Monday, September 22, 2014

அறுசுவை(சமஸ்) - கூத்தாநல்லூர் தம்ரூட் !!

சமஸ் எழுத்தின் வசீகரித்தால் ஈர்க்கப்பட்டவர்களில் நானும் ஒருவன், அவரது சாப்பாட்டு புராணம் புத்தகத்தை வைத்துக்கொண்டு சுற்றிக்கொண்டு இருந்தபோது அதற்காகவே சுற்றி சுற்றி சாப்பிட வேண்டும் என்று தொடங்கி நேரம் கிடைக்கும்போதெல்லாம் கும்பகோணம் பகுதிக்கு சென்று சாப்பிடுவது வழக்கம் ஆகி விட்டது ! இது போல சுற்றி வந்ததில் ஒன்று மட்டும் புரிந்தது..... பொதுவாக எந்த ஊருக்கு சென்றாலும் ஹோடேலில் இட்லி, தோசை, மீல்ஸ் கிடைக்கும் அதை மட்டுமே சாப்பிட்டு வருவோம், ஆனால் கொஞ்சம் மெனகெட்டால் அந்த ஊரின் பாரம்பரிய சுவை கொண்ட ஒன்றை சுவைக்க முடியும், அதையே ஊரும் ருசியும் என்ற பகுதியில் எழுதி வருகிறேன். அப்படி சுவையான ஒன்றை உள் அடக்கி வைத்து இருப்பதுதான் திருவாரூர், மன்னார்குடி சாலையில் இருக்கும் ஒரு சிறு கிராமம் கூத்தாநல்லூர். அந்த ஊரை கடக்கும்போது பிரியாணியும், பரோட்டாவும் மெயின் ரோட்டில் கிடைத்தாலும் அந்த ஊரில் அதை மட்டும் சாப்பிட்டு போனால் உங்களது நாக்கே உங்களை சாபம் விடும்..... அதற்க்கு தம்ரூட் கொடுத்து பாருங்கள், சுருட்டிக்கொண்டு இருக்கும் !!

திரு.சமஸ் அவர்களின் எழுத்தில் படிக்க…… கூத்தாநல்லூர் தம்ரூட் !!


கூத்தாநல்லூர் என்ற பெயரை படிக்கும்போதே மனம் கூத்தாட தொடங்கிவிடுகிறது. மெயின் ரோட்டில் இறங்கி இங்க மௌலானா பேக்கிரி எங்க இருக்கு என்று கேட்க ஒரு ரோட்டை காண்பித்து இப்படி போங்க, ரோட்டின் மேலேதான் கடை என்று வழி காட்டினர். கண் கொத்தி பாம்பாய் தேடிக்கொண்டு செல்ல நீங்கள் மிஸ் செய்ய முடியாத அளவுக்கு அந்த கடை பெரிய போர்டு போட்டு இருந்தது. வண்டியை நிறுத்திவிட்டு பேக்கரி உள்ளே சென்று பொறுமையாக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து இதுதான் தம்ரூட்டா என்று என்னையே கேள்வி கேட்டுக்கொண்டு இருந்தபோது என்ன சார் வேணும் என்று கேட்க இங்க தம்ரூட் அப்படின்னு ஒன்னு இருக்காமே, என்று கேட்க ஆமாம் என்று எடுத்துக்கொடுக்கிறார்கள், அது சரி நான் முன்னேயே அதை பார்த்துவிட்டு கேக் போலும் என்று நினைத்து இருந்தது..... முன்னே பின்னே பார்த்து இருந்தால்தானே !!



பெட்டியை பிரித்தவுடன் பொன்னிறம் உங்களது கண்களை தாக்கும், ஒரு துண்டு எடுக்கும்போதே நெய் வாசனை தூக்குகிறது. கண்களில் அதை விழுங்கிக்கொண்டே ஒரு கடி கடிக்கும்போது ம்ம்ம்ம்ம்ம்...... பாகாய் கரைகிறது நாக்கினுள். ரவை, நெய், பால், சர்க்கரை, முட்டை மற்றும் முந்திரி, திராட்சை எல்லாம் இருக்கும்போது இனிக்காமலா இருக்கும். ரஸ்க் சாப்பிட்டு இருக்கிறீர்களா, கேக்....... இதற்க்கு இடையில் ஒன்று இருந்தால் எப்படி இருக்கும் ? கேக் போன்ற மென்மையும், ரஸ்க் போன்ற கொஞ்சமே கொஞ்சம் கடினமும் சேர்ந்து, ஒவ்வொரு கடிக்கும் முந்திரியும், திராட்சையும் நான் முந்தி, நீ முந்தி என்று நாக்கினுள் நாட்டியம் ஆட, ரவையின் சுவையில் கரைய கரைய இதை சாப்பிடும்போது இதை எப்படி இவ்வளவு நாள் விட்டு வைத்தோம் என்றே எண்ண தோன்றியது. எல்லா முஸ்லிம் நண்பர்களின் ஏரியாவிலும் இந்த பண்டம் என்பது நிச்சயம் கிடைக்கும் எனும்போது, இனி விடக்கூடாது என்றே தோன்றியது !

