Monday, September 1, 2014

அறுசுவை - ஹள்ளிமனே, பெங்களுரு

பெங்களுருவில் எல்லா விதமான உணவுகளும் கிடைக்கும், செட்டிநாடு உணவு வேண்டும் என்று தேடினால் குறைந்தது பத்தாவது கிடைக்கும், இத்தாலி உணவு வகைகள் என்றால் குறைந்தது இருபது கிடைக்கும், அதுவே கர்நாடக உணவு வகைகள் எங்கு கிடைக்கும் என்று தேடினால், தேடிக்கொண்டு இருந்தால் சுமார் இரண்டு மட்டுமே கிடைக்கும்....... நிலைமை அப்படி !! சுமார் ஆறு மாதத்திற்கு முன்னே ஒரு போன் கால் வந்தது, என்னுடைய பதிவை விரும்பி படிக்கும் ஒருவர் அன்று என்னுடன் பேசிக்கொண்டு இருந்தார், என்றேனும் ஒரு நாளாவது நாம் இருவரும் ஒரு முறையேனும் ஒரு உணவகத்திற்கு செல்ல வேண்டும் என்றபோது எனக்கு வரும் பொதுவாக சொல்கிறார் என்றுதான் எண்ணினேன், பின்னர் எனது ஒவ்வொரு உணவு பற்றிய பதிவின்போதும் அவர் கருத்து எழுதி இருப்பார், ஒரு சில முறை போன் என்று கொஞ்சம் கொஞ்சமாக நல்ல நண்பர்கள் ஆனோம். சென்ற முறை பேசிக்கொண்டு இருந்தபோது இந்த முறை எங்கேயாவது சென்று உணவு வேட்டையாடுவோமே என்றபோது தொடங்கியது எங்களது........ வேட்டையாடு, விளையாடு !!   

உணவு பிரியர் "நண்பர் ஜெகதீஷ்" உடன்.....
ஜெகதீஷ்...... அவரது பெயரையும், குரலையும் மட்டுமே அதுவரை தெரியும், நேரில் பார்த்ததில்லை. ஒரு வித்யாசமான உணவகம் செல்வோம் என்று நினைத்தபோது இதுவரை கர்நாடக உணவு வகைகளை உண்டதில்லையே என்று தோன்றியது, அப்படி என்ன உணவகம் இருக்கிறது என்றபோது நண்பர் ஜெகதீஷ் ஹள்ளிமனேசெல்வோம் என்றார். மனிதர் என்னைவிட மகா உணவு பிரியர், பெங்களுருவில் ஒரு இடத்தை விட்டு வைத்ததில்லை போலும் ! பேச ஆரம்பித்தபோதுதான் தெரிந்தது அவர் வைத்து இருந்த உணவகங்களின் பட்டியல், எந்த உணவகத்தில் எது நன்றாக இருக்கும், எது இருக்காது, எப்போது திறந்திருக்கும், எங்கு செல்லலாம் என்று சொல்லிக்கொண்டே போகிறார் மனிதர் ! தூரத்தில் இருந்து பார்க்கும்போது அது ஒரு பெரிய கிராமத்து ஓட்டு வீடு போல தோற்றம் அளிக்கிறது, உள்ளே நுழையவே முடியாதவாறு அவ்வளவு கும்பல். வெளியே காபி, டீ, ஐஸ் கிரீம், சாட் அயிட்டம் சாப்பிட என்று ஒரு தனி ஸ்டால், உள்ளே முதல் தளத்தில் ஸெல்ப் சர்வீஸ் முறையில் சாப்பாடு, டிபன் அயிட்டங்கள். நாம என்ன சாப்பிடலாம் என்று நண்பரை பார்த்தேன் !!
 
ஹல்லிமனே........ என்றால் கிராமத்து வீடு என்று அர்த்தம் !!

