Monday, August 25, 2014

அறுசுவை (சமஸ்) - சிதம்பரம் கத்திரிக்காய் கொத்சு !!

அடேங்கப்பா, உணவு பகுதியை ருசித்து படிப்பதற்கு இவ்வளவு பேர் இருக்கிறீங்களா, நீங்க படிப்பதோடு மட்டும் இல்லாமல் நிறைய தகவல்கள் வேறு தர்றீங்க..... சூப்பர் ! சமஸ் அவர்களுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருக்குது போல !! நண்பர் செந்தில்குமார் ராஜு எனது பதிவுகளை தவறாமல் படித்துவிட்டு, சென்ற முறை திருச்சி சென்று இருந்தபோது பார்த்தசாரதி விலாஸ் நெய் தோசையை சாப்பிட்டு இருக்கிறார், அதை தனது முகபுத்தகத்தில் போட்டு என்னை டேக் செய்து இருந்தது மகிழ்ச்சியை தந்தது....... இது போல நீங்களும் ரசிக்கும்போது, சந்தோசமாக இருக்கிறது !! சரி, வாருங்களேன் நாம் மறந்து போன, ஆனால் நாக்கில் நீர் வரவழைக்கும் ஒரு சைடு டிஷ் பற்றி பார்ப்போம்.


இட்லிக்கு தொட்டுக்கொள்ள எது சிறந்தது...... ஒரு பட்டிமன்றமே வைக்கும் அளவுக்கு நிறைய இருக்கிறது. தேங்காய் சட்னி, புதினா சட்னி, எண்ணை பொடி, வெங்காய சட்னி, தேங்காய் சட்னி, கருவாட்டு குழம்பு, மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு, கொத்தமல்லி சட்னி, வடை கறி, குருமா, தொக்கு, பாம்பே சட்னி, வேர்கடலை சட்னி, பூண்டு சட்னி, மாங்காய் சட்னி, வெங்காய சாம்பார், முருங்கைக்காய் சாம்பார், முள்ளங்கி சாம்பார், வத்தல் குழம்பு, கறிவேப்பிலை சட்னி, துவையல்கள், கீரை கடைசல், ஜீனி, புளிச்ச தயிர்...... எப்பா இப்போவே மூச்சு வாங்குது !! இது எல்லாமுமே எங்கும் கிடைக்கும் வகைகள், சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரையில் இருக்கும் எந்த உணவகத்துக்கும் சென்று உட்கார்ந்து இட்லி கேட்டால் மேலே இருப்பதில் ஏதோவொன்று உங்களது இலையில் விழும், ஆனால் இட்லிக்கு இது எல்லாவற்றையும் விட ஒரு பெஸ்ட் தொட்டுக்கை இருக்கிறது என்றால் அது கொத்சு.... அதுவும் சிதம்பரம் கொத்சு !!
 

