கடல் பயணங்கள்...... இந்த தளத்தின் பெயரே சொல்லும் கடல் மீது எவ்வளவு காதல் என்று. ஒவ்வொரு வருடமும் கடல் பார்க்காமல் எனக்கு தூக்கம் வருவதில்லை, இதனால் எப்படியாவது பீச் ரிசார்ட் சென்று விடுவது, கப்பல் பயணங்கள் என்று டைம் கிடைக்கும்போதெல்லாம் கடலை நோக்கி கிளம்பி விடுவேன். இந்த தடவை சமஸ் அவர்களின் சாப்பாட்டு புராணத்தை தேடி கொண்டு இருந்தபோது காரைக்கால் கடலில் கால் நனைத்து ஒரு காபி சாப்பிட்டு கொண்டு இருந்த ஒரு அதிக்காலை நேரத்தில் மீனவர்கள் கடலுக்கு தயாராகிக்கொண்டு இருந்தனர், சிலர் கடலில் இருந்து திரும்பிக்கொண்டு இருந்தனர் ! அவர்களது படகுக்கு அருகில் சென்று ஆசையோடு பார்த்துக்கொண்டு இருந்த என்னை நோக்கி....... என்ன சார், கடலுக்கு போகனுமா ? என்று கேட்க எனது கண்ணில் ஒரு மின்னல் மின்னியது !!
 |
"படகோட்டி" ஆகலாம் வாங்களேன் !! |
மீன் பிடி படகுகள், சிறிய படகில் வலைகளை எடுத்துக்கொண்டு நான்கு பேர் செல்லுவார்கள், பெரிய படகுகளில் அவர்கள் தங்குவதற்கு என்று ஒரு அறை இருக்கும், ஆனால் இந்த படகுகளில் அப்படி எதுவும் இருக்காது. காற்றோ, மலையோ, புயலோ அது கடலை பார்த்துத்தான் ! எப்போதுமே இந்த சிறிய படகுகளை பார்க்கும்போது இந்த வகை படகுகளில் கடலுக்கு சென்று அந்த காற்றை அனுபவிக்க வேண்டும் என்று தோன்றும், அவர்கள் கேட்டபோது மனம் ஆனந்தத்தில் துள்ளி குதித்தது. ஐநூறு ரூபாய் என்று முடிவானது, இப்படி படகில் ஆட்களை சிறிது தூரம் கூட்டி செல்வதற்கு இப்போதெல்லாம் போலீஸ் கெடுபிடி அதிகம் என்றும், தீவிரவாதி என்று விசாரணை வரும் என்றெல்லாம் சொன்னார்கள், இருந்தும் இந்த படகு பயணம் ஆரம்பம் ஆனது. சுமார் இருபத்தைந்து அடி படகின் நீளம், ஒரு பகுதியில் மோட்டார் செலுத்தும் இடமும், இன்னொரு பகுதியில் வலைகளும், பொருட்களும் வைக்கும் இடமும், நடுவில் நீங்கள் உட்கார்ந்து கொள்ளலாம் இல்லை பிடித்த மீன்களை கொட்டி கொள்ளலாம் !
