உணவை தேடி செல்வது, அதுவும் நல்ல உணவை தேடி செல்வது என்பது மனதுக்கு சந்தோசம் தரும் ஒன்று, அப்படி நல்ல உணவு கிடைக்கும் இடத்தில் சாப்பிடும் இடமும் வித்யாசமாக இருந்தால் எப்படி இருக்கும் ? ஒரு முறை NCCயில் மலையேற்றம் கூட்டிக்கொண்டு சென்றபோது மலை ஏறுவதற்கு முன்பு சாப்பாடு எல்லாம் வாங்கி மூட்டை கட்டிக்கொண்டோம், காடுகளுக்கு இடையில் கால் வலிக்கும்போது ஒரு ஓடையின் அருகில் உட்கார்ந்து அந்த தயிர் சாதத்தை பிரித்து உண்டபோது மிகவும் நன்றாக இருந்தது, அப்போது அங்கு வந்த பறவைகள், சிறு மிருகங்களுக்கும் அந்த உணவை பகிர்ந்து உண்டது என்ன ஒரு அனுபவம் ! பெங்களுருவில் இந்திரா நகரில் ஒரு முறை சென்று கொண்டு இருந்தபோது "தி ராக்" என்ற உணவகம் கண்ணில் பட்டது, அந்த உணவகத்தின் முன் காட்டு மிருகங்களின் படம் போட்டு இருந்ததை கவனித்து எனது மனைவியிடம் என்ன அங்க போகலாமா, அப்படியே பையனுக்கு அங்க பாரு ஒரு குரங்கு போட்டு இருக்கான் அதையும் காண்பித்து போல இருக்கும் என்றபோது தலையை ஆட்டிவிட்டு ஏதோ முனகினார்..... கண்டிப்பாக "அதைதானே நான் கட்டிக்கிட்டு இருக்கேன்" என்று மட்டும் இருக்காது !
இது மூன்றாவது மாடியில் இருந்தது, லிப்டில் உள்ளே சென்று, மூன்றாவது மாடியில் கதவு திறக்கும்போதே எதிரில் தத்ரூபமாக கையில் ஈட்டியுடன் ஒரு காட்டுவாசி உங்களை முறைத்தால் கலக்கதானே செய்யும். ஒரு கதவு திறக்க உள்ளே நிஜமாகவே ஒரு காட்டுக்குள் வந்தது போல கொரில்லாவும், பனிக்கரடியும், யானையும், சிறு சிறு பறவைகளின் குரலும் என்று வந்தது. சிலு சிலுவென்று குளிர் காற்று அடிக்க, ஒரு சிறு அருவியில் இருந்து தண்ணீர் கொட்டிக்கொண்டு இருந்தது, மரத்தில் பட்டாம்பூச்சியும், குரங்கும் இருந்தது, சிறுவர்கள் இருந்தால் அவர்களுக்கு கொண்டாட்டம்தான் ! ஒரு இடம் பார்த்து உட்கார வைத்தனர், உட்கார்ந்து இருந்த சோபா, பின்னால் தெரிந்த சுவற்றில் மிருகங்களின் செதுக்கல்கள், அங்கங்கே காட்டுவாசி போன்ற பொம்மைகள் என்று புதுமையாகத்தான் இருந்தது !
மதியம் சென்றால் பப்பெட் முறை இருந்தது, சூப், ஸ்டார்ட்டர்ஸ், சாலட், ரோட்டி, கிரேவி, அரிசி, புலாவ் என்று வகை வகையாக இருந்தது..... வெஜ்ஜிலும், நான்-வெஜ்ஜிலும் !! சூப் பரவாயில்லை என்று இருந்தாலும் பிரைடு பொடேடோ என்று ஒன்று இருந்தது நிஜமாகவே சூப்பர், சிறு உருளைகிழங்குகளை அங்கங்கே கீறி அதை எண்ணையில் கொஞ்சமே கொஞ்சமாக வறுத்து அதில் காரமும், பெப்பரும் போட்டு இருந்தது, ஒரு கடிக்கே நாக்கில் நீர் ஊறியது நிஜம்.அடுத்து அங்கு இருந்த பன்னீர் பிரை, மசாலா பிரைடு பேபிகார்ன் என்பதெல்லாம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதாகவே அமைந்தது. பொதுவாக எந்த உணவகம் சென்றாலும் ஒரு சில டிஷ் ட்ரை செய்தாலே தெரிந்துவிடும் மற்றதெல்லாம் எப்படி இருக்கும் என்பது. எல்லா ஸ்டார்ட்டர்ஸ் வகைகளும் பிரை வகையாகவே இருந்தாலும், புலாவ், பேபிகார்ன் மசாலா, ராஜ்மா மசாலா என்று இருந்த வகைளில் சரியான வகையில் காரமும், சுவையும் இருந்தது !
