Monday, September 8, 2014

அறுசுவை - ஹை டீ ...... இப்படியும் டீ சாப்பிடலாம் !!

மதியம் சாப்பிட்டுவிட்டு வேலை செய்து கொண்டு இருக்கும்போது சுமார் நான்கு மணி போல லைட் ஆக பசிக்க ஆரம்பிக்கும், நம்மூரில் டீ கடைக்கு சென்றால் சூடாக பஜ்ஜி போட்டு கொண்டு இருப்பார்கள், ஒரு டீ வாங்கி கொண்டு அப்படியே சூடான பஜ்ஜியில் கொஞ்சம் சட்னி போட்டு சாப்பிடும்போது அப்படியே மேலே மிதப்பது போன்று தோன்றினால் அதுதான் இந்தியன் ஹை டீ....... அதுவே பிரிட்டிஷ் மக்களாக இருந்தால் எப்படி இருக்கும் தெரியுமா ?! ஒரு டீ சாப்பிடலாம் என்று ஒரு மூன்று மணிக்கு தோன்றியது ஒரு சனிக்கிழமை அன்று, அப்போது சிங்கப்பூரில் இருந்ததால் எங்கே டீ சாப்பிடலாம் என்று கேட்க என்ன ஹை டீயா என்று கேட்க, அது என்ன என்ற ஆர்வம் வந்தது...... நம்ம ஊரில் ஏலக்காய் டீ, இஞ்சி டீ போல ஹை என்பது ஒரு சீனா மூலிகையா இருக்கும்போல என்று போகலாமே என்றேன்........... ஒரு டீ சாப்பிட்ட அனுபவம் இப்படியெல்லாம் இருக்கும் என்பது எனக்கு பிறகு தெரிந்தது !


ரேபிள்ஸ்  ஹோட்டல், சிங்கப்பூரின் ஆக சிறந்த ஹோட்டல்... பிரிட்டிஷ் காலத்து பில்டிங், வெள்ளை வெளேரென்று இருக்கும். அந்த மதிய நேரத்தில் எனக்கு முன்னே அவர் கால் செய்து இடம் இருக்கிறதா என்று கேட்டு ரிசேர்வ் செய்துக்கொண்டார், நானோ டீ சாப்பிட ரிசேர்வ் செய்வது எல்லாம் ரொம்பவே ஓவர் என்று நினைத்துக்கொண்டேன். கார் பிடித்துக்கொண்டு அங்கே இறங்கி இங்கே ஹை டீ சாப்பிட எங்கு செல்ல வேண்டும் என்று கேட்க அவர் அந்த பக்கம் போங்கள் என்று வழி காட்ட, இது போன்ற ஐந்து நட்சத்திர ஹோடேலில் இடம் காலியாகத்தானே இருக்கும் என்று நினைத்துக்கொண்டு அவர் காட்டிய பக்கம் திரும்பினால், நம்ம ஊர் மாரியாத்தா கோவிலில் கூழ் ஊற்றும்போது ஒரு கும்பல் நிற்குமே, அது போல ஒரு பெரிய கியூ நின்று கொண்டு இருந்தது, அங்கு நின்று கொண்டு இருந்தவரிடம் இதுதான் ஹை டீ சாப்பிட வேண்டிய இடமா என்று உறுதி படுத்திக்கொண்டு அங்கு சேர்ந்துக்கொண்டோம்...... ஏண்டா, ஒரு டீ சாப்பிட இவ்வளவு கும்பலா, அப்படி என்னதாண்டா இருக்கு அதுல !!
 

