Thursday, February 26, 2015

அறுசுவை - ஜன்னல் கடை, சென்னை

சென்னையில் உணவகங்கள் என்று சொன்னால் அதற்க்கு பஞ்சமே இல்லை, கடையின் பெயரை விதவிதமான விளக்குகள் கொண்டு கவர்வது ஒரு வகை என்றால், பல கடைகளுக்கு பெயரே கிடையாது. வாடிக்கையாளர்கள் ஒரு பெயர் வைத்து அழைத்து அது காலப்போக்கில் நிலைத்து நின்று விடுவது உண்டு, அப்படி ஒரு கடைதான் "ஜன்னல் கடை". ஒவ்வொரு முறை சென்னை செல்லும்போது வித்யாசமான உணவு வகைகளை தேடிபோவது உண்டு, சில நேரங்களில் உணவு வகை ருசியாக இருக்கும், சில நேரங்களில் அனுபவம் வித்தியாசமாக இருக்கும் இதில் இந்த கடை இரண்டாவது வகை !


உணவகம் என்றால் ஒன்று டேபிள் சேர் எல்லாம் போட்டு வைத்து இருப்பார்கள், இல்லையென்றால் தள்ளுவண்டியில் வைத்திருப்பார்கள் நாம் நின்று கொண்டு சாப்பிடவேண்டும். மயிலாப்பூரின் புகழ் பெற்ற கோவிலான கற்பகாம்பாள் கோவில் சென்று அதன் இடதுபுறம் செல்லும் சந்தில் சென்றால் சிறிது தூரத்தில் ஒரு வீட்டின் ஜன்னலில் ஒரு சிறு கூட்டம் தெரியும், ஒரு வேளை எதாவது பிரச்சனையோ என்று எட்டி பார்த்தல் அந்த கூட்டம் சப்பு கொட்டி சாப்பிட்டுக்கொண்டு இருக்கும். கொஞ்சம் வித்யாசமாக இருக்கிறதே என்று நினைத்தால்......... அதுதான் ஜன்னல் கடை !!



இதை தேடி செல்வதற்கு சிரமம் எதுவும் இல்லை, யாரிடம் கேட்டாலும் சொல்கிறார்கள். காலை சுமார் ஏழு மணி அளவில் இங்கு சென்று என்ன இருக்கிறது என்று எட்டி பார்க்க இட்லி, வடை, பூரி, பொங்கல் என்று இருந்தது, அன்றைய ஸ்பெஷல் என்பது வெஜிடேபிள் உப்புமா !! முதலில் இந்த கடையை ஏற இறங்க பார்க்கிறோம், ஒரு பழைய காலத்து வீடு, அந்த வீட்டின் கதையை சொல்லும் ஒரு சிறிய ஜன்னலின் பின்னே சுவையான உணவுகள் தயாராகி கொண்டும், இருந்தும் கொண்டு இருக்கின்றன. மயிலை என்பதால் அந்த வீடும், உணவின் சுவையும் ஐயர் வீட்டு சுவை என்பது மனதில் சட்டென்று தெரிந்து விடுகிறது. ரெண்டு இட்லி, ஒரு வடை என்னும் ஒரு சம்பரதாயமான ஒன்றை கேட்டு வாங்கி கொண்டு நான் நகர, எனது நண்பன் ஜெகதீசன் அன்றைய ஸ்பெஷல் ஆன வெஜிடேபிள் உப்புமா வாங்கி கொண்டு நகர்ந்தான் !!



ஒரு சிறிய பிளாஸ்டிக் தட்டில், பாலிதீன் பேப்பர் போட்டு இட்லி வடை இருக்க, அதில் தேங்காய் போடாத சட்டினிகளும், கொஞ்சம் பருப்பு போடாத சாம்பாரும் இருந்தது. இந்த உணவின் சுவையை பற்றி சொல்வதென்றால் சாப்பிடலாம் என்று மட்டுமே சொல்ல முடிந்தது ! நமக்குதான் இப்படி, நண்பனுக்கு எப்படியோ என்று பார்த்தால் அவன் சப்பு கொட்டி சாப்பிட்டு கொண்டு இருந்தான். கொஞ்சமே கொஞ்சம் எடுத்து வாயில் வைக்க, மஞ்சள் போட்டு ரவையை பதமாக வறுத்து, அதில் பீன்ஸ், கேரட், பச்சை மிளகாய், தக்காளி எல்லாம் போட்டு உப்பும், காரமும் சேர்ந்த அருமையான உப்புமா அதன் உடன் வடை என்று அமோகமாக இருந்தது. ஒரு நடை கோவிலுக்கு வரும் நீங்கள், கண்டிப்பாக ஒரு வித்யாசமான அனுபவத்திற்க்காக இங்கே சாப்பிடலாம்.







