Monday, December 1, 2014

ஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் தட்டு !!

அரசியல் மேடைகள், கல்லூரி விழாக்கள், பாராட்டு நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் தவறாமல் இடம் பெறுவது இரண்டு…. ஒன்று சால்வைகள், இரண்டாவது நினைவு பரிசு ! இந்த நினைவு பரிசுகளை இதுவரை கவனித்து பார்த்து இருக்கிறீர்களா, அது நமது தஞ்சாவூர் தட்டோ அல்லது அதனது மறு உருவமோதான் !! தஞ்சாவூர் என்றதும் நமக்கு ஓவியம், தலையாட்டி பொம்மை, வீணை மற்றும் தட்டு என்பது யாபகம் வரும், இந்த முறை தஞ்சாவூர் சென்று இருந்தபோது தஞ்சாவூர் தட்டு செய்வதை பார்க்க வேண்டுமே என்று ஆவலுடன் அலைந்தேன், என்னுடைய அலைச்சலை எளிமையாக்கினார் "தஞ்சாவூர் மாநகராட்சி" என்ற முகநூல் பக்கத்தை நடத்தி வரும் திரு.செந்திக்குமார் பாலகிருஷ்ணன்.  எனது பதிவுகளை படித்து வரும் அவரிடம் இந்த தஞ்சாவூர் தட்டு பற்றி பார்த்து, அறிந்து எழுத வேண்டும் என்றவுடன் என்னை அந்த தட்டு செய்யும் இடத்திற்கு கூட்டி சென்றார், அவருக்கு எனது நன்றிகள் !!

"கைவினை கலைஞர்"திரு.லோகநாதனுடன்…… கடல்பயணங்கள் !
தஞ்சாவூர் நகரம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தஞ்சாவூர் மாவட்டத் தலைநகரமாகும்.தஞ்சை என்றும் அழைக்கப்படுகிறது. தஞ்சாவூர் எட்டாம் நுற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஒரு நகராகும். அப்போது இப்பகுதியினை வளமையோடு ஆண்டு வந்த தனஞ்சய முத்தரையரின் பெயரையே இந் நகரம் பெயராகப் பெற்றது. தனஞ்சய ஊர் என்பது மருவி தஞ்சாவூர் என்று நிலைப்பெற்றது என்றும் கூறப்படுகிறது. கி.பி. 655ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. சுமார் 850 வரை முத்தரையர்கள் என்ற குறுநில மன்னர்கள் தஞ்சைப் பகுதியை ஆட்சி புரிந்துள்ளனர். கி.பி. 850இல் தஞ்சாவூரை முத்தரையர்களிடமிருந்து விஜயாலய சோழன் கைப்பற்றித் தஞ்சை சோழர் ஆட்சியைத் தோற்றுவித்தார். பிற்காலச் சோழர்களின் தலைநகராகத் தஞ்சாவூர் திகழ்ந்தது. இராஜராஜசோழன் ஆட்சிக் காலத்தில் (985-1014) தஞ்சாவூர் நகர் மிக்க புகழ் எய்தியது. இராஜராஜ சோழனின் மகனரான இராசேந்திர சோழன் கி.பி. சுமார் 1025இல் தனது கலைநகரைத் தஞ்சாவூரிலிருந்து கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றினார். கி.பி. 13ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட மதுரைப் பாண்டிய மன்னர்களின் எழுச்சியால் தஞ்சைப் பேரரசு வீழ்ச்சியடைந்தது. பாண்டியரின் வீழ்ச்சிக்குப்பின் தஞ்சாவூர் விஜயநகர அரசின் ஆட்சிக்குட்பட்டது.கி.பி. 1532இல் தஞ்சையில் நாயக்க மன்னர்களின் ஆட்சி தொடங்கிற்று. திருச்சியைத் தலைநகராகக்கொண்டு ஆட்சி புரிந்த மதுரை நாயக்க மன்னர் சொக்கநாதர் கி.பி. 1673இல் தஞ்சாவூர்மீது படையெடுத்தார். இப்போரில் விஜயராகவன் தோல்வியுற்று போர்க்களத்தில் வீரமரணமடைந்தார். தஞ்சை அரசு மதுரை நாயக்க அரசுடன் இணைக்கப்பட்டது. கி.பி 1676-ல் மராட்டிய சிவாஜியின் சகோதரர் வெங்காஜி தஞ்சையில் மராட்டியர் ஆட்சியை நிறுவினார். இரண்டாம் சரபோஜி (1798-1832) ஆங்கில கவர்னர் ஜெனரல் வெல்வெஸ்லி பிரபுவுடன் கி.பி. 1799இல் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி தஞ்சைக் கோட்டையைத் தவிற மற்ற தஞ்சை பகுதிகள் ஆங்கிலேயர் வசம் கொடுக்கப்பட்டன. இரண்டாம் சிவாஜி (1832-1855) மன்னனுக்குப் பிறகு ஆண்வாரிசு இல்லாமையினால், ஆங்கிலேயர்கள் வசம் கி.பி. 1856ல் தஞ்சைக் கோட்டையும் வந்தது. தஞ்சாவூர் 1866ஆம் ஆண்டுமுதல் நகராட்சியாக இருந்து வருகிறது.


