Tuesday, March 24, 2015

அறுசுவை (சமஸ்) - குணங்குடிதாசன் சர்பத், தஞ்சாவூர் !!

தஞ்சாவூர் பகுதியில் கண்ணுக்கு குளிர்ச்சியாக வயல் வெளிகள் இருந்தாலும், வெயில் காலத்தில் அந்த கண்ணே கிறங்கும் அளவுக்கு வெயில் மண்டையை பிளக்கும். அதில் இருந்து தப்பிக்க நமக்கு இருக்கவே இருக்கிறது பெப்சி, கோக், டிராபிகானா, இளநீர் இல்லையா........ என்னதான் அதை குடித்தாலும் இன்னும் குடிக்க வேண்டும் என்று தோன்றாது, ஆனால் நன்னாரி சர்பத் போட்டு கொடுத்தால் கண்டிப்பாக இன்னொரு சர்பத் போடுங்க என்று சொல்லுவோம் இல்லையா ?! அந்த சர்பத் வரிசையில் மிகவும் சுவையான, வித்யாசமான ஒன்றுதான் இந்த குணங்குடிதாசன் சர்பத் கடையில் கிடைக்கும் நார்த்தங்காய் சர்பத்தும், பால் சர்பத்தும் !!



திரு.சமஸ் அவர்கள் தஞ்சாவூர் சுற்றி எழுதிய கடைகளில் எல்லா இடத்திலும் வெகு சூசகமாகவே அந்த விலாசம் கொடுத்து இருப்பார், அதை தேடி கண்டு பிடிப்பது என்பதே ஒரு கலை, அதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் யாரிடம் அந்த கடையை பற்றி கேட்டாலும் எச்சிலை விழுங்கிக்கொண்டு அங்க இருக்கு என்று வழி சொல்வார்கள். இந்த குணங்குடி தாசன் சர்பத் கடைக்கும் அப்படியே.... ஆனால் கொஞ்சம் பொறாமையோடு ! நல்ல வெயில் அடிக்கும் மதிய நேரத்தில் தொண்டை காய்ந்து போய் கீழவாசல் ஏரியாவில் இந்த கடையை தேடி அலைந்தோம், மிக சிறிய கடை என்பதால் சட்டென்று கடந்து போக வாய்ப்பு இருந்தும் அந்த கடையின் முன்னாடி இருக்கும் அந்த சர்பத் பாட்டில் உங்களை சுண்டி இழுத்துவிடும் !


அது கடைவீதி என்பதால் கூட்டம் அதிகம், எல்லோரும் நடந்து நடந்து களைத்து போய் இங்குதான் வருகிறார்கள். கடையின் உள்ளே உட்கார கொஞ்சம் சேர் இருக்கிறது இருந்தும் வெளியில் அந்த சர்பத் எப்படி போடுகிறார்கள் என்று ஆவலோடு நிறைய பேர் நிற்கிறார்கள். பொதுவாக சர்பத் போடும்போது எலுமிச்சை பழத்தை பிழிந்து விடுவார்கள், சர்பத் குடிக்கும்போது அந்த புளிப்பு சுவை இருந்துகொண்டே இருக்கும், சில நேரங்களில் எலுமிச்சை பழத்தின் கொட்டை வாயில் சிக்கும்போது அதன் மேலே இருக்கும் அந்த புளிப்பு சுவையை தடவி எடுத்துவிட்டு அதை வெளியில் துப்புவோம் இல்லையா. இனிப்பும், புளிப்பும் என்று மாறி மாறி வரும் அந்த சுவையே சர்பத்தின் வெற்றி எனலாம் ! இங்கு....... எலுமிச்சை இல்லை, அதற்க்கு பதில் நார்த்தங்காய் !!



அந்த காலத்தில் வீட்டில் நார்த்தங்காய் ஊறுகாய் என்பது கண்டிப்பாக இருக்கும், இந்த காலத்தில் பலருக்கும் நார்த்தங்காய் என்பது தெரிந்து இருக்குமா என்பது சந்தேகமே ! எலுமிச்சை பழத்தின் அக்கா போல சிறிது பெரிதாக ஆரஞ்சு பழ சைசில், வெளி தோல் கொஞ்சம் சொர சொரப்பாக இருப்பதே நார்த்தங்காய். அதை ஊறுகாய் போடும்போது சாதத்திற்கு கொஞ்சமே கொஞ்சம் எடுத்து வைக்கும்போது அந்த புளிப்பு சுவை அப்படியே மூளைக்கு செல்லும் !! எச்சில் ஊற வைக்கும் அந்த புளிப்பு சுவையை சர்பத்திர்க்கு போட்டால் எப்படி இருக்கும்..... அதுதான் இந்த குணங்குடி தாசன் சர்பத்தின் சிறப்பு ! 


