Tuesday, October 28, 2014

மறக்க முடியா பயணம் - ரிப்லி'ஸ் நம்பினால் நம்புங்கள் !

வாழ்வில் நம்பவே முடியாது என்று சில விஷயங்கள் இருக்கும் இல்லையா, அதை நாம் அடுத்தவரிடம் சொல்லும்போது கதைய விடறான் என்று நினைப்பார்கள்....... உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் உங்களது தெருவில் ஒருவர் வெறும் கண்ணாடியை தின்று உயிர் வாழ்கிறார் என்று உங்களுக்கு தெரியும், இதை அடுத்தவரிடம் சொல்லும்போது என்னதான் உண்மை இருந்தாலும் சில நேரத்தில் கதையோ என்று தோன்றும். இது போன்று இந்த உலகத்தில் நம்மால் நம்ப முடியவில்லை என்று சொல்லப்படும் விஷயங்களை தொகுத்து வைத்து இருந்தால் எப்படி இருக்கும், அதைதான் செய்கிறது இந்த........ ரிப்லி'ஸ் பிலீவ் இட் ஆர் நாட் !! உதாரனத்திற்க்கு சொல்வதென்றால் நம்ம ஊரில் பொருட்காட்சியில் எல்லாம் அதிசயம் ஆனால் உண்மை என்று ஆளுக்கு பத்து ரூபாய் கொடுத்து உள்ளே சென்று குட்டை மனிதர்கள், வாழைபழத்தில் கல் தொங்குவது என்று பார்ப்போமே, அதேதான் ! ஒரு முறை மலேசியா சென்று இருந்தபோது இதை பார்த்துவிட்டு உள்ளே சென்றேன்........... உண்மையிலேயே இந்த உலகத்தில் நமக்கு தெரியாத அதிசயமான விஷயம் நிறைய இருக்கு !!