முதல் தளம் முழுவதும் ஸெல்ப் சர்விஸ்.....
கர்நாடகாவின் சாப்பாடு என்று நீங்கள் சாப்பிட்டு இருக்கீங்களா, எந்த ஹோட்டல் சென்றாலும் மூணு பூரி, கொஞ்சம் சாதம், சர்க்கரை போட்ட சாம்பார், ரசம், தயிர் எனும் மோர், கூட்டு, பொரியல் என்பதை தரும்போது அதுதான் கர்நாடகா சாப்பாடு என்று எண்ணுவீர்கள் ஆனால் அது தவறு தெரியுமா...... கர்நாடகாவில் ராகி என்பது சாப்பாட்டிற்கு சேர்த்து கொள்வார்கள், ஆனால் பெங்களுருவில் அது மருந்துக்கும் எங்கும் கிடைக்காது ! பொதுவாக கர்நாடகாவின் சாப்பாட்டை தென் கர்நாடகா, வட கர்நாடகா என்று பிரிக்கலாம். தென் கர்நாடகாவில் ராகி முத்தே உடன் சாம்பார், தயிர் உடன் காய்கறி வைத்து சாப்பிடுவார்கள். வட கர்நாடகாவில் நிலைமையே வேறு வெகு விமரிசையாக இருக்கும் சாப்பாடு........ இங்கு ஹல்லிமனேயில், கர்நாடகாவின் எல்லா வித உணவும் கிடக்கும். நண்பர் ஜெகதீஷ் நாம சாப்பாடு சாப்பிடலாமா என்று கேட்க எனக்கு தலை தானாக ஆட ஆரம்பித்தது.
 
சாப்பாடிற்கு டோக்கனே இவ்வளவு பெரிசு..... அப்போ சாப்பாடு !

கர்நாடகா சாப்பாடு எங்கேப்பா......
 உள்ளே நுழைந்து பெயர் கொடுத்துவிட்டு காத்திருக்க, இடம் ரெடி ஆனவுடன் கூப்பிடுகிறார்கள், பின்னர் சாப்பாடிற்க்கு டோக்கன் வாங்க வேண்டும், ஒரு சாப்பாடு சுமார் 175 ரூபாய் (நன்றி ஜெகதீஷ் !!). இடத்தில் உட்கார்ந்தவுடன் ஒரு தண்ணீர் பாட்டிலும், சூடான தக்காளி சூப்பும் கொடுக்கிறார்கள். பசியோடு இருக்கும் போது சாப்பிட நன்றாக இருக்கிறது. சூப் சாப்பிடும்போதே அடுத்த தட்டுக்களில் என்ன இருக்கிறது என்று ஆர்வத்துடன் எட்டி பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை ! எங்களுக்கு முன்னே இப்போது தட்டில் ஆவி பறக்க வந்தபோது தட்டில் கலர் கலராக நிறைய தெரிகிறதே என்று முதலில் பார்க்க வேண்டி இருந்தது...... அக்கி ரோட்டி, கம்பு ரோட்டி, சிறிது டால், தேங்காய் - இஞ்சி சட்னி, பீன்ஸ் கூட்டு, பன்னீர் பட்டர் மசாலா, அப்பளம், குலோப்ஜாமூன் மற்றும் கொஞ்சம் சாலட் !!
 
இவர்கிட்ட இருக்கிற உணவகத்தை பற்றிய தகவல்கள் அதிகம்.......

