Friday, December 12, 2014

உலக பயணம் - கத்தார் !!

அரபு நாடுகள் என்ற ஒரு சொல்லில் அடங்கி விடும் நிறைய ஊர் இருக்கிறது, அதில் ஒன்றுதான் இந்த கத்தார் ! அரபு நாடுகளுக்கு செல்கிறோம் எனும்போதே அங்கு இப்படி இருக்கும், அப்படி இருக்கும் என்ற கதைகள் நிறைய உண்டு, ஆனால் உண்மையில் அங்கு செல்பவர்களுக்குதான் அந்த நாட்டின் வளமும், நமது நாட்டு மனிதர்களின் நிலையும் தெரியும்....... இந்த முறை ஒரு அவசர வேலை என்று கத்தார் செல்ல வேண்டி இருந்தது. பரந்து விரிந்த சவுதி அரேபியாவில் ஒரு சிறிய பகுதியாக எண்ணை வளம் கொண்டு இருக்கிறது இந்த நாடு. கத்தாரின் தலைநகர் தோஹா என்று அழைக்கப்படுகிறது, நமது தென் இந்தியாவில் இருந்து சுமார் நாலரை நேர பயண நேரத்தில் அங்கு செல்லலாம், பொதுவாக கத்தார் செல்லும் விமானங்கள் அதிகாலையே இருக்கின்றது !!



 பெங்களுருவில் அதிகாலையில் விமானம் ஏறியவுடன் தூக்கம் சொக்குகிறது, முழிந்து பார்க்கும்போது கீழே வெறும் பாலைவனம் மணல் வெளி மட்டுமே, அதுவே நாம் நெருங்கி கொண்டு இருக்கிறோம் என்று சொல்கிறது. சிறிது நேரத்தில் சிறியதும், பெரியதுமான கட்டிடங்கள் தெரிய ஆரம்பிக்க கத்தார் வந்துவிட்டதை அறிகிறோம். விமானத்தில் இருந்து வெளியே வரும்போதே முகத்தில் அறைகிறது அனல் காற்று, தூரத்தில் ஹெலிகாப்ட்டர் ஒன்று புறப்பட்டு செல்ல அதில்தான் மனிதர்களை எண்ணை எடுக்கும் பாலைவனத்தின் நடுவே கொண்டு செல்கிறார்கள், இனி அவர்கள் மூன்று மாதமோ இல்லை ஒரு வருடமோ ஆகும் இங்கு வருவதற்கு என்றபோது அந்த ஹெலிகாப்டரை ஆச்சர்யமாக பார்த்தவன் இப்போது பரிதாபமாக பார்க்க ஆரம்பிக்கிறேன் !



19ம் நூற்றாண்டில் இதனை ஒட்டிய கடல் பகுதிகளில் முத்துக்கள் அதிகம் கிடைத்தது, அரிய வகை மீன்களும் நிறைய கிடைத்தன இதனால் இந்த நாட்டின் வளர்ச்சி நன்கு இருந்தது. ஆனால், 1920ம் ஆண்டு ஜப்பானில் நல்நீர் முத்துக்களை செயற்கை முறையில் தயாரிக்கலாம் என்று கண்டுபிடிக்க உலகம் அந்த பக்கம் சாய ஆரம்பித்தது, இதனால் இந்த நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது, பின்னர் 1940ம் ஆண்டு பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட பிறகே மீண்டும் பொருளாதாரம் தழைக்க ஆரம்பித்தது ! இதனாலேயே அங்கு படகு நிறுத்தும் இடத்தில் ஒரு பெரிய முத்து இருக்கும் சிலை போன்ற ஒன்றை வைத்து இருக்கின்றனர். இந்த இடத்தில் இருந்து பார்த்தால் பின்னால் தெரியும் கட்டிடங்கள் "பழையன கழிதலும், புதியன புகுதலும்" என்பதை சொல்லாமல் சொல்கிறதோ என்று தோன்றுகிறது.



இந்த நாட்டில் பெட்ரோல் தண்ணீரை விட விலை குறைவு, பொதுவாக இங்கு இருப்பவர்களில் நிறைய பேர் கேரளாவில் இருந்து வந்தவர்களாக இருக்கிறார்கள். டாக்ஸ் என்பது வெறும் பெயரளவுக்குதான். கண்ணுக்கு தெரியும் இடத்தில் எல்லாம் பல வகையான காஸ்ட்லி கார் வகைகள். ஊரை சுற்றி வரும்போது பெர்ராரி, லம்போக்கினி, பென்ஸ், ரோல்ஸ் ராய்ஸ் கார் அதிகம் காணப்படுகிறது. ஒரு இடத்தில பெர்ராரி கார் ஷோ ரூம் ஒன்று திறந்து இருக்க, உள்ளே போய் பார்க்கலாமா என்று தோன்றியது..... அதற்கும் ஒரு காலம் வரும் என்று பின்னர் மனதை தேற்றிக்கொண்டு போட்டோ மட்டும் இந்த முறை பிடித்துக்கொண்டேன். சுற்றி பார்க்க என்று கீழ் வரும் இடங்கள் இருக்கின்றன...... அதை பற்றி ஒவ்வொரு பதிவிலும் இனி பார்க்கலாமே !!
  • மியூசியம் ஆப் இஸ்லாமிக் ஆர்ட் 
  • டோஹா ஸ்கைலைன் 
  • சௌக் வாகிப் 
  • பியர்ல் கத்தார் 
  • வில்லாஜியோ மால் 
  • ஆஸ்பயர் டவர் 
மற்றும் பல இடங்கள் !!

Labels : Suresh, Kadalpayanangal, Qatar, Doha, Ulaga payanam, world travel, Petrol, Pearl, desert, sight seeing

10 comments:

  1. மலையாளம் கற்றுக் கொண்டு விட்டீர்களா...?

    எங்கே போய் விடப் போகிறது காலம்...? வரும்...

    ReplyDelete
  2. மலையாளத்தை என்ன கத்துக்கிறது? தமிழை மூக்கினால் பேசினால் மலையாளம். அவ்வளவுதான்.

    ReplyDelete
  3. "தூரத்தில் ஹெலிகாப்ட்டர் ஒன்று புறப்பட்டு செல்ல அதில்தான் மனிதர்களை எண்ணை எடுக்கும் பாலைவனத்தின் நடுவே கொண்டு செல்கிறார்கள், இனி அவர்கள் மூன்று மாதமோ இல்லை ஒரு வருடமோ ஆகும் இங்கு வருவதற்கு என்றபோது " -

    # இது Qatar க்கு பொருந்தாது ... தவறான செய்தி. நானும் Doha தான்

    ReplyDelete
  4. அருமையான பதிவு அடுத்தமுறை ஐக்கிய அரபு நாடு சென்றால் கண்டிப்பாக alain விலங்கியல் பூங்கா பற்றி எழுதுங்கள்!!

    ReplyDelete
  5. கடல்கரையின் பின்புறத்தை பார்க்கும் போது சிங்கையின் மெரினா பே மாதிரி இருக்கிறது.

    ReplyDelete
  6. வணக்கம்

    அருமையாக சொல்லியுள்ளீர்கள் படங்கள் ஒவ்வருன்றும் மிக அழகாக உள்ளது... பகிர்வுக்குநன்றி
    எப்போது மலரும்…………….

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-







    ReplyDelete
  7. கத்தாரின் காட்சிகள் அழகு! தொடருங்கள்! நன்றி!

    ReplyDelete