அங்கு தெரிந்த கண்ணாடியின் வழியே உள்ளே பார்க்க, நிர்மா வாஷிங் பவுடர் போட்டு விளக்கியது போல அந்த இடமே வெண்மை நிறத்தில் காட்சி அளித்தது. டேபிளின் மேலே சிறிய தட்டுக்கள் கொண்டு அடுக்கி வைக்கப்பட்டு இருக்க, வெள்ளி முலாம் பூசப்பட்ட கரண்டி, கத்தி, அத்தோடு ஓரத்தில் தங்க முலாம் பூசப்பட்ட பீங்கான் தட்டுகள் என்று காட்சி அளித்தது, நாம் டீ தானே சாப்பிட போகிறோம் இது யாருக்கு என்று யோசித்துக்கொண்டே நின்றபோது, டூ யு ஹவ் எ ரிசர்வேசன் ? என்று கேட்க பெயர் கொடுத்துவிட்டு உள்ளே நுழைய, அங்கே ஒரு பெண் யாழ் வாசித்துக்கொண்டு இருக்க ஒரு மிதமான இசை அங்கே மிதந்துக்கொண்டு இருந்தது. உள்ளே அப்படியே பழைய பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் சாயல், அதே பழைய காற்றாடி, லைட் மற்றும் அங்கு இருந்த பணியாளர்கள் கூட அப்படியே !!
  
முடிவில் எங்களை கூட்டிக்கொண்டு போய், ஒரு இடத்தில் உட்கார வைக்க, அவ்வளவு சுத்தமான மேஜையை நான் அதுவரை பார்த்ததில்லை. நான் எனக்கு என்ன டீ சொல்லலாம் என்று நினைத்துக்கொண்டே இருந்தபோது, ஒருவர் டீ கெட்டில் உடன் வந்து டூ யு வான்ட் சம் டீ என்று கேட்க, நான் எஸ், ஹை டீ என்று சொல்ல எனது நண்பர் சிரித்துக்கொண்டே திஸ் இஸ் ஹை டீ என்று விளக்க ஆரம்பித்தார்..... இந்த ஹை டீ என்பது மதியத்திற்கும், மாலைக்கும் இடையில் இருக்கும் வேளையில் பிரிட்டிஷ் மக்கள் சாப்பிட நினைத்தபோது ஏற்பாடு செய்தது, இதில் டீ சாப்பிடும்போது சிறிது பிஸ்கட், பழங்கள், சிக்கன் என்றெல்லாம் எடுத்துக்கொள்வார்கள், மெதுவாக மிக மெதுவாக பேசிக்கொண்டே இப்படி சாப்பிடுவது அவர்களுக்கு பிடித்த ஒன்று, அதையே ஹை டீ என்பார்கள் என்று சொல்லிய போதுதான் ஹை என்பது சீனா மூலிகை எல்லாம் இல்லை என்று தெரிந்தது, ஒரு டீ சாப்பிட எப்படி எல்லாம் யோசிக்கிரானுங்க இந்த பாரீன்காரனுங்க !!
 
 
வாங்க பாஸ், ஏதாவது சாப்பிட எடுத்துக்கிட்டு வருவோம் என்று சொல்லி என்னை கூட்டி செல்ல, அங்கு ஒரு பக்கத்தில் பிஸ்கட், சிக்கன் பப்ப்ஸ், கேக் என்று இருக்க இன்னொரு பக்கம் வெட்டி வைக்கப்பட்ட பழங்களும், இன்னொரு பக்கத்தில் புட்டிங்கும் இருந்தன. பின்னாடி திரும்பி பார்த்தால் டிம் சம் எனப்படும் மோமோ இருந்தது அதுவும் பல வகைகளில். நாங்கள் எல்லாவற்றிலும் சிறிது எடுத்துக்கொண்டு எங்களது டேபிளுக்கு வர எங்களுக்கு முன்னே நாங்கள் எடுத்துக்கொண்டு வந்தது ஒரு மூன்று அடுக்குகளில் வந்தது...... இது போன்று உங்களது முன் இருந்தால் அது ஹை டீ, அப்படி இல்லையென்றால் அது சாதா டீயாம் !! எடுத்துக்கொண்டு வந்தவற்றில் ஒன்றை எடுத்து ஒரு கடி கடிக்க, அது பாகு போன்று கரைந்து சென்றது தொண்டையினுள், அவ்வளவு சாப்ட் மற்றும் ருசி ! எல்லாவற்றையும் இதுபோல கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு திரும்பி பார்க்க, அங்கங்கே இப்படி நிறைய பேர் சிரித்து பேசிக்கொண்டே சாப்பிட்டு கொண்டு இருந்தனர், அப்போதுதான் யாபகம் வந்தது அடேய், டீ சாப்பிட வந்துட்டு அதை ருசி பார்க்கலையே !!
 


