Tuesday, December 30, 2014

புதிய வருடம்.... புதிய பகுதிகள் !! - 2015

கடல்பயணங்கள்......... இந்த பயணம் உங்களுக்கு வாழ்க்கையின் மீது ஆர்வத்தையும், பிரமிப்பையும், காதலையும் வரவழைக்கும் ! தேடல் என்பது ஒரு மனிதனுக்கு இல்லாவிட்டால் வாழ்வில் சுவாரசியம் என்பது இல்லாமல் போய் விடும், ஒவ்வொரு வருடமும் இந்த தேடல் அதிகமாகி வருகிறது, மனதில் கேள்விகள் எழ எழ அதை தேடிய இந்த நீண்ட பயணமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு பயணத்திலும் இந்த உலகம் மிகவும் பெரியது என்ற எண்ணமும், நான் மிக சிறியவன் என்ற எண்ணமும் வந்து வந்து போகிறது !!மாற்றம் என்பதுதான் இந்த வாழ்க்கையில் மாற்றம் இல்லாதது என்ற வரிகள் மிகவும் உண்மையே இல்லையா, கடல்பயணங்கள் தளமும் இதற்க்கு விதிவிலக்கா என்ன ? ஆனால், இந்த மாற்றம் நீங்கள் இந்த தளத்தை புதிதாக பார்ப்பதற்கு மட்டும் இல்லை, புதிதாக உணரவும்தான் ! சென்ற வருடத்தில் நீங்கள் படித்த பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருந்ததா, அப்படியென்றால் இந்த வருடம் இன்னும் புதிதாக, இன்னும் புதுமையாக, இன்னும் சுவாரசியமாக தேடல் இருந்தால் எப்படி இருக்கும் ?! இந்த வருடம் இந்த புதிய தேடலை உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறேன்..... உங்களுக்கு ஆச்சர்யங்களும், சந்தோசங்களும் காத்திருக்கிறது எனலாம் !

உணவு வேட்டை :

வேட்டை என்பது பசிக்கு சாப்பிடுவது, நிறுத்தி நிதானமாக திட்டம் போட்டு நடத்துவது. மிருகங்கள் பசியோடு இருக்கும்போது பார்த்து இருக்கின்றீர்களா, மெதுவாக மிக மெதுவாக தனது ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கும், வேட்டையாடி முடித்தவுடன் நிதானமாக ருசித்து ரசித்து சாப்பிடும்.... அது போலவே, எல்லோரும் சாதாரணமாக பார்க்கும் ஒரு உணவு, அதை ஊர் / உலகம் முழுவதும் தேடி தேடி சாப்பிட்டால் எப்படி இருக்கும் ? அந்த உணவை இப்படி எல்லாம் சுவைகலாமா என்று ஆச்சர்யபடுதினால் எப்படி இருக்கும் ? அதன் அடி முதல் தலை வரை தேடி தேடி சாப்பிட்டு பார்த்தால் எப்படி இருக்கும் ? வருடம் முழுவதும் இந்த உணவை தேடி தேடி அலைந்து, அதை உங்களுக்கு பந்தி பரிமாறினால் எப்படி இருக்கும்........ அவ்வளவு தகவல்கள், சுவாரசியங்கள், ஆச்சர்யங்களுடன் இந்த பகுதி வரும். பன்னிரெண்டு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குறிஞ்சி பூ போல, இந்த உணவு வேட்டை பதிவுகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பதிவிடப்படும்........ ஆனால், தேடல் மிக மிக ஆழமாக !!
ஊர் ஸ்பெஷல் :

