Wednesday, November 12, 2014

ஊர் ஸ்பெஷல் - நாகூர் தர்கா !!

நாகூர்….. இந்த பெயரை கேட்டாலே எனக்கு இரண்டு விஷயங்கள்தான் நினைவுக்கு வரும், ஒன்று… தர்கா, இரண்டாவது…. அந்த கணீரென்ற பாடல் பாடும் திரு. நாகூர் ஹனீபா !! இன்றும் குழந்தைக்கு ஏதேனும் ஒன்றென்றால் மந்திரித்து விடுங்கள் என்று சொல்வதும், நாம் தர்காவின் வாசலுக்கு செல்ல தொழுகை முடிந்து வரும் முஸ்லிம் பெருமக்கள்  நலம் பெற ப்ராதிப்பதும் என்று, எந்த  மதமாக இருந்தாலும் அன்புடன் செய்வதை பார்த்திருக்கிறேன். இதற்க்கு மீறி எனக்கு நாகூரை பற்றி எதுவும் தெரியாது, ஆனால் இந்த ஊர் ஸ்பெஷல் பயணத்தின் போது இந்த ஊரின் சிறப்பையும், தர்காவின் சிறப்பையும், கடல் வாணிபத்தில் எந்த அளவுக்கு இந்த ஊர் சிறப்புடன் இருந்தது என்பது பற்றியும், நமது முஸ்லிம் அன்பர்களின் தொன்மை மற்றும் கலாசாரம் பற்றியும் நிறைய தெரிந்து கொள்ள உதவியது. தர்கா சென்று வந்ததையும், நான் அங்கு பார்த்ததையும் எழுதலாம், ஆனால் இந்த பதிவின் மூலம் இஸ்லாம் மதம் பற்றியும், அதன் பிரிவுகள், தர்காவின் ஆரம்ப வரலாறு, தர்காவிற்க்கும் மசூதிக்கும் இருக்கும் வேறுபாடு, மினார்கள் என்று சற்று ஆழ்ந்து பயணிப்போமே…… இதன் மூலம் இன்னும் ஆழ்ந்து நாம் இந்த நாகூர் ஆண்டவரை பற்றி தெரிந்து கொள்ளலாம் !
(இந்த பதிவை பல தளத்தில் கிடைத்த தகவல்களை வைத்தும், நான் புரிந்து கொண்டதை வைத்தும் எழுதியுள்ளேன், இந்த பதிவில் ஏதேனும் பிழை இருந்தால் முஸ்லிம் நண்பர்கள் திருத்தலாமே, இது இஸ்லாத்தை பற்றியும், காலாசாரத்தை பற்றியும் மேலும் தெரிந்துக்கொள்ள உதவும் !!)