ஒரு பீஸ் கையில் எடுத்து.....

ஒரு கடி கடிக்க........ தேவாமிர்தம் போங்கள் !!

தம்ரூட் சாப்பிட்டு முடித்தவுடன்....... சந்தோசத்தை பாருங்களேன் !

அங்கு தம்ரூட் போலவே அவர்களது பால் ரஸ்க்கும் ரொம்பவே பேமஸ் என்று சமஸ் அவர்கள் எழுதி இருந்ததால், அதையும் ஒரு கை பார்த்தோம். நாங்கள் தம்ரூட்டை இவ்வளவு ரசித்து சாப்பிட்டது கண்டு எங்கு இருந்து வரீங்க என்று கேட்க, நான் பெங்களுரு என்று சொல்ல...... இந்த ஊருல யாரை பார்க்க வந்து இருக்கீங்க என்றபோது நான் இல்லை, தம்ரூட் சாப்பிட மட்டுமே இங்கே தேடி வந்தோம் என்று சொல்லி சமஸ் அவர்களின் புத்தகத்தை காட்டினேன். அட, இதை சாப்பிட மட்டுமா என்று ஆச்சர்யமாக பார்க்க, எனக்கு ஒரு அரை டஜன் தம்ரூட் வேணும் என்று பார்சல் சொல்லிவிட்டு, இந்த சுவைக்கு இவ்வளவு தூரம் வருவது தப்பில்லை என்றேன் !!

இனிமேல் தம்ரூட் சாபிடனுமின்னா மௌலானா பேக்கரி வாங்க.......


மன்னார்குடி - திருவாரூர் சாலையில், மன்னார்குடியில் இருந்து 14 கிலோமீட்டர் தூரத்தில் (சுமார் இருபது நிமிடம்) தூரத்தில் இருக்கிறது கூத்தாநல்லூர். இங்கு சென்று யாரை கேட்டாலும் சொல்வார்கள்.... தம்ரூட் சாப்பிட மௌலானா பேக்கரி போங்கள் என்று !




தம்ரூட் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்....... தம்ரூட் ! செய்ய சுலபமாக இருக்கிறது, சுவையோ அபாரம் !

what you need
Butter – 250 gm
Condensed milk – 150 ml
Semolina (Sooji) – 350 gm
Sugar – 450 gm
Eggs - 6
Cashews and raisins - 1 cup
Cooking instructions
Melt butter in a heavy-bottomed vessel until it becomes frothy and changes to a light golden colour.
Fry cashews and raisins in 1 tbsp of ghee.
In a bowl mix together eggs, sugar, condensed milk, sooji, melted butter, cashews and raisin with a spatula.
Pour the mixture in a 10-inch cake tin.
Place in the oven and bake at 220 degree for an hour.
Cool and serve.

 தஞ்சாவூர் பகுதிக்கு செல்லும்போது கூத்தாநல்லூர் சென்று வருவது தப்பே இல்லை, எனக்கும் ஒன்றை பார்சல் அனுப்புங்களேன் !

Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, Samas, Sappaattu puraanam, oorum rusiyum, district, taste, Thamroot, Thamrut, Dhamroot, Dhamrut, Koothanallur, Mannargudi, muslim, dessert, mannargudi, thiruvaaroor

22 comments:

  1. அருமை சுரேஷ், சுவைக்க தூண்டும் பதிவு...

    ReplyDelete
    Replies
    1. நன்றி பிரேம்குமார், என்ன ரொம்ப நாளா ஆளை காணலை !

      Delete
  2. Hi,

    I am reading your blog regularly and would like to appreciate your efforts.

