Wednesday, December 3, 2014

ஊரும் ருசியும் - சேலம் தட்டு வடை செட் !!

எந்த ஒரு ஊரிலும் தேடி பார்த்தால் ஒரு அதிசயமான, சுவையான உணவு இருக்கும் அது பாரம்பரியம் கடந்தும் இருக்கும்……. பொதுவாக நாம் எல்லோரும் ஒரு ஊரில் சென்று இறங்கினால், எவரிடம் கேட்டு பார்த்தாலும் அந்த ஊரில் அதிகமாக கிடைக்கும் உணவே பிரபலமானது என்று சொல்லி குழப்பி விடுவார்கள், ஆனால் உண்மை என்னவென்றால் அந்த ஊரில் சத்தம் இன்றி ஒரு பிரபலமான உணவு இருக்கும், அதை ருசியோடு சாப்பிட நிறையவே மெனக்கெட வேண்டும் ! சேலம், இந்த ஊரை பல முறை கடந்துள்ளேன் ஊருக்குள் நுழையும்போது மெய்ன் ரோட்டில் என்ன கிடைக்கிறதோ அதை மட்டுமே சாப்பிட்டு செல்பவன், இந்த முறை தேடி தேடி கண்டுபிடித்ததுதான் தட்டு வடை செட் !!


சேலம் பஜார் தெருவில் கோயம்புத்தூர் ஜுவல்லரியின் பின்புறம் ஆற்றோடு ஒட்டிய பார்கிங் இடத்தில் ஒரு சிறிய TVS 50யில் சத்தம் இல்லாமல் விற்பனை கனஜோராக நடக்கிறது ! ஒரு வண்டி, அதன் பின்புறம் சிறிய பெட்டியில் சுமார் 40 வகை சூரணங்கள், மசாலா என்று வைத்து இருக்கிறார். அவரது வண்டியின் பின்னே இருக்கும் பெட்டியில் சிறிது எட்டிப்பார்த்தால் சிறிய பாட்டிலில் பல பல கலர்களில் சூரணம், சாஸ் போன்று நிறைய இருக்கிறது. அதனோடு ஒரு ஓரத்தில் பொடி வகைகளும், வண்டியின் முன்னே ஒரு சிறிய கூடையில் சிறிய சாஸ் பாட்டிலில் எண்ணைகளும், காரங்களும் என்று வித்யாசமாக இருக்கிறது ! ஏதோனும் நாட்டு மருந்து கடைக்கு வந்து விட்டோமோ என்று எண்ணம் தோன்றினாலும் முடிவில் உண்டு முடித்துவிட்டு, திருப்தியோடு வருகிறோம் !


என்ன சொல்வது, எப்படி சொல்வது என்று யோசித்துக்கொண்டு இருக்கும்போதே வந்தவர்கள் எல்லோரும் தட்டு வடை செட் என்று கேட்டு விரும்பி உண்டதால் நமக்கு ஒரு தட்டு வடை செட் ! இந்த தொழிலை செய்து வரும் கந்தன்  என்பவர் இதை சுமார் 47 வருடங்களாக செய்து வருகிறார் எனும்போது ஆச்சர்யம் தருகிறது, இவரை பார்த்து இன்று சேலம் புதிய பேருந்து நிலையத்தை சுற்றிலும் பல தட்டு வடை செட் கடைகள் உருவாகி இருக்கிறது...... நம்மிடம் இந்த தகவலை பகிர்ந்து கொள்ளும்போதே கைகள் ஒரு சிறிய பிஸ்கட் சைஸில் இருக்கும் சிறிய தட்டை வடைகளை எடுத்து நான்கு வகை சூரணங்களை அதில் தடவுகிறது, அதன் மேலே அன்று துருவிய கேரட் கொண்டு மூடி, காரம் எவ்வளவு வேண்டும் என்று கேட்டு அதற்க்கு ஏற்றார் போல சாஸ் ஊற்றி, அதன் மேலே தானிய பொடி தூவி அதை இன்னொரு தட்டை கொண்டு கொடுக்கும்போது இங்கு ஏற்க்கனவே நாக்கு "ஐயாம் வெயிட்டிங்......" என்று இரண்டு முழம் வெளியில் வந்து விடுகிறது !!




