டீ ...... எந்த நேரத்திலும், எந்த பொழுதிலும் நமது நாட்டில் குடிப்பது ! சிறு வயதில் ஒரு டீ ஐம்பது பைசாவில் இருந்தபோது இருந்து குடித்து பழகி இன்று ஒரு டீ என்பது பத்து ரூபாய் வரை வந்து நிற்கிறது, இந்த வளர்ச்சியில் டீயின் சுவை அப்படியேதான் இருக்கிறது, பணம் மட்டும்தான் வளர்ந்துக்கொண்டே இருக்கிறது இல்லையா ?! வெளிநாடு செல்லும்போது எல்லாம் ஒரு சில இடத்தில் டீ சாப்பிடும்போது ம்ம்ம்ம்ம்..... நல்ல சுவை என்று தோன்றும், ஆனாலும் அது எனக்கு பிடித்ததில்லை என்பதுதான் உண்மை, நமது ஊர் டீ கடைகளில் சாருக்கு, டீ கொஞ்சம் ஸ்ட்ராங்கா வேணுமா, ஆடை போடலாமா என்றெல்லாம் கேட்டு கேட்டு போடும் அந்த டீயின் சுவையே தனிதான் ! யோசித்து பாருங்கள், இதுவரை நீங்கள் குடித்த டீயில் காஸ்ட்லி என்பது எவ்வளவு, அதில் என்ன சுவை இருந்தது என்று யாபகம் இருக்கிறதா ?! சென்ற வருடத்தில் ஒரு முறை ஒரு ஸ்டார் ஹோட்டல் சென்று இருந்தபோது எல்லோரும் ஏதோ ஒன்று ஆர்டர் செய்து சாப்பிட, எனக்கு சிறிது வயிறு சரியில்லை என்றதால் ஒரு டீ மட்டும் சொன்னேன், சாப்பிட்டு முடித்து பில் வந்தபோது டீ மட்டுமே இருநூறு ரூபாய் !! வெளியே செல்லும்போது அந்த ஹோட்டல் மேனேஜரை கூப்பிட்டு என்ன சார் டீயில் ஏதேனும் தங்கம் கலந்து குடுத்தீங்களா, இவ்வளவு விலை ஆகுமா என்ன ? எந்த மாடாக இருந்தாலும் பால் வெள்ளைதான், வேண்டுமானால் மாட்டுக்கு நீங்கள் புண்ணாக்குக்கு பதில் முந்திரிகொட்டை போட்டு இருக்கலாம்...... டீ தூள் கொஞ்சம் கலந்து ஆற்றி கொடுக்க இருநூறு ரூபாயா என்று நான் கிண்டலாக கேட்க, அவர் உள்ளே சென்று ஒரு டீ தூள் பாக்கெட்டை எடுத்து வந்து எனக்கு காண்பிக்க........ அந்த டீ தூள் ஒரு கிராமின் விலை என்று ஆறு ரூபாய் என்று போட்டு இருந்தது !! அப்போது தோன்றியது, இந்த உலகத்தில் காஸ்ட்லியான டீ என்பது என்ன அது எப்படி இருக்கும், ஒரு முறையேனும் அதை சுவைத்து பார்க்க வேண்டும், அது எப்படி இருக்கும், எங்கு கிடைக்கும் என்று...... விடை என்னை மிகவும் ஆச்சர்யபடுதியது !!
இதுவரை நான் சாப்பிட்ட டீ எல்லாவற்றையும் யோசித்து பார்த்தபோது, இந்த காஸ்ட்லி டீ என்பது என்ன, அது எப்படி இருக்கும், எவ்வளவு ஆகும் என்று தேடியதில் கிடைத்தது என்பது.......
2. PG Tips Diamond Tea Bag: $15,000 Per Tea Bag
3. Panda Dung Tea: $70,000 per 1,000 grams
4. Vintage Narcissus Wuyi Oolong Tea: $6,500 per 1,000 grams
5. Tieguanyin Tea: $3,000 per 1,000 grams
6. Yellow Gold Tea Buds, $3,000 for 1,000 grams
7. Poo Poo Pu-Erh Tea: $1,000 per 1,000 grams
8. Gyokuro Tea: $650 for 1,000 grams
9. Silver Tips Imperial Tea from Makaibari Tea Estate: $400 per 1,000 grams
10. Tienchi Flower Tea: $170 per 1,000 grams
மேலே சொன்னவற்றை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள இங்கே சொடுக்கவும்..... காஸ்ட்லி டீ !!
