எனது அறுசுவை பகுதிகளை விரும்பி படிப்பவர்கள் எல்லோரும் எப்படி இப்படி வித்யாசமாக தேடி பிடிக்கிறீர்கள், மற்ற பதிவுகளில் எல்லாம் தோசை, இட்லி, பிரியாணி கடைகளை பற்றி மட்டுமே எழுதும்போது, உங்களது பதிவுகளில் வித்யாசமாக உணவு வகைகளை பார்ப்பது சந்தோசமாக இருக்கிறது என்கிறபோது உண்மையிலேயே சந்தோசம் ! சரி, வாருங்கள் இந்த வாரம் பற்றி பார்ப்போம்........பொதுவாக வெளிநாடு செல்லும்போதெல்லாம் எனது தந்தை மிகவும் எனது உடல் நலத்தை பற்றி கவலை படுவார், எனது அம்மாவும் அங்க புளிச்ச மாவில் இட்லி சுடுவாங்களா, அங்க காய்கறிகளை நல்லா கழுவி சமைப்பாங்களா அப்படின்னு எல்லாம் கேட்பார்கள். எல்லாவற்றுக்கும் பொறுமையாக பதில் சொன்னாலும் அவர்களுக்கு புரிவதில்லை, இந்த முறை ஒரு காலை நேரத்தில் பெங்களுருவின் கோரமங்களா வரை செல்லவேண்டி வந்தது. பசிக்குது எங்கேயாவது சாப்பிடலாம் என்று எனது அப்பா சொன்னபோது பட்டென்று நினைவுக்கு வந்தது...... அவரை இந்த வெள்ளைக்காரன் சாப்பாட்டை சாப்பிட சொன்னா என்னவென்று ?!
கோரமங்களா பகுதியில் ரோட்டின் மேல் இருக்கும் "ஹோல் இன் தி வால் காபே" (தூய தமிழில் சொல்வதென்றால் - செவுத்துல ஓட்டை கபே !!). நாங்கள் சென்று இருந்தபோது காலை மணி எட்டு, அங்கு சென்று சேரும் வரை எனது அப்பாவிடம் இங்க எல்லாம் ஆளுங்க அதிகமா வர மாட்டாங்க, நமக்கெல்லாம் எப்போவுமே இட்லியும் சாம்பாரும் மட்டுமே என்றெல்லாம் சொல்லிகொண்டு வந்தேன். காரை நிறுத்தி விட்டு வந்தால் ஹோட்டல் முன்பு ஒரு சிறிய லைன் நின்று கொண்டு இருந்தது, எட்டி பார்த்தால் உள்ளே இடம் இல்லையாம் !! சுமார் கால் மணி நேரம் சென்ற பின்பு இடம் கிடைத்தது. உள்ளே பார்த்தால் யாரும் வெள்ளைக்காரன் இல்லை, நம்ம ஊரு ஆட்கள்தான், அதுவும் சில பேர் குடும்பம் குடும்பமாக வருகிறார்கள் !! ஒரு டேபிளில் உட்கார்ந்தவுடன் முள்கரண்டி, ஸ்பூன் மற்றும் கத்தி ஆகியவகைகளை மூனெ வைத்துவிட்டு, ஒரு சிறிய துண்டையும் வைத்து விடுகின்றனர். சாப்பிட என்ன வேணும் என்று என் அப்பாவிடம் கேட்க ஒரு முழி முழித்தார் பாருங்கள்.......!!
![]() |
இங்கிலீஷ் பிரேக்பாஸ்ட் !! |
இருந்த பசிக்கு பிரட் எடுத்து வெண்ணையை தொட்டு சாப்பிட ஆரம்பிக்க, நான் அப்பாவிடம் இல்லை பிரட்டை இடது கையில் வைத்து அங்கு இருந்த பிரட் ஸ்ப்ரெட்டரை (கவனிக்க அது கத்தி இல்லை), அதை வைத்து பிரட்டுக்கு வலிக்காமல் வெண்ணையை தடவணும். அதை சாப்பிடும்போது தூள் விழுகும், அது டிரஸ் மேல் படாமல் இருக்க அங்கு கொடுத்த துணியை தொடையின் மேல் (உங்க தொடை சார்) போடா வேண்டும், சாப்பிடும்போது அவ்வப்போது நாசுக்காக உதட்டை ஒத்தி எடுக்க வேண்டும். அடுத்து நாங்கள் கேட்ட மெயின் கோர்ஸ் (நாங்க படிக்க போகலை சார்...இங்க சாப்பாட்டை கோர்ஸ் என்பார்கள்) வந்தது. அப்பா சாப்பிடாமல் இருக்க, சாப்பிடுங்க என்று சொல்லும்போது போடா, பிரட் சாப்பிடவே இவ்வளவு சொல்ற இதை சாப்பிட என்ன என்ன பண்ணணுமோ என்றார் !!
