Tuesday, January 13, 2015

சாகச பயணம் - வில்லு அம்பு மற்றும் நான் !!

சிறு வயதில் இந்த கேபிள் டிவி எல்லாம் வராதபோது தூர்தர்ஷன் ஒன்றே ஒன்றுதான், அதிலும் ஒன்பது மணிக்கு மஹாஆஆஆஆஆஆஆஆ பாஆஆஆஆஆஆ ரத் என்று ஆரம்பிக்கும்போது எங்கு இருந்தாலும் ஓடி வந்து டிவி முன் உட்கார்ந்து விடுவேன், அதில் இருந்த கிராபிக்ஸ் எல்லாம் மீறி என்னை கவர்ந்தது வில் மற்றும் அம்பு ! பெரிய வில்லை எடுத்து அர்ஜுனன் ஒரு அம்பை தொடுத்து எறிய, அது ஒரு பொழுது நெருப்பையும், தண்ணீரையும், பல அம்புகளாகவும் மாறி செல்வது என்பது என்னை ரொம்பவே கவர்ந்தது. அது முடிந்தவுடன் அடுத்து நான் செய்த வில் மற்றும் அம்பை எடுத்துக்கொண்டு ஓடுவேன்...... இன்று ஆர்ச்சரி என்று அழைக்கப்படும் ஒன்றை சமீபத்தில் செய்து பார்த்தேன், வாங்க பாஸ் அம்பு அம்பா விடுவோம் :-)


சமீபத்தில் மலேசியாவின் கெண்டிங் சென்று இருந்தேன், மலையின் மீது இருக்கும் பொழுதுபோக்கு பூங்கா அது, வழக்கம்போலவே எனது மனம் ஒரு சாகசம் ஏதேனும் செய்யும் அளவு ஒரு விளையாட்டு இருக்கிறதா என்று தேடி கொண்டு இருந்தது. ஒரு இடத்தில் ஆர்ச்சரி என்று போட்டு இருந்ததை பார்த்து, திரும்ப அந்த மகாபாரதமும் புள்ளி மானை வேட்டையாடும் அந்த படமும் மனதில் நிழலாடியது. இந்த ஒரு சாகசதைதானே தேடி கொண்டு இருந்தேன் என்று மனம் கூத்தாட தொடங்கியது !!


வில் என்பது பண்டைக்கால ஆயுதங்களில் ஒன்று. இது அம்புகளை எய்வதற்குப் பயன்படுகின்றது. அம்பு எய்வதற்கான ஆற்றலைப் பெறுவது, வில்லின் மீள்தகவுத் தன்மையில் தங்கியுள்ளது. இறைவனுக்கும் வில் ஓர் ஆயுதமாக வழங்கப்பட்டுள்ளது. இங்கு வில் என்பது மிகவும் இலகுவான மரத்தில் செய்யப்பட்டு உள்ளது, எனக்கு ஒன்றை எடுத்துக்கொண்டு ஆறு அம்புகளையும் எடுத்துக்கொண்டேன். அடுத்து கைகளில் ஒரு பட்டையை கட்டினர், அதை கட்டும்போது எதற்கு என்று கேட்டதற்கு அவர்கள் சொன்னது அப்போது புரியவில்லை..... அம்பு விடும்போதுதான் தெரிந்தது !


சிறு வயதில் எல்லாம் அம்பை நானில் வைத்து அத்தோடு நானை பின்னே இழுப்போம், இங்கு அம்பின் பின்னே ஒரு சிறு பள்ளம் இருக்கிறது, அதில் அம்பை பொருத்திக்கொண்டு நானை மட்டும் இழுத்து விட்டால் போதும், அது போலவே இடது கையில் ஆட்காட்டி விரலில் அந்த அம்பின் இன்னொரு முனையை வைத்துக்கொள்வோம் அது அந்த அம்பு நேரே செல்ல உதவும்.... இங்கு அந்த அம்பின் பின்னர் மஞ்சள் சிவப்பு கலந்த வால் பகுதி இருப்பதால், அது கைகளை தாக்கும் என்று வில்லிலேயே அமைப்பு இருக்கிறது. அடுத்து அம்பை எடுத்து குறி பார்க்க தொடங்கினேன்........ சரேல் என்று விட்ட அம்பு நான் ஒரு கண்ணை மூடிக்கொண்டு இருந்ததால் எங்கு சென்று இருந்தது என்று பார்க்க முடியவில்லை, நான் எனது மனைவியை பார்க்க அவர் போயே போச்சு, போயிந்தே, இட்ஸ் கோன் என்று சொன்னார், அது தலைவலியை அல்ல என்று புரிந்து கொள்ள சிறிது நேரம் ஆனது !