தஞ்சாவூர் கலைத் தட்டு அல்லது தஞ்சாவூர் தட்டு தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் உருவாக்கப்படும் ஒரு நாட்டுப்புறக் கைவினைப் பொருளாகும். தஞ்சாவூர் வீணையைப் போலவே தஞ்சாவூர் கலைத்தட்டும் தஞ்சாவூரின் பெருமையை உலகுக்கு உணர்த்துகிறது. தஞ்சாவூரை ஆண்ட இரண்டாம் சரபோஜி அரசரே (1797-1832) இத் தட்டின் தோற்றத்திற்கு காரணமானவர்இரண்டாம் சரபோஜி (மராத்தி: सर्फोजी) (செப்டம்பர் 24, 1777 - மார்ச் 7, 1832), அல்லது சரபோஜி மாமன்னர்போன்ஸ்லேபரம்பரையைச் சேர்ந்த தஞ்சாவூர் மராத்திய இராச்சியத்தின் மன்னர்களுள் ஒருவராவார். இவர் இராச்சியத்தின் கடைசி சுதந்திர மன்னன் ஆவார். பொதுவாகவே கவனித்து பார்த்தால், தஞ்சை மற்றும் அதன் சுற்று பகுதியில் வெண்கலத்தினால் ஆன பொருட்களும், சிலைகளும் அதிகம் இருக்கும். இந்த வெண்கல பொருளில் தட்டு செய்து, அதை சிற்ப கலையை கொண்டு இணைத்தது இந்த மன்னரே எனலாம். இன்றும் இது போன்ற கலை நயம் மிகுந்த தட்டுக்கள் வேறு எங்கும் உலகில் இல்லை எனலாம் !! 



தஞ்சாவூர் தட்டை கூர்ந்து கவனித்து இருக்கிறீர்கள மூன்று நிறங்கள் கண்களை பறிக்கும் அது வெள்ளை (வெள்ளி), தங்கம் போன்ற நிறம்(பித்தளை) மற்றும் கொஞ்சம் அரக்கு நிறம்(செம்பு) இவைகளே இந்த தட்டு செய்ய பயன்படுத்த படுகின்றன, அதை பற்றி சிறிதாவது தெரிந்து கொள்வோமே…… மேலும் விவரங்களுக்கு நீங்கள் ப்ளூ நிறத்தில் இருக்கும் வார்த்தைகளை சொடுக்கினால் நிறைய தெரிந்து கொள்ளலாம்.
பித்தளை என்பது செப்புதுத்தநாகம் ஆகிய உலோகங்கள் சேர்ந்த ஒரு கலப்புலோகம்.வேலை செய்வதற்கு எளிதாகவும், கடுமையானதாகவும் இருப்பதால் பித்தளை ஒரு சிறந்த உற்பத்திக்குரிய பொருளாக இருக்கிறது. அல்பா பித்தளை எனப்படும் 40% க்குக் குறைவான துத்தநாகத்தைக் கொண்டுள்ள பித்தளை இளக்கத்தன்மை (malleable) காரணமாகக் குளிர் நிலையிலேயே வேலை செய்யக்கூடியதாக உள்ளது.
செப்பு (Copper) எனப்படுவது உலோக வகையைச் சேர்ந்த ஒரு தனிமம் ஆகும். இது செம்பு எனவும் தாமிரம் எனவும் அழைக்கப் படுகிறது. இதுCu என்ற குறியீட்டினால் குறிக்கப்படுகிறது. இதன் அணு எண் 29 ஆகும். இந்த மாழையானது சிவந்த நிறத்தில் இருப்பதால் செம்பொன் என்றும் அழைக்கப் படும். இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செம்பைப் பற்றி மக்கள் அறிந்திருந்தனர். செம்பு இயற்கையில் ஒரு தனி உலோகமாகக் கிடைக்கிறது அதன் கனிமங்களிலிருந்து மிக எளிதாகப் பிரித்தெடுக்க முடியும்.
வெள்ளி (ஆங்கிலம்: Silver, சில்வர் (IPA/ˈsɪlvə(ɹ)/) ஒரு வேதியியல் தனிமம். இதன் வேதியியல் குறியீடு Ag என்பதாகும். இக்குறியீடு வெள்ளியின் இலத்தீன் மொழிப் பெயராகிய ஆர்கெண்ட்டம் (Argentum) என்பதில் இருந்து உருவானது. வெள்ளி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்பட்டு வருகிறது. இது பொதுவாக தங்கதிற்க்கு அடுத்து இரண்டாவது மடிப்பு வாய்ந்ததாக கருதப்பட்டது. ரோமர்களின் பணமாக வெள்ளி பயன்படுத்தப்பட்டது.மேலும் வெள்ளி நோய் தொற்றுக்கள் மற்றும் சிதைவுகளை தடுக்க பயன்படுத்தப்படுகிறது.


