Wednesday, February 4, 2015

ஊர் ஸ்பெஷல் - ஓசூர் ரோஜா (பகுதி - 1)!!

காதலர் தினம் நெருங்கும் வேளையில் இந்த பதிவை படிப்பவர்கள் பாக்கியவான்கள் !! இந்த காதலர் தினத்தில் உங்களது காதலிக்கு என்ன வாங்கி கொடுத்தாலும் வராத மகிழ்ச்சி ஒரு ஒற்றை ரோஜா தரும்..... அந்த ஸ்பெஷல் ரோஜாவிர்க்கே உரியது ! பதினோராம் வகுப்பு படிக்கும்போது சயின்ஸ் வாத்தியார் வகுப்புக்கு வந்து ஹைபிஸ்கஸ் ரோஸாசினென்சிஸ் என்று எழுதி போட்டு இது என்னவென்று தெரியுமா என்று கேட்க ஒருவன் எழுந்து இவர் ஐரோப்பிய கவிதாயினி என்று சொல்ல, அவனை முறைத்துவிட்டு ஒரு செம்பருத்தி பூவை எடுத்து இதற்குதான் தாவர பெயர் வைத்திருக்கிறார்கள் என்று சொல்ல.... அப்போ செம்பருத்தி அப்படின்னு பேரு வைச்சது யாரு, வாயில நுழையிற மாதிரி இருக்கிற பேரை ஏன் மாத்தினாங்க என்றெல்லாம் யோசித்து அடுத்த நாள் எங்க வீட்டில் ஒரு ரோஜா பூத்து இருக்க அதன் தாவர பெயர் தேடி அதை ரோசா என்று கண்டுபிடித்தது இன்றும் நினைவில் இருக்கு ! ரோஜாவை இதுவரை கடையில் பார்த்ததுடன் சரி, இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்கு ரோஜா தோட்டத்தை தேடி சென்றது, காதலர் தினத்திற்கும் ரோஜாவிர்க்கும் இருக்கும் சம்மந்தம், ஓசூர் எப்படி ரோஜாவிற்கு பிரபலமானது, ரோஸ் வகைகள், அதை பற்றிய ஆச்சர்யமூட்டும் செய்திகள் என்று இந்த பதிவுகள் உங்களை நிச்சயம் ஆச்சர்யமூட்டும்...... வாருங்கள் பயணிக்கலாம் ரோஜாவை முகர்ந்துக்கொண்டே !!









ஓசூர் (ஆங்கிலம்: Hosur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கிருட்டிணகிரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வு நிலை நகராட்சி ஆகும். இவ்வூர் சென்னை நகரில் இருந்து மேற்கே 306 கிலோமீட்டர் தொலைவிலும் பெங்களூர் நகரத்தில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த நகரம் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில எல்லைப் பகுதியில் உள்ளது. இந்நகரம் பெருகி வரும் தொழிற்சாலைகளாலும், குளிர்ந்த தட்பவெப்பநிலையாலும் அறியப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 879  மீட்டர் (2883  அடி) உயரத்தில் இருக்கின்றது. ஒசூர் பழங்காலத்தில் செவிடபாடி என்று 11-ம் நூற்றாண்டு சோழர் கால கல்வெட்டுகளால் அறியப்படுகிறது பிறகு செவிடபாடி என்ற பெயர் செவிடவாடி என்றும் 13-ம் நூற்றாண்டில் ஒய்சால மன்னன் வீர ராமநாதன் ஆட்சிக்கால கல்வெட்டில் சூடவாடி என குறிப்பிடப்படுகிறது. கி.பி.1674-ம் ஆண்டைச் சேர்ந்த மைசூர் மன்னர்கள் கால கல்வெட்டில் ஹொசாவூரு என்ற பெயர் குறிக்கப் படுகிறது ஹொசவூரு-ஹொசூரு-ஹொசூர்-ஒசூர் என்று மாற்றம் அடைந்துள்ளது.ஹொச என்ற கன்னடச் சொல்லின் பொருள் புதிய என்பதாகும். ஒசூர் என்பதன் பொருள் புதூர் (புதிய ஊர்) என்பதாகும்.