பஞ்ச் லைன் :

சுவை - உணவின் சுவை பற்றி அவ்வளவு சிலாகிக்க முடியாது என்றாலும், அந்த அனுபவம் புதுமை ! கண்டிப்பாக மோசமான உணவு இல்லை :-​) காலை, மதியம், மாலை என்று எல்லா வேளையும் உணவு உண்டு.

அமைப்பு - ஒரு சிறிய ஜன்னல், அதில்தான் வாங்கி சாப்பிட வேண்டும். வாழ்க்கையில் இப்படி ஒரு முறையில் சாப்பிட்டு பாருங்களேன் ! மிக சிறிய ஜன்னல் என்பதால், அதை சுற்றி கூட்டம் அலை மோதும்.

பணம் - விலை கம்மிதான் !!
சர்வீஸ் - அடிதடி, தள்ளு முள்ளு இருந்தாலும் நல்ல கவனிப்பு !

அட்ரஸ் : 


ஜன்னல் கடையின் எதிரே இருக்கும் கடை, அட்ரஸ் பார்த்துக்கொள்ளுங்கள் !



Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, mylapore, Chennai, kapaleeshwarar temple, jannal kadai, window hotel, window restaurant, different concept, near beach, near marina beach

10 comments:

  1. நல்ல பதிவு!

    சரியான விமர்சனம்! எழுதுகிறோம் என்பதற்காக ஆஹா... ஓஹோ... என்று புகழாமல் சுவை சுமார்தான் என்று உள்ளதை உள்ளபடி சொல்வதில்தான் உங்களின் தனித் தன்மை இருக்கிறது.

    பெங்களூரில் தங்களுடன் சேர்ந்து ராஜஸ்தான் உணவு உண்டதும், மதுரையில் கிழங்கு பொட்டலம், இளநீர் சர்பத் சாப்பிட்டதும் மறக்க முடியாத சுவை அனுபவங்கள். தங்களை நினைக்கும் போதெல்லாம் இந்த சாப்பாட்டு அனுபவமும் கூடவே வந்துவிடும்.

    நன்றி நண்பரே! தொடர்ந்து எங்களுக்கு பல சுவைகளை அறிமுகப்படுத்துங்கள்!

    ReplyDelete
  2. ஒரு இடம் விடர்து கிடையாது! எங்க சாப்பாட்டு வாசனை வந்தாலும் உடனே பஸ்/கார்/பிளைட்/கப்பல் புடிச்சு போயிட வேண்டியது! :) வழக்கம் போல் அருமை! இந்த வருடம் பெண்களூர் வரும் போது சந்திக்க விரும்புகிறேன்.

    ReplyDelete
  3. ஜன்னல் கடை பெயரே வித்தியாசமாக இருக்கிறது. பெஞ்ச் டேபிள் போடும் சிரமமெல்லாம் இருக்காது . அதனால் விலை குறைவாத்தான் இருக்கும் என நினைக்கிறேன். விலைப் பட்டியலையும் கொஞ்சம் சொல்லியிருக்கலாம்.. ஒரு நல்ல அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டதற்கு நன்றி

    ReplyDelete
  4. சாப்பிட்டதில்லை என்றாலும் பார்த்திருக்கிறேன். வடையின் நிறமும் அமைப்பும் கவர்கிறது!

    ReplyDelete
  5. எப்படித்தான் இப்படி சந்து பொந்து கடையெல்லாம் கூட தேடிப்பிடிக்கறீங்களோ.... கண்டிப்பாய் வித்தியாசமான அனுபவம் தான்பா..

    ReplyDelete
  6. உப்புமா கூட அழகாய் இருக்கிறது..... ப்ளாஸ்டிக் பேப்பருக்குப் பதில் வாழை இலையில் பரிமாறினால் நல்லது......

    ReplyDelete
  7. உங்களுக்கு தெரியாத கடை இருக்கா ஜி...?

    ReplyDelete
  8. வித்தியாசமான கடையாகத்தான் இருக்கிறது!

    ReplyDelete
  9. Vaalai ilai vikkum vilaikku kadai ownerku kattupadi aavaadhu boss..

    ReplyDelete