 |
தண்ணீர் செல்லும் ஓட்டையும், படகும் ! |
 |
மீன் வலை குச்சி ! |
வலையை பார்த்தால் சிறியதும், பெரியதுமாக ஓட்டைகள் இருந்தது..... என்ன இது என்று கேட்க அதை பற்றி ஒரு பெரிய நீளமான பதிவு எழுதும் அளவுக்கு தகவல்கள். கடலில் இறங்கும் முன்னரே எவ்வளவு பணம் வேண்டுமோ அந்த அளவுக்கே மீன் பிடிக்க செல்கின்றனர் என்பது ஆச்சர்யமான தகவல். சுமார் ஐம்பதாயிரம் வரை மீன் பிடிக்க வேண்டும் என்று முடிவு செய்தால் அதை பிடித்து முடிக்கும் வரை கரை திரும்ப மாட்டார்களாம். அதே போல் மீன் வகையையும் முடிவு செய்துதான் உள்ளே இறங்குவார்கள், அதாவது இன்று ஐம்பதாயிரம் வேண்டும் அதற்க்கு கெண்டை, கெளத்தி வகை மீன்கள் (உதாரணம்தான் ...... அவர்கள் சொன்னது நிறைய வகை மீன்கள் ) என்று முடிவெடுத்து உள்ளே செல்கின்றனர். அது சரி, எப்போதுமே உயர் ரக வகை மீன்களை பிடித்தால் என்ன, நிறைய பணம் கிடைக்குமே என்ற என் கேள்விக்கு.... பேராசை பெரும் நஷ்டம் என்று கேள்விப்பட்டதில்லையா, அப்படி எல்லோருமே நினைத்தால் அந்த வகை மீன்கள் சுத்தமாக அழிந்துவிடும், பின்னர் என்ன செய்வது, அதை சிறிது பிடித்து, இன பெருக்கம் செய்ய விட்டு மீண்டும் பிடிக்க வேண்டும் இல்லையென்றால் இந்த கடலில் மீன் இனமே அழியும் என்றபோது அவர்களின் தர்ம சிந்தனை புரிந்தது.
 |
பல சைசில் வலைகள் ! |
எல்லோரும் ஏறி உட்கார எங்களின் பயணம் தொடங்கியது, படகின் உள்ளே உட்கார சுத்தமான இடம் என்று ஒன்றும் இல்லை ! படகின் உள்ளே தண்ணீர் வந்தால் அது தானாகவே வெளியேற படகில் சிறு ஓட்டைகள் உண்டு (படகில் ஓட்டை இருந்தால் மூழ்கிவிடும் என்றெல்லாம் சொல்வது தவறு !!).... எப்படி என்றால், எந்த மிதக்கும் பொருளும் கடல் நீரின் அளவு தண்ணீரைதான் உள்ளே வைத்துக்கொள்ளும், அதற்க்கு மேல் தண்ணீர் உள்ளே வராது, அது போலவே இந்த படகிலும் தண்ணீர் உள்ளே வந்தால் அது கடலுக்குள் போய் விடும், இதனால் படகின் உள்ளே தண்ணீர் உள்ளே வருவதும் செல்லுவதுமாக இருப்பதால் நீங்கள் உட்கார்ந்து எந்திரிக்கும்போது நீங்கள் நனைவது உறுதி எனலாம் ! கரையில் இருக்கும்போது எதுவும் தெரியவில்லை, படகு சிறிது தண்ணீருக்குள் சென்றவுடன் ஆட்டம் தொடங்கியது, நெளிவு சுழிவோடு படகை செலுத்திக்கொண்டிருந்தார் படகுக்காரர் !!
 |
கடல் பயணம் தொடங்கியது....... |
 |
ஏலேலோ ஐலசா..... அழுத்திபோடு ஐலசா..... |
படகை சிறிது தூரம் செலுத்திக்கொண்டு செல்லும்போது சில படகுகளில் மீனவர்கள் கரைக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர், அந்த சிறிய படகில் சுமார் ஐந்து பேர் நின்று கொண்டு வர, நாமும் நிற்ப்போமே என்று கொஞ்சம் எந்திரிக்க முனையும்போதே தள்ளிவிட்டது அலைகள், அதை பார்த்து பதறிய படகோட்டி எங்களை சத்தம் போட்டு நாங்க எல்லாம் இதிலே பிறந்து வளர்ந்ததினால் இந்த ஆட்டம் ஒன்னும் செய்யாது, நீங்கள் இப்போ வந்துட்டு எந்திரிக்க நிற்க ஆசைபடறீன்களே என்று சத்தம் போட்டார் ! அங்கு செயற்கை கரை இருந்ததால் அதை தாண்டி செல்லும்வரை கடலின் பிரம்மாண்டம் என்பது தெரியவில்லை, ஆனால் அந்த கரைகள் மறைய மறைய உங்களது முன்னே எங்கும் தண்ணீர், அது சிறிது உங்களது முகத்தில் தெறிக்கும்போது நீங்கள் எவ்வளவு சிறிய உயிரினம் என்பதை உணர முடியும் !