சிதம்பரம்..... கும்பகோணத்தில் இருந்து இரண்டு மணி நேர பயண தூரத்தில் இருக்கும், கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ! சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றி தெரியாதவர் யாரும் இருக்க முடியாது, ஆனால் கொத்சு என்பது இங்கே பேமஸ் என்பது கண்டிப்பாக நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பில்லை ! உடுப்பி கிருஷ்ண விலாஸ்..... சிதம்பரத்தில் இப்படி ஒரு ஹோட்டல் இருப்பது கொஞ்சம் தேடி பார்த்தால்தான் தெரிய வரும், அந்த அளவுக்கு கொஞ்சம் உள்ளே தள்ளி இருக்கிறது. உள்ளே நுழைந்து செல்ல ஒரு பழைய காலத்து கட்டிடத்தில் ஒரு போர்டு இதுதான் உடுப்பி ஹோட்டல் என்று வரவேற்கிறது. ஹோட்டல் உள்ளே நுழைந்து பார்த்தால் அப்படியே இருபது வருடம் பின்நோக்கி பயணம் செய்தது போல ஒரு பீலிங். அந்த காலத்து பர்மா தேக்கு வைத்து செய்யப்பட்ட மேல் தரை, உள்ளே நுழையும்போதே கலர் கலராக சுண்டி இழுக்கும் பலகாரங்கள், நல்ல ஆடாத சலவை கல் மேஜை, சுவற்றில் தொங்கும் சாமி படங்கள், நல்ல காற்றோட்டமான சன்னல்கள் என்று அருமையான ஹோட்டல்..... என்ன வேணும் என்று இலையை போட்டு விட்டு எங்களை கேட்க, நாங்கள் எல்லோரும் ஒரே குரலில் கேட்டது...... கத்திரிக்காய் கொத்சு !! அவர் தலையை ஆட்டி விட்டு, சரி வேற என்று கேட்க நாங்க அதை கொண்டு வாங்க என்றபோது, எங்களை ஒரு மாதிரி பார்த்துவிட்டு சார், அது தொட்டுக்க நாங்களே தருவோம், சாப்பிட வேற என்ன வேண்டும் என்றபோதுதான் எங்களுக்கே உரைத்தது, கொத்சு மட்டுமேவா சாப்பிடபோறோம் !! அப்போது தூரத்தில் இருந்து இன்னொருவர் "கொத்சு தீர்ந்து போய் இருக்கும் அப்படின்னு நினைக்கிறேன்.... கொஞ்சம் பார்த்துட்டு சொல்லு" என்று சொல்ல இங்கே சிதம்பரம் நடராஜர் ஆடியது போல ஆட ஆரம்பித்தது மனது !!
 

அட ஆமாம் என்று சொல்லிவிட்டு அவர் இருங்க பார்த்துட்டு வரேன், என்று சொல்லிவிட்டு தள்ளி இருந்த மேஜைக்கு போய் தேட ஆரம்பிக்க எங்களுக்கு இங்கே ஒரே நேரத்தில் பத்து திகில் படத்தை பார்த்த எபக்ட் வந்தது, அவர் திரும்ப வந்து இருக்கு என்று சொன்னவுடன் பற்பசை விளம்பரத்தில் காண்பிப்பது போல எல்லோரும் பல்லை காட்டிக்கொண்டு சிரித்தது கண்டு அவர் என்ன நினைத்தாரோ !! ரெண்டு இட்லி என்று சொல்லிவிட்டு நாங்கள் காத்திருக்க ஆரம்பித்தோம், இலையில் தண்ணீரை தெளித்து சூடாக ரெண்டு இட்லி வந்து விழுக கொஞ்சம் சட்னி வைத்துவிட்டு அவர் ஒரு சின்ன கிண்ணத்தில் எடுத்து வந்தார் சிதம்பரம் கத்திரிக்காய் கொத்சு. எப்படி விவரிப்பேன் அந்த தருணத்தை.......
 

பிஞ்சு கத்திரிக்காய்களை பொடிசாக நறுக்கிக்கொண்டு, அதை நன்கு வேக வைக்க வேண்டும். பிஞ்சு கத்திரிக்காயை நல்லெண்ணெய் ஊற்றி வதக்கும் போது தள தள தள என்று ஓசை வருமே, கேட்டு இருக்கிறீர்களா, அத்தோடு வரும் வாசனை நாக்கில் எச்சில் ஊற வைக்கும் ! இப்போது, அதை கடாயில் போட்டு கொஞ்சம் எண்ணை விட்டு அதை உப்பு, மஞ்சள், புளி சேர்த்து வதக்க வேண்டும். இப்போது இளகிய அந்த கத்திரிகாயை நன்றாக அந்த காரத்துடன் மசிந்து, அதை சின்ன வெங்காயம் போட்டு வதக்கி கொஞ்சம் மிளகாய், கருவேப்பில்லை, காரமல்லி பொடி போட்டு இறக்க ஒரு நிறம் வரும் பாருங்கள், அது கண்களுக்கு..... அடுத்து வரும் வாசனை என்பது மூக்கிற்கு, அதை கொஞ்சம் உள்ளம்கையில் ஏந்தி நுனி நாக்கினில் கொஞ்சமே கொஞ்சம் நக்க, நாக்கு வேர்க்க ஆரம்பிக்கும் பாருங்கள், அடுத்த முறை கொஞ்சம் வாயில் எடுத்து போட அது எச்சிலில் வழுக்கி கொண்டு போகும் சத்தம் என்பது உங்கள் காதுகளுக்கு !! கொஞ்சம் புளிப்பு, கொஞ்சம் காரம், கொஞ்சம் மசாலா என்று சுண்டி இழுக்கும் கொத்ஸை ஏன் மற்ற ஊர்களில் போடுவதில்லை என்பது புரியாத புதிர்தான் !
 
