Thursday, September 25, 2014

நான் ரசித்த கலை - பாட்டில் மணல் ஓவியம், துபாய்

கலை..... ஆடலும், பாடலும் மட்டும் அல்ல, அதையும் தாண்டி நிறைய கலைகள் இருக்கின்றன. பொதுவாக எங்கு சென்றாலும் கொஞ்சம் வித்யாசமாக ஏதாவது கலை இருந்தால் அதை வேடிக்கை பார்ப்பது வழக்கம், அதையே இங்கே பகிர்கிறேன்..... ஏனென்றால் உலகம் தன்னிடத்தில் பல வகை கலைகளை கொண்டுள்ளது !! சென்ற முறை துபாய் சென்று இருந்தபோது நான் தங்கி இருந்த ஒரு ஹோடேலின் ஓரத்தில் கண்ணாடி குடுவையினுள் ஓவியங்கள் வரைந்து வைத்து இருந்தது, முதல் பார்வையில் நமது ஊரில் இருப்பது போல பெயிண்ட், பிரஷ் கொண்டு வரைந்து இருக்கின்றனர் என்றுதான் நினைத்தேன். பின் இன்னொரு முறை அதை கடக்கும்போது சற்றே கூர்ந்து கவனித்ததில் உள்ளே இருந்தது அனைத்தும் மணல்....... உள்ளே மணலை நிரப்பி நிரப்பி ஒட்டகம், பாலைவனம், பறவைகள் எல்லாவற்றையும் கொண்டு வந்து இருந்தார்கள் ! எப்படி இது சாத்தியம் என்று தோன்றியது !இதை இன்னும் எளிதாக சொல்வதென்றால்..... நீங்கள் ஒரு கண்ணாடி குடுவையில் மணலை நிரப்புவது போலவேதான் இது. மணலில் கலர் சேர்த்து, எங்கு உருவம் வேண்டுமோ அங்கு மட்டும் அந்த கலர் மணலை நிரப்புகின்றனர். இப்படியே எல்லா உருவத்தையும் உருவாக்குகின்றனர். இந்த மணலில் பசை போன்ற ஒன்று இருப்பதால் செய்த சிறிது நேரத்தில் இறுகி விடுகிறது ! மிகவும் நுணுக்கமான வேலை, ஆனால் அவர்களோ பழக்கத்தில் சரசரவென்று உருவாக்குகின்றனர்.

அந்த மணலை கையில் எடுத்து பார்க்க அது பாலைவன மணலை விட மிகவும் நைசாக இருந்தது. அதன் செய்முறையை கேட்க வெறும் சிரிப்பு மட்டுமே பதிலாக வந்தது. அந்த மணலில் கலர் போட்டு, அதனோடு சிறிது பசை வகையினையும் சேர்க்கின்றனர். முதலில் கொஞ்சம் மணல் எடுத்து உள்ளே போட்டு பின்னர் மிக மெலிதான பைப் போன்ற ஒன்றை கண்ணாடியின் அருகினில் விட்டு அவர் ஒட்டகத்தை உருவாக்கியது அற்புதம். இப்படியே பேரீட்சை மரங்கள், நிலா, மேகம் என்று உருவாக்கியது ஆச்சர்யம் தந்தது.ஒரு  பாட்டிலின் விலை சுமார் ஐநூறு வரை ஆகிறது, வெறும் மணலை ஒரு கலையாக்கி ஆயிரக்கணக்கில் சம்பாதிப்பது இதுதான் போலும். நானும் எனது நினைவுக்கு என்று ஒன்று வாங்கி வந்தேன், அடுத்த முறை அரபு நாடுகளுக்கு சென்றால் இதை பார்க்கவும், அனுபவிக்கவும் மறக்காதீர்கள் !!

Labels : Suresh, Kadalpayanangal, Art, Sand art, Dubai, Bottle sand art, Amazing art, naan rasitha kalai, bottle art

9 comments:

 1. அட! வித்தியாசமாகத்தான் இருக்கிறது! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 2. அட , அட்டகாசம் ... விலையும் பராவயில்லை போல ...!

  ReplyDelete
 3. அட்டகாசம்... குடுவையின் வளைவையும் கணித்து, முன்னாடி நின்று பார்க்கும் போது 2Dயில் தெரியுமாறு அமைக்கும் இந்த கலைஞனின் திறமை... வாவ்....

  ReplyDelete
 4. Like to send a mail suresh sir. I can't find ur mail address. Pls give ur address

  ReplyDelete
  Replies
  1. Hi, Thanks for visiting my blog. My mail id is Sureshkumar78@yahoo.com.

   Delete
 5. ஒரு முறை யூ-டுயூபில் இந்த முறையினை ஆன்னு பார்த்தேன். துபாயில் கிடைக்கிறதுன்னு இப்பதான் தெரிஞ்சது.

  ReplyDelete
 6. அருமையான கலை. அவரின் திறமை மயக்க வைக்கிறது.....

  ReplyDelete
 7. அன்புள்ள அய்யா திரு.சுரேஷ் குமார் அவர்களுக்கு,
  வணக்கம்.
  ஒரு பாட்டிலின் விலை சுமார் ஐநூறு வரை ஆகிறது, வெறும் மணலை ஒரு கலையாக்கி ஆயிரக்கணக்கில் சம்பாதிப்பது இதுதான் போலும். நானும் எனது நினைவுக்கு என்று ஒன்று வாங்கி வந்தேன், அடுத்த முறை அரபு நாடுகளுக்கு சென்றால் இதை பார்க்கவும், அனுபவிக்கவும் மறக்காதீர்கள் !!
  -அரபுநாடு செல்ல வாய்ப்பு கிடைத்தால் பார்ககலாம். தற்பொழுது...

  எனது ‘வலைப்பூ‘ பக்கம் வருகை புரிந்து கருத்திடஅன்புடன் வேண்டுகிறேன்.
  நன்றி.
  -மாறாத அன்புடன்,
  மணவை ஜேம்ஸ்.
  manavaijamestamilpandit.blogspot.in

  ReplyDelete