நம்மூரில் எல்லாம் ஒரு டீ தூளை எடுத்து தண்ணீரில் போட்டு சிறிது நேரம் விட்டால் நம்ம கலரில் அப்படி ஒரு திக் ஆக ஒரு டீ கிடக்குமே, வெள்ளைகாரனுக்கு டீ கூட பொன்னிறத்தில் இருக்கணும் போல ! டீயை பார்த்தால் அப்படி ஒரு கலர், சிறிது எடுத்து வாயில் வைக்க ஒரு உயர் ரக டீ என்பது எப்படி இருக்கும் என்று அப்போதுதான் பார்த்தேன். ஒரு டீயின் சுவை என்பது நமது ஊரில் இருப்பதற்கும், இங்கு இருப்பதற்கும் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்யாசம் எனலாம். அதில் சிறிது பாலை ஊற்றி, சர்க்கரையை போட்டு எடுத்து வைக்க......... ம்ம்ம்ம்ம்ம்ம் உண்மையிலேயே இது ஹை டீதான் என்று தோன்றியது. இப்படி டீ சாப்பிட்டுக்கொண்டே, அந்த ஹோடேலில் பிரபலமான சிங்கப்பூர் ஸ்லிங் காக்டெயில் ஒன்றும் குடிக்க, அந்த நாள் இனிய நாளே......!!
 

  
 கொஞ்சம் சாண்ட்விட்ச், கொஞ்சம் கேக், கொஞ்சம் ஷாம்பெய்ன், கொஞ்சம் பழங்கள் எல்லாம் சாப்பிட்டுவிட்டு எவ்வளவுங்க என்று கேட்ட வந்த பில் தொகையை கேட்டு டேய் நாம ஒரு டீ சாப்பிடத்தானே வந்தோம் என்று மயக்கம் வந்தது..... ஒரு ஆளுக்கு சுமார் 3500 ரூபாய் ! வெளியில் வரும்போது வீட்டிற்க்கு போன் செய்தேன், எனது மனைவி உங்களுக்கு பிடிக்குமேன்னு இன்னைக்கு ஏலக்காய் டீ, மொளகாய் பஜ்ஜி செய்யலாம் அப்படின்னு இருக்கேன், உங்க யாபகம் வந்துச்சு என்று சொல்ல இங்கே நான் சாப்பிட்ட டீயை நினைத்து எனக்கு ஆனந்த கண்ணீர் வந்தது !

Labels : Suresh, Kadalpayanangal, high tea, tea, raffles hotel, Singapore, sling, best high tea, what is high tea, lets have some tea

5 comments:

 1. டீ மட்டுமா சாப்டிருக்கீங்க ஸீனியர்??? பின்ன பில்லு வராம...

  ReplyDelete
 2. வித்தியாசமாத்தான் இருக்கு! நன்றி!

  ReplyDelete
 3. அலுவலக Meeting ஒரு சில முறை ஐந்து நட்சத்திர விடுதியில் நடந்ததுண்டு. அப்போது தான் இந்த High Tea சமாச்சாரம் முதன் முதலாய் கேட்டது. இந்தியாவில் இருப்பதாலோ என்னமோ, Sandwich கூட பகோடா, டிக்கி, சமோசா என வைத்து இருந்தார்கள்! High Tea என்று சொன்னாலும் Coffee கூட இருந்தது! :)

  ReplyDelete
 4. அடேங்கப்பா...........
  மிரட்ரீங்க
  ரெங்கா

  ReplyDelete
 5. வாங்களேன் ... ஹாயா ஒரு ஹை டீ சாப்ட்டு வரலாம் ...!

  ReplyDelete