கொத்சு செய்வது எப்படி என்று பார்க்க இங்கே சொடுக்கவும்...... சிதம்பரம் கொத்சு !!
 


ஒரு விள்ளல் இட்லியை பியித்து கொத்ஸின் மேல் முக்கி எடுத்து வாயில் போடும்போது, பஞ்சு போன்ற இட்லியுடன் வதக்கி இருந்த கத்திரிக்காயும், நல்லெண்ணையின் சுவையும் முதலில் தென்படும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அதன் காரமும், மணமும் உங்களை ஆட்கரமிக்க ஆரம்பிக்கும், முடிவில் இரண்டு இட்லி என்பது போதாது என்று தோன்றும். பொதுவாக சட்னியில் உப்பு காரமும், சாம்பாரில் புளிப்பும் இருக்கும் இதனால் இட்லியை இதனோடு சேர்த்து சாப்பிடும்போது இந்த சுவை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தெரிய ஆரம்பிக்கும், ஆனால் இங்கு கொத்சுவில் புளிப்பு, காரம், உப்பு எல்லாமும் இருக்க சட்னி போல கொஞ்சம் கெட்டியாகவும் இருக்கிறது, இதனால் ஒவ்வொரு முறை விளுங்கும்போதும் அந்த சுவை உங்களை கட்டி போடும். இட்லிக்கு மட்டும் அல்ல அடை, தோசை, தயிர் சாதம் என்று எல்லாவற்றுக்கும் கொத்சு என்பது சிறந்த நண்பன் !! 
 

பலருக்கும் இந்த கொத்சு என்பது பற்றி தெரியாததால் சிதம்பரம் செல்லும்போது சாம்பார், சட்னியுடன் முடித்து விடுகிறார்கள். நீங்கள் கும்பகோணம், சிதம்பரம் பக்கம் செல்பவராக இருந்தால் கண்டிப்பாக ஹோடேலில் கொத்சு இருக்கிறதா என்று கேட்டு சுவைக்கவும். இந்த பாரம்பரிய சுவையான ஒன்று இப்போது பாஸ்ட் புட் கலாசாரத்தில் வழக்கொழிந்து வருகிறது என்பது கொத்சு வைத்து இருந்த இடத்தில் இருந்தே தெரிந்தது. கொத்சு சாப்பிட்டு முடித்தவுடன், சிதம்பரம் நடராஜரை போலவே ஆனந்த கூத்தாடும் மனதும் உடலும், அதனோடு ஊர் திரும்புவது என்பது ஜென் நிலை அனுபவம் !! சமஸ் சார் நீங்கள் ஏன் இரண்டாவது சாப்பாட்டு புராணம் எழுத கூடாது.......!!
 

Labels : Suresh, Kadalpayanangal, Samas, Arusuvai, Chithambaram, sithambaram, kotsu, kothsu, amazing side dish, perfect companion, perfect side dish

25 comments:

 1. என்ன சார், இட்லி சாப்பிட்டேன்ங்கிறீங்க, இலைல அடைதான் இருக்கு ? இட்லி எங்கே வயித்துக்குள்ள இருக்குதோ ?

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா, என்ன சொன்னீங்க ஏவ்வ்வ், இட்லியா அது வைத்த நொடியிலேயே காலியாகிடுச்சே சார்...... தங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி சார் !

   Delete
 2. இந்த ஹோட்டலை மிஸ் செய்து விட்டேன். ஆனால் இன்னொரு சிறிய ஓட்டல் இரவு மட்டுமே திறப்பார்கள். அங்கேயும் இட்லி, கொத்சு சூப்பராக இருக்கும்.நான் வெஜ் ப்ரியர்களுக்கு சிதம்பரத்தில் மூர்த்தி பரோட்டா கடை சூப்பர் விருந்தளிக்கும்.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா, நல்ல தகவலா இருக்கே..... அடுத்த முறை செல்லும்போது ஜமாய்துவிடுவோம் ! அடுத்து கோயம்பதூரில் இது போல போகலாம் வரீங்களா !