ஒரு வெளிர் வெள்ளை பிளாஸ்டிக் கிளாஸ் எடுத்து, அதில் ஐஸ் கட்டிகளை தட்டி போட அது நான் ஸ்கூலுக்கு போகமாட்டேன் என்று அடம் பிடிக்கும் குழந்தை போல அந்த டம்ப்ளரில் விழுந்து உருளுகிறது. அதன் மேலே இப்போது நார்த்தங்காய் எடுத்து கொஞ்சம் பிழிந்து விடுகின்றனர், அதில் இருக்கும் காரதன்மைக்கு இப்போது ஐஸ் உருகி புகை வருகிறது. அதில் இவர்களே ஸ்பெஷல் ஆக தயாரித்த சர்பத் கொஞ்சம் ஊற்றுகின்றனர். சர்பத் என்பதில் கொஞ்சம் அதிகம் ஆரஞ்சு நிறமும், கிரேப் நிறமும் என்று இரண்டு வகைகளே உண்டு. இந்த ஆரஞ்சு நிறத்தை சரியான கலவையாக ஊற்றி அந்த தண்ணீரை கொண்டு கலக்கும்போது அந்த ஐஸ் சுற்றி சுற்றி வந்து கொண்டு இருக்கும் அப்போது இந்த கிரேப் நிறத்தில் இருக்கும் சர்பத்தை கொஞ்சமாக ஊற்ற அந்த டம்ப்ளரில் வர்ண ஜாலம் நிகழ ஆரம்பிக்கும் ! இப்போது அதை எடுத்து கைகளில் தரும்போதும் நாம் அந்த கலரிலேயே மூழ்கி இருப்போம் இல்லையா !!


இந்த சர்பத் முதல் வாய் எடுத்து வைக்கும்போதே அந்த வித்யாசமான ருசி தெரிந்து விடுகிறது. ஒரு வாய் எலுமிச்சை சாறு எடுத்துக்கொண்டு, பின்னர் ஏதேனும் ஸ்வீட் சாப்பிடுங்கள்..... அதிகம் புளிப்பு, அதிகம் இனிப்பு என்று உணர முடியும். அதுவே இங்கும் நிகழ்கிறது, புளிப்பும் இனிப்பும் அந்த சில்லென்ற சுவையினில் உள்ளே செல்ல செல்ல வயிற்றில் அந்த குளுமையை உணர முடியும். இதில் குளிர்ந்த பால் கலந்து கொடுப்பது என்பது பால் சர்பத் இங்கு ! கண்டிப்பாக இங்கே சென்று சாப்பிட்டு பாருங்கள்...... உங்களுக்கே தெரியும் அந்த தெய்வீக ருசி !!



Labels : Suresh, Kadalpayanangal, arusuvai, samas, saappattu puraanam, சாப்பாட்டு புராணம், tanjore, thanjavur, kunangudi dasan, sarbath, gunangudi dasan, paal sarbath, milk sarbath, amazing taste

7 comments:

  1. /// அடம் பிடிக்கும் குழந்தை போல... /// அட...!

    முடிவில் குழந்தை ஏன் கோபமாக யோசிக்கிறது...?

    ReplyDelete
  2. ஏசி ரூமில் உட்கார்ந்து இந்த பதிவை படித்தாலும்.... நாக்கு சர்பத் வேணும் என்று அடம்பிடிக்கிறது...

    ReplyDelete
  3. அருமை அருமை பதிவு செய்கிறேன்!!

    ReplyDelete
  4. அழகான படங்கள். அருமையான பதிவு.

    ReplyDelete
  5. தஞ்சைக்கு எப்பொழுது வந்தீர்கள்
    தெரியாமல் போய்விட்டதே
    தெரிந்திருந்தால், சந்தித்திருப்பேனே
    அடுத்த முறை தஞ்சைக்கு வரும் பொழுது
    தெரியப் படுத்துங்கள்
    சந்திப்போம்
    தம +1

    ReplyDelete
  6. Suresh sir back to form.....

    ReplyDelete