முதலில் பார்க்கும்போது ரெண்டு தட்டை, நடுவில் கொஞ்சம் கேரட் துருவல், அதனோடு கொஞ்சம் சாஸ் இதில் என்ன இருக்க போகிறது என்று எண்ண தோன்றினாலும், முதலில் ஒரு வாய் வைத்தவுடன் அந்த நினைப்பு மாறி விடுகிறது....... தட்டையின் மொருமொருப்புடன், அந்த சூரணத்தின் சுவையும், கொஞ்சம் காரமும், அந்த பச்சை கேரட்டின் மணமும் புரட்டி போடுகிறது நாக்கை ! சூரணத்தில் இவ்வளவு சுவை இருக்க முடியுமா என்று தோன்றுகிறது...... தீபாவளிக்கு எல்லோரது வீட்டு பலகாரத்தையும் சாப்பிட்டு விட்டு வயிற்றை ஏதோ செய்கிறது என்றபோது தீபாவளி சூரணம் என்று கொடுத்து தண்ணீரை குடிக்க சொன்னார்கள், அதை சாப்பிட்டபோது தண்ணீர் வந்தது......கண்களில் ! அதுதான் எனக்கும், சூரனதொடு இருந்த உறவு, இன்று அதை இப்படி ருசியோடு சாப்பிட ஆச்சர்யமாக இருந்தது !!



அதை ஆசை தீர சாப்பிட்டுவிட்டு அடுத்து என்ன என்று யோசிக்கும்போதுதான் பார்த்தேன் மெனு எல்லாம் அந்த பெட்டியில் சுற்றி எழுதி இருந்ததை. அதை பார்த்து ஸ்பெஷல் தக்காளி பொறி என்று சொல்ல, மீண்டும் கொஞ்சம் பொறி, கொஞ்சம் பொட்டுக்கடலை, கொஞ்சம் சூரணங்கள், கொஞ்சம் கேரட் துருவல் என்று போட்டு ஒரு கலக்கு கலக்கி கொடுத்தார்..... ம்ம்ம்ம்ம் சுவைதான் ! கொஞ்சம் இனிப்பாக சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்று யோசித்தபோது பிஸ்கட் ஜாம் இருக்கிறது என்றார்...... சிறு வயதில் சாப்பிட்ட சிறிய பிஸ்கட் எடுத்து அதன் மேலே வீட்டிலேயே செய்த ஜாம் எடுத்து கொஞ்சம் வைத்து தந்தார், ஒரு வாய் எடுத்தவுடன் அவ்வளவு சுவை தெரிந்தது. எனக்கு மிகவும் பிடித்தது எனலாம், மீண்டும் இன்னொரு செட் ஆர்டர் செய்து சாப்பிட்டேன் அந்த அளவுக்கு பிஸ்கட் சுவையும், ஜாம் சுவையும் பின்னி பிணைந்து இருந்தது...... என்னுடைய பேவரிட், கண்டிப்பாக மிஸ் செய்யாதீர்கள் ! 



இன்று வறுத்தும், வேக வைத்தும் கொடுக்கப்படும் உணவுகளை உண்பதற்கு பதில் இப்படி உடம்புக்கு நலம் தரும் ஒன்றை, அதுவும் சுவையாக இருக்கும் ஒன்றை நாம் ஏன் உண்பதில்லை என்ற கேள்வி எழுகிறது. சேலத்தில் மாம்பழம் பேமஸ் என்று இதுவரை சொல்லி வந்துள்ளேன், ஆனால் தட்டு வடை செட்டும் பேமஸ் இன்று முதல் சொல்லலாம். இந்த கடை மாலை ஐந்து மணி முதல், இரவு பத்து மணி வரை இருக்கிறது...... அடுத்த முறை சேலம் செல்லும்போது கொஞ்சம் ஊருக்குள் சென்று நீங்கள் இதை சாப்பிட்டு வரலாம், பார்கிங் வசதி அந்த ஆற்றின் கரையோரம் இருக்கிறது.