நாகூர் என்பது நாகபட்டினம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊர், இது தஞ்சாவூரில் இருந்து சுமார் 90 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, ஒன்றரை மணி நேர பயணம் ! நாகூர் என்றதும் நம் சிந்தைக்கு இனிமையுடன் நினைவுக்கு வருவது நாகூர் ஆண்டவர் என்றழைக்கப்படும் இறைநேசச் செல்வர் ஹஜ்ரத் செய்யிது காதிர் ஷாஹுல் ஹமீது மீரான் சாஹிபு அவர்களின் தர்கா ஒன்றுதான். ஆனால் தமிழக முஸ்லிம்களின் கடல் வாணிப வரலாற்றிலும், இஸ்லாம் வளர்த்த இன்பத்தமிழ் இலக்கிய வரலாற்றிலும் கூட நாகூர் சிறப்பான இடம் வகிக்கிறது. நாகூர் ஷாஹுல் ஹமீது வலி அவர்கள் கி.பி. 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களது காலம் கி.பி 1532-1600 என அறிஞர்கள் கருதுகின்றனர். ஹிஜ்ரி 978ஆம் ஆண்டு (கி.பி. 1558) இவ்வுலக வாழ்வை நீத்தார்கள் எனவும் இவர்களது நினைவாக முதல் கந்தூரி 1559-ல் நடைபெற்றதாகவும் தர்காவின் வரலாறு கூறும் எழுத்தாளர் ஒருவர் கூறுகிறார். ஷாஹுல் ஹமீது வலியுல்லா அவர்கள் நாகூருக்கு வருவதற்கு முன்பே அரேபிய நாட்டிலிருந்து செய்யிது முபாரக் வலியுல்லா அவர்களும், முகமது சித்திக் இப்னு மசூத் அவர்களும் நாகூரில் தங்கி இஸ்லாமிய மார்க்கப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். இவர்களது கல்லறைகளும் நாகூரில் உள்ளன. 
தர்காவின் தெரு வழியே நடந்து செல்ல, பார்க்கும் அனைவரும் ஒரு புன்னகை புரிவது மனதை லேசாக்குகிறது. தர்காவை அதன் மினார்களை கொண்டே அடையாளம் கொண்டு சென்றோம். முதன் முதலாக தர்கா வந்து இருக்கிறோம், அதன் உள்ளே மாற்று மதத்தினர் நுழையலாமா என்று தயக்கம் இருக்க, அதை பார்த்த ஒருவர் எங்களிடம் வந்து தாராளமாக உள்ளே செல்லலாம் என்கின்றனர். வந்த நோக்கம் எது என்று கேட்டு அவர் எங்களை முன்னே வழி நடத்தி சென்றார். இடது புறம் தூரத்தில் கால், கைகளை கழுவும் இடம் இருந்தது சுத்தப்படுதிக்கொண்டு மீண்டும் வர அவர் தள வரலாறை சொல்லி நாகூர் ஆண்டவரின் இடத்திற்கு வழி சொல்லி அழைத்து சென்றார். உள்ளே நுழைய தயக்கம் இருந்ததை ஒரு புன்னகையுடன் பார்த்து, அனைவரும் இங்கே சமம் என்று அழைத்தார். அந்த இடத்தின் உள்ளே நுழையும் முன் ஒரு இடத்தில் மயிலிறகால் மந்தரித்து ஒரு ஒருவராய் உள்ளே அனுப்புகின்றனர். பின்னர் அங்கும் எங்களுக்கு திரு-குர்-ஆன் ஓதி மந்திரித்து அந்த தளத்திற்கு விருப்பமுடன் நன்கொடை எழுதியபின் சிறிது நேரம் அங்கே கண்களை மூடி உட்கார்ந்து இருக்க மனதில் ஒரு அமைதி பரவியது.
கி.பி. 18-ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை நாகூர் தர்கா சிறிய கட்டிடங்களுடனேயே இருந்து வந்திருக்கவேண்டும் எனக் கருதலாம். மராட்டிய மன்னர் பிரதாப்சிங் (1739-1763) நாகூர் தர்கா கட்டிடங்களை விரிவு படுத்திக் கட்டினார். இம்மன்னர் நாகூர் தர்கா கட்டிடங்களின் Founder என்று சொல்லப்படுகிறது. மேலும் பிரதாப்சிங் தர்காவின் பராமரிப்பிற்கு பதினைந்து கிராமங்களை மானியமாக அளித்ததாக கல்வெட்டுச் செய்தி ஒன்று கூறுகிறது. தர்காவில் உள்ள மிக உயரமான (131) அடி மனோராவைக் கட்டியதும் இம்மன்னரே ஆவார். பிரதாப்சிங்கிற்குப் பிறகு வந்த மராட்டிய மன்னர்களும் தர்காவிற்கு பல கொடைகள் வழங்கியுள்ளனர். 19-ம் நூற்றாண்டில் தர்காவின் தரிசனத்திற்கு வரும் கூட்டம் மிகவும் அதிகரித்துக் கொண்டு வந்தது. இதனால் தர்காவின் வருமானமும் பெருகியது. ஆகவே தர்கா நிர்வாகத்தைக் கவனிக்கப் பல குழுக்கள் நியமிக்கப்பட்டன. இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து இந்த தர்காவைப் போற்றி வந்ததால் ஒரு சமயம் முத்துசாமிப்பிள்ளை என்பவர் தர்காவின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்தார். 1934-ம் ஆண்டு முஸ்லீம் அறநிலையங்களுக்கென தனிச்சட்டம் ஏற்படுத்தப்பட்டது. 1954-ம் ஆண்டு வக்பு சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டபின் தர்கா நிர்வாகம் இச்சட்டத்தின்படி முறைப்படுத்தப்பட்டது.



