Wednesday, December 31, 2014

கடல் பயணங்கள் அவார்ட் 2014 !!

2014ம் ஆண்டு ஒரு நல்ல ஆண்டாக அமைந்தது என்றே எண்ண தோன்றுகிறது, அதுவும் பதிவுலகில் நிறைய நண்பர்களும், அவர்களது கருத்துக்களும் என்று ஒரு சிறந்த ஆண்டாக இருந்தது. இந்த வருடத்தில்தான் எனது பதிவுகள் நிறைய பேர் திரும்பி பார்க்கும் வண்ணம் இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த வருடத்தில் நான் இந்த பதிவுலகத்தில் ரசித்த விஷயங்கள், என்னை பாதித்த விஷயங்கள், நான் சந்தித்த அற்புத மனிதர்கள் என்று சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துகொண்டால் என்ன என்று தோன்றியது !! அவார்ட் என்று சொன்னாலும் இது நான் படித்த, ரசித்த விஷயங்கள் பற்றிய ஒரு தொகுப்பே தவிர, அது வரிசைபடுதுவதல்ல எனலாம். இவர்களது பதிவுகளை நீங்களும் சென்று வாசித்தால் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் ! இந்த பதிவுகள் என்பது எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி இயங்குபவர்கள் பற்றியது, இவர்கள் தங்களது நேரத்தில் இருந்து சிறிது எடுத்து இப்படி எழுதுகிறார்கள், இவர்களின் மீது இந்த அவார்ட் சிறிது வெளிச்சம் பாய்ச்சினால் நான் சந்தோசமடைவேன் !!

 கடல் பயணங்கள் அவார்ட் 2014

 இது போன்று அவார்ட் என்று கொடுக்கும்போது ஒரு சந்தோசம் இருந்தாலும், சில நண்பர்கள் அவர்களுடைய பதிவுகளை குறிப்பிடவில்லையே என்று கோபித்து கொள்வதும் நடக்கும். ஆனாலும், இதை அவர்கள் என்னை புரிந்து கொள்வார்கள் / புரிந்து வைத்திருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்......

"தேவியர் இல்லம்" ஜோதிஜி (http://deviyar-illam.blogspot.com/)...... இவரது புத்தகம் டாலர் நகரம் என்பது மூலம் இவரது தளத்திற்கு சென்று படிக்க ஆரம்பித்தேன். 2013ம் வருடம் சென்னை பதிவர் சந்திப்பில் இவருடன் பேசி மகிழ்ந்தேன், இன்று வரை நல்ல நண்பர். எந்த வித தயக்கமும் இல்லாமல் இவருடன் உரையாடும் அளவுக்கு ஒரு எளிய மனிதர். இவரது ஒவ்வொரு பதிவுகளும் உண்மையை உரைப்பவை, இவரது பதிவுகளை படித்துவிட்டு சிலசமயங்களில் நான் ஆழ்ந்த யோசனைக்கு சென்றது உண்டு. இவரது பதிவுகளை அனைவரும் படிக்கும் வண்ணம் இலவச மின் நூலாகவும் தருகிறார்...... பயத்தோடு வாழ பழகி கொள், வெள்ளை அடிமைகள், ஈழம் வந்தார்கள் மின் நூல்கள் நான் ரசித்தவை. இன்று அவர் எழுதி வரும் ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் என்பது தவறாமல் படிக்கும் ஒன்று.
 இவருக்கு.....


பதிவுகள் எழுதுவது என்பதே கடினம் என்னும் நிலை இன்று உள்ளது, பதிவுகள் என்பது ஒருவரை பிரதிபலிப்பது. இந்த பதிவுகள் படிக்கும் வரை இது ஒருவரால் மட்டுமே எழுதப்பட்டது என்று நினைத்து வந்தேன், ஆனால் நண்பர்கள் சேர்ந்து ஒரு பத்திரிக்கையை போல எழுதி வருவது என்பது "எங்கள் blog (http://engalblog.blogspot.in/)" என்னும் தளம். இதில் எளிமையான நடையில் பதிவுகள் எழுதி வருபவரில் எனது நண்பர் என்று உரிமையுடனும், பெருமையுடனும் திரு.ஸ்ரீராம் அவர்களை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இதில் வரும் நம்பிக்கை மனிதர்கள் என்பது மிகவும் விரும்பி படிக்கும் ஒன்று. இந்த தளம் சில மாற்றங்களை சந்தித்தால், இந்த இணைய உலகில் கண்டிப்பாக தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும் என்பது எனது கருத்து. இவருக்கு.....
 