ரோஜாவை பற்றி எழுத வேண்டும் என்றால் பத்து பதிவுகளை எழுதலாம், சுருக்கமாக மட்டும் இங்கே காணலாம் ! ரோஜா என்பது கிரேக்க தேசத்தின் காலனி ஆதிக்கத்திலிருந்த தெற்கு இத்தாலியின் ஆஸ்கன் மொழியிலிருந்து பெறப்பட்ட லத்தீன வார்த்தை ரோசா விலிருந்து வருவது. முளரிப்பூ (Rose) ,முளரி பேரினத்தின் ரோசசி குடும்பத்தை சேர்ந்த ஆண்டு முழுவதும் விளையக்கூடிய புதர் அல்லது படர்கொடி வகைத் தாவரம். இதில் நூறு வகைகளும் பலவித வண்ணங்களும் உண்டு. இந்த தாவரம் மேலே ஏறுகிற அல்லது இறங்குகிற செங்குத்தான புதர்காடாக அமைந்து இதன் தண்டு பகுதி பெரும்பாலும் கூரிய முட்கள் கொண்டதாக இருக்கும். முட்கள் என்பவை திருத்தி அமைக்கப்பட்ட கிளைகள் அல்லது தண்டுகள், ஆனால் ரோஜாவில் காணப்படும் இந்தக் கூரிய நீண்ட அமைப்புகள் திருத்தி அமைக்கப்பட்ட மேல் தோல் போன்ற திசுக்களாகும் (கூர்முனைகள்).

ஓசூர், ரோஜா பற்றி பார்த்தாகிவிட்டது..... முக்கிய கேள்வி என்பது காதலர் தினத்திற்கும், ரோஜாவிர்க்கும் என்ன சம்மந்தம், ஏன் கனகாம்பரம் கொடுத்தால் ஆகாதா என்பது. காதலர் தினம் உருவானது குறித்து ஏகப்பட்ட கதைகள் இருக்கின்றன, அதில் எல்லோரும் நம்பும் ஒன்று என்பது......  கி.பி 270 ம் ஆண்டு ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள தடை இருந்தது. திருமணம் செய்து கொண்டால் ஆண்களுடைய வீரம் குறைந்து விடும் என்பது அரசரின் நம்பிக்கை. இதனால் பெண்களை ஏறெடுத்தும் பார்க்கக் கூடாது என்ற தடை விதித்திருந்தார் ரோமப் பேரரசர். திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை என்ஜாய் செய்யவேண்டும் என்று துடித்தவர்களுக்கு உதவி செய்து அவர்களுக்கு அரச கட்டளையை மீறி திருமணம் நடத்திவைத்தார் வேலண்டைன். இந்த உதவிக்கு மன்னன் மரணதண்டனையை பரிசளித்தார். இரண்டு மனங்களை திருமண பந்தத்தில் இணைத்து வைத்த பாதிரியார் வேலண்டைன் கொல்லப்பட்ட நாள் பிப்ரவரி 14.  (வேறு பல கதைகளையும் படிக்க....... சிறுப்பிட்டி இணையம்). பழங்கால கிரேக்கர்களும் ரோமானியர்களும் ரோஜாவை தமது காதல் தேவதைகள் என்று சொல்லப்படுகிற ஆபிரோடைட் மற்றும் வீனஸ் இன் அடையாளம் என்று கருதினார்கள். ரோம் நகரத்தில் ரகசிய அல்லது அந்தரங்கமான விஷயங்களின் விவாதம் நடக்கும் அறையின் வாசலில் ஒரு காட்டு ரோஜா வைக்கப்படும். இதில் ஒன்றை கூர்ந்து கவனித்தீர்களா ?!.....கிரேக்க நாடு என்பது இதில் அதிகம் சம்மந்த படுத்தப்பட்டு இருப்பதை, ரோஜா, காதல், காதல் கடவுள் என்றெல்லாம் இருந்த கிரேக்க சாம்ராஜ்யத்தை பற்றி அதிகம் இங்கே சொல்ல முடியாது, விருப்பம் இருந்தால் இங்கே தெரிந்து கொள்ளலாம்..... கிரேக்க சாம்ராஜ்யம் !! 