இந்த பகுதியில் இதுவரை ஏட்டளவில் மட்டுமே இருந்து வரும் ஒரு ஊரின் பெருமையை, சென்று கேட்டு எழுதி வருகிறேன். இதை நீங்கள் விரும்பி படிப்பது கண்டு மகிழ்கிறேன்.... அதை இன்னும் சுவாரசியபடுத்தினால் எப்படி இருக்கும் ?! சில விஷயங்கள் அழிந்து விட்டன என்று நம்பும் சிலருக்கு, அது இன்னும் அழியவில்லை என்று ஆச்சர்யபடுதினால் எப்படி இருக்கும்....... உதாரணமாக உறையூர் சுருட்டு, சென்னிமலை போர்வை, கல்லிடைகுறிச்சி அப்பளம் என்று அது செய்யப்படும் விஷயத்தையும், அதன் தற்போதைய நிலைமையையும் படம் பிடித்து காட்டலாமே. ஆச்சர்யங்கள் மிகுந்த இந்த பயணங்களில், உங்களையும் இனி கை பிடித்து கூட்டி சென்றால் எப்படி இருக்கும் ?!

 


அடையும் கூடு :

ஒரு மனிதனுக்கு முக்கிய தேவை என்பது உணவு, உடை மற்றும் தங்கும் இடம் ! இதில் உணவு பற்றி தேடி செல்லும்போதும், குடும்பத்துடன் எங்கேயாவது செல்லும்போதும் தங்கும் இடம் இன்றியமையாதது. உணவை பற்றி தேட எவ்வளவு நேரம் செலவளிக்கிறேனோ, அதே அளவு தங்கும் இடத்தை தீர்மானிப்பதர்க்கும் செலவழிக்கிறேன். மலைகளின் நடுவே ஒரு மர வீடு, ஆற்றின் நடுவே ஒரு ரூம், ஐந்து நட்சத்திர ஹோட்டல், அரண்மனை போன்ற ஹோட்டல், சிறு குடிசையில் தங்கல், கோவில் பார்த்த வீதிகள் கொண்ட ரூம், ரோட்டு ஒர தங்கும் விடுதிகள் என்று ஆச்சர்யபடுத்தும் விவரங்களை பகிரவே இந்த தளம்..... அடையும் கூடு.... ஆம், நாம் எல்லோரும் கூடு அடையும் பறவைகள்தானே ?!


ஊரும் ருசியும் :

சில வாரங்களாக இந்த பகுதியை எழுதி வந்தாலும், இந்த வருடத்தில் இது இன்னும் பொலிவு பெற இருக்கிறது. திரு.வெ.நீலகண்டன் எழுதிய "எந்த ஊரில் என்ன ருசிக்கலாம் ?" என்ற புத்தகம் படித்தேன், அதில் சொல்லி இருந்தது அனைத்தையும் என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை என்றாலும் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு ருசி உண்டு என்பதை அறிய முடிந்தது, உதாரணமாக நாகர்கோவில் முந்திரிகொத்து, சேலம் தட்டுவடை செட், காரமடை காரமுறுக்கு என்று அந்த ஊருக்கு என்று ஒரு சுவை இருக்கிறது, இதை ஊர் ஸ்பெஷல் பகுதியில் எழுத முடியாது, ஏனென்றால் அது அந்த அளவுக்கு பிரபலம் இல்லை...... இதனால் ஒவ்வொரு ஊரின் சுவை மிகுந்த, தனித்த அடையாளம் கொண்ட ருசிகளை இதன் மூலம் பகிர நினைக்கிறேன். இந்த பகுதி, நீங்கள் செல்லும் ஊருக்கு நாக்கிற்கு வழி காட்டும் !!


நான் ரசித்த பதிவுகள் :

நான் பதிவுகள் எழுத ஆரம்பித்தபோது, அன்று நல்ல பதிவுகளை எழுத வேண்டும் என்று தேடி செய்தேனோ அதையேதான் இன்றும் செய்கிறேன். ஆனால், அன்று அதை படித்தவர்கள் மிகவும் குறைவு, எனது பதிவுகளை பார்த்துவிட்டு மற்ற பதிவர்கள் தங்களது தளங்களில் என்னையும் எனது தளத்தையும் அறிமுகபடுத்தினார்கள். இது என்னை உற்சாகமூட்டியது, எழுதவும் தூண்டியது. அது போலவே, நான் படிக்கும் பதிவுகளில் நான் ரசித்தவற்றை பதிவு செய்ய எண்ணம். இது எனது பதிவுகளை விரும்பும் வாசகர்களுக்கு வேறு வேறு நல்ல பதிவுகளை அறிமுகம் செய்தது போல இருக்குமே. புதிய வருடத்தில் இருந்து சுவையான, நல்ல, விரும்பக்கூடிய பதிவுகளை இந்த தளத்தில் அறிமுகம் செய்வேன்...... படித்து மகிழுங்கள் !!