எல்லாவற்றையும் ஒரு கை பார்த்துவிட்டு சாய்ந்து உட்கார்ந்து இருந்தபோதுதான், சார் டெசெர்ட் சாப்பிடறீங்களா என்று கேட்டனர், அடடே அதை மறந்துட்டோமே என்று நினைத்து கொண்டு இருந்தபோது மூளையும், மனதும் இதுக்கு மேலே போனா நடக்குறதே வேற என்று எச்சரித்தாலும் நாக்கு இழுத்துக்கொண்டு போனது. சிறு சிறு கேக், குலாப்ஜாமூன், அல்வா, ஐஸ் கிரீம் என்று எடுத்துக்கொண்டு வந்ததை பார்த்து சற்று மிரண்டுதான் போனால் என் மனைவி ! சிறுக சிறுக கரையும் குலாப்ஜாமூனில் அவ்வப்போது சிக்கும் அந்த ஏலக்காயை நாக்கினில் தள்ளி எடுப்பதே ஒரு தனி சுவைதான். எந்த ஒரு உணவகத்துக்கு சென்றாலும் அழுக்கு சுவர்களும், ஒரே போல மேஜை நாற்காலிகளும் இருக்கும், உணவும் சில நன்றாக இருந்தாலும் பல நம்மை அடுத்து செல்லலாமா என்று யோசிக்க வைக்கும்....... இங்கு உள்ளே நுழையும்போதே அந்த காட்டின் எபக்ட் கொடுத்து, சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போதும் ஸ்பீக்கரில் அவ்வப்போது மிருகங்கள், பறவைகளின் குரல்கள் கொடுப்பது ஒரு வித்யாசமான அனுபவம் !!
பஞ்ச் லைன் :
சுவை - செப் நன்றாக சமைக்க கூடியவராக இருக்கிறார், சுவை நன்றாக இருக்கிறது.
அமைப்பு - சிறிய உணவகம், வேலட் பார்கிங் வசதி இருக்கிறது, காடு, மிருகங்கள், பறவைகள் என்று எல்லாமுமே அருமையாக அமைத்து உள்ளனர். அருவியின் சத்தம், பறவைகளின் சத்தங்கள் என்று சாப்பிடும்போது அதுவும் சுவை சேர்க்கிறது !
பணம் - கொஞ்சம் ஜாஸ்திதான், எப்போதாவது ஒரு முறை இது போன்ற அனுபவங்களுக்கு செல்லலாம் !
சர்வீஸ் - நல்ல மரியாதையாய் சர்விஸ் செய்கிறார்கள் !
மேலும் தெரிந்துகொள்ள..... https://www.zomato.com/bangalore/the-rock-indiranagar

மெனு கார்டு:
பப்பெட் இருந்தாலும், மெனு கார்டில் சில பகுதிகள் மட்டும் இங்கே உங்கள் பார்வைக்கு
மேலும் தெரிந்துகொள்ள..... https://www.zomato.com/bangalore/the-rock-indiranagar
மெனு கார்டு:
பப்பெட் இருந்தாலும், மெனு கார்டில் சில பகுதிகள் மட்டும் இங்கே உங்கள் பார்வைக்கு
அட்ரஸ் :
2001, 3rd Floor, 100 Feet Road, Indiranagar, BangaloreIndia
Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, The Rock, Indira nagar, Concept restaurant, Forest theme, Dine with animals, Dine in forest, Forest type
ReplyDeleteஇவைகளுக்கு எல்லாம் முன்னோடி அமெரிக்காவின் Rainforest Cafe செயின் ரெஸ்டாரன்ட் தான்!! அந்த காட்டுவாசியுடனான போட்டோ அதிரி புதிரி..! ;)
நன்றி கோவை ஆவி ! உங்க ரேன்ஜ் வேற, எங்க ரேன்ஜ் வேற இல்லையா :-)
Deleteபுதுப்புது வகைகளில் கவர்கிறார்களே...