ரோஜாவில் எத்தனை வகை இருக்கிறது என்று என்னை இந்த பதிவுக்கு அலையும் முன்பு கேட்டு இருந்தால்...... பிங்க், சிகப்பு, மஞ்சள், வெள்ளை என்று அடுக்கி இருப்பேன். ஆனால் ரோஜாவின் வகையை பல வகைகளில் சொல்ல வேண்டும் !! ரோஜாவை கூர்ந்து பார்த்தால் நிறைய வித்யாசம் தெரியும், உலகில் நூறு வகையான ரோஜா வகைகளும், ஒவ்வொரு வகையிலும் அதிகமான கூறுகளும் இருக்கின்றன, உங்களுக்கு புரிவதற்காக சில ரோஜா வகைகள்...... லேடி பேங்க்ஸ் ரோஸ், கலிபோர்னியா ரோஜா, டாக் ரோஜா,  பாஸ்ச்சர் ரோஜா,  சீனா ரோஜா, க்ளௌகூஸ் டாக் ரோஜா, ஸ்விட் ப்ரையர் அல்லது எக்லண்டைன் ரோஜா, ஆஸ்ட்ரியன் எல்லோ அல்லது ஆஸ்ட்ரியன் ப்ரையர், காலிக் ரோஜா, பிரெஞ்சு ரோஜா, ஆர்.எக்ஸ் ஒடோரட்டா ஜைஜாண்டி ', சிவப்பு இலை ரோஜா, செரோகி ரோஜா,கேமேலியா ரோஜா,மார்டான் ரோஜா, சின்னமன் ரோஜா, பாஜா ரோஜா, மஸ்க் ரோஜா, மல்டிப்ளோரா ரோஜா, ஸ்காட்ச் ரோஜா, எக்லண்டைன், ஸ்விட் ப்ரையர், ருகோசா ரோஜா, ஜப்பானிய ரோஜா, வர்ஜினியா ரோஜா என்று.... இன்னும் இருக்கிறது, அட எங்க ஓடறீங்க !!
எத்தனை வகை ரோஜா என்று காண இங்கே சொடுக்கவும்..... ரோஜா வகைகள் !!

ரோஜாவின் பூ இதழை கொண்டு வகைபடுத்துதல் !

ரோஜாவின் நிறம் கொண்டு வகைபடுத்துதல் !

ரோஜாவின் பூக்கும் தன்மை மற்றும் இதழ் கொண்டு வகைபடுத்துதல் !

ரோஜாவை மார்க்கெட் எப்படி வகைபடுத்தி இருக்கிறது என்று பாருங்கள் !

ரோஜாவின் வகையில் மட்டும் அல்ல, ரோஜாவின் கலர் கூட ஒவ்வொன்றும் ஒரு உணர்ச்சியை சொல்கிறதாம்..... அப்போ இந்த காதலர் தினத்திற்கு நீங்க என்ன கலர் பாஸ் !! இந்த வாரம் இது போதும், அடுத்த வாரம் இன்னும் ஆச்சர்யமான செய்திகளை பார்ப்போம் !!


Labels : Suresh, Kadalpayanangal, Rose, hosur, krishnagiri, rayakottai, hosur is famous for, rose export, rose farm, rose essence, color of rose, meaning for rose color, types of rose, roses, valentine day, feb 14, 14 feb, kadhalar dhinam, lovers day, love, red rose, bouquet of rose

7 comments:

  1. அருமை! ரோஜாவின் அழகுக்கு ஈடு ஏது? நம்ம வீட்டில் 21 ரோஜாச்செடிகள். அதுலே 16 வகைகளுமா இருக்கு.

    நீங்கதான் இங்கே வரப்போறீங்களே.... அப்ப பார்க்கலாம் அந்த அழகை:-)

    ReplyDelete
  2. எந்த கலர் என்றாலும் அசத்தல் பாஸ்...!

    ReplyDelete
  3. வணக்கம்
    விதவிதமான றோஜா பூக்கள்.. பகிர்வுக்கு நன்றி
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஏளனம்:   கவிதையாக என்பக்கம் வாருங்கள் அன்புடன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. தங்களின் படைப்புகள் ஒவ்வொன்றும் ரோஜாவை போன்று அழகாய் உள்ளது

    ReplyDelete
  5. எத்தனை எத்தனை தகவல்கள்.....

    ரோஜா.... எப்போதும் அழகு தான்!

    ReplyDelete
  6. உங்கள் உழைப்பு போற்றதக்கது.............................................

    ReplyDelete