என்னோடு இதுவரை சேர்ந்து பயணித்தவர்களுக்கு தெரியும் நான் எழுதும் விஷயங்களிலும், தேடலிலும் எந்த முனைக்கும் செல்வேன் என்று. இந்த பகுதி மிகவும் புதிது, இதன் தேடலின் ஆழமும் புதிது ! இந்த வருடத்தின் புதிய பகுதிகள் என்று இதை அறிமுகபடுத்தி இருந்தேன், அப்போதே நிறைய பேர் என்ன என்னவென்று விசாரித்தனர்....... அதுவே, "உணவு வேட்டை", பொதுவாக வேட்டை என்று சொல்லும்போது ஒரு உணவு குறிவைக்கப்பட்டு இருக்கும், அதை மெல்ல மெல்ல நெருங்கி, அதை நோக்கி பின்னர் பாய்ச்சலாக பாய்ந்து, உணவை கவ்வி எடுத்துக்கொண்டு பின்னர் மெதுவாக மிக மெதுவாக ரசித்து உண்பதை வேட்டை என்போம்...... அதுவே இங்கும் நடந்தது, ஒரு உணவு அதை தேடிய நெடிய பயணம் என்று இருக்கும். இதன் தேடல் மிகவும் அதிகம் என்பதால் ஒரு அல்லது இரு வருடங்களுக்கு ஒரு தொடர் பதிவு என்பது போல இருக்கும். அது சரி, என்ன உணவு என்கிறீர்களா..... டீ !! என்ன டீயா, அதை பற்றி எழுத என்ன இருக்கு என்பவர்களுக்கு....... நிறைய இருக்கு பாஸ் !!
ஒன்றரை வருடங்களுக்கு முன்னர், நான் ஊர் ஸ்பெஷல் பகுதிக்கு அலைந்து திரிந்து விஷயங்களை சேகரிக்கும் விதத்தை பார்த்த நண்பர் ஒருவர், நாங்கள் டீ சாப்பிட்டு கொண்டு இருக்கும்போது, போட்டோ எடுக்கலையா என்றார். நான் குழப்பத்துடன் பார்க்க, எதை சாப்பிட்டாலும் போட்டோ எடுப்பியே அதனால கேட்டேன்..... அது சரி, டீயை பற்றி என்ன எழுத முடியும், அதுல டீ தூள், பால் மட்டும்தானே இருக்கு என்றார். நான் அவரை நிமிர்ந்து பார்த்து...... ஏன் எழுத முடியாது, எதுவுமே சின்ன விஷயம் கிடையாது. ஒரு தேடல் இருந்தால், அந்த விஷயத்தை பற்றி பத்து நாளைக்கு கூட எழுதலாம் என்றேன். அவர் என்னை நிமிர்ந்து பார்த்து, அப்படியா, இந்த டீ பற்றி என்னவெல்லாம் எழுத முடியும் என்று கேட்க, நான் அதை நாளைக்கு சொல்றேன் என்றேன் !!
அடுத்த நாள் அவரை பார்க்குபோது..... மீண்டும் ஒரு டீ கொடுத்து, எதை பற்றி எழுத போறேன் அப்படின்னு சொல்றேன் கேட்டுக்க என்றேன் !
டீ சாப்பிடும் நேரங்கள் :
அதிகாலை, மதியம், மாலை, நைட், நடு நிசி என்று இருக்கிறது. ஒவ்வொரு பொழுதும் ஒவ்வொரு விதமான அனுபவத்தை கொடுக்கும். உதாரணமாக அதிகாலை சூரிய உதயத்தை பார்த்துக்கொண்டே குடிக்கும்போது அந்த அமைதி உள்ளுக்குள் டீயோடு இறங்கும், நடு நிசியில் குடிக்கும்போது தூக்கம் தொலைக்க அருந்துவோம் அதன் சுவையே வேறு என்றேன்.
டீ கோப்பைகள் :
என்றாவது நாம் டீ சாப்பிடும் கோப்பைகளை உற்று பார்த்து இருக்கிறோமா..... கிளாஸ், பேப்பர் கப், பிளாஸ்டிக் கப், எவர்சில்வர் டம்பளர், மண் பானை, கப் மற்றும் சாசர், பிராஸ் கப், டபரா செட் என்று நான் அடுக்கிகொண்டே போக எனது நண்பரின் முகம் ஆச்சர்யத்தை தொட்டுக்கொண்டு இருந்தது. ஒவ்வொரு கோப்பைக்கும் ஒரு சுவை உண்டா இல்லையா என்றேன்..... அவரது தலை தானாக ஆடியது.