இதை எல்லாம் பார்த்த பிறகு கண்டிப்பாக சமையல் அறைக்கு ஓடி போய் நாம இப்போ குடிக்கிற டீ தூள் ஒரு கிலோ என்ன விலை என்று பார்க்க தோன்றுகிறதா...... வீட்டில் பொதுவாக ரெட் லேபல் டீ உபயோகிக்கின்றனர், அது கால் கிலோ 97 ரூபாய், ஒரு கிலோ என்பது 388 ரூபாய்...... அதாவது 6.4 டாலர் !! அதாவது நீங்கள் குடிக்கும் டீயில் டீ தூளின் விலை என்பது தோராயமாக 1.14 ரூபாய் (0.019 டாலர்), மேலே சொன்ன முதல் தர ஒரு கப் டீயின் விலை 2.1 லட்சம் (3500 டாலர்) !! அதை தேடி கிளம்பினேன்..... டீ வேட்டை தொடங்கியது, கடைசியில் ஒன்றாம் இடத்தில் இருக்கும் டீ தூளை எட்ட முடியவில்லை என்றாலும் ஆறாம் இடத்தை பார்த்துவிட்டேன்....... ஜன்மம் சாபல்யம் அடைத்தது எனலாமா !!
உலகத்தின் காஸ்ட்லி டீயை குடிக்க முடியாவிட்டாலும் பார்க்கவாவது வேண்டும், அடுத்து நம்மால் முடிந்த அளவுக்கு கொஞ்சம் காஸ்ட்லி டீ ஒன்றை குடிக்க வேண்டும்...... இதுதான் ஆசை !! தேடல் சுமார் ஒரு வருடமாக இருந்தது, முடிவில் சிங்கப்பூரில் TWG டீ கம்பெனியின் கடை விலாசம் கிடைத்தது. சிங்கப்பூரின் ஆர்ச்சர்ட் ரோடு என்பது பணக்காரர்கள் மட்டும் சென்று பொருட்கள் வாங்கும் கடைகள் நிறைந்த பகுதி, அங்கு அயன் ஆர்ச்சர்ட் மால் என்பதில் கிடைப்பது எல்லாமுமே உலகின் தலை சிறந்த பிராண்டு கிடைக்கும் இடம் அங்கு இருக்கிறது இந்த TWG டீ சலோன் & பொட்டிக். அந்த இடத்தை நெருங்கும்போதே தங்கம் போல தகதகவென்று மின்னுகிறது அந்த கடை, ஒரு டீ கடை இப்படி ஹை கிளாஸ் ஆக இருந்து பார்ப்பது இதுதான் எனக்கு முதல் தடவை ! உள்ளே நுழையும்போதே மஞ்சள் பால் கேன் போன்ற நிறைய அடுக்கி வைக்கப்பட்டு இருப்பதை பார்த்து என்ன என்று பிரமிப்பு வருகிறது. உள்ளே நுழைந்து உட்கார மெனு கார்ட் கொடுத்தவுடன் கண்களை ஓட்டினால் எல்லாமுமே டீதான்........ சாப்பாடில் இருந்து, சாலட் வரை எல்லாவற்றிலும் !!
நாம் இதுவரை மசாலா டீ, இஞ்சி டீ, சுக்கு டீ என்றெல்லாம் சில வகைகள்தானே பார்த்து இருக்கிறோம், இங்கு சுமார் 800 வகை டீ இருக்கின்றன ! இந்த எண்ணூறு வகையின் உள்ளே நான்கு வகையாக பிரித்து வைத்து என்று ஆயிரம் வகைகளுக்கு மேலான டீ வகைகள் !! அவர்களுடன் பேசிக்கொண்டே எனது ஆச்சர்யத்தை வெளிபடுதினேன், அப்போது அவர்களது காஸ்ட்லி டீ வகையான "எல்லோ கோல்ட் டீ பட்ஸ்" இருக்கிறதா என்று கேட்க, அவரது முகத்தில் அவ்வளவு சந்தோசம் நான் அதை ஆர்டர் செய்ய போகிறேன் என்று ராஜ உபசாரம், நான் இல்லை வேறு டீதான் ஆர்டர் செய்ய போகிறேன் ஆனால் அந்த முதல் தர டீ வகையை பார்க்க ஆசைபடுகிறேன் என்று சொல்ல, இல்லை அது பொக்கிஷம் போல பாஸ்வோர்ட் கொண்டு பாதுகாக்கபடுகிறது என்றார்கள், அதை டீ போடுவதற்கு மட்டுமே வெளியே அரிதாக எடுப்பார்களாம், சும்மாவா தங்கத்தை விட காஸ்ட்லி ஆச்சே !! என்ன ஆர்டர் செய்யலாம் என்று பார்த்து முடிவில் வித்யாசமாக இருந்த மாக்டெயில் சொன்னேன், சாப்பிடவென்று சிக்கன் ஒன்று ஆர்டர் செய்தேன்..... அதிலும் டீ இருந்தது என்பதுதான் ஸ்பெஷல் !
