Monday, February 16, 2015

அறுசுவை - "டாஸ்மாக்" டீ !!

நான் எழுதும் பதிவுகளில் டீ குடிப்பது பற்றி அதிகம் எழுதுவது உண்டு, அதற்க்கு ஒரு காரணம் இருக்கிறது..... விரைவில் சொல்கிறேன் !  பொதுவாக மாலை நேரங்களில் நமது தெருவில் நடந்தால் டீ கடையில் நுரை பொங்க டீ சாப்பிட்டு அப்படியே அங்கே போடப்படும் வாழைக்காய் பஜ்ஜியில் தேங்காய் சட்னி போட்டு தோய்த்து சாப்பிட்டுவிட்டு ஏப்பம் விடுவது என்பது ஜனநாயக தர்மம்..... அது போலவே இந்த சூரிய உதயமும், கடற்கரையில் காலை எட்டிப்போட்டு நடை போடும்போது அந்த சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக மேகங்களில் வர்ணஜாலங்களை இறக்கி அது மறையும் அழகில் மயங்கி கொண்டே சரக்கு அடிப்பது என்பது தமிழ் குடிமகனின் சந்தோசங்களில் ஒன்று !! நான் மேலே சொன்னவற்றில் இரண்டையுமே சேர்த்து செய்து பார்த்தால் என்ன என்று தோன்றியது........ சந்தோசம், டபுள் சந்தோசம் இல்லையா ! சூரியன் மறையும் இடம் தேடி எங்கு செல்லலாம் என்று யோசித்து யோசித்து, கடைசியில் நின்றது சிங்கப்பூரில் !!


டீ..... சும்மா ஜிவ்வுன்னு இருக்கும் !
கண்ணாடிக்கு வெளியே சிங்கப்பூர்..... எழுபதாவது மாடியில் இருந்து !

பொதுவாகவே டீ சாப்பிடும்போது அந்த டீக்கு சர்க்கரையை அதிகம் போட்டு விடுவார்கள் இந்த டீ கடைகாரர்கள், இதனால் அந்த டீயில் கிடைக்கும் அந்த சிறிய கசப்பான சுவை கிடைக்காமல் போகிறது, சில சமயங்களில் அதில் ஐஸ் போட்டு ஐஸ் டீ குடிப்பேன். இப்படியெல்லாம் டீ சாப்பிட்டு கொண்டு இருக்கும்போது சரக்கு மிக்ஸ் செய்து அடிக்கிறியா என்று நண்பன் ஒருவன் கேட்க..... அதானே, நாம் செய்வது இருக்கட்டும், உலகில் அப்படி ஒரு டீ இருக்கிறதா என்று தேடி பார்க்க..... இருந்தது, "சரக்கு" டீ !! இதன் பெயர் லாங் ஐலாண்ட் ஐஸ் டீ !!

வாங்க ஜில்லுனு ஒரு டீ சாப்பிடலாம் !

லாங் ஐலாண்ட் ஐஸ் டீ என்பது காக்டெயில் வகை ! பெயரில் என்னமோ டீ இருந்தாலும், இதில் கலப்பது எல்லாம் சுத்தமான சரக்கு :-) வோட்கா, ஜின், டக்கீலா, ரம் எல்லாம் கலக்கும்போது டீ போன்ற கலர் வருவதாலும், அதில் ஐஸ் டீ போன்ற சுவை கிடைப்பதாலும் இந்த பெயர். சிங்கப்பூரில் புகழ் பெற்ற ஹோட்டல் என்பதில் ஒன்று ஸ்டாம்போர்ட், அதன் எழுபதாவது மாடியில் ஒரு பார் இருக்கிறது. அதன் கண்ணாடியை தாண்டி தெரியும் சிங்கபூரை ரசித்தவாறு, சூரியன் மறையும் காட்சியை ரசிக்க வேண்டும் என்பது பிளான், அதன் நடுவே இந்த டீ குடிக்க வேண்டும்...... கேட்க்கும்போதே கிளுகிளுப்பாக இல்லை !!
இதுதான் பாஸ் டீ கடை !