ReplyDeleteநான் மட்டுமா ஸ்ரீராம், உங்களது வலைபதிவிளும்தான் ! நன்றி, வருகைக்கும், கருத்திற்கும் !
Deleteபுதுசு புதுசா தேடி பகிரும் விதம் சிறப்பு! தொடருங்கள்!
ReplyDeleteநன்றி தளிர் சுரேஷ் ! நீங்கள் இந்த பதிவை ரசித்தது கண்டு மகிழ்கிறேன் !
Deleteஇதும் போன்ற தீம் உணவகங்கள் எல்லா நகர்களிலும் வரத் தொடங்கி விட்டன.
ReplyDeleteசுவையான பகிர்வு
நன்றி குட்டன், ஆனால் இது போன்ற உணவகங்களை தேடி கண்டு பிடிப்பது என்பது குதிரை கொம்பாக அல்லவா இருக்கிறது !
Deleteநல்ல அனுபவம் தான்.... எஞ்சாய் மாடி!
ReplyDeleteநன்றி வெங்கட்-ஜி ! உங்களுடன் டெல்லி ட்ரிப் ஒன்று அடிக்க வேண்டும், அதில் அந்த உணவுகளை ஒரு பிடி பிடிக்க வேண்டும் !
Deleteசீனியர்... நவி மும்பை'யின் பெலாபூர்'இல் இதே மாதிரி ஒரு ஹோட்டல் இருக்கிறது... Rainforest...
ReplyDeletehttps://plus.google.com/116370073795760344155/about?gl=in&hl=en
எங்க வீட்டு பக்கம் தான்... வாங்க, கூட்டிட்டு போறேன்... நானும் அங்க போய் ஒரு வருஷத்துக்கும் மேல ஆச்சு...
Deleteஆஹா நல்ல தகவல், கார்த்திக் அடுத்த முறை மும்பை வருகையில் அங்கு செல்ல வேண்டும் ! அது சரி, இன்னும் என்னவெல்லாம் அதிசயம் இருக்கிறது அங்கு !
Deleteஅப்படி உணவில் சிறப்பாக ஒன்றும் கவனித்ததில்லை... but, its definitely different ambiance...
Deleteநுழைந்தவுடன் ஒரு சின்ன பாலம், குட்டி ஓடை மேல்... அருகில் ஒரு நீர் வீழ்ச்சி... பாலம் தாண்டும்போது, சாரல் நம்மேல் தெரிக்குமாறு...
மொத்த ஹோட்டலும் இருட்டாய் இருக்கும்... கீழே தரையில் உட்கார்ந்து சாப்பிட வேண்டும்... அல்லது ஒரு சின்ன மாடியின் மேல் போய் சாப்பிடலாம், but அங்கும் கீழே உட்கார்ந்து தான் சாப்பிட வேண்டும்... சீலிங் 3 அடியில் இருக்கும்... அதனால் குனிந்து போய் உட்கார்ந்து சாப்பிட வேண்டும்... பேரர்களும் குனிந்து வந்து பரிமாறுவார்கள்... ஸோ கொஞ்சம் லேட் ஆகும்... but, அது ஓகே... கொஞ்சம் different அனுபவம்...
காட்டு குகை போன்ற பீலிங் கிடைக்கும்... நான்-வெஜ் உண்டு... ட்ரிங்க்ஸ் உண்டு...
ரொம்ப எதிர்பார்க்காமல் வந்தால் ஏமாற்றம் இருக்காது...
Is it for lunch and dinner ?
ReplyDeleteBoth available with Buffet and Ala-carte, don't forget to share your views ! Thanks for visiting my blog !
Deleteஎங்க ஊரு தேனீ பக்கம் வந்திருக்கீங்களா? எவரெஸ்ட் ஹோட்டல் பரோட்டாவும், மட்டன் சுக்கா, பாண்டியன் ஹோட்டல் கரண்டி ஆம்லேட் சாப்ட்டு பாருங்க!
ReplyDelete