இந்த கட்டிடத்தின் வெளியில், வலது பக்கத்தில்தான் இருக்கிறது......... இது தகவலுக்கு மட்டும்.
 மெனு என்று பார்த்தால் சுமார் ஐம்பது வகை வரை இருக்கிறது, பெட்டியை சுற்றி எழுதி வைத்து இருக்கிறார். அதில் சிலவற்று மட்டும்......




Labels : Suresh, Kadalpayanangal, Oorum rusiyum, District special, District taste, Tamilnadu, Salem, Thattu vadai set, tasty food, selam, Kanthan

17 comments:

  1. வித்தியாசமான ருசி...

    47 வருடங்கள்...! யப்பா...!

    ReplyDelete
  2. வணக்கம்
    அண்ணா

    சுவையான உணவு பற்றிய அறிமுகம் நன்றாக உள்ளது... தேடலுக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி த.ம2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-.

    ReplyDelete
  3. அட! சேலமுன்னா குஷ்கா மட்டும்தான்னு நினைச்சுக்கிட்டு இருந்தேனே!

    ReplyDelete
  4. இதுவரை அறியாத ஸ்னாக்ஸ்
    சேலமென்றதும் இனி தட்டு வடை ஞாபகமும்
    வரும்படி அற்புதமாகப் பதிவுசெய்துள்ளீர்கள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. ஹய்யா நம்ம ஊரு ஸ்பெஷல் . ஊருக்கு போறப்பலாம் இத ருசிக்கமா திரும்பினது கிடையாது.

    ReplyDelete
  6. நானும் அந்தப் பக்கம் தான் அந்த நிப்பெட் (தட்டுவடை) எல்லோர் வீட்டிலும் செய்வார்கள். ஆனால் நீங்கள் அந்த செட்டைச் சாப்பிட்டதில்லை.....பார்க்கலாம்....

    ReplyDelete
  7. சாப்பிட்டே ஆக வேண்டும்போல இருக்கிறது
    நன்றி நண்பரே
    தம5

    ReplyDelete
  8. ஊ....ஹூம்! சாப்பிட்டுப் பார்க்காமல் நம்ப முடியாது!

    :))

    ReplyDelete
  9. வித்தியாசமான உணவாக இருக்கிறது! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  10. Super தலைவா. நான் கூட எங்க ஊர் special சாப்பிட்டதே இல்லை..உங்கள் பதிவு அனைத்தும் சூப்பர்.

    ReplyDelete
  11. பார்க்கும்போதே ருசிக்கும் ஆவல் மனதில் எட்டிப்பார்க்கிறது சுரேஷ்.

    த.ம. +1

    ReplyDelete
  12. Thanks for introducing this. There are many small food stalls on wheels selling various food items like this in Madurai as well. I am not sure why we don't have many such things in Chennai (apart from places like mint st).

    ReplyDelete
  13. first of all my thanks to Suresh Kumar., Excellent tastiest article for Salem Thattu Vadai Set --- thanks again, Salem is the special famous varieties of snacks items are avail when compare to some other places. I think you should be never seen & taste the some snacks items of Salem spl ., if any doubt some few items of snacks Images of Salem spl snacks Images link click as below :-
    SALEM Spl. famous SNACKS

    https://plus.google.com/photos/107395639113148790090/albums/5762368917616638593

    ReplyDelete
  14. நம்ப ஊர் தட்டுவடை செட்டு சாப்பிடமா இருந்தா நல்லா இருக்காதே...
    நான் பலமுறை சுவைத்து இருக்கிறேன் !!!!
    மிகவும் சூப்பர்.............................
    நீங்களும் சுவைத்து ரசிக்க சேலம் வாருங்கள் !!!!!

    ReplyDelete