   Delete
  2. // ஆனால் இன்னொரு சிறிய ஓட்டல் இரவு மட்டுமே திறப்பார்கள் //

   அந்த ஓட்டலின் பெயர் - "வாத்தியார் கடை"
   Its in S.P. Koil street near R.T. Velu studio.

   Delete
 3. வணக்கம் சார். பலமுறை அங்கு சாப்பிட்டு உள்ளேன். கத்திரக்காய் கொஸ்து கேட்டது இல்லை இனி கேட்கவேண்டும். உடுப்பி கிருஷ்ணாவிலாஸ் கோட்டலுக்கு செல்வதே அந்த பொங்கல் ஸ்பெஷலுக்குதான். அம்மா செய்து தரும் கத்திரிக்காய் கொஸ்தும் இட்லியும் நெஞ்சில் இனிக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக அடுத்த முறை செல்லும்போது வாங்கி சாப்பிடுங்கள் சார், என்ன இருந்தாலும் அம்மாவின் சமையல் அருமைதானே !! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சார் !

   Delete
 4. Replies
  1. ஹா ஹா ஹா, உங்களது டர்ன் வரும்போது எனக்கும் சொல்லுங்களேன், சேர்ந்தே போகலாம் !! நன்றி !

   Delete
 5. சுவையான அறிமுகம். அதென்ன இரண்டு இட்லியும் ஒன்று சிறிசாகவும், இன்னொன்று பெரிசாகவும் இருக்கு? ஆடை கூட கலர் சுண்டி இழுக்கிறது. கொத்ஸு செய்து பார்க்க வேண்டும். எங்கள் தோசை புராணம் பதிவில் எங்கள் ப்ளாக்குக்கு ஏதோ எழுதித் தருகிறேன் என்றீர்கள். எழுதித் தந்தால் நாங்கள் போடத் தயார்!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி ஸ்ரீராம் !! நீங்கள் தோசை பற்றி போட்ட பதிவுகள் ஒவ்வொன்றும் எச்சில் வரவழைத்தன, நானும் ஒரு தோசை பிரியனே, இன்னும் நிறைய தகவல்கள் இருக்கின்றன, ஒரு முறை எழுதி தருகிறேனே........ நீங்கள் எங்கு இருக்கிறீர்கள், ஒரு முறை சந்திப்போமே தோசையோடு :-)

   Delete
 6. Thank you very much friend, I liked your comments :-). The address is available in the google maps, also it is very easy to find it, go the Chidambaram temple, take the left in front of temple and take the second right, then you can find the street and anybody can help you ! Thanks for the mouth watering receipie... Don't forget to mail me your tasty comments once you tried it !

  ReplyDelete
 7. கொத்ஸ்ஸை நான் மதிச்சதே இல்லை. இனிமேல் ட்ரை செய்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் கண்டிப்பாக முயற்சி செய்து பார்க்க வேண்டிய ஒன்று, மிஸ் செய்யாதீர்கள் மேடம் !