உள்ளே சென்று உட்கார்ந்தவுடன், அந்த அறையின் குளுமையில் மனம் நிறைந்தது. பின்னர் ஒரு "டீ" சொல்லிவிட்டு, கொஞ்சம் கொறிக்கவும் சொன்னோம். இப்போது சிங்கப்பூர் அந்த மாலை நேரத்தில் விழுந்து கொண்டு இருந்தது. சூரியன் தினமும் மறைந்தாலும், நாம் கட்டிடங்களுக்கு இடையில் வாழ்வதால் அதன் அழகை ரசிக்க முடிவதில்லை, கொஞ்சம் கவனித்து பார்த்தால் அது மஞ்சளில் ஆரம்பித்து, ஆரஞ்சு நிறமாகி, பின்னர் அது மேகங்களுக்கும் அந்த கலரை கடன் கொடுத்து, மேலே எழுந்த ஒரு பந்து மெதுவாக கீழே வீழ்வது போல மெதுவாக மிகவும் மெதுவாக விழுவது என்பது மிகவும் ரசிக்க வேண்டிய ஒன்று. அதிலும், ஒரு மலையிலோ அல்லது உயரமான கட்டிடத்தில் இருந்து பார்க்கும்போது நாம் காலையில் பார்த்த அந்த நெருக்கடியான சாலைகள் மறைந்து கட்டிடங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பட்டு சேலையை போர்த்துவது போல விளக்குகள் மின்னும் அழகு என்பது இரவுக்கே உரித்தானது..... கண்ணுக்கு கிடைக்கும் விருந்துடன், இந்த இனிமையான சுவையான ஐஸ் டீ ! நான் மேலே சொன்னதை படமாக பாருங்கள்...... சிங்கப்பூரின் அழகு உங்களுக்கே புரியும் !!
சூரியன் மறைய தயார் ஆகிறது......


கொஞ்சம் கொஞ்சமாக நிறம் மாறுது மேகங்கள்.....

கட்டிடங்கள் அந்த சூரியனின் வெளிச்சத்தை வாங்கிவிட்டன......

சூரியன் மறைய, கட்டிடங்கள் பட்டு புடவை கட்டி தகதகக்க.....

அந்த இருளிலும் சூரியன் தெரிகிறது.... வீதிகளிலும், கட்டிடங்களிலும் !
இந்த ஐஸ் டீ ஒரு வாய் எடுத்து வைக்கும்போது சாதாரண ஐஸ் டீ சுவையை கொடுத்தாலும், கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட அந்த போதை தெரியும். ஐஸ் அந்த சிறிய தம்ப்ளரில் நடனமாட அந்த எழுபதாவது மாடியில் நேரம் செல்ல செல்ல தலை சுற்றும்போது அது உயரத்தை நினைத்து மட்டும் இல்லை என்று தெரியும்....... அப்போதுதான் வீட்டில் இருந்து ஒரு போன், "எங்க இருக்கீங்க"........ "தீ சாப்பிதறேன் செல்லம்"...... "வாயெல்லாம் குளறுது, "உண்மையாவா", "அட நிஜமாதான் சொல்றேன், டீதான் சாப்பிடறேன், சத்தியமா"........ பாஸ், நீங்களே சொல்லுங்க நாம டீதானே சாப்பிடறோம் !!


Labels : Suresh, Kadalpayanangal, arusuvai, tea, long island ice tea, cocktail tea, tea with a difference, vodka tea, rum tea, tequila tea, super tea, memorable tea, Singapore tea, tea at top of the building, tea at top

11 comments:

 1. அடடா...! Mobile Switch Off செய்ய மறந்து விட்டீர்களா...?

  இயற்கையை ரசித்தேன்... சுவைத்தேன்...

  ReplyDelete
 2. வணக்கம்

  இயற்கை அழகு அழகுதான்... தேடலுக்கு எனது பாராட்டுக்கள்..
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. புகைப்படங்கள் அனைத்தும் “போதை”யை தருகின்றன..எங்க கேண்டீன் -ல வோட்கா, ஜின், ரம் மூன்றும் கிடைக்கும்.... ”டக்கீலா” தான் கிடைக்காது... பாண்டிச்சேரில “டக்கீலா’ கிடைக்கிறது. லாங் ஐலாண்ட் ஐஸ் டீ சாப்பிடணும்னா சிங்கப்பூர்தான் போகணும் போல..........

  ReplyDelete
 4. சிங்கப்பூரில் இவ்வளவு நாள் இருந்தும் இந்த டீ குடிக்காமல் இருந்து விட்டேனே..
  கூப்பிட்டு இருக்கலாம்.

  ReplyDelete
 5. அருமையான புகைப்படங்கள், டீ குடிக்கும் போதே எடுத்தீர்களா? நல்லாவே வந்திருக்கு...

  ReplyDelete
 6. சூரியன் மறைவதற்குத் தயாராகும்போது முழுசா இருந்த டீ கிளாஸ் இருட்டாறதுக்குள்ள காலியாயிடுச்சே.... படங்கள் கொள்ளை அழகு....

  ReplyDelete
 7. ஐஸ் லெமன் டீ தான் அது. எல்லாவற்றையும் ரசித்து குடிக்க ஈஸ்டு கோஸ்டு பார்க் சென்று இருக்கலாம் .

  ReplyDelete
 8. "டாஸ்மாக்" டீ....

  ஹீ ஹீ ஹீ... டாமிள் வாழ்க... டாஸ்மாக் உருவாக்கிய தமிழ்நாடு வாழ்க...

  ReplyDelete
 9. டாஸ்மாக் டீ.... கேட்கும்போதே போதே ஏறுதே! :)

  அழகிய படங்கள். ரசித்தேன் நண்பரே.

  ReplyDelete
 10. Finishing Touch அதருமை, அதாங்க "அருமை"

  ReplyDelete