இசுலாம் (இஸ்லாம் இந்த ஒலிக்கோப்பு பற்றி الإسلامஅரபு: الإسلام; al-'islām, Islam) என்பது ஒரிறைக் கொள்கையை கொண்ட ஒரு ஆபிரகாமிய மதமாகும். உலகம் முழுவதும் 1.57 பில்லியன் மக்கள் இம்மதத்தை பின்பற்றுகிறார்கள். இது உலகின் மொத்த மக்கள்தொகையில் 23 சதவீதமாகும். இஸ்லாம் என்ற சொல்லின் மூலம் குர்ஆன் ஆகும். இது ஸ்-ல்-ம் என்ற மூன்று அரபி வேரெழுத்துகளிலிருந்து உருவான ஒரு வினைப்பெயர் சொல். ஏற்றுக்கொள்ளுதல், ஒப்படைத்தல் , கீழ்படிதல் ஆகிய பொருள்களில் இது ஒலிக்கும். இதன் அர்த்தம் கடவுளை ஏற்றுக் கொண்டு, தம்மை அவனிடம் ஒப்படைத்து, அவனை வழிபடுவது என்பதாகும். இசுலாம் இரண்டு அடிப்படை மூலாதாரங்களை மட்டும் கொண்டு அமைந்தது. 1. அல்லாஹ்வின் வேதம். (குர் ஆன்) 2. அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் மார்க்கம் என்ற ரீதியில் அமுல்படுத்தியவைகள். (ஹதீஸ்). முகம்மது (ஸல்) அவர்களுக்கு வழங்கிய திருமறை அல் குர்ஆன் இஸ்லாத்திற்க்கு ஒரு முழு வடிவம் தருவதாகவும் இதற்கு முன் சென்ற நபிமார்களின் வாழ்க்கையை உறுதி செய்வதாகவும் இருக்கிறது.




இசுலாமியர்கள் பொதுவாக சுன்னி மற்றும் சியா என்ற இரண்டு பெரும் பிரிவினராக உள்ளார்கள். இதை தவிர சூபிசம் போன்ற சில பிரிவுகளும் உள்ளன. சூபிசம் என்பது மத்திய காலத்தில் ஏற்பட்ட ஒரு பிரிவு ஆகும். அன்றைய இசுலாமிய ஆட்சியாளர்களின் பகட்டான ஆட்சி முறைக்கு எதிரான இயக்கமாக இது தொடங்கப்பட்டது. உலக வாழ்வை துறத்தல், தவம், இசை ஆகியவற்றின் மூலம் இறைவனை அடைய முடியும் என்பது இவர்களின் வாதம். இவ்வாறான முயற்சிகளால் இறைவனை அடைந்தவர்கள் சூபிகள் என அழைக்கப் பட்டனர். தனியே தங்களுக்கான சட்ட முறைகளை கொண்டிராத இவர்கள், சுன்னி மற்றும் சியா இசுலாமிய முறைகளையே பின்பற்றுகின்றனர். தர்கா வழிபாடு என்பது இவர்களின் பிரதான வழிபாட்டு முறையாகும். 

தர்கா என்பது சூபி பெருமக்களின் சமாதி ஆகும், இங்கு மக்கள் வந்து அவர்களது சமாதிகளை வணங்கி / பார்த்து செல்கிறார்கள்.   பள்ளிவாசல் என்பது, இஸ்லாமியர்களது வணக்கத் தலமாகும். தமிழில் இதனைப் பள்ளி என்றும் அழைப்பதுண்டு. சிலர் இதன் அரபி மொழிப்  பெயரான  மஸ்ஜித்  என்பதையும் பயன்படுத்துகிறார்கள்.  முசுலிம் மக்கள்  தொழுகைக்காக  ஒன்றுகூடும் இடமாகத் தொழிற்படுவதே பள்ளிவாசல்களின் முக்கிய பயன்பாடாகும். 

 
மினார் என்பது, இஸ்லாமியரின் வணக்கத்தலமான பள்ளிவாசல்களில் காணப்படும் முக்கியமான கூறுகளில் ஒன்றாகும். மினார்கள் பொதுவாக மிகவும் உயரமான கோபுர வடிவில் அமைந்தவை.  மினார்களின் முக்கிய செயற்பாடு, தொழுகை நேரங்களில் முஸ்லீம்களைத் தொழுகைக்கு அழைப்பதற்கு வசதியான உயரமான இடமாகத் தொழிற்படுவதாகும். எனினும்  ஒலிபெருக்கிகள்  பயன்பாட்டுக்கு வந்த பின்னர், நேரடியாக மினார்மீது ஏறித் தொழுகைக்கு அழைப்பதில்லை. ஒலி பெருக்கிகள் மட்டுமே மினார்கள்மீது பொருத்தப்படுகின்றன.

 குவிமாடம் (dome) என்பது பல்வேறு கட்டிடங்களில் காணப்படுகின்ற கட்டிடக்கலைக் கூறுகளில் ஒன்று. இது ஒரு வகைக் கூரை அமைப்பு ஆகும். இது ஏறத்தாளக் கவிழ்த்து வைக்கப்பட்ட உள்ளீடற்ற அரைக் கோள வடிவத்தை உடையது. அது ஏன் குவி மாடம் அமைப்பு என்று கேட்பவர்களுக்கு அறிவியல் விளக்கம் வேண்டும்…… பொதுவாக வெப்பம் அல்லது குளிர் அதிகம் இருக்கும் நாட்டில், மக்கள் அதிகம் கூடும் கட்டிடங்களில் இந்த குவிமாட அமைப்பை நீங்கள் காணலாம் (அரண்மனை, மசூதி, கோர்ட், சர்ச், கோவில்கள்). வெப்பம் அதிகம் இருக்கும்போது அது மேலே ஆவியாகி செல்லும், அது எந்த அளவுக்கு மேலே செல்கிறதோ, அந்த அளவுக்கு அந்த அறை குளிர்ச்சியாக இருக்கும், இதனால் அறிஞர்கள் மசூதியில் மக்கள் தொழுகையை நன்கு செய்வதற்கு இந்த அமைப்பை தேர்வு செய்தனர் எனலாம்.


நாகப்பட்டினத்திலும், நாகூரிலும் முஸ்லிம் வணிகர்கள் பலர் வாழ்ந்து வந்தனர். நாகூரில் வாழ்ந்து வந்த முஸ்லிம் வணிகர்கள் பற்றிய செய்திகளும், நாகூர் துறைமுகம் குறித்த செய்திகளும் 16-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்தே நமக்கு கிடைக்கின்றன. இங்கு வாழ்ந்த முஸ்லிம் வணிகப் பெருமக்கள் கப்பல் உரிமையாளர்களாகவும், கப்பல் செலுத்தும் தொழிலில் ஈடுபட்டவர்களாகவும், கடல் கடந்த நாடுகளுக்குச் சென்று வாணிபம் செய்பவர்களாகவும் இருந்தனர். இத்துறைமுகத்திற்கு ஒன்றை மரப்பாய் கப்பலிலிருந்து, 300 டன் எடையுள்ள கப்பல் வரை வந்து சென்றன. இங்கு வாழ்ந்த முஸ்லிம் வணிகர்கள் சுமத்தரா, ஜாவா, மலாக்கா, மலேயா, பர்மா, இலங்கை ஆகிய கடல் கடந்த நாடுகளுடன் வணிகத் தொடர்பு வைத்திருந்தனர். முக்கிய ஏற்றுமதிப் பொருள்களாவன : அரிசி, சங்கு , மிளகு மற்றும் துணிவகைகள். இறக்குமதிப் பொருட்களாவன : பாக்கு, யானை, குதிரை, தேங்காய், உலோகங்கள் மற்றும் வாசனை திரவியங்கள். நாகூர் துறைமுகத்திலிருந்து மேற்கு கடற்கரைத் துறைமுகங்களுக்கும் கிழக்குக் கடற்கரையோரமாக உள்ள பிற துறைமுகங்களுக்கும் வணிகத் தொடர்பு மிக அதிகமாக இருந்து வந்தது. மேலும் நாகூர் துறைமுகம் வெட்டாறின் கிளையான குடவளாற்றின் முகத்துவாரத்தில் இருந்ததால், ஆற்றில் தண்ணீர் அளவு கணிசமாக இருக்கும்போது, ஆற்றினுள் குறைந்த எடையுள்ள கப்பல்கள் மற்றும் படகுகள் போக்குவரத்து நடந்து வந்தது. இதன்மூலம் உள்நாட்டு விளைபொருட்களை, துறைமுகத்திற்கு ஏற்றிவர ஏதுவாக இருந்தது. இந்த கப்பல் வணிகமும், முஸ்லிம் மக்களின் ஆளுமையும் பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றால் இங்கே சொடுக்கவும்…. நாகூர் வணிகமும், மக்களும்.









நாகூரை பற்றியும், நாகூர் ஆண்டவரை பற்றியும், தர்காவினை பற்றியும் விரிவாக கண்டோம், இதில் நாகூருக்கு பெருமை சேர்த்த இன்னொருவர் திரு. நாகூர் ஹனீபா. சிறுவனாக இருந்தபோது இந்த கணீர் குரலில் இவர் பாடும்..... "என் மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா....." என்ற பாடல் மனதில் பதிந்த ஒன்று. பக்தியுடன் ஒரு பாடினால் அது எந்த அளவுக்கு ஒருவரின் மனதை கவரும் என்பதற்கு இவரது பாடல் ஒரு உதாரணம் எனலாம். நாகூர் ஆண்டவரை பற்றி இவர் பாடிய நிறைய பாடல்கள் இந்த ஊர் உள்ளவரையும் நம்மிடத்தில் நிலைத்து நிற்கும் எனலாம்.... கீழே அந்த பாடலின் யூ-டியூப் காணொளி உங்களுக்காக !

 

Labels : Suresh, Kadalpayanangal, Oor special, District special, Nagore, Nagoor, Dharga, Nagore andavar, Islam, Haneefa, Pallivasal, Muslim famous prayer place

14 comments:

  1. Nagore andavar patriya pathivukku

    thanks suresh anna

    ReplyDelete
  2. நல்ல பதிவு. நானும் நாகூர் தர்காவுக்குச் சென்று அங்குள்ள இஸ்லாமிய புனிதர் நாகூர் ஆண்டவரைத் தொழுதேன். இக்கால வஹாபியமற்ற, அரபுமயமாக்கப்படாத தமிழ்க்கலாச்சாரம் கலந்த தமிழ் இஸ்லாம் இன்றும் நாகூரில் காணப்படுவது மகிழ்ச்சியான விடயம். என்னுடைய அனுபவத்தில் தமிழ்நாட்டில் இந்துக் கோயில்களில் எப்படிப் பணம் பறிப்பதில் குறியாக இருப்பார்களோ அதே போன்ற நிலை தான் நாகூரிலும் உண்டு, இந்த விடயத்தில் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களுக்கும், நாகூரிலுள்ள முஸ்லீம் ‘பார்ப்பனர்களுக்கும்’ பெரிய வேறுபாடு கிடையாது. :-)

    ReplyDelete
  3. தஞ்சாவூர் பக்கம் வேதாரண்யத்தில் இருந்தபோது நேரம் கிடைக்கும்போதெல்லாம் (அட்லீஸ்ட் வருடம் ஒருமுறை) நாகூரும், வேளாங்கண்ணியும் சென்று வருவோம்... குடும்பமாக சென்று தொழுது, பிரார்த்தித்து வருவது ஒரு அற்புத அனுபவம்...

    ReplyDelete
  4. நல்ல பதிவு. நல்ல பகிர்வு.

    ReplyDelete
  5. நானும் செல்ல நினைக்கும் ஓர் இடம்! அழகான புகைப்படங்களுடன் சிறப்பான தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

    ReplyDelete
  6. பல முறை சென்ற இடம்
    தங்களால் மீண்டும் சென்று வந்த உணர்வு
    நன்றி நண்பரே

    ReplyDelete
  7. இலங்கை வெள்ளாள வெறியன் வியாசன் கொசுவை அடிச்சு விரட்டுங்ப்பா. எங்க போனாலும் சாதியை பிடிச்சுகிட்டு தொங்கறான்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை கசக்கத்தான் செய்யும்..... :-)))) LOL

      Delete
    2. ஆமாம் , நீ ஒரு இலங்கை ஆதிக்க வெள்ளாள சாதி வெறியன் என்ற உண்மை உனக்கு கசக்கத்தான் செய்யும். :-)))) LOL

      Delete
  8. நாகூரை பற்றி பல விபரங்களை தெரிந்து கொள்ள முடிந்தது .பள்ளிவாசல் உள்ளே புகைப்படங்கள் அருமை!

    ReplyDelete
  9. நாகூரைப்பற்றிய தெரியாத தகவல்கள் நன்றி தங்களிடம் மதுரையில் பேசமுடியாமல் போய்விட்டது வருத்தமே.
    எனது மதுரை விழா பதிவு காண....

    அன்புடன்
    கில்லர்ஜி
    அபுதாபி
    இணைப்பு
    http://www.killergee.blogspot.ae/2014/11/blog-post.html

    ReplyDelete
  10. அன்புயைீர் அஸ்ஸலாமு அலைக்கும்

    உங்கள் பதிவு மிகவும் அருமை

    சிறிய பிழை நல்லமனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா என்ற
    பாடலை நாகூர் அனிபா பாடவில்லை
    மு க முத்துவின் படத்தில் இடம்பெற்றது
    நன்றி

    ReplyDelete
  11. எந்த விதமான வரலாற்று சான்றுகளும் கிடையாது.

    ReplyDelete