Wednesday, January 21, 2015

ஊர் ஸ்பெஷல் - உறையூர் சுருட்டு (பகுதி - 2) !!

சென்ற வாரத்தின் உறையூர் சுருட்டு (பகுதி - 1) படித்துவிட்டு, இன்னும் இது இருக்கிறதா என்று ஆச்சர்யபட்டவர்கள் பல பேர், எப்படி இப்படி செய்தி சேகரிக்க முடிகிறது என்றும் ஆச்சர்யப்பட்டனர் ! உறையூர் பற்றியும், புகையிலை பற்றியும், சுருட்டு என்பதை பற்றியும் விரிவாக பார்த்தோம், இந்த வாரம் இன்னும் விரிவாக அலசுவோமே !! பென் தோம்சன் கம்பெனி என்பது ஒரு வீடு போன்ற அமைப்பே, அங்கு மாடியில் ஒரு சிறிய இடத்தில் இந்த உலக புகழ் பெற்ற சுருட்டுக்கள் தயாராகின்றன. திரு. வாசுதேவன் அவர்களை சந்தித்து அவரது கம்பெனி சுமார் 114 வருட பாரம்பரியம் கொண்டது என்றதை தெரிந்து கொண்டேன், அந்த காலத்தில் வண்டிகார தெருவில் இப்படி நிறைய சுருட்டு கம்பெனி இருந்தது எனவும், இன்றும் வெள்ளைகாரர்கள் இப்படி தேடி வந்து புகைப்படம் எடுத்து கொண்டதையும் காண்பித்து மகிழ்ந்தார் !!


சுருட்டில் எத்தனை வகை இருக்கிறது என்று தெரியுமா ? என்ன முழிக்கின்றீர்கள்.... சுருட்டில் நிறைய வகை இருக்கிறது. உங்களை போலவே எனக்கும் இங்கு செல்லும் வரை சுருட்டு என்பது ஒரே வகை, பெரியதாக இருக்கும், பிரவுன் கலரில் இருக்கும் என்று மட்டுமே தெரியும். ஆனால், சுருட்டு என்பதில் பல வகை இருக்கிறது. ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு விதமான சுவை, ஒவ்வொரு விதமான ஆடம்பரத்தை குறிக்கும்.... அதிகம் சொல்ல வேண்டுமென்றால் இந்த பக்கம் போதாது ! பொதுவாக சொல்வதென்றால் சுருட்டிர்க்கு தலை பாகம், நடு பாகம், உடம்பு பகுதி, கீழ் பகுதி மற்றும் சுருட்டின் தலை என்று பகுதிகள் உண்டு. சுருட்டினை பிரித்து பார்த்தால் உள்ளே புகையிலை பகுதி, புகையிலையை சேர்க்கும் பைண்டர் பகுதி, வெளி ரேப்பர் பகுதி என்று பிரிப்பார்கள். ஒவ்வொரு சுருட்டும் ஒவ்வொரு நீளம், ஒவ்வொரு வகை, நிறைய கலர், தடிமன் என்று நிறைய வித்யாசம் உண்டு...... இப்போ சொல்லுங்க, சுருட்டு ஒன்றும் சின்ன விஷயம் இல்லை, அப்படிதானே !!

 

 