வந்தாச்சு...... கர்நாடக சாப்பாடு !
முதலில் இந்த கம்பு ரொட்டியை பற்றி சொல்லி ஆக வேண்டும், பார்ப்பதற்கு கருகி போன போளி தோசை போன்று இருந்தாலும் உடம்புக்கு நல்லது, கொஞ்சம் பியித்து வாயில் வைத்தவுடனே கொஞ்சம் சப்பென்று இருந்தாலும் இந்த பன்னீர் பட்டர் மசாலா கொஞ்சம் தொட்டு திங்க சல்லென்று உள்ளே போகிறது ! அடுத்து அக்கி ரோட்டி, இது நம்ம ஊரு தோசை போல ஆனால் அரிசி மாவினால் மட்டுமே ஆனது, இதை தேங்காய்-இஞ்சி சட்னியோடு சாப்பிட கார சாரமாய் மெத்தென்று உள்ளே இறங்குகிறது. பின்னர் வந்த குல்ச்சா, ரொட்டிக்களை டால் மற்றும் கறியோடு வெறியில் சாப்பிட்டால் கர்நாடகா சாப்பாடு இவ்வளவு நல்லா இருக்குதா, அப்போ சாம்பாரில் சக்கரை கலந்ததெல்லம் என்று நினைக்கும்போதே சூடான பொன்னி அரிசியில் அந்த சாம்பாரை ஊற்ற, இப்பொதானெடா உங்க ஊரு சாப்பாடு நல்லா இருக்குதுன்னு நினைச்சேன் அப்படின்னு மைண்ட் வாய்ஸ் ஓடுவதை தவிர்க்க முடியாது ! அதன் பின்னர் வரும் ரசம், மோர் எல்லாமும் சாப்பிட சாப்பிட இன்னும் வேணுமா என்று கேட்டு கேட்டு பரிமாறுகிறார்கள். கிராமத்து வீடு என்று பொருள் படும் இந்த இடத்தில, கிராமத்து வீட்டில் பன்னீர் பட்டர் மசாலா எல்லாம் சமைபார்களா என்றெல்லாம் கேட்காமல் சாப்பிட்டால் ஒரு நல்ல கர்நாடக சுவையில் சாப்பாடு சாப்பிடலாம் !
 
 


பஞ்ச் லைன் :

சுவை - கர்நாடக சுவையில் நல்ல சாப்பாடு அல்லது டிபன் அயிட்டம் வேண்டும் என்று நினைப்பவர்கள் இங்கு கண்டிப்பாக செல்லலாம் !

அமைப்பு - பெரிய உணவகம், பார்கிங் வசதி  கொஞ்சம் கம்மிதான் ஆனால் எப்படியாவது கிடைத்து விடும் ! தரை தளத்திலும், வெளியிலும் ஸெல்ப் சர்விஸ் வசதி, முதல் தளத்தில் சர்விஸ் வசதி !
 
பணம் - கொஞ்சம் ஜாஸ்திதான், ஆனாலும் சுவையும் அந்த கலாசாரமும் ஓகே என்று என்ன வைக்கிறது !
 
சர்வீஸ் - நல்ல மரியாதையாய் சர்விஸ் செய்கிறார்கள்.  வேண்டுவதை கேட்டு வாங்கி கொள்ளலாம் !

மெனு கார்டு:

 


 
அட்ரஸ் :

HalliMane,
Malleswaram,
3rd Cross,Sampige Rd,
Sampangiram Nagar,
Bengaluru, Karnataka 560003
 


 
 
 Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, Hallimane, Karnataka food, coastal cuisine, cuisine, Bangalore food, Bangalore, Bengaluru, good food

16 comments:

  1. ஆஹா பார்க்கவே நல்லாயிருக்கே.

    ReplyDelete
  2. எனக்குகூட உடுப்பி ஹோட்டல்னாலே சக்கரை போட்ட சாம்பார்தான் நெனப்பு வரும் ஆனா இது சூப்பர்........