கம்மாளர் என்ற சமூகத்தினர் தஞ்சைக் கலைத்தட்டினை பரம்பரையாகச் செய்துவருகின்றனர். இவர்களை கன்மாளர், பஞ்சாலத்தார், அஞ்சுபஞ்சாலத்தார், ரதிகாரர், ஸ்தபதி, தட்டான், பெருந்தட்டான், தட்சன், பெருஞ்தச்சன், கொல்லன், பெருங்கொல்லன் ஆகிய பெயர்களில் அழைக்கின்றார்கள். தஞ்சாவூர் கலைத்தட்டு செய்ய அரக்கு, பித்தளைத்தகடு, செப்புத்தகடு, வெள்ளித்தகடு போன்றவை மூலப் பொருள்களாக அமைகின்றன. இத்தட்டுகளைத் தயாரிக்கப் பயன்படும் உபகரணங்கள் உளி, சிற்றுளி, கருப்பு அரக்கு ஊற்றிய மரப்பலகை (வார்ப்புப்பலகை) மற்றும் உருவம் தயாரித்த ஈயம் அச்சு முதலியனவாகும். தஞ்சாவூர் கலைத்தட்டு உருவாக்கம் என்பதானது அரக்கு தயாரித்தலில் தொடங்கி தகடு வேலை, ஈயம் (அச்சு) தயாரித்தல், வெள்ளித்தகடு தயாரித்தல், செப்புத்தகடு தயாரித்தல், கலைத்தட்டு உருவாக்குதல், ஜிகினா தயாரித்தல், தளவாரம் பொருத்துதல் என்ற நிலைகளை அடைந்து இறுதியில் மெருகேற்றுதல் நடைபெறுகிறது. முதலில் இந்த தட்டுக்களையும், மற்ற உருவங்களையும் உருவாக்க அந்த தகடு வேண்டும், அதை வெளியில் கட்டியாய் வாங்கி இரு உருளைகளுக்கு இடையில் விட்டு தகடு தயாரிக்கின்றனர்.




அடுத்து அந்த தகட்டை வட்டமாக வெட்டி, அதை தட்டு போன்று மேடு பள்ளங்களோடு உருவாக்குவது. இதன் பின்னர்தான் கலை நுணுக்கத்துடன் கூடிய விவரங்களை சேர்க்க வேண்டும், இதை செய்ய பல பல அச்சுக்களை வைத்து இருக்கின்றனர். ஒவ்வொரு அச்சும் அவர்களது கற்பனை வளத்தில் இருந்து உருவாக்கபடுகின்றது. இதன் சிறப்பு என்பது நீங்கள் உங்களது உருவத்தையும் இப்படி அச்சாக செய்து கொள்ளலாம் ! இந்த அச்சினை மேலோட்டமாக பார்த்தால் மிகவும் எளிதானது போன்று தோன்றினாலும், சரியாக அச்சு இல்லாத பட்சத்தில் நீங்கள் உருவாக்கும் அந்த மெல்லிய உருவம் கிழிந்து விடும்.