புகையிலைச் செடியின் தழைகள் மட்டுமின்றி, அவற்றின் தண்டு உள்பட செடியின் அனைத்து பாகங்களும் பல்வேறு புகையிலைப் பொருள்கள் தயார் செய்யப் பயன்படுகின்றன. புகையிலைச் செடி தண்டைப் பொடியாக்கி, அவற்றில் இருந்து மூக்குப் பொடி தயாரிக்கப்படுகிறது. உறையூர் சுருட்டிர்க்கு புகையிலை தாய்லாந்து, இந்தோனேசியா நாடுகளில் இருந்து வருகிறது. இதை பல விதங்களில் ஊற போட்டு, வாசனை ஏற்றி மிக சிறிய துண்டுகளாக வெட்டி சுருட்டு செய்யப்படுகிறது. பதிவின் நீளம் வெகு விரிவான செய்முறைகளை இங்கு தவிர்த்து புகை படங்கள் மூலமாக விளக்க முனைகிறேன்....... வயலில் இருந்து பறிக்கப்பட்ட புகையிலை உங்களை எப்படி வந்து அடைகிறது என்பதனை கீழே காணலாம் !
சுருட்டு செய்பவர்களுக்கு இந்த புகையிலை இப்படிதான் வருகிறது !
 இப்படி சிறிய புகையிலையை இரண்டாக பிரிக்க வேண்டும், ஒன்று உள்ளே வைப்பது, இன்னொன்று வெளியே சுத்தப்படும் இலை. சுருட்டை கவனித்து பார்த்தால் வெளியே சுற்றப்படும் இலை என்பது பல விதமான கலரில் இருக்கும்...... அது பிரத்யேகமாக பாலீஷ் செய்யப்பட்டு உங்களுக்கு வருகிறது. இலையை மிக லாவகமாக வைத்து அதன் மேலே ஒரு இலையை சுருட்டி, மீண்டும் அதை இன்னொரு இலையை வைத்து சுருட்டி என்று ஒவ்வொன்றும் மிக நேர்த்தியாக செய்யப்படுகிறது. சுருட்டு செய்யும் கம்பெனி எனும்போது மிக பெரிதாக இருக்கும் என்று நினைத்தால், அது மிக சிறிய ஒரு இடம் !!

எத்தனை வகை புகையிலை நிறங்கள்.... யாவும் போதை தரும் !

ஒவ்வொரு சுருட்டின் உள்ளும் புகையிலை அளவு மாறுபடும் !

சர்ச்சில் பிடித்த உறையூர் சுருட்டு தயாராகும் இடம் இதுதான்.... ஆச்சர்யம் !! இப்போது சுருட்டு தயார், நீங்கள் விற்கப்படும் ஒவ்வொரு சுருட்டையும் கவனித்து பார்த்தால் ஒவ்வொன்றிலும் வித்தியாசமான லேபில் இருக்கும், இந்த லேபில் சேகரிப்பாளர்கள் உலகம் முழுவதும் உண்டு. உங்களுக்காக சில லேபில் வகைகள்...... 
இப்போது சுருட்டு ரெடி, அதை குடிப்பது என்பது ஒரு கலை ! முதலில் சுருட்டை அந்த பெட்டியில் இருந்து பெரு விரல் மற்றும் சுட்டு விரலை மட்டுமே கொண்டு எடுக்க வேண்டும், பின்னர் அதை மூக்கின் அருகில் எடுத்து அந்த வாசனையை அனுபவிக்க வேண்டும், பின்னர் அதை உங்களது ஸ்டைல் பிரதிபலிக்கும் சிகார் கட்டர் கொண்டு சிகாரின் முனை பகுதியை சரியாக கட் செய்ய வேண்டும் (கீழே படம் கொடுக்கப்பட்டுள்ளது), பின்னர் சுருட்டை வாயில் பற்களுக்கு இடையில் (கவனிக்க, உதட்டில் அல்ல) வைத்து ஒரு தீக்குச்சியில் மெதுவாக பற்ற வைக்க, கொஞ்சம் கொஞ்சமாக புகையை உள்ளே இழுத்து இழுத்து அது முழுதாக பற்ற வைக்க வேண்டும்....... இனி, ஒரு சூரிய உதயத்தை பார்த்துக்கொண்டே அந்த புகையிலையின் ஆனந்தத்தை அனுபவியுங்கள் !!சர்ச்சில் பிடித்த உறையூர் சுருட்டு உடன்....... கடல் பயணங்கள் !!