    ReplyDelete
  3. கர்நாடகா சாம்பார் என்றால் அதை ஒரு தனியான சிவப்பு நிறத்தில் பார்த்து வழக்கம். அந்த ஊர் மிளகாய் வாகாம்! ஒரு அசட்டு தித்திப்பு இருக்கும்! நான் இரண்டு மூன்று முறை திருமணங்களுக்கு வந்து சாப்பிட்டதுதான். பெங்களுருவில் வசிக்கும் நம் நண்பர்களுக்கு இந்த முகவரியைக் கொடுத்துப் பார்ப்போம். :)))

    ReplyDelete
  4. நண்பர் ஜெகதீஷ் திருமணமாகாதவரோ! எங்கெங்கு என்னென்ன கிடைக்கும் என்கிற 'சுவை விவரங்கள்' பேச்சிலர் வாழ்க்கையில்(தான்) ரொம்பவே சாத்தியம்! :))))))))))

    ReplyDelete
  5. அருமையான சாப்பாடு. ஆனால் வட இந்தியக் கலவையாக இருக்கே! ராகி முத்தே பற்றிக் கேள்விப் பட்டிருக்கேன். ஆனால் கர்நாடகாவினரே (எங்கள் நண்பர்கள்) சமைத்துப் போட்டதில் முதலில் ரசம், பின்னர் சாம்பார் சாதம் (கலந்தது தான் போடறாங்க) அப்படினு போட்டாங்க. மேலே சொன்ன கம்பு ரொட்டியெல்லாம் இல்லை. அக்கி ரொட்டி பத்திக் கேள்விப் பட்டிருக்கேன். சாப்பிட்டதில்லை. சௌசௌபாத் என்றால் ரொம்ப வருடங்கள் சௌசௌ போட்டுச் செய்யும் ஏதோ கலந்த சாதம்னு நினைச்சுட்டு இருந்தேன். அப்புறமாத் தான் தெரிஞ்சது அது உப்புமானு! :)))))

    ReplyDelete
    Replies

    1. சௌசௌ பாத்-னா (சூஜி) உப்புமா பாதி, ரவா கேசரி பாதி சேர்ந்தது.

      உப்புமா தனியா வேணும்னா அது காரா-பாத்!

      Delete
  6. விநாயகர் சதூர்த்தி அன்னைக்கு போனேன் பாஸ். லஞ்ச் 250/- ரூபாய் வாங்கிட்டான். என்னென்னமோ வச்சான், ஆனாலும் குடுத்த காசு அதிகம்னு மனசில பட்டுச்சு. Anyway, முதல் முறையா நான் வழக்கமா போகும் ஒரு இடம் உங்க பதிவில் வருது!!

    ReplyDelete
  7. வணக்கம்
    அண்ணா.
    சுவையான உணவுகள் பார்த்தவுடன் சாப்பிடச் சொல்லுது தேடலுக்கு எனது வாழ்த்துக்கள் தங்களின் தேடலுக்கு உதவியாக உள்ள நண்பருக்கு நன்றிகள்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. hey , i really like your rare and good restaurant information.

    ReplyDelete
  9. ஹல்லிமனே அல்ல ஹள்ளிமனே. ஹள்ளி என்றால் கிராமம் என்று பொருள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே, தவறை உடனே திருத்திவிட்டேன் !! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் பல !

      Delete
  10. இதுதான் எனக்கு தெரிஞ்ச பதிவில கொஞ்சம் சுரத்து கம்மியா இருக்கு. வழக்கமான வார்த்தை ஜாலம் இல்ல. படிக்கும்போது வாய்ல ஜாலமும் இல்ல. நீங்க ஒரு ரௌன்ட் செட்டிநாடு பக்கம் வந்துத்துடுங்க

    ReplyDelete
  11. பிரமாதம் ஜி். பயணம் மேலும் களை கட்ட வாழ்த்துக்கள். அன்புடன் ரெங்கா.

    ReplyDelete
  12. Try it out Kamat restaurant in Basavanagudi. Wonderful ambience and good Karnataka food.

    ReplyDelete
  13. அண்ணாச்சி! பெண்களூர்லேந்து மைசூர் போகர வழில ஹைவேஸ்ல தலைல காந்தி குல்லா போட்டுண்டு பரிமாறும் காமத் ஹோட்டலுக்கும் ஒரு எட்டு போயிட்டு வந்து எழுதுங்க!

    ReplyDelete