 |
மீனவர்கள் இன்னொரு படகில் கரைக்கு திரும்புகின்றனர்...... |
 |
கடலின் பிரமாண்டம் பிரமிக்க வைக்கிறது....... இந்த பதிவை போலவே இல்லையா ?! |
கடலின் உள்ளே செல்ல செல்ல படகோட்டி இன்னும் மோட்டாரை உயிர்ப்புடன் வைத்து இருக்க, அதுதான் கொஞ்சம் உள்ளே வந்தாச்சே கொஞ்சம் ஆப் பண்ணி வையுங்க, டீஸல் மிச்சமாகும் என்று சொல்ல, அவரோ அதை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக படகை செலுத்திக்கொண்டே இருக்க வேண்டும் இல்லையென்றால் படகு தள்ளாட ஆரம்பிக்கும் என்று சொல்ல, அட பார்ப்போமே என்று அவரை மோட்டாரை ஆப் செய்ய சொன்னோம். அவர் ஆப் பண்ண கொஞ்ச நேரத்தில் படகு தள்ளாட ஆரம்பித்தது, கரையை நோக்கி வரும் அலைகள் படகை தள்ள அது அப்படியும் இப்படியும் ஆட எங்களால் சமாளிக்க முடியவில்லை, உதவிக்கு கத்த அவர் மீண்டும் மோட்டாரை ஆன் செய்ய ஆரம்பித்தார், சிறிது நேரத்தில் சம நிலையில் வர இங்கே உயிர் மீண்டும் எங்களது படகினுள் ஏறியது ! அப்போ எப்போவுமே மோட்டார் ஆன் பண்ணியே இருக்கனுமா என்று கேட்க, அவரோ மனுஷ பயல்களின் ஆட்டமும் அலையின் ஆட்டமும் எல்லாமுமே நிலத்தில் மட்டும்தான், நடு கடலுக்கு சென்றுவிட்டால் கடலும் மனசும் அமைதியாத்தான் இருக்கும் என்று சொல்ல எவ்வளவு பெரிய தத்துவத்தை இவ்வளவு சுளுவா சொல்லிட்டார் என்று தோன்றியது !
 |
கரை திரும்பும் படகுகள் ! |
அந்த படகை திரும்பவும் கரையை நோக்கி திருப்ப, கொஞ்சம் கொஞ்சமாக கரையை நெருங்கினோம். கடலின் உள்ளே செல்லும்போது அடித்த அந்த குளிர் காற்று, கரையை நோக்கி வர வர சூடாக ஆரம்பித்தது. ஒரு வழியாக கரையை நெருங்கியவுடன் அவருக்கு நன்றி சொல்லி படகை விட்டு இறங்கும்போது, சில சமயங்களில் உங்களது ஐடி கார்டு, பணம் எல்லாம் எடுத்து போனால் இந்த சிறிய படகில் தண்ணீர் நனைத்துவிடாதா என்று கேட்க, அவர் ஒரு சிறிய பகுதியை திறந்து காண்பிக்க அங்கே ஒரு சிறிய அறை தெரிந்தது, அதில்தான் எல்லாமும் வைத்து கொள்வார்களாம், இதன் உள்ளே தண்ணீர் செல்ல முடியாது என்றனர்.