காத்திருந்தபோது அங்கு இருந்த மஞ்சள் நிற டின்களை பார்த்தேன், ஒவ்வொன்றிலும் ஒரு நம்பர் இருந்தது. ஒவ்வொரு டீ தூளுக்கும் ஒரு பிரத்யேக நம்பர் உண்டு, அதை ஒருவர் கேட்க்கும்போது சரியான அளவில் வெயிட் போட்டு எடுத்து சுத்தமான டீ கோப்பையில் போட்டு, நல்ல கொதிக்க வைத்த தண்ணீரில் கொஞ்சம் கொஞ்சமாக கரைய வைத்து உங்களது முன்னே ஆவி பறக்க வைக்கும்போது அந்த வாசனையே அலாதியாக இருக்கும் !! முதலில் ஒரு வாய் சிப் செய்து அந்த சுவையை நாக்கின் ஒவ்வொரு பகுதியிலும் உணர்ந்து அனுபவித்து மகிழ்வதுதான் நீங்கள் கொடுக்கும் காசுக்கு மதிப்பு எனலாம் !! ஒவ்வொரு டீ தூளும் ஒவ்வொரு நாட்டில் இருந்து பிரத்யேகமாக பேக் செய்யப்பட்டு வருகிறது.......ம்ம்ம்ம் ஆச்சர்யம்தான் !!
எனது முன்னே வந்த மாக்டெயில் மேலோட்டமாக பார்த்தால் வெறும் ஆரஞ்சு ஜூசுதான், ஆனால் அதில் உலகின் மிக சிறந்த ஒரு டீ தூளை பதமாக கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி, அதை குடிக்கும்போது கொஞ்சம் ஜூஸ், கொஞ்சம் அந்த டீயின் சுவை என்று தெரிகிறது, அதில் அந்த டீயின் சுவையை உணர்ந்தபோது நான் இதுவரை சுவைத்த டீயின் சுவை அல்ல என்பதும், இதுதான் சுத்தமான டீயின் சுவை என்பதும் உணர முடிந்தது ! அதே போல சிக்கன் சமைக்கபட்டபோதும் ஒரு உயர் ரக டீ தண்ணீரை வைத்து சமைக்கப்பட்டு பரிமாறி இருந்தனர், உணவை சுவைக்கும்போது டீயின் சுவை..... உண்மையான டீயின் சுவை !!
முடிவில் அங்கு இருந்து கிளம்பும்போது திரும்பவும் அந்த மேனேஜரை கூப்பிட்டு, ஒரு முறை ஒரே ஒரு முறை அந்த "எல்லோ கோல்ட் டீ பட்ஸ்" தூளை பார்க்க வேண்டும் என்று சொல்லவும் அவர் என்ன செய்வது என்று முழித்து விட்டு, சரி வாருங்கள் என்று என்னை கூட்டிக்கொண்டு போய் அறையின் ஒரு கதவை திறந்து உள்ளே சென்று அந்த டின்னை எடுத்து வந்து ஒரு சுத்தமான கரண்டியை கொண்டு எடுக்க அந்த வாசனையே அலாதிதான், அதை நான் தொட முயன்றபோது அவர் வெகு கண்டிப்புடன் மறுத்துவிட்டார், போட்டோ எடுக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது ! ஆனால், நான் அதை பார்த்தது உண்மை... அந்த கணம் உலகில் என்னவெல்லாம் ஆச்சர்யம் இருக்கிறது என்று தோன்றியது !! அது சரி, நீங்க குடிச்ச டீ விலை என்ன அப்படின்னு கேட்கறீங்களா........ ஆயிரம் ரூபாய் :-)
எண்ணூறு வகை டீ என்பது என்ன, உலகில் இருக்கும் டீ வகைகள் என்ன என்று இங்கே பாருங்களேன்......
அங்கு இருந்த மெனு கார்டின் ஒரு பகுதி....... கவனித்து பாருங்கள், எல்லாவற்றிலும் டீ இருக்கும் !!
arumai
ReplyDeleteதங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி பாபு !
Deleteஅ"டீ" ஆத்தி! இம்புட்டு விலை கொடுத்து டீயா?
ReplyDeleteவாங்க பாஸ் ஒரு டீ சாப்பிடலாம், நீங்க பே பண்ணுங்க நான் தடுக்க மாட்டேன் :-)
Deleteஅசராம விட்டு விளாசுறிங்களே தல !!!
