Friday, February 27, 2015

உலக பயணம் - கொழும்பு கிரிக்கெட் ஸ்டேடியம் !!

வேர்ல்ட் கப் கிரிக்கெட் மேட்ச் நடக்க ஆரம்பித்து விட்டது, இந்த சமயத்தில் நானும் ரவுடிதான் என்று பதிவு போடவில்லை என்றால் எப்படி ?! கிரிக்கெட், சிறு வயதில் இருந்தே அதற்கும் எனக்கும் வாய்க்கா வரப்பு தகராறு....... தெருவில் கிரிக்கெட் விளையாடும் நண்பர்களிடத்தில் நானும் என்று சென்றால் நீதான் இந்த டீமின் பன்னிரெண்டாவது ஆள் என்று சொல்லி சேர்த்து கொள்வதும், கடைசி வரை எனது முறை ஏன் வரவில்லை என்று காதிருப்பதுமே பொழைப்பா போச்சு. பின்னர் கொஞ்சம் தெளிந்த பிறகு கடைசி ஒரு ஓவர் மட்டுமே கொடுத்து பந்தை உருட்டி விடுவார்கள் !! அப்படி கிரிக்கெட் விளையாடிய நான் இந்த முறை கொழும்பு சென்றபோது அந்த புகழ்பெற்ற கிரிக்கெட் மைதானத்தை பார்க்க முடியுமா என்று முயற்சித்தேன்....... முடிவில் பார்த்தேன் !!





பிரேமதாசா கிரிக்கெட் ஸ்டேடியம் என்னும் பெயருடைய இந்த இடத்திற்கு செல்ல, அங்கு மிகுந்த பாதுகாப்பு. 1986ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த விளையாட்டு மைதானத்தில் சுமார் 35,000 பேர் வரை உட்காரலாம். கிரிக்கெட் என்பதை நான் டிவியிலேயே பார்க்க மாட்டேன், வெகு சில நேரங்களில் மட்டும் விளையாடுவதை பார்ப்பேன். இப்போது பரந்து விரிந்த கிரிக்கெட் மைதானத்தின் முன்பு உட்கார்ந்து இருப்பது என்பது ஒரு அறுபுதமான அனுபவம்தான் !



கலர் கலரான இருக்கைகள், உயர்ந்த விளக்கு தூண்கள், முன்னே இருக்கும் பச்சை புல் போர்த்திய மைதானம், சிலு சிலு காற்று என்று சந்தோசமாக இருந்தது. இந்த மைதானத்தில் இந்தியா இலங்கை மேட்ச் நடக்கின்றது என்று கற்பனை செய்துக்கொண்டு பார்த்தால், அந்த இடத்தில் விளக்குகள், காதை பிளக்கும் ஓசை, கொண்டாட்டங்கள், டிவி என்று கண் முன்னே அந்த காட்சி விரிகிறது ! இந்த உலக கோப்பை நடக்கும் சமயத்தில் இந்தியா விளையாடும் மேட்ச் மட்டும் பார்க்கின்றேன், அதை இங்கே பொருத்தி பார்க்க நான் உட்கார்ந்த இடத்தில் இருந்தே குதிக்கிறேன் !



ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுவது போல இருந்தாலும், அடுத்த முறை ஒரு மைதானத்தில் இந்தியா விளையாடும் மேட்ச் பார்க்க வேண்டும். அதுவும் இலங்கை நண்பர்களுடன், எனது பதிவை விரும்பும் நண்பர்களுடன் இந்த இடத்தில் மேட்ச் பார்க்க வேண்டும்...... அப்போது ஒரு வித்யாசமான சத்தம் செய்துகொண்டு அதை ரசிக்க அந்த பதிவை நீங்கள் படிக்க வேண்டும் :-)



Labels : Suresh, kadalpayanangal, Colombo, cricket stadium, world cup, cricket, srilanka, sight seeing, stadium

7 comments:

  1. வெகு சீக்கிரத்தில் பார்த்திடலாம் ஜி...

    ReplyDelete
  2. சீக்கிரமே நீங்கள் மேட்ச் பார்க்கும் போட்டோவை அப்லோடிடுவீர்கள் ! !

    ReplyDelete
  3. சீசனுக்கு ஏற்ற பொருத்தமான பதிவு!

    ReplyDelete
  4. enga orrukku vanthirukkeenga Jiiii!

    ReplyDelete
  5. சுரேஷ் சார் , இந்த மைதானம் பக்கம் தான் எங்க ஏரியா ....அடுத்த முறை வரும் முன்னாடி கொஞ்சம் சொல்லுங்க !!! உங்களை கட்டாயம் சந்திக்கணும் சுரேஷ் சார்

    ReplyDelete
  6. நானும் முயற்சி செய்கிறேன் , உங்களுடன் அமர்ந்து கிரிக்கெட் பார்க்க...

    ReplyDelete