ணா.

    தங்களின் தகவலை பார்த்தவுடன் எனக்கும் மிக்க மகிழ்ச்சிதான்


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரூபன், இந்த மகிழ்ச்சி எல்லாம் உங்களை போல நண்பர்களின் ஆதரவில் கிடைத்தது !

      Delete
  3. வணக்கம்
    வீடியோ மிக அருமையாக உள்ளது பாடலும் நன்று வாழ்க வளர்க..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. Replies
    1. நன்றி நாகராஜ் சார், உங்களது பயண அனுபவங்களையும் இப்படி போட்டால் இன்னும் அருமையாக இருக்கும் !

      Delete
  5. Replies
    1. மேடம், உங்களின் பயண அனுபவமும் இப்படி செய்யலாமே !

      Delete
  6. Replies
    1. தங்கள் கருத்திற்கும், வரவுக்கும் நன்றி நண்பரே !

      Delete
  7. நன்றி அமரபாரதி !

    ReplyDelete
  8. Super video bro.do you know pournami days virundu hotel in vadapalani area?

    ReplyDelete