ReplyDeleteநானா, அட போங்க ஜெகதீஷ் இதை கண்டு பிடிப்பதற்குள் தாவு தீர்ந்துடுச்சு போங்க ! நன்றி !
Deleteரொம்பவே ஆச்சர்யமா இருக்கு! நான் பத்து ரூபா டீயைத் தாண்டியது இல்லை!
ReplyDeleteஹா ஹா ஹா, நானும்தான் தளிர் சுரேஷ், பத்து ரூபாய் டீ ரொம்பவே சுவை ! நன்றி !
Deleteஇப்ப'ட்டீ'யும் பல ட்டீ'க்களா?!!!
ReplyDeleteஆம் நண்பரே, இந்த பதிவை படித்து நீங்கள் ஆச்சர்யப்பட்டது கண்டு மகிழ்ந்தேன் !
Deleteஇலங்கையில் தோட்டத் தொழிலாளிகளுக்கு கொடுக்கப்படும்,கழிவு தேயிலை அதை" டஸ்ற்" என்பார்கள்.
ReplyDeleteஅதை அவர்களிடம் நாம் விலை கொடுத்து வாங்குவோம்.
நல்ல கொதிநீரில் ஒரு பிடி "டஸ்ற்" போட்டு வரும் கடும் சாயத்தில் நல்ல சுண்டக்காச்சிய பாலைவிட்டு அளவாக சக்கரை சேர்த்து ஆத்தி,விரல் சூட்டில் பிறவுண் நிறத்தில் இருக்கும், அந்தத் தேனீருக்கு இணை உலகில் இல்லையென்பேன்.
நன்றி யோகன், நீங்கள் சொல்வது சரிதான், நானும் கிராமத்தில் இருந்து வந்தவன்தான், அங்கு டீ கடைகளில் கொடுக்கப்படும் டஸ்ட் டீக்கு எதுவுமே இணையாகாது, அதைதான் முதல் பத்தியிலேயே சொல்லி இருக்கிறேன் !
Deleteபடிக்கப் படிக்க ஆச்சரியம். இத்தனை வகைத் தேநீரா? அதிலும் நீங்கள் விலை உயர்ந்த தேநீரை ருசி பார்த்திருக்கிறீர்கள். அதிசயம் தான். :) ஆனால் எனக்கு என்னமோ நம்ம இந்தியாவின் அசாம் தேயிலை(தேயிலை னா இலை தான் டஸ்டோ குறுமணல் போன்றதோ இல்லை) அதில் போடப்பட்ட தேநீர் தான் ரொம்பப் பிடிக்கும். அதன் அலாதியான வாசனை மூக்கை இப்போக் கூடத் துளைக்குது. ஒரு காலத்தில் மதியம் ஒன்றிலிருந்து இரண்டுக்கும் தேநீர் குடிக்கலைனா அன்றைய நாளே வீணாகத் தெரியும். அப்புறமா அந்தப் பழக்கத்தை மாற்றி விட்டேன். இப்போக் கூடக்காலை மட்டும் காஃபி பின்னர் மதியமெல்லாம் வேலை அதிகம் இருந்தால் தான் காஃபியோ, தேநீரோ அரை தம்பளர் தான். :))))
ReplyDeleteஹைய்யோ!!!!!!!
ReplyDeleteநல்லதோர் இடுகை. சிறந்த பகிர்வு.
ReplyDeleteநேரம் அமையும் வேளை இந்த சுட்டி உரல்களை பார்வையிட:
முடிந்தால் இதனை முயற்சித்துப் பாருங்கள். நல்ல ஒரு உட்கொள்ளக் கூடிய பண்டம்.
http://coconutboard.gov.in/coconut.htm#sugar
இது என்ன ஏன் எப்படி என்பது பற்றிய மேலதிக தகவல்களிற்கு, கீழ்க்கண்ட உரல்களினை உரசிப் பார்க்க.
http://demo.dodotechnologies.in/digest/index.php/health/item/410-palakkad-coconut-producer-company-and-cftri-join-hands-to-take-neera-to-newer-heights
http://www.coconutboard.nic.in/Producer-companies.htm
http://www.coconutboard.gov.in/
http://www.coconutboard.in/innov.htm
http://coconutboard.gov.in/coconut.htm#sugar
http://indpad.blogspot.in/2015/10/dovetailing-coconut-farmers-in-palakkad.html
தொடர்பு கொள்ள வேண்டின் : http://www.keralacoconut.com/contact-us
Padmanbhan B, Vice President - B2B sales,PCPCL +91 - 9495098243
------------****---------****----------****------------
http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/2016/02/blog-post_17.html
மிகவும் அருமையான பதிவு
ReplyDelete