அச்சும், உருவமும்….. செய்வது அவ்வளவு சுலபம் இல்லை :-)
என்ன உருவம் வேண்டும் சொல்லுங்களேன்…….!
இந்த தஞ்சாவூர் தட்டுகளில் எல்லோரையும் கவர்வது என்பது அந்த சிற்ப கலையே, ஒரு சாதாரண தட்டு எவ்வளவு கலை நுணுக்கத்துடன் உருவாகிறது என்பது ஆச்சர்யமான ஒன்று. உருவத்தை நன்கு கொண்டு வருவது என்பது இங்கு மிகவும் கடினமான ஒன்று, கண்களும், புத்தியும், கைகளும் இணைந்து நடத்தும் ஒரு அற்புதம் எனலாம். இந்த கலையை பல தலைமுறைகளாக செய்து வரும் குடும்பத்தில் இருக்கும் திரு.லோகநாதன் அதை விளக்கும்போது எளிதாக தோன்றினாலும், ஒவ்வொரு தட்டுக்களையும் பார்க்கும்போது அவரின் அர்ப்பணிப்பு தெரிகிறது. ஒரு பிளைன் சீட் ஒன்று சிறிது சிறிதாக அச்சில் வைத்து தட்டி தட்டி மெதுவாக உருவம் பெறுவது சந்தோசம் தருகிறது !




இப்படி தட்டும், உருவங்களும் தனி தனியாக செய்தபின் ஒரு விதமான மெழுகால் இதை ஒட்டி அதன் பின்னர் தட்டுக்கு மேருகேற்றுவதும், லைன் போடுவதும் என்று கொஞ்சம் கொஞ்சமாக சரபோஜி மன்னரின் காலத்துக்கு நம்மை அழைத்து செல்கிறது.



இந்த தட்டு சுமார் 500 ரூபாயில் இருந்து 15000 ரூபாய் வரை இருக்கிறது, இவ்வளவு கலைநயம் மிகுந்த தட்டுக்களை இவரிடம் வாங்க வேண்டும் என்று விரும்புவர்கள் கீழே இருக்கும் முகவரியில் தொடர்ப்பு கொள்ளலாம், கண்டிப்பாக அந்த தஞ்சாவூர் தட்டு உங்களது வீட்டிற்க்கு அழகு சேர்க்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம் !!


Labels : Suresh, Kadalpayanangal, Oor special, district special, Tanjore, Thanjavur, Thattu, Tanjore plate, Thanjavur thattu, Plate with a difference, Thanjavur shelled, Tanjore art plates, art plate

11 comments:

  1. அச்சும் உருவமும் மட்டும் இல்லை
    இப்படி ஒரு முழுமையான பதிவு தருவதும்
    எளிதான விஷயம் இல்லை

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தஞ்சாவூர் தட்டை பார்த்து இருக்கிறேன். எவ்வாறு தயார் செய்கிறார்கள் என்று தெரியாது. நேரடி ஒளிபரப்பு போன்று நன்றாகவே விளக்கம் தந்தீர்கள்.
    த.ம.3

    ReplyDelete
  3. அருமையான தகவல்கள். சில முறை இத்தட்டுகளை பரிசாகக் கொடுத்ததுண்டு....

    ReplyDelete
  4. சிறப்பான அருமையான தகவல்களை தருவதில் நீங்கள் தான் முதலிடம்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. ஆகா
    தஞ்சைக்க எப்பொழுது வந்தீர்கள் தெரியாமல் போய்விட்டதே நண்பரே
    எனது நண்பர்கள் பலர் தஞ்சாவூர் தட்டு செய்யும்பணியில்தான் ஈடுபட்டுள்ளனர்
    தாங்கள் கூறியிருக்கும் ஒவ்வொரு நிலையினையும் கண்ணால் கண்டு மகிழ்ந்திருக்கிறேன்
    அடுத்த முறை தஞ்சாவூர் வரும் பொழுது தெரியப் படுத்தவும்
    சந்திப்போம்

    ReplyDelete
  6. பதிவு செய்யும்போது எதையும் முறையாக பதிவு செய்திடல் வேண்டும் என்கிற உங்கள் ஆர்வத்திற்க்கு அன்பளிப்பு ஓர் தஞ்சாவூர் தட்டு............................

    ReplyDelete
  7. தஞ்சாவூர் பெயர்க்காரணத்தில் துவங்கி தட்டு தயாராகும் மூலபொருட்கள் பற்றியும் தயாரிக்கும் விதம் பற்றியும் விரிவான பதிவு! அருமை! நன்றி!

    ReplyDelete
  8. உங்களுடன் இந்த இனிமையான பயணத்தில் பங்குபெற்றதில் பெரும் மகிழ்ச்சி சகோதரா!!

    ReplyDelete
  9. நானும் கலைத் தட்டு கலைஞர் லோகநாதனை சந்தித்து இருக்கிறேன்...

    ReplyDelete