வேலை நேரத்திலோ, நண்பர்களுடனோ, தனியாக செல்லும்போதோ ஏதாவது சாப்பிடனும் அப்படின்னு தோணிச்சினா, நம்ம வண்டிய நிறுத்துறது ஒரு டீ கடையின் முன்னேதானே ! கடையின் உள்ளே நுழையும் முன்னரே எச்சில் கிளாஸ் எடுத்து ஏற்கனவே கழுவிய தண்ணீரில் அந்த கிளாசை கழுவி, அதில் சுடுதண்ணிய ஊத்தி, கொஞ்சம் சக்கரை, கொஞ்சம் பால் ஊற்றி, அதில் டீ தூளை இறக்கி நாம லைட், சுகர் கம்மி, கிளாஸ் நல்லா கழுவுங்க எல்லாத்தையும் அந்த வேர்வை வடியும் டீ மாஸ்டர் எதையும் காதில் வாங்காமல் தரும்போது, அந்த டீயை வாங்கி வாயில் வைக்கும்போது டேய்.... ஒழுங்கா ஒரு டீ போடு அப்படின்னுதானே சொன்னேன்..... ஏண்டா ஏன் என்று வடிவேலு வாய்சில் சொல்வோம். கடையின் உள்ளே எலிகள் ஓடிக்கொண்டு இருக்க, நாம் ஒரு வடையை வாயில் வைத்துக்கொண்டு இருப்போம்...... ஒரு டீ கடை அது ஸ்டார் பக்ஸ், காபி ஷாப், cafe போல் எல்லாம் இருக்காதா, டீ கடையின் மாடல் என்பதே நான் மேலே சொன்னதுதானா, ஒரு நல்ல டீயை ரசித்து சாப்பிட முடியாதா என்று யோசித்துக்கொண்டு இருக்கும்போது தெரிந்ததுதான் இந்த "சாய் பாயிண்ட் (Chai Point) !!
![]() |
"Stay Smile" கிருஷ்ணாவுடன்…….. |
என்னுடைய பதிவை விரும்பி படித்து, எப்போதும் சிறு சிறு கலக்கல் கருத்துக்களாக இடும் "Stay Smile" கிருஷ்ணா அவர்கள் அபு தாபியில் இருந்து பெங்களுரு வந்தபோது என்னை பார்க்கவேண்டும் என்று சொன்னார், அவரை விட எனக்கு மகிழ்ச்சியாய் இருந்தது, இதுவரை கருத்துக்களை மட்டுமே பார்த்த நான் அவரை பார்க்க போகிறேன் என்று. அலுவலகத்தில் கடுமையான வேலை இருந்தபோதும் சிறிது நேரமாவது ஒதுக்கி பார்க்க வேண்டும் என்று நினைத்தபோது மதியம் ஒரு சிறு காபி ஷாப்பில் சந்திக்கலாமே என்று நினைத்தேன், ஆனாலும் ஒரு நல்ல டீ கடை எங்கு என்று தேடியபோது கிடைத்ததுதான் இந்த "சாய் பாயிண்ட் (Chai Point) ! வெளியில் இருந்து பார்க்கும்போதே வெகு சுத்தமாக இருந்தது, பெங்களுருவில் இதற்க்கு நிறைய கிளைகள் இருக்கிறது, நாங்கள் கோரமங்களாவில் சென்று இருந்தோம்....... பாஸ், ஒரு டீ சாப்பிடலாமா என்று போனோம்.
![]() |
இவ்வளவு சுத்தமாக ஒரு டீ கடை…... |
டீக்கு எது சரி ?! |
உள்ளே நுழைந்தவுடன் "மே ஐ ஹெல்ப் யு ?" என்று ஆங்கிலத்தில் கேள்வி கேட்க என்ன சொல்வது என்று மண்டையை சொறிந்து ஒரு மசாலா டீ, இஞ்சி டீ, கொறிக்க கொஞ்சம் கேக், சமோசா என்று சொல்லிவிட்டு சுற்றி பார்க்க ஆரம்பித்தோம். உள்ளே நுழையும்போது இருந்த சுத்தம், டீ போடும் இடம், உணவு வைத்து இருந்த இடம் எல்லாம் இருந்தது. சப்ளை செய்பவர்களும் சுத்தமான யூனிபார்ம் அணிந்து கொண்டு இருந்தனர். டீ போடும் கிளாஸ் வெகு சுத்தமாக இரண்டு முறை சுத்தமான தண்ணீரில் கழுவினர், அதை விட அதை சரியான அளவில் ஊற்றி எங்களுக்கு கொடுத்தனர். பின்னர் நாங்கள் கேட்ட கொறிக்க வந்தது...... வெகு சூடாக !!