மேலும் தகவல்களுக்கு அவர்களது தளத்திற்கு செல்லவும்....... Ripley's Believe it or Not !
1918ம் ஆண்டு ரிப்லி என்பவர் ஒரு பத்திரிக்கையில் நம்ப முடியாத விஷயங்களை பற்றி ஒரு தொடர் எழுதினார், அது ஹிட் அடித்தவுடன் 1923ம் ஆண்டில் இருந்து இது போன்ற விஷயங்களை பற்றி மேலும் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார். அப்பொழுதுதான் பேப்பர் கொண்டு செய்திகள் மக்களை சென்று அடைய ஆரம்பித்து, உலகத்தை பற்றி அதிசயத்துடன் படிக்க ஆரம்பித்தனர், இதனால் இவருக்கு மிக பெரிய ரசிகர் கூட்டம் இருந்தது. இப்படி ஆரம்பித்த பயணம் இன்று ஒரு பெரிய நிறுவனமாக ஆகி இன்று பெரிய பெரிய நகரங்களில் எல்லாம் "ரிப்லி'ஸ் பிலீவ் இட் ஆர் நாட் " அருங்காட்சியகம் ஆக உருவெடுத்து இருக்கிறது. பொதுவாக அருங்காட்சியகம் என்றாலே கொட்டாவி விடுபவர்கள் கூட இங்கு சென்றால் வாயை பிளப்பது நிச்சயம்....... அவ்வளவு தகவல்கள் !உள்ளே நுழையும்போதே ஒரு பெரிய குண்டான ஆண் ஒருவரது மெழுகு உருவத்தினை வைத்து உலகத்தின் மிக எடை அதிகமான ஆள் இவர்தான் என்றும், அவர் பிறந்த நாடு, அவரை பற்றிய செய்திகள் என்று நிறைய போட்டு இருந்தனர். உள்ளே நடக்க நடக்க ஒவ்வொரு பொருளும் ஆச்சர்யம் கொடுத்தது...... உலகின் வயதான போட்டோ எடுப்பவர், அதிக மிருகங்களை வேட்டை ஆடியவர், இரட்டை தலை கன்னுக்குட்டி, சித்திரவதை கூடங்கள், உலகின் உயரமான மனிதர், உடம்பில் அதிகமாக பச்சை குத்தியவர், அதிகமான புத்தகத்தை அடுக்கி வைத்தது என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு இடத்திலும் நின்று பார்த்து, அதிசயித்து இது எல்லாம் இந்த உலகத்தில் இருந்ததா, இப்படியும் மனிதர்கள் இருந்தார்களா என்றெல்லாம் அதிசயிக்க ஆரம்பித்தேன்.தமிழில் "கற்கண்டு" என்று ஒரு புத்தகம் உண்டு, அதை சிறு வயதில் படிக்கும்போது அது ஒரு செய்தியாகத்தான் தெரியும், ஆனால் இங்கு வந்து பார்க்கும்போது நாம் படித்த செய்தி உங்களது முன் இருப்பதை பார்க்கும்போது வரும் அனுபவமே தனி. சில விஷயங்களை பார்க்கும்போது இது உண்மைதானா என்று சந்தேகம் வந்தாலும் இந்த ரிப்லி என்ற மனிதன் உண்மையான விஷயத்தை மட்டுமே தொகுத்து இருக்கிறான் என்ற அந்த நம்பிக்கை இதை நம்ப வைக்கிறது.உலகில் நிறைய பைத்தியக்காரத்தனம் என்று சொல்லப்படும் விஷயங்களும், நம்ப முடியாத மனிதர்களும், நம்ப முடியாத விஷயம் என்றும் நிறைய உள்ளது, அதை பார்க்கும்போது நாம் சில நேரங்களில் செய்வது எல்லாம் பைத்தியக்காரத்தனம் இல்லை என்று தோன்றும். உதாரணமாக ஒரு சறுக்கு மரத்தில் ஏறி விளையாட வேண்டும் என்ற ஆசையில் அதை செய்தால் இந்த வயசில் இப்படி செய்யறீங்களே என்று சொல்வார்கள்.......... அவர்களை இங்கே கொண்டு வந்து விடும்போது, ஒரு காரை ஒரு ரூபாய் கொண்டு ஒட்டி வைத்து இருந்தது, வைரத்தில் ஜட்டி செய்தது, பற்களை டிராகுலா போல ராவியவன், நீளமாக நகம் வளர்த்தவர்கள், தினமும் புது டை என்று சாகும் வரை இருந்தவரின் டை அணிவகுப்பு  என்று அதை பணம் கொடுத்து பார்க்கும்போது இந்த உலகத்தில் நமது விருப்பம் போல வாழ்வது என்றுமே தப்பில்லை என்று தோன்றும் !!


Labels : Suresh, Kadalpayanangal, Malaysia, Genting, Ripley's Believe it or not, Ripley's, museum, interesting museum, marakka mudiyaa payanam, unforgettable journey, journey

5 comments:

 1. ஒவ்வொன்றும் வியப்பு...! படங்களும் அட்டகாசம்...! அசத்துங்க... முடிவில் நீங்கள் சொல்வது தப்பேயில்லை...

  ReplyDelete
 2. அனைத்தும் passion தான்... புரியாதவர்கள் தான் அதை பைத்தியக்காரத்தனம் என்பார்கள்...

  ReplyDelete
 3. செம சார்.. படிக்கும் போதே பார்க்க வேண்டும் போல் இருக்கிறது.. நல்லவேளை தமிழுக்கு நீங்கள் கிடைத்தீர்கள், இல்லை என்றால் எங்களில் பலர் இது பற்றி எல்லாம் அறிந்து கூட இருக்க மாட்டோம்.. உலகம் விசித்திரங்களாலும் விநோதங்களாலும் மட்டுமே நிறைந்து உள்ளது என்பது எவ்வளவு பெரிய உண்மை...

  ReplyDelete
 4. சுரேஷ் அருமை உங்கள பேரும் வரும் கடல் பயணங்களுகாக .... !

  ReplyDelete
 5. Good. Congratulations Suresh. Read about the Indian Express Article. Very happy for you....

  Keep up the good work.

  ReplyDelete