Friday, October 31, 2014

சோலை டாக்கீஸ் - சாப்பிடும் கேரட்டில் இசை கருவி !!

சோலை டாக்கீஸ்.... இந்த பகுதியில் உலகில் இருக்கும் பல விதமான இசை வடிவங்களையும், நான் சுற்றும்போது பார்த்த இசை கலைங்கர்களையும் அறிமுகபடுத்துகிறேன், இதன் மூலம் இசை எத்தனை எத்தனை வடிவத்தில் இருக்கிறது என்று பகிரலாமே என்று ஆசை !! கேரட்.... ஊட்டிக்கு சென்று இருந்தபோது பச்சை பசேல் என்று கேரட் கிடைத்தது, பார்த்தவுடன் நறுக் நறுக் என்று கடித்து சாப்பிட்டேன், சத்தியமாக தெரியாது நான் அப்போது ஒரு இசை கருவியை சாப்பிட்டேன் என்று ! லின்சே பொல்லாக், இவர் ஒரு ஆஸ்திரேலியா இசை கலைஞர். இவர் இசையை ஒரு கருவியை கொண்டு வாசித்தது வரை இவரை யாருக்கும் அவ்வளவாக தெரியவில்லை, ஆனால் என்றில் இருந்து விதவிதமான பொருட்களில் இருந்து இசையை வரவழைத்தாரோ அன்றில் இருந்து உலகம் அவரை திரும்பி பார்க்க ஆரம்பித்தது. 


இவரை இன்று உலகம் கேரட் இசை கலைஞர் என்று அழைக்கிறது, நாம் சாப்பிடும் கேரட்டில் கிலாரியோநெட் என்ற இசை கருவியின் வாய் பகுதியை இணைத்து, அடுத்த பகுதியில் ஒரு புனலை இணைத்து நான் இதை வாசிக்க போகிறேன் என்று சொல்லும்போது சிரிக்கும் நாம், அதில் இருந்து மனதை மயக்கும் ஒரு இசை வரும்போது வாயை பிளக்கிறோம் என்பது உண்மை !! இவர் கேரட்டில் மட்டும் இல்லை பல பல பொருட்களில் இருந்தும் இப்படி இசையை உருவாக்குகிறார். அடுத்த முறை கேரட்டை பார்க்கும்போது உங்களுக்கும் வாசிக்க தோன்றும் !



இந்த காணொளியை காணுங்கள்.... இசையை சுவையுங்கள் !!


Labels : Suresh, Kadalpayanangal, Solai Talkies, Carrot clarionet, instrument made in carrot, amazing music instrument, amazing music, music, different music

10 comments:

  1. அட! எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்! அதை தேடி பகிரும் உங்களின் பணி பாராட்டுக்குரியது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுரேஷ்.... ஆச்சர்யம் தரும் இந்த இசை கருவி பற்றிய உங்களது கருத்துக்கு நன்றி !

      Delete
  2. வித்தியாசமான பகிர்வு.. தொடருங்கள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோவை ஆவி.... குறும்படத்திற்கு உபயோகித்து கொள்ளலாமா ?

      Delete
  3. இப்படியுமா
    அருமை நண்பரே

    ReplyDelete
    Replies
    1. தமிழ் மணம் வாக்கிற்கும், தங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி சார் !

      Delete
  4. என்னமா யோசிக்கறாய்ங்கப்பா!

    அருமையான இசை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சுரேஷ்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட் சார்..... உங்களது ப்ரூட் சலட் போலவே இதுவும் !! வைஷ்ணவோதேவி பயணம் நீங்கள் ஒரு புத்தகமாகவே அல்லது மின் நூலாகவே போடலாம் !

      Delete