 


பதிவுலகில் பிரதிபலன் பாராமல் பதிவுகள் எழுதுபவர்கள் பலர், ஆனாலும் சில விஷயங்கள் எல்லோருக்கும் பயன் தரும் ஒன்று. இணையத்தில் எந்த ஒரு புத்தகங்கள் டவுன்லோட் செய்ய வேண்டும் என்று தேடினாலும் இங்கு செல்லலாம் எனலாம், சில நேரங்களில் ஆச்சர்யம் தரும் அளவுக்கு புத்தகங்களை PDF வடிவில் தருகிறார். நாவலோ, பத்திரிக்கையோ எதுவானாலும் இங்கு இலவசமாக எடுத்துக்கொள்ளலாம்....... பொழுதுபோக வில்லை என்றால் இங்கு சென்று புத்தகங்கள் படிப்பது எனது பொழுதுபோக்கு. உங்களது சேவை தொடரட்டும் ஒரத்தநாடு கார்த்திக்  (http://orathanadukarthik.blogspot.in/). இவருக்கு......***********************************************************************************


 
இதில் சில பதிவர்கள் / பதிவுகளை நான் அவார்ட் என்று வகை படுத்த விரும்பவில்லை,ஏனென்றால் இவர்களது பதிவுகள் எல்லாம் விருதுகளுக்கு அப்பாற்பட்டது என்பது என் கருத்து. எப்போதும் நான் அவர்களின் பதிவுகளை வாசித்து விடுவேன்.... அவர்களை நான் இங்கே குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன் !!


சங்கவி சதீஷ்
காணாமல் போன கனவுகள் ராஜி
ராஜராஜேஸ்வரி
கோவை ஆவி
ஆரூர் மூனா செந்தில்
திண்டுக்கல் தனபாலன்
ரமணி - யாதோ ரமணி
தேன் மதுர தமிழ் கிரேஸ்
வா மணிகண்டன்
ஜாக்கி சேகர்
கேபிள் சங்கர்
கார்த்திக் நீலகிரி
அதிஷா
ஆலிலை
பழனி கந்தசாமி ஐயா
சிவகாசிக்காரன்
இனியவை கூறல்
இன்றைய வானம்
நாஞ்சில் மனோ
மெட்ராஸ் பவன் சிவகுமார்
துளசி கோபால்
தமிழ்வாசி பிரகாஷ்
பாவா ஷரீப்
அமுதா கிருஷ்ணா
பட்டா பட்டி
பால கணேஷ்
புலவர் ராமானுஜம்
ஜெயதேவ் தாஸ்
அஜீமும் அற்புதவிளக்கும்
பாஸ்கரன் - உலக சினிமா ரசிகன்
வடுவூர் குமார்
செம்மலை ஆகாஷ்
சீனு திடம் கொண்டு போராடு
இக்பால் செல்வன்
அண்ணாமலையான்
குட்டன்
ஸ்கூல் பையன்
கும்மாச்சி தக்குடு
பந்து
நாடிநாராயணன்
மணி என்பாட்டை
ராஜா மாதேவி
கிருஷ்
குரங்கு பெடல்
வல்லி சிம்ஹன்
அன்புடன் அருணா
கோபாலகிருஷ்ணன்
காட்டான் பழனி கந்தசாமி
ஸாதிகா
வருண்
முருகானந்தம்
முனைவர்.இரா .குணசீலன்
தேவா SP
ராஜ்
ராஜேஷ்
அசோக்
விச்சு
காரிகன்
இக்பால் செல்வன்
ரங்குடு
ஜீவன்
சிவம்
வடுவூர் குமார்
கோமதி அரசு ***********************************************************************************
இந்த வருடத்தில் நிறைய பதிவுகள் படித்திருக்கிறேன், ஆனாலும் இன்று என்னுடைய பதிவுகளையே ஒரு வாசகரின் நிலையில் இருந்து திரும்பி பார்க்கும்போது நான் சென்ற பயணங்கள், உண்ட உணவுகள், ஊர் ஸ்பெஷல் என்று நிறைய இருந்தாலும், வெகு சில என் மனதிற்கு நெருக்கமானவையாகவும், மிகவும் விரும்பியதாகவும் இருந்தது. நீங்கள் என் பதிவுகளை முழுமையாக இந்த வருடத்தில் படித்து இருக்கவில்லை என்றாலும் இதை கண்டிப்பாக படித்துவிடுங்கள்..... ஏனென்றால் இதெல்லாம் முத்துக்கள் !!அறுசுவை -ஐயப்பா தோசை கடை, மதுரை
அறுசுவை (சமஸ்) - ஆண்டவர் கடை அசோகா அல்வா, திருவையாறு
அறுசுவை (சமஸ்) - புத்தூர் அசைவ சாப்பாடு

ஊரும் ருசியும் - ராமசேரி இட்லி !