எதிரே இருந்த சிறிய அட்டையில் வட்டம், வட்டமாக இருந்த இடத்தில் நடுவே குறி பார்த்து அந்த அம்பு தைக்க வேண்டும் என்றுதான் எனது மனம் எண்ணியது, ஆனால் அந்த வில்லை கொஞ்ச நேரம் தூக்கிக்கொண்டு நானை இழுத்துக்கொண்டே ஒற்றை கண்ணை வைத்து குறி பார்க்க பார்க்க, ஒவ்வொரு அம்பை எய்த பின்னரும் அது எங்கெங்கோ சென்று விழுந்தது ! ஒரே ஒரு அம்பு மட்டும் இவன் இவ்வளவு கஷ்டப்படரானே என்று அந்த வட்டத்தின் வெளி பகுதியில் சென்று விழுந்தது !! இப்படி லைட் வெயிட் வில் மற்றும் அம்பிர்க்கே இப்படி என்றால் அந்த காலத்தில் எல்லாம் உண்மையான வில் மற்றும் அம்பு எப்படி இருந்து இருக்கும் ?! சரி, என்னதான் இருந்தாலும் கெத்தாக வெளியே நடந்து வெளியே வந்தான், அப்போது உள்ளே சென்ற ஒரு வெள்ளைக்காரன் ஹொவ் வாஸ் இட் என்று கேட்க்க நான் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு சூப்பர் என்று வெளியே வந்தேன்...... அப்புறம் ராமாயணம், மகாபாரதம் சொன்ன நாட்டின் மைந்தனே அது அம்பு இல்லை ஆப்பு என்றா சொல்ல முடியும் ?! :-)


ஒழுங்கா அம்பு விடறதே இங்கே பிரச்சனையா இருக்கிறப்ப, இந்த வீடியோ பார்த்தால் காண்டாகி விடுவீர்கள்......


Labels : Suresh, Kadalpayanangal, Sagasa payanam, adventure trips, memorable trip, Archery, Bow and Arrow, Mahabharat, Ramayanam, Arjun, Funny Archery, Malaysia, Genting

14 comments:

 1. // எங்கு சென்று இருந்தது என்று பார்க்க முடியவில்லை... // ஹா... ஹா... வடிவேலு ஞாபகம் வந்தது...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன் சார் !! கரடி எதிரில் இல்லை...... அவ்வளவுதான் வித்யாசம் :-)

   Delete
 2. இந்த வீடியோவில் அந்தபெண் செய்யும் சாகசங்கள் great!
  அதுவும் அந்தப்பெண் அழகோ அழகு!
  அழகை எங்கு இருந்தாலும் ஆராதிக்கவேண்டும்!

  ReplyDelete
  Replies
  1. நான் கஷ்டப்பட்டதை ஒரு வரி கூட சொல்லவில்லையே நம்பள்கி !!

   Delete
 3. அனுபவம் பல விதம்.... ஒவ்வொன்றும் ஒரு விதம்!

  ReplyDelete
  Replies
  1. ஆம்மாம் வெங்கட் நாகராஜ் சார், ஒவ்வொன்றிலும் உடம்பு ரணகளமாகி விடுகிறது !

   Delete
 4. இரசித்தோம் நாங்களும்
  ஃபோட்டோக்கள் அற்புதம்
  தங்கள் துணைவியாருக்கு வாழ்த்துக்கள்
  (அவர்கள்தான் எடுத்திருக்கவேண்டும் என நினைக்கிறேன் )

  இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ரமணி சார் ! ஆம் எனது துணைவியார்தான் எடுத்தார்..... போஸ் எப்படி ?!


   தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள் !

   Delete
 5. ஆரம்ப பாடசாலையில் படித்த யாரும் வில்அம்பு பகுதியை தொடாமல் வந்திருக்க மாட்டார்கள்...

  சிறு வயதில் வில் அம்பு செய்து தென்னந்தொடப்பம்தான் காலியாயிருக்கிறது...

  வயதுமாற்றத்தால் வில் அம்பை விட்டுவிட்டாலும் அந்த நினைவுகள் நம்மைவிடுவதில்லை...!

  தாங்கள் இப்போதும் ஆர்வம் கொண்டிருப்பதற்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. உண்மையில் அந்த கால மனிதர்கள் மாவீரர்கள் தான் போல! அருமையான பதிவு! நன்றி!

  ReplyDelete
 7. மும்பை inorbit mall'ல் முயற்சித்திருக்கிறேன்... ஒரு கையால் வில்லை தூக்குவதே எனக்கு கஷ்டமாகி விட்டது... அம்பு விட்ட போது வில்லின் நாண் பட்டு கையில் வேறு சிராய்ப்பு... இருந்தாலும் ஐந்து அம்பில் நாலு வட்டத்தில் போய் சொருகிருச்சு... அது வரைக்கும் சந்தோஷம்... :)

  ReplyDelete
 8. எந்த மாதிரியான கயிறு நான்னாக பயன்படுத்தலாம்????
  பதிலுக்காக காத்திருக்கிறேன்

  ReplyDelete