இப்படி டீ கடைகள், எத்தனை வகையான டீ, டீ சாப்பிடும்போது கொறிக்கும் ஸ்நாக்ஸ், டீ சாப்பிடும் காலங்கள் (வெயில், மழை), டீ சாப்பிடும்போது நாம் அணியும் உடைகள், டீ சாப்பிடும்போது நமது கூட இருக்கும் நண்பர்கள் / உறவினர்கள், டீ தயாரிக்கும் முறை, ஒரு ரூபாய் டீயில் இருந்து எவ்வளவு வரை இருக்கிறது, வித்தியாசமான முறையில் டீ சாப்பிடும் இடங்கள் என்று இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். எனது நண்பருக்கு மயக்கம் வராத குறைதான் !
இப்படி நான் தேடி தேடி டீ சாப்பிட ஆரம்பித்து இன்றுடன் சுமார் ஒன்றரை வருடங்களுக்கும் மேல் ஆக போகிறது. எத்தனை விதமான அனுபவங்கள் தெரியுமா ?! சாதாரண டீதானே என்று இல்லாமல் அதன் ஆழம் வரை சென்று அதை உங்களுடன் பகிர போகிறேன். இது நாம் சாப்பிடும் உணவை பற்றி ஒரு ஆச்சர்யத்தை கண்டிப்பாக வரவழைக்கும் ! அடுத்த வாரம் முதல் வாருங்களேன் ஒரு பயணம்.... மிகவும் வித்யாசமான, ஆழமான பயணம். அதுவரை..... மாஸ்டர்..... சூடா ஒரு டீ !!
Labels : Food hunting, food hunt, unavu vettai, about tea, types of tea, flavours of tea, amazing information on food, master one tea
முன்னுரை மட்டும்தானா?
ReplyDeleteஎதுவுமே சின்ன விஷயம் கிடையாது என்பது சரி தான்... அசத்துங்கோ...
ReplyDeleteஆஹா..! தேநீர் பற்றிய தொடரை ஆரம்பித்துவிட்டீர்கள் போல, நீங்கள் அந்த தகவல்களை பற்றி சொன்ன போதே வியப்பின் உச்சிக்கு சென்றவன் நான். தொடரில் இன்னும் விரிவாக சொல்லும் போது மேலும் சுவாரசியம் கூடும். மெயின் பிச்சருக்காக அவளோடு காத்திருக்கிறேன்.
ReplyDeleteமன்னிக்கவும். அவளோடு அல்ல ஆவலோடு என்று வந்திருக்க வேண்டும்.
ReplyDeleteஆஹா டீ பற்றிய பதிவுகளா? உங்களுக்கு சில டிப்ஸ் தரலாம்! :) தனி மடல் அனுப்பவா? எனது பக்கத்தில் வெளியிட நினைத்திருந்தேன்.
ReplyDeleteகாத்திருக்கிறோம்
ReplyDeleteவேட்டை....வேட்டை......வேட்டை......உணவு வேட்டைக்காக காத்திருக்கிறோம் ! ! !
ReplyDeleteதேநீர் வேட்டைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்..
ReplyDeleteWaiting eagerly ...
ReplyDeleteWaiting eagerly ...
ReplyDeleteWaiting
ReplyDeleteGreat... We are waiting to taste..
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteவேட்டையாடு விளையாடு.. தேடலுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்--
மாலையில் டீ சாப்பிடுவது சுகம். காலையில் காப்பி சாப்பிடுவது சுகம்.
ReplyDeleteகரெக்ட் சீனியர்... டீ சாப்பிடாத என்ஜினீயர் இருப்பானா என்ன??? பெட்ரோல் பங்க்'இல் வேலை பார்த்த வருடங்களில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் டீ சாப்பிடுவோம்...
ReplyDeleteஇப்பவும், ஊரில் இருக்கும் போது நானும் அப்பாவும் காலை பேப்பர் வாங்கி, கடையில் டீ சாப்பிட்டுவிட்டு வருவோம்... அது எங்களுக்கான நேரம்...
டீ வாழ்க...
Tea order panni romba neramachu, boss. Illa naalachu boss.....
ReplyDelete