   Delete
 8. சில நினைவுகள்

  6 வருடம் அந்த ஊரில் இருந்தும் இந்த ஹோடெல் பற்றி கேள்வி பட்டது கூட கிடையாது.
  அது ஒரு காலம். அப்போது ஹாஸ்டல் மெஸ்ஸில் தயிர் சாதமே தேவாமிர்தம் போல இருக்கும். (இதை படிக்கும் போது மண்டைஆட்டும் கெழடுகளே அதற்கு ப்ரூஃப்).
  மூர்த்தி கபே தவிர, நான்வெஜ் சாப்பிட தெற்கு ரத வீதியில் பாண்டியன் மெஸ் நம்பி செல்லலாம். அரசாங்க ஊழியர்கள் அங்கே தான் மதிய சப்பாட்டிற்கு கணக்கு வைத்திருப்பர்.
  இரவு ஏறால், மீன் நான் வெஜ் சாப்பாடு சாப்பிட மேற்கு ரத வீதியில் கஞ்சி தொட்டி ஸ்டாப் அருகே கோமள விளாசோ, மங்கள விலாசோ இருந்தது.
  இது தவிர நகர் முழுக்க இருந்த பல மெஸ்களில் (90% மட்டம்) வெல்லபிறந்தான் தெருவில் நாடார் மெஸ் மதியம் நான்வெஜ் சாப்பிட அருமையான இடம். குடித்தவருக்கு அவர் கண்டிப்பாக அனுமதி மறுத்தால், பலரும் அந்த மெஸ்சை பற்றி பேசவே இல்லை. இப்போது அவருக்கு வயசாகி சென்ற வருடம் மகன்கள் அவரை ரோட்டில் அனாதையாக விட்டதால், இன்று அந்த மெஸ் எந்த நிலையில் உள்ளதோ.
  போகவே கூடாத இடம் Double A மெஸ். சிக்கென் என்று சொல்லி கொக்கு கறி விற்றவர்கள். பரோட்டா போடும் போது சட்டியில் கருகும், உதிரும் துண்டுகளை மட்டும் வைத்தே முட்டை பரோட்டா போட்டு கல்லா கட்டிய கண்ணியர்கள்.

  ReplyDelete
  Replies
  1. நினைவுகள் எப்போதுமே சுவையானவையும், சுகமானதும் கூட...... இந்த பதிவு அதை கிளப்பிவிட்டதுதான் இதன் வெற்றி என்று சொல்லலாம். நீங்கள் கொடுத்த தகவல்களுக்கு நன்றி, அடுத்த முறை செல்லும்போது உபயோகப்படும் ! நன்றி !

   Delete
 9. கத்திரிகாய் கொஸ்து விட. பூசணிகாய்கொஸ்து அருமையாக இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. அஹா, அப்படியா ! அது எங்கே கிடைக்கும் என்று சொல்லுங்களேன்..... வீட்டில் செய்து தரவும் சொல்லி இருக்கிறேன் !

   Delete
 10. "ஒரு நிறம் வரும் பாருங்கள், அது கண்களுக்கு..... அடுத்து வரும் வாசனை என்பது மூக்கிற்கு, அதை கொஞ்சம் உள்ளம்கையில் ஏந்தி நுனி நாக்கினில் கொஞ்சமே கொஞ்சம் நக்க, நாக்கு வேர்க்க ஆரம்பிக்கும் பாருங்கள், அடுத்த முறை கொஞ்சம் வாயில் எடுத்து போட அது எச்சிலில் வழுக்கி கொண்டு போகும் சத்தம் என்பது உங்கள் காதுகளுக்கு !! "

  Mudiyalai sir! intha vishayam brinjal ku theriyuma??? sappaadu patri eluthum pothu oru thani flavour vanthuduthu! neenga sapdunga sir! :D

  ReplyDelete
  Replies
  1. நன்றி அதிதி..... உங்களை போன்றவர்களுக்கு உபயோகம் ஆகும் என்றுதானே சொல்கிறேன், அதில் கொஞ்சம் கூட குறைய இருக்கலாம் !! :-)

   Delete
 11. Kathirikkaa nan saptadhe kedaiyadhu.. But neenga sollumbothu, dhaiyiriyama sappittu pakkalam pola..

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக முயற்சி செய்யலாம் நீங்கள், அதுவும் இந்த கொத்சு நிச்சயம் ட்ரை செய்துவிட்டு சொல்லுங்களேன் ! நன்றி !

   Delete
 12. This Hotel is in the West car street (where all the shops are available), so whenever we go for shopping dinner will be in Udipi only. They make rose milk in house so it wont taste like mushy rose milk that we get in the bottles.

  ReplyDelete
 13. Please don't eat Meals here totally waste.
  PS: I don't know about other dishes in this hotel.

  ReplyDelete
 14. This place is on the West Car Street (mela veedhi), right before Ramar Koil your left when you go towards Kanji Thotti.

  ReplyDelete