இன்றும் இந்த சர்ச்சில் பிடித்த சுருட்டு என்ற புகழை காப்பாற்றி கொண்டு இருக்கும் சுருட்டை வாங்க விரும்புபவர்கள் கீழே உள்ள எண்ணில் தொடர்ப்பு கொள்ளலாம். சுருட்டு விற்பது ஒரு டப்பாவாகதான் வரும், ஒரு டப்பாவினில் எட்டு, இருபது, இருபத்தி ஐந்து என்று சுருட்டு வகையின்படி வரும். ஒரு சாதாரண ஒற்றை சுருட்டு என்பது 150 ரூபாயில் இருந்து ஆயிரக்கணக்கில் கிடைக்கிறது...... விலை ஏற ஏற அந்த புகையிலையின் ஆனந்தமும் ஏறும் !! சுருட்டு வேண்டும் என்று கேட்க்கும் முன்பு..... முதலில் இருந்து இந்த பதிவை படித்து எந்த மாதிரியான சுருட்டு வேண்டும் என்று முடிவு செய்யுங்கள்...... வெறும் சுருட்டு என்பது ஒரு பெயர்தானே தவிர, அதற்குள்ளும் ஜாதிகள் உண்டு !!
  
 Labels : Suresh, Kadalpayanangal, Woraiyur, Suruttu, Churchill, Suruttu, Cheroot, Cheroute, Cigar, World famous cigar, Indian cigar, Fen & Thomson, Woraiyur Cigar, Oor special, district special, famous for, part 2

13 comments:

 1. எத்தனை தகவல்கள். உறையூர் பக்கம் பல முறை சென்றிருந்தாலும் சுருட்டு பற்றி அறிந்ததில்லை!

  ReplyDelete
 2. நிகண்டு.காம் புதிய பொலிவுடன் புது சாப்ட்வேர் உடன் புதிய வேகத்தில் இந்த தமிழர் திருநாளில் ஆரம்பமாகிறது. தமிழில் எழுதுபவர்களையும் படிபவர்களையும் இணைக்கும் தளம் நிகண்டு.காம் வழியாக உங்கள் வலைப்பூக்கள்,புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  ReplyDelete
 3. வணக்கம்

  அறியாத தகவல் அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி
  என்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்போடு
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஆராரோ பாடிடுவோம்:
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 4. அரிய தகவல்கள் ! ! ஆச்சரியமூட்டும் தகவல்கள் ! ! சுருட்டை விரும்புகிறவர்கள் அரிதாகவே இருக்கிறார்கள் ! ! மேல்நாட்டு மக்களுக்கு அது ஓர் ஸ்டேடஸ் சிம்பல் என நினைக்கிறேன்

  ReplyDelete
 5. அருமையான தகவல்களுடன் பதிவு அசத்தல்!

  ReplyDelete
 6. தகவல்களை தேடி உருட்டி சுருட்டி தருவதால் உங்களை சுருட்டல்மன்னன் எனலாமா (கோபி்த்துக்கொள்ளாதீர்கள்)..............................

  ReplyDelete
 7. யம்மாடி... தகவல் சுருட்டியது செம...!

  ReplyDelete
 8. நான் புகைப்பதை விட்டு 7 வருடங்கள் ஆகிறது. இருந்தாலும் அவ்வப்பொழுது கிளின்ட் ஈஸ்ட்‌வுட் படங்களை பார்க்கும் பொழுது ஆகா இந்த சுருட்டை டேஸ்ட் பார்காம விட்டுவிட்டோமே என்று தோன்றும்.
  இப்பொழுதும் அதே ஏக்கம் வருகிறது. அருமையான சுருட்டல்கள் (பதிவுகள்) நன்றி

  ReplyDelete
 9. சிகரெட் புகைக்கே ஒரு மைல் தூரம் பயந்து ஓடும் எனக்கே..! நீங்கள் சுருட்டை எப்படி பிடிக்க வேண்டும்? என்ற செய்முறை விளக்கம் சொன்னவுடன் ஒருமுறை பிடித்து பார்க்க ஆர்வம் வந்தது.

  அருமையான பதிவு!

  ReplyDelete
 10. அருமை. எனக்கு மிகவும் பிடிக்கும். இருமுறை சுருட்டு குடித்து உள்ளேன். இப்போது சுருட்டு குடிப்பது இல்லை காரணம் விலை அதிகம் என்பதால்.

  ReplyDelete
 11. 8072535679 call me

  ReplyDelete