எண்ணங்கள் - ஓடி ஓடி ஒரு ஹாலிடே !!
சாகச பயணம் - நடுக்காடு...டென்ட்... பயம் (பாகம் - 1) !!
உலக பயணம் - தண்ணீருக்குள் ஒரு உலகம் !!

நான் ரசித்த கலை - பாட்டில் மணல் ஓவியம், துபாய்
சோலை டாக்கீஸ் - சாப்பிடும் கேரட்டில் இசை கருவி !!
உயரம் தொடுவோம் - புர்ஜ் கலீபா, துபாய்

சிறுபிள்ளையாவோம் - டென்ட் கொட்டகை !!
ஊர் ஸ்பெஷல் - பத்தமடை பாய் ! (பகுதி - 1)

திரும்பி பார்க்கிறேன்...... நன்றி 2014 !!

****************************************************************************************************

என்னதான் அவார்ட் என்று கொடுத்தாலும், வாங்கி கொண்டாலும் பதிவுலகில் நண்பர்கள் என்பது வரமே. அதுவும் பதிவர் சந்திப்பில் நிறைய பதிவர்களை சந்தித்த அந்த அனுபவம், எல்லோரிடமும் பேசியது என்பது சந்தோசம் கொடுத்தது. எனது பதிவை வாசித்து, எழுத உற்சாகம் ஊட்டிய அனைவருக்கும் எனது நன்றிகள் ! உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ! இனி எல்லாம் சுகமே..... ஜெயமே !!
 


Labels : Suresh, Kadalpayanangal, Blogger award, best blog, I love blog, 2014, list of blogs, Year end blogging, eve of new year blog 

18 comments:

 1. புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 2. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. புத்தாண்டு வாழ்த்துகள் சுரேஷ்...... விருது பெற்ற அனைவருக்கும் நீங்கள் வாசிக்கும் தளங்களின் எழுத்தாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. நன்றி சீனியர்... யார் படிக்கப் போகிறார்கள், இருந்தாலும் நம் சந்தோஷத்துக்கு எழுதுவோம் என்ற மனநிலையில் தான் பதிவிடுகிறேன்... படிக்கிறார்கள், கவனிக்கிறார்கள் என்று அறியும் போது வரும் சந்தோஷம் சொல்ல முடியாது...

  Again, நன்றி சீனியர்... இந்த உங்கள் கவனம் மேலும் எழுதத் தூண்டுகிறது...

  ReplyDelete
 6. HAPPY NEW YEAR 2015 ! SURESH JI !!!!

  ReplyDelete
 7. So..Kummachi and Thakkudu are one and the same? Was surprised..:)

  ReplyDelete
  Replies
  1. கும்மாச்சிக்கும் தக்குடுவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

   Delete
 8. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. நட்பு சிறப்பிக்கப்பட்டமைக்கு நன்றி நண்பரே.. மகிழ்ச்சி. உங்களுக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், கடல் பயணங்களில் சக வாசக நண்பர்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
 10. உங்களுக்கும் உங்கள் மனம் கவர்ந்த பதிவர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சகோ..

  உங்களுக்கு வாழ்த்துச் சொல்ல வந்த எனக்கு இன்ப அதிர்ச்சியாய் பிடித்த தளமாய் என்னுடையதையும் சொல்லியிருக்கிறீர்களே..மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 12. மிக்க நன்றி... இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 13. இந்தப் பதிவில் தான் என்னை இணைக்கவில்லை என்று கூறியிருந்தீர்களா... என்னுடைய பதிவும் நீங்கள் படிக்கிறீர்கள் என்பதில் மகிழ்வு. அனைத்து நட்புகளுக்கும் என் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. பிளாக்கர் சன்சைன் அவார்ட் 2014............எனக்குக் கொடுத்ததில் மகிழ்ச்சி ..

  ReplyDelete