Thursday, December 11, 2014

டெக்னாலஜி - விரல் நுனியில் உலகம் !!

வெளிநாட்டு பயணத்தின்போதும், நண்பர்களுடன் பேசும்போதும் இன்றைய வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பம் பற்றியும், புதிதாக வந்து உள்ள அல்லது வரப்போகும் தொழில்நுட்பம் பற்றியும் பகிர்ந்துக்கொள்வோம். நான் தெரிந்துக்கொண்டதை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ளவே இந்த தளம்..... இந்த வாரம் நாம் பொதுவாக பேசும் விரல் நுனியில் எல்லாவற்றையும் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை இந்த டெக்னாலஜி எப்படி சாத்தியமாக்கி இருக்கிறது என்பதை பார்ப்போமே !


நீங்கள் டிவி பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள், அடுத்த சேனல் போக வேண்டும் என்றால் ரிமோட் வேண்டும், காரில் செல்லும்போது ஏசி ஜாஸ்தியாக இருக்கிறது அதை குறைக்க வேண்டும், ஐபோட்டில் அடுத்த பாட்டு மாற்ற வேண்டும் என்றாலும் உங்களுக்கு அந்த கருவியின் இடத்தில சென்று மாற்ற வேண்டும், அதை வெறும் விரல் அசைவை மட்டுமே கொண்டு மாற்ற முடிந்தால் எப்படி இருக்கும், அதுவும் கைகளில் மோதிரம் போன்ற ஒன்றை அணிந்துக்கொண்டு அப்படி செய்ய முடிந்தால் ? அதை சாத்தியமாக்கி இருக்கின்றனர் நமது இந்திய இளைஞர்கள், வெகு விரைவில் உங்களது விரல்களை அலங்கரிக்க முடியும் இந்த டெக்னாலஜி....... நான் சொல்வதை விட இந்த வீடியோ பார்த்து நீங்களே தெரிந்துக்கொள்ளலாம் !!



Labels : Suresh, Kadalpayanangal, Technology, Fin, concept, control using your finger tips, amazing technology, cool technology, new technology, latest technology, next generation technology

7 comments:

  1. அந்த இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  2. அற்புதமான கண்டுபிடிப்பாக இருக்கிறதே
    அறியத் தந்தமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அற்புதம் நண்பரே அற்புதம்
    இளைஞர்களைப் பாராட்டுவோம்

    ReplyDelete
  4. அருமையான கண்டுபிடிப்பு. முன்னரே இக்காணொளி பார்த்திருக்கிறேன்.

    ReplyDelete