 |
ரகசிய அறை ! |
ஒவ்வொரு மீனவரின் படகிலும் ஒரு குச்சியில் தக்கைகளை குத்தி வைத்து இருந்தனர், ஒவ்வொன்றும் கலர் கலராக விதம் விதமாக இருந்தது. இது அவர்கள் வலையை போட்டு விட்டு போகும்போது இது மிதந்து கொண்டு இருக்குமாம், இதன் கலர் அல்லது வடிவத்தை வைத்து இவர்கள் அது யாருடைய வலை என்று கண்டு கொள்வார்களாம். ஒவ்வொரு நாளும் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வரும் இவர்கள் வாழ்க்கையை ஒரு சில மணி நேரம் வாழ்ந்து பார்த்தேன் என்ற சந்தோசம் வந்தது. அந்த சில மணி நேரத்திலேயே இவர்களது வாழ்க்கையை நினைத்து சிறிது சோகமும் வந்தது, கரை தெரியா கடலில் செல்லும்போது சிங்கள ராணுவம் வந்து துப்பாக்கியை காட்டினால் எப்படி தப்பி ஓட முடியும் ?! அங்கு இருந்து வந்து எங்களது வண்டியில் ஏறும்போது காலில் ஒட்டி இருந்த மண் உதறினாலும் போக மாட்டேன் என்றது........ அந்த படகு பயணத்தின் நினைவுகளை போலவே !!
Labels : Suresh, Kadalpayanangal, Marakka mudiyaa payanam, memorable journey, Journey, small boat travel, boat, kaaraikal, fishing boat, trip
//அவர்களின் தர்ம சிந்தனை புரிந்தது./// hahaha..வழக்கம் போல் சூப்பர் அனுபவம் நண்பா.. நானே போய் வந்தது போல் உணர்ந்தேன்..!
ReplyDeleteநன்றி ஆவி, நாமும் ஒரு முறை இப்படி சாகச பயணம் போகலாம் நண்பரே !
Delete//இங்கே உயிர் மீண்டும் எங்களது படகினுள் ஏறியது// ஹா ஹா ஹா அருமை
ReplyDeleteஎன்னுடைய நெடுநாள் கனவு சார்.. என்றைகாவது ஒருநாளாவது ஒரு மீனவருடன் கடலுக்குள் சென்று வர வேண்டும் என்பது.. சாத்தியப்படுமா என்று தான் தெரியவில்லை :-)
தகவல் தேவைபட்டால் சொல்லுங்கள் சீனு, மூன்று நாட்கள் வரை அவர்களுடன் சென்று வரலாம்...... ஆனால் ஆபத்தும் உண்டு ! நன்றி !
Deleteவணக்கம்
ReplyDeleteபதிவை படித்த போது நானும் சென்றுவந்த ஒரு உணர்வுதான். மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
த.ம 3வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி ரூபன், தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் !
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete// அங்கு இருந்து வந்து எங்களது வண்டியில் ஏறும்போது காலில் ஒட்டி இருந்த மண் உதறினாலும் போக மாட்டேன் என்றது........ அந்த படகு பயணத்தின் நினைவுகளை போலவே !! // எனது கால்களிலும்/மனதிலும் மணல் ஒட்டிக்கொண்டுவிட்டது !!! நல்ல பதிவு !!!
ReplyDeleteநீங்கள் பதிவை ரசித்தது கண்டு மகிழ்ந்தேன் ஜெகதீஷ்...... இது போல ஒரு அனுபவம் வேண்டும், எங்கு செல்லலாம் சொல்லுங்களேன் !
Deleteஆகா
ReplyDeleteஅருமையாண பயணம்
வாழ்த்துக்கள் நண்பரே
நன்றி ஜெயக்குமார் சார்....... பயணம் எப்போதுமே அழகுதான் இல்லையா !
Deleteகடைசில சோகத்தை வச்சிட்டீங்களே....
ReplyDeleteசோகமா...... அட போங்க சரவணன், உங்களோடு போக முடியவில்லை என்ற சோகம்தான் தவிர வேறொன்றும் இல்லையே !
Deleteதுணிவான பயணம்! சிறக்க துணையாகும் படங்கள்!
ReplyDelete