முக்கியமான விஷயம் 
 

என்னை சந்திக்கும் பலரும், எதாவது ஒரு ஊருக்கு சென்று அங்கு என்ன நல்ல உணவு இருக்கு என்று தேட முற்படும் போது எனது வலைத்தளத்தில் சட்டென்று முடிவதில்லை என்று குறைப்பட்டுக்கொண்டனர். அது மட்டும் இல்லாமல், தளத்தில் இன்னும் சில குறைகளையும் கூறி அதை சரி செய்ய முடியுமா என்றனர்....... விரைவில், இந்த தளம் புதிய வடிவத்தை எடுக்கும், தேடுதல் இன்னும் எளிமையாக்கப்பட்டு உங்களது எல்லா கருத்துக்களும் இந்த தளத்தை அழகாக்க போகிறது !! ஒரு சிறு மாற்றம், பெரும் சந்தோசத்தை தரும் ! 


இது வரை எழுதி வந்த பகுதிகளான அறுசுவை, அறுசுவை(சமஸ்), சிறுபிள்ளையாவோம், மற்றும் அனைத்தும் மெருகேரியும், அழகாகவும், புது பொலிவும் பெற இருக்கிறது ! இந்த மாற்றம் ஒரு சந்தோசமான மாற்றம்தானே ! இதன் மூலம் பல புதிய நண்பர்களையும், பழைய நண்பர்களுடன் இன்னும் நெருக்கமாகவும் உதவும் என்று எண்ணுகிறேன்......... புதிய வருடம்... புதிய உதயம் !!

Labels : Suresh, Kadalpayanangal, New year, New resolution, New topics, Others, Matravai, Enjoy reading, food map

17 comments:

 1. மாற்றங்களுக்கு காத்திருக்கிறோம்

  ReplyDelete
 2. புது வருடம் மேலும் புதுமையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. ஆஹா..... விருந்து வருது !!!

  We wish you all the best!

  ReplyDelete
 4. மாற்றங்கள்.... வாழ்க! வளர்க!

  வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. ஏற்கனவே சூப்பர் ,இன்னும் விரும்பத் தக்க மாற்றங்களா ?வரவேற்கிறேன் சுரேஷ் ஜி :)
  த ம 2

  ReplyDelete
 6. You are always Rocking.. We are waiting.... Best Wishes ....

  ReplyDelete
 7. மாற்றங்களுக்கு காத்திருக்கிறோம்
  Anbudan. .. M.Murali .. Titan .. Hosur

  ReplyDelete
 8. புது வருடம் புதுப் புது மாற்றங்களைக் கொண்டு வரட்டும்
  தொடருங்கள் நண்பரே
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. மாற்றங்களை வரவேற்கிறோம்.

  ReplyDelete
 10. புது வருடம் புதுப் புது மாற்றங்களை வரவேற்கிறோம்.

  ReplyDelete
 11. Wow! We are Expecting New Interesting Writings in coming year 2015

  ReplyDelete
 12. மாற்றங்களுடன் வலம் வர வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 13. புதிய பதிவுகளை வரவேர்க்கக் காத்திருக்கிறோம்.

  ReplyDelete
 14. என்ன ஒரு திட்டமிடல்....வியக்கிறேன் சுரேஷ்.... உங்கள் திட்டம் அருமையாய் நிறைவேற இனிய வாழ்த்துக்கள்

  ReplyDelete