    Yesterday I tried வெள்ளையப்பம் in மதுரை கோபி ஐய்யங்கார் கடை.....based on review and it was awesome as you described.

    Thanks for all your efforts and will update you next time when I come across your recommended shop/food.

    Regards
    A Sivakumar

    ReplyDelete
    Replies
    1. Thank you Sivakumar, happy to see you are reading my post and tried the Vellaiappam. Keep reading and share your views !

      Delete
  3. Thanks Suresh for posting the photo along with the cell number of the shop. I contacted them and could place the order. They will deliver it through courier. My Grandfather used to tell about this sweet but I was not aware as to where and how to get this. Please carry on with your endeavor !!

    ReplyDelete
    Replies
    1. Wow, that's great to know you will be soon tasting that. Taste it and share your view !

      Delete
    2. Thanks Suresh, it was very tasty. There is also something known as dumroot halwa as well and I am yet to taste it as described by my grandfather some 25 years ago and he is no more. Hope you will be able to guide me about best dumroot halwa as well :)

      Delete
  4. வாங்கினதில ஒரு பாக்கெட் இங்க பார்சல் ப்ளீஸ்....

    ReplyDelete
    Replies
    1. ஒரு பாக்கெட் என்ன, ரெண்டாவே சொல்றேனே.... மதுரை பதிவர் சந்திப்புக்கு வருகிறீர்கள்தானே, அங்கே மதுரை ஸ்பெஷல் சாப்பிடலாமே ! நீங்களே பே செய்யுங்கள், நான் தடுக்க மாட்டேன் :-)

      Delete
  5. Porayar- Nagappattinam Dist., inchi Pakoda (Ginger Pakoda) sappittu parunkal. engeyum kidaikkathu.

    ReplyDelete
    Replies
    1. Happy to see this information, noted down and sure to have when I go that side. Thanks for reading my blog and sharing your view !

      Delete
  6. வணக்கம்
    அண்ணா.

    வித்தியாசமான உணவுகளை அறிமுகம் செய்வது உங்களை விட யார்தான் இருக்கிறார்கள்.... எத்தனையோ வலைப்பூக்களுக்கு சென்று வருகிறேன் தங்களைப் போன்று விளக்கம் கொடுப்பது குறைவு பகிர்வுக்கு நன்றி..
    த.ம1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி ரூபன் ! மிகைபடுத்தப்பட்ட பாராட்டோ என்று தோன்றுகிறது, என்னை விடவும் உங்கள் கவிதைகள் சுவையே !

      Delete
  7. மறுபடியும் ஞாபக படுத்திட்டிங்க அண்ணா.. ஸ்வீட் மேமரிஸ் .. அண்டு ஸ்விட் தம்ருட்

    ReplyDelete
    Replies
    1. ஊருக்கு பக்கம்தானே ஆனந்த், ஒரு ரெண்டு பார்சல் அனுப்பறது !

      Delete
  8. Koothanalluril - Moulana Dhamroot vida, YESYES Home Made Dhamrootai vaangi suwaithu paarungal

    ReplyDelete
    Replies
    1. Boss, I don't know anyone in Koothanallur, how can go into a home and try this ? Anyway, thanks for your visit and comments !

      Delete
  9. சும்மாவா ஜெகதீஷ், சாப்பிட்டே ஒருத்தன் டயர்ட் ஆகிட்டான் அப்படின்னா நான்தான் ! நன்றி !

    ReplyDelete
  10. இந்த் தம்ரூட் பற்றி முதன் முறையாக கேள்விப்படுகிறேன்.... அறிமுகம் செய்தமைக்கு நன்றி சுரேஷ்.

    திருச்சியில் கிடைக்கிறதா எனப் பார்க்க வேண்டும்!

    ReplyDelete
  11. ஓ.. வித் பிளசர் ... நெக்ஸ்ட் உங்கள தம்ருட் பாக்ஸோட மீட் பண்ணுறேன்

    ReplyDelete
  12. சில பேருக்கு இனிப்பு பிடிக்காது (எனக்கும்தான் ).. ஆனா இந்த தம்ரூட் ஸ்பெசல் என்னன்னா இதுல இனிப்பு குறைவா இருக்கும் . வாசனையும் அருமையா இருக்கும் . எனக்கு ரொம்ப புடிச்சி இருந்துது

    ReplyDelete