நண்பருடன் அருமையான டீ…. வேறு என்ன சந்தோசம் வேண்டும் ! |
எல்லாமே ருசியா இருக்கு ! |
![]() |
எனக்கே எனக்கா ?! |
மெதுவாக டீயை எடுத்து ஒரு சிப் அடிக்கும்போது அது டீதான் என்று முதலில் மனம் நம்ப மறுத்தது, பொதுவாக டீ கடைகளில் டீ சொல்லிவிட்டு ஒரு வாய் குடிக்கும்போது டீ போல இருக்கே என்று எண்ண தோன்றும்.... ஆனால் இங்கு இதுதான் டீ போன்று இருந்தது, சுத்தமான முக்கியமாக தண்ணி கம்மியா.... ரொம்பவே கம்மியா இருந்த பால், நல்ல டீ தூள், நல்ல மசாலா, சர்க்கரையை உங்களது அளவு போல போட்டு கொள்ளுங்கள் என்று கொடுத்த விதம் எல்லாம் சேர்ந்து அது உண்மையான டீயின் சுவையை கொடுத்தது. அதை விட முக்கியம், டீ சாப்பிடும்போது கொறிக்க ஏதாவது இருந்தே ஆக வேண்டும் தமிழனுக்கு, டீ கடைகளில் காலையில் அல்லது மாலையில் மட்டுமே சூடாக போடப்படும் பஜ்ஜி, போண்டா இருக்கும்..... இங்கு சமோசா, கேக், பப்ஸ், பிஸ்கட் எல்லாமே இருந்தது. ஒவ்வொன்றும் எடுத்து வாயில் வைக்கும்போது சுத்தமும், சுவையும் தெரிந்தது !! ஒரு நல்ல டீ கடையில் டீ சாப்பிடனும் என்று நினைத்தால், அதுவும் ஒரு டீ கடை என்றால் இப்படியும் இருக்கும் என்று யாருக்காவது காண்பிக்க நினைத்தால் இங்கே கண்டிப்பாக செல்லவும்.
சூடா டீ டோர் டெலிவரி இந்த பிளாஸ்கில் கிடைக்குது ! |
பஞ்ச் லைன் :
சுவை - ஒரு நல்ல தேனீருக்காக அதுவும் சுத்தமான cafe மாதிரியான சூழலில், ருசியான டீ !
அமைப்பு - சிறிய உணவகம், சுத்தம் எங்கெங்கும். நிம்மதியாக நண்பர்களுடன் செல்ல ஒரு இடம் !
பணம் - கொஞ்சம் கொஞ்சம் ஜாஸ்திதான், ஆனாலும் சுவையும் அந்த உணவக அமைப்பும் ஓகே என்று என்ன வைக்கிறது !
சர்வீஸ் - நல்ல மரியாதையாய் சர்விஸ் செய்கிறார்கள் !
அட்ரஸ் :
அட்ரஸ் :
Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, Future tea stall, tea, corporate tea, bangalore, bengaluru, amazing tea, chai point
அசத்தறீங்க வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி சுரேஷ்.... ஒரு முறை கண்டிப்பாக நாம் சந்திக்க வேண்டும் !!
Deleteஅடுத்தமுறை விசிட்டுக்கு குறித்துக் கொண்டேன்
ReplyDeleteபடங்களுடன் பகிர்வு அருமை
அடுத்த முறை நீங்கள் பெங்களுரு வரும் நாளை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்...... நன்றி ரமணி சார் !!
DeleteSureshanna, I am staying in PG just near to this chai shop. If I would have came to know I too would have joined with you. Really I miss u..... One day for a change in tea style I went to that shop. After drinking tea I was blinking of single tea cost...
ReplyDeleteHi Siva, sorry I missed you as I didn't know that you are staying near by. How about meeting again next time ? Yes, the cost is slightly high, but the experience is good !
DeleteIndia runs on chai - Copied from dunkin!
ReplyDeleteThanks for visiting my blog and your comments Peppin !!
Deleteசுத்தமான சுவையான கடையை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள்.
ReplyDeleteநன்றி மணிகண்டன்...... தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் !
Deleteஅருமை நண்பரே
ReplyDeleteநன்றி ஜெயக்குமார் சார், உங்களது கருத்து இன்னும் எழுதும் உற்சாகம் தருகிறது !
DeleteSuresh , Kadaisi varaikkum Tea Price sollavae illai, inga chennai ila , tea Price Rs8 !
ReplyDeletex10
DeleteSarav, padathai konjam utru paarungal vilai pattiyale thanthu irukkiren. Oru tea vilai 18 roopaai muthal...... thanks for visiting my blog and your comments !
Deleteமிக்க மகிழ்ச்சி நண்பரே... அடுத்த முறை உங்களை சந்திக்கும் போது கண்டிப்பாக ஒரு உணவகத்திற்கு செல்ல வேண்டும் என்பது எனது ஆவல்...
ReplyDeleteநன்றி கிருஷ்ணா, கண்டிப்பாக ஒரு நல்ல உணவகத்திற்கு செல்லலாம். வரும்போது சொல்லுங்கள்.
Deleteஅட தில்லியிலும் மூன்று கிளைகள் உள்ளதே.... Bikaji Cama Place தான் சரிப்படும்! அது தான் கொஞ்சம் அருகில்!
ReplyDeleteபகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
நன்றி வெங்கட் சார், சென்று வந்து நீங்கள் எழுதும் பதிவுக்கு காத்திருக்கிறேன் !
DeleteDear Sureshji , I am your fan ... I am sharing your writings with my friends.. Very informative ..We will meet soon .. M. Murali .. Titan ... Hosur ..
ReplyDeleteSuper ji keep going
ReplyDeleteவிலாசத்தைக் குறித்துக் கொள்கிறேன். எப்போதாவது சந்தர்ப்பம் அமையும் போது போய்ப் பார்த்து விடுகிறேன்.
ReplyDelete