இதைதான் சாப்பிடறானா இந்த வெள்ளைக்காரன் !! |
ஏண்டா, ஏன் இந்த கொலைவெறி ! என்று மிரட்சியுடன் பார்க்கும் என் தந்தை ! |
இடது கையில் போர்க் எடுத்துக்கோங்க, வலது கையில் கத்தி எடுத்துக்கோங்க கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடுங்க என்று சொல்லிவிட்டு சிறிது நேரம் சென்று நிமிர்ந்து பார்க்க, அவர் ஒவ்வொன்றையும் சிறிது சிறிது வெட்டி வைத்திருந்தார்...... சலிப்புடன் இருந்த அவரை பார்த்து கையால் சாப்பிடலாம் வாங்க என்று ஆரம்பித்தோம் !! முதலில் எதில் இருந்து சாப்பிட ஆரம்பிக்க வேண்டும் என்றெல்லாம் இல்லாமல் விருப்பத்திற்கு சாப்பிட ஆரம்பித்தோம்..... பக்கத்தில் இருந்த இந்தியாவில் பிறந்த வெள்ளைகாரர்கள் (?!) எல்லாம் எங்களை ஒரு மாதிரி பார்க்க ஆரம்பித்ததை கவனிக்க முடிந்தது. ஆனால் ஒரு வழியாக எல்லாவற்றையும் முடித்து நிமிர்ந்தோம். சுவை என்று சொல்வதென்றால் இந்திய உணவு வகைகளை உண்டவர்களுக்கு எதுவுமே உப்பு, காரம் என்று இல்லாமல் இருக்கும். கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு நிரம்பியது மாதிரி இருக்கும் என்று தெரிந்து கொள்வது உத்தமம். ஆனால், என்னை கேட்டால் எப்போதாவது ஒரு நாள் சாப்பிடலாம், ஆனால் இட்லிக்கு சட்னிதான் ரொம்பவே ருசி !
பஞ்ச் லைன் :
சுவை - உப்பு, காரம் இல்லாத உணவு. ஆனால், வெள்ளைகாரர்கள் அப்படி என்னதான் சாப்பிடுவார்கள் என்று அறிய வேண்டும் என்றால் சுவைக்கலாம் !
அமைப்பு - சிறிய உணவகம், பார்கிங் வசதி இல்லை, கூட்டமும் ஜாஸ்தி !
பணம் - ரொம்பவே ஜாஸ்தி, இரண்டு பேருக்கு அறுநூறு ரூபாய் வருகிறது ! (ரெண்டு ஆம்பலேட், கொஞ்சம் ப்ரெட், கொஞ்சம் கறி..... இதுக்கு இவ்வளவு !)
சர்வீஸ் - நல்ல மரியாதையாய் சர்விஸ் செய்கிறார்கள்.
மெனு கார்டு:
மெனு கார்டு:
இம்பூட்டு பணம் கொடுத்து சாப்பிட வர்றவங்களுக்கு மரியாதை தராம எப்படியாம்? அதான் அப்படி சர்வீஸ். நீங்க வர்ணிச்சிருக்கற விதத்தப் பாத்தா எனக்கு இங்கிலீசுல்லாம் ஒத்து வராதுன்னுதான் தோணுது. (படிக்கற காலத்துலயே இங்கிலீசு தகராறுதான்ங்கற வேற விசயம்) அதனால இங்க பார்த்து ரசிச்ச படங்களோட நிறுத்திக்கறேன்.
ReplyDeleteபால கணேஷ் சார், உங்களுக்கு சரிதாயணம் சாப்பாடுதான் சரி, இல்லையென்றால் பூரிகட்டைதான் வரும் போல :-) நீங்கள் சொல்வது சரிதான் சார், நம்ம ஊரில் இட்லியை சாம்பாரில் தொட்டு தின்பது என்பது என்ன ஒரு அனுபவம் தெரியுமா !
Deleteவணக்கம் தந்தையை பார்த்ததில் சந்தோஷம். நன்றி
ReplyDeleteநன்றி ராஜேஷ் சார், நீங்கள் இந்த பதிவை படித்து, கருத்து இட்டது கண்டு மகிழ்ச்சி, எனது தந்தை உங்களது பதிவுகளின் ரசிகர் தெரியுமா !
Deleteசீனியர்... அப்பாவுக்கும் ஒரு காட்டு காட்டுட்டீங்க போல??? :) :) :)
ReplyDeleteஹா ஹா ஹா, ஆடு தானா வந்து இன்னைக்கு பிரியாணியா அப்படின்னு கேட்டுச்சு கார்த்திக் !
Deleteஅப்பாவுக்கு வணக்கம். இந்தியாவில் இந்த இங்லீஷ் எனக்கு வேணாம். தமிழே போதும்.
ReplyDeleteஉலகம் சுற்றும் உங்களுக்கும் இதுதானே பிடிக்கும் என்று பார்த்தேன் ! நன்றி !
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபாவம் உங்கள் அப்பா. வீட்டுக்கு வந்தாவது பிரியாணி கொடுத்தீர்களா ?
ReplyDeleteநாம எப்போ பாட்டி கடைக்கு போவோம் சார்?
நன்றி ரங்கநாதன்....... அவருக்கு அன்னைக்கு பிரியானியெதான் !! நீங்க சொல்லுங்க, ஒரு நாள் நாம போவோம்.
Deleteவணக்கம்
ReplyDeleteஅண்ணா.
தாய்மொழி தமிழ் போதும...ஆங்கிலம் வேண்டாம்..அப்பாவுடன் சுவைப்பது ஒரு சுகந்தான். பகிர்வுக்கு நன்றி..
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014 போட்டி...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி ரூபன், ஆம் நீங்கள் சொல்வது சரிதான் தமிழே சிறந்தது, நன்றி !
Deleteநமக்குத் தமிழ் சாப்பாடே போதும்! இங்கிலிஷ் கொஞ்சம் அலர்ஜி!
ReplyDeleteதங்கள் வரவுக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ் ! ஆம், வெள்ளையனே வெளியேறு !! :-)
Deleteகாலையிலே கொலைவெறி..... :))))
ReplyDeleteஹா ஹா ஹா, டெல்லி பக்கம் இதை சுவைத்து இருக்கீங்களா ?!
Deleteஉங்களோட அப்பாவை பாக்கவே பாவமா இருக்கு! எப்பிடி சிக்கியிருக்கேன் பாத்தியா?னு மைண்ட் வாய்ஸ்ல சொல்லிண்டே போட்டோவுக்கு போஸ் குடுத்த மாதிரி இருக்கு :)
ReplyDelete