Tuesday, April 28, 2015

ஊர் ஸ்பெஷல் - புதுக்கோட்டை முட்டை மாஸ் !!

கடந்த சில வாரங்களாக வேலை பளு  என்பதால் இந்த பக்கம் எட்டிக்கூட பார்க்க நேரம் இல்லை, போனிலும் மெயில் மூலமும் விசாரிப்புகள்..... நன்றிகள் பல ! இனி வாரம் சில பதிவுகளையாவது போடுகிறேன்....அதில் இந்த வாரம் புதுக்கோட்டை முட்டை மாஸ் !! நான் புதுக்கோட்டையின் எல்லை பகுதியில்தான் இருந்து வந்தேன், அங்கிருந்து திருச்சி பக்கம் என்பதால் புதுக்கோட்டை அவ்வளவாக சென்றதில்லை. இதனால், அங்கு என்ன பேமஸ் என்ற கேள்விக்கு முளிப்பதையே பதிலாக தந்து வந்திருக்கிறேன், ஆனால் இந்த முறை ஊர் ஸ்பெஷல் பகுதிக்கு சென்றபோது அங்கு முட்டை மாஸ் பேமஸ் என்பதும் அது புதுக்கோட்டையின் நாக்குகளை அடிமைபடுத்தி வைத்து இருப்பதும் தெரிந்து நானும் சுவைத்தேன்...... சும்மா சொல்லக்கூடாது சுவை பின்னி எடுக்கிறது !


புதுகோட்டையில் எங்கு முட்டை மாஸ் சாப்பிடலாம் என்று தேடிபார்த்தால், அதை இந்த சமூகத்துக்கு அறிமுகம் செய்தது முத்துபிள்ளை கேண்டீன் என்று தெரிந்தது. அதை தேடி செல்ல அது தெற்கு வீதியில் இருந்தது, அதன் எதிரில் மாநகராட்சி கட்டிடம். மதிய வெயிலில் உள்ளே சென்று உட்கார, நல்ல காற்றோட்டமான இடத்தில் பெரிதாக இருந்த ஹோடேலில் ஒரு இடத்தை தேடி உட்கார்ந்தோம். என்ன சொல்ல என்று சுற்றி பார்க்கும்போதே எல்லோரும் ஆர்டர் செய்யும்போது முட்டை மாஸ் என்று சொல்ல எங்களுக்கும் ஒன்னு என்றோம். அதனோடு பரோட்டாவும், குஸ்காவும் சொல்ல பக்கத்து இலையில் இப்போது பார்வை செல்ல ஆரம்பித்தது.


                                           

பரோட்டவிர்க்கு சால்னா என்பது அமிர்தத்துக்கு சமானம், அதிலும் சால்னா நன்றாக இருந்துவிட்டால் இரண்டு பரோட்டவிர்க்கு ஒரு வாளி சால்னா சாப்பிடும் ஆட்கள் நம்மவர்கள். இன்னும் சிலர் அதை தோசை, ஆம்பலேட், ஹாப் பாயில் என்று சால்னா ஊற்றி சாப்பிடுவார்கள். அதையே அவித்த முட்டையில் செய்தால் ?! ஒரு அவித்த முட்டையை எடுத்து சிறு சிறு துண்டுகளாக செய்து அதை கல்லில் கொஞ்சம் வெங்காயம் போட்டு வதக்கி கொண்டே அதில் கொஞ்சம் சால்னாவை ஊற்ற இப்போது வெள்ளை முட்டை இங்கே பொன்னிறமாக மாறுகிறது. இப்போது அதை பிரட்டி பிரட்டி போட அந்த மஞ்சள் கருவும் சால்னாவோடு சேர ஒரு சுவையும், அந்த வாசனையும் என்று அமோகம் ! அதை கொண்டு வந்து எங்களது முன்னே வைக்க நாங்கள் மூக்கால் நுகர்ந்த வேகத்தை பார்த்தால் தோசை கல்லே பறந்து வரும் போன்று இருந்ததால் எங்களை ஒரு மாதிரி பார்த்தார். அப்போது, எங்களது பக்கத்து டேபிளில் வேறு விதமான முட்டையை வைக்க அது என்ன என்று கேட்க அது வேறு விதமான முட்டை மாஸ் என்றார்...... முட்டை மாஸ் என்பதில் நான்கு வகையாம்..... நார்மல் மாஸ், பொடி மாஸ், கோல்டன் மாஸ், பெப்பர் மாஸ் என்று, அப்போ மற்ற எல்லாத்தையும் கூட கொண்டு வாங்க என்று சொல்ல, அவர் இப்போது சந்தேகமாக பார்க்க ஆரம்பித்தார்...... பாஸ், நாங்க சாப்பிடுவோம் கொண்டு வாங்க என்று சொல்லிவிட்டு இப்போது நார்மல் மாசை காதலோடு பார்க்க ஆரம்பித்தோம் !!


புதுக்கோட்டை முட்டை மாஸ்..... பொடி  மாஸ் !
பரோட்டாவை ஒரு சிறு பீஸாக பியித்து அந்த முட்டை மாஸை கொஞ்சமாக எடுத்து வாயில் வைக்க, இளையராஜா பின்னணி இசையில் தனனம்தனனும் என்று பாடுவது மைண்ட் வாயிசில் கேட்டது. இப்போது வாயில் அந்த முட்டை பீசும், சால்னாவும் ஒரு இணை பிரியாத காதலர்கள் போல சுற்றி வர ஆரம்பிக்க அதில் பரோட்டா இது தாங்காதுடா சாமி என்று உள்ளே ஓடிவிட இப்போது முட்டை மாஸும் நானும் மட்டுமே.... வாயில் ஒரு வாட்டர் பால்ஸ் உருவாகி மெது மெதுவாக இறங்கியது. உண்மையிலேயே இதுவரை அவித்த முட்டையில் இவ்வளவு ருசியாக ஒரு டிஷ் செய்ய முடியும் என்பது தெரியாமல் போய் விட்டதே !!


பெப்பர் மாஸ் மற்றும் கோல்டன் மாஸ் !
புதுகோட்டை ஒரிஜினல் முட்டை மாஸ் !!
அடுத்து வந்த பொடