"அறுசுவை"..... இந்த பகுதிக்கு நிறைய பேர் ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. எனது நண்பன் ஐசக் ஆனந்த் லண்டனில் இருந்து நீ திண்டுக்கல்லில் இருக்கிறாயா, அங்கு இருக்கும் சுவையான சாப்பாட்டை எழுது என்று கண்டிப்பான அன்புடன் சொல்ல, அதை மறுக்க முடியாமல் அவனுக்காக சென்றது இந்த உணவகம் !! பன்..... டீ கடைகளில் எப்போதாவது அதை எடுத்து டீயில் தொட்டு தின்பதோடு சரி, மிகவும் அரிதாக வீட்டில் ஜாம் தொட்டு சாப்பிட்டதுண்டு, அதை தவிர மிகவும் சுவையாக அதை விதம் விதமாக சாப்பிடலாம் என்று இன்றுதான் தெரிந்துக்கொண்டேன் !

திண்டுகல்லில், பஸ் ஸ்டான்ட் அருகில் ஹோட்டல் ஆனந்த் இன்டர்நேஷனல் என்று இருக்கிறது, அதன் எதிரில் தூரத்தில் இருந்து பார்க்கும்போது மிக சிறிய டீ கடை என்றே தோன்றும், சிறிது உற்று பார்த்தால் மட்டுமே அது சுவையான சிநாக்ஸ் செய்யும் இடம் என்று தெரியும். உள்ளே நுழையும்போதே மெனு வித்யாசமாக இருக்கிறதே என்று தோன்றும்..... எல்லாவற்றிலும் பன் என்று ஒரு சொல் இருக்கும். உங்களது புருவம் அப்போது மெலிதாக வியப்பில் வளையும்...... அடுத்து என்ன சொல்வது என்ற போராட்டம் ஆரம்பமாகும் !!
நாங்கள் கொஞ்சம் காரமாக சாப்பிடலாமே என்று ஒரு மசாலா பன், ஒரு பன் மஞ்சூரியன் என்று சொன்னோம். எங்களது முன்னே இருந்த கண்ணாடி கூண்டில் ஒரு பக்கம் நாம் டீ கடைகளில் பார்க்கும் வெறும் பன், கொஞ்சம் தள்ளி தட்டில் அரிசி, நூடில்ஸ், பாஸ்தா... அடுத்த பக்கம் பல வகை மசாலா என்று இருந்தது. ஆர்டர் எடுத்தவுடன் ஒரு பன் எப்படி சுவையாக மாறுகிறது என்று பார்க்க முடிந்தது. சட சடன்னு அவர் வெங்காயம், பட்டாணி என்று ஒரு தோசைகல்லில் போட்டு மசாலா போட்டு வதக்கும்போதே அவருக்கு இந்த விஷயத்தில் எவ்வளவு அனுபவம் என்று புரிகிறது, அந்த மசாலா வாசனை இங்கே நமக்கு எச்சிலை ஊற வைக்கிறது. அந்த வதக்கிய மசாலாவை பன்னை இரண்டாக பிளந்து அதன் நடுவே வைத்து தர........ வாய் ஆவென்று திறந்தது, ஆச்சர்யத்திலும் பசியிலும் !!

ஒரு வாய் எடுத்து வைக்கும்போதே அட இவ்வளவு நாள் இந்த விஷயம் தெரியாம போச்சே என்று தோன்றுகிறது. வெது வெதுப்பான பன் ஒரு வாய் கடிக்கும்போதே கொஞ்சம் மசாலா காரம் எல்லாம் சேர்ந்து இவ்வளவு சுவையாக செய்ய முடியுமா என்று தோன்றுவதை உங்களால் தவிர்க்க முடியாது. அடுத்து சொன்ன பன் மஞ்சுரியன் வந்தவுடன் இன்னும் இன்னும் ஆச்சர்யம் ஆரம்பம் ஆகிறது, பொதுவாக மஞ்சுரியன் என்றாலே சிக்கன், காளான் அல்லது கோபி என்று தோன்றும், ஆனால் ஒரு பன்னை சிறிது சிறிதாக பியித்து வெங்காயம், மசாலா, மஞ்சுரியன் மசாலா எல்லாம் சேர்த்து கொடுக்கும்போது அட என்று தோன்றுகிறது !! அடுத்து என்ன சொல்லலாம் என்று மெனுவை பார்க்க, வயிறு இங்க இடம் இல்லை பாஸ் என்று கெஞ்ச ஆரம்பிக்கிறது :-)
பஞ்ச் லைன் :
சுவை - பன் என்பதை இவ்வளவு சுவை வகைகளாக செய்ய முடியும் என்று இங்கே தெரிந்தும், சுவைத்தும் கொள்ளலாம்
அமைப்பு - சிறிய உணவகம், நிம்மதியாக நண்பர்களுடன் செல்ல ஒரு இடம் !
பணம் - கொஞ்சம் கொஞ்சம் ஜாஸ்திதான், ஆனாலும் சுவையும் அந்த உணவக அமைப்பும் ஓகே என்று என்ன வைக்கிறது ! (பன் விலையை வைத்து பார்த்தால் ஜாஸ்தி என்று தோன்றும் )
சர்வீஸ் - நல்ல மரியாதையாய் சர்விஸ் செய்கிறார்கள் !
அட்ரஸ் :
திண்டுக்கல் பஸ் ஸ்டான்ட் அருகில், ஆனந்த் இன்டர்நேஷனல் ஹோட்டல் என்று யாரை கேட்டாலும் வழி சொல்வார்கள், அதன் எதிரிலேயே கடை.
மெனு கார்டு :
இது கொஞ்சம்தானாம், இன்னும் பன்னீர் வகைகள் என்று அதிகமாக சேர்க்க போகிறாராம் !
Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, Bun, Bread, amazing food, creative food, bread omblette, tea, tasty, dindigul, opposite to Hotel Anand International, Bun boy foods
அட...! எங்க ஊரு ஸ்பெஷல்...!
ReplyDeleteவருகிற 22 ஆம் தேதி திண்டுக்கல்
ReplyDeleteநண்பர்களுடன் போகவேண்டி உள்ளது
நிச்சயம் ஒரு கை பார்த்துவிடுகிறேன்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
tha.ma 2
ReplyDeletesuper..
ReplyDeleteசூப்பர் பிரதர் ...
ReplyDeleteசுவையாக இருக்கும் என்று தெரிகிறது. ஒரு லீவு நாளில் வீட்டில் முயற்சித்து விடுவோம்!
ReplyDeleteபன்னை வைத்து பின்னி எடுக்கிறார்கள் போல! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteபன்னை வைத்து பின்னி எடுக்கிறார்கள் போல! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஉங்கள் பதிவுகளை ரசித்து படிப்பேன்....
ReplyDeleteஅருமை!
நானும் ஒரு சாப்பாட்டு ராமன்; இருந்தாலும் உங்கள் வழி தனி வழி...
மணிமுத்தாறு அருவி பற்றி படித்தேன். நான் சமீபத்தில் மணிமுத்தாறு அணைக்கு சென்றேன்.
ஏன்???
நான் மூணாவது வகுப்பு அங்கு தான் படித்தேன்...படித்தேன் என்பதை விட பெஞ்சு தேய்ச்சேன் என்று சொல்வதே சரி! நான் வாழ்ந்த இடங்களை பார்ப்பது எனக்கு பிடிக்கும்--படித்த பள்ளி உள்பட.
குற்றாலமும் சென்றேன்...பார்டர் கடை (?) க்கும் சென்றேன். எனக்கு அந்த ஒரு ரூபா சைஸ் பரோட்டா பிடிக்கவில்லை...Of course, taste differs!
Keep writing!
பின்குறிப்பு:
எப்படி நேரம் இதுக்கெல்லாம்...ஈவல்வு எடத்துக்கும்???
This comment has been removed by the author.
ReplyDeleteYes Mr.Nambalki, you are right, that day I got a hit in the right leg and it was swallowing. Right now It is perfectly alright.... See, how much effort I have to put in writing this blog !!
DeleteBut, I appreciate you have noticed that and the care given. Thanks !!
நீங்கள் பதில் போடுமுன்னே நான் எழுதுதியதை [மேலே நீக்கிவிட்டேன் என்று சொல்வதற்காகவும், நீங்கள் பதில் போட்டதால் நான் எழுதியதை சொல்லவேண்டியதால்---இந்த பின்னூட்டம்.
Deleteநான் அதில் எழுதியது...ஐந்தாவது படத்தில் உள்ள கால் வீங்கி உள்ளது--நீர் கோத்தா மாதிரி இருக்கு. எனவே, காலுக்கு சொந்தக்காரர் யாராக இருந்தாலும் மருத்துவரை அணுகவும்.
____________
பின்குறிப்பு:
அது உங்களுக்கு எழுதியது....மாடரேஷன் கூட இல்லை போல இருக்கு.!
பாஸ் இன்னும் திண்டுககல்லில் இருந்தால் எனக்கு போன் பண்ணுங்க 9944879949
ReplyDeleteI will ask my brothers childrens to try this
ReplyDeleteசூப்பர் சுரேஷ்! திண்டுக்கல் போகும்போது கண்டிப்பா முயற்சிக்கிறேன்...
ReplyDeleteவிலை நயம் தான் சீனியர்... அதிகம் இல்லை... இங்கே மும்பையில் Pav Bhaji (பன் வகை தான்) எல்லாம் ரூபாய் 50இல் ஆரம்பிக்கும்...
ReplyDeleteஎத்தன நாளைக்கு தான் பன்னையே பாக்குறது :(
ReplyDeleteSuperb sharing. Are the owners Shri Lankans? They are the ones who use bun (written as paan) in the place of parotta and rice
ReplyDeleteSuper Suresh sir..,
ReplyDeleteNeengal solluvathu 100 / 100 Unmai..,
Arumaiyana Maalai Nera unavu endre sollalam...
Oru Naal Maalai nerathil Malaikkaka Othinginen (Bun Boy Food) ingu...
Andrumudhal Adimai akiviten . Anbirkkum Arusuvaikkum.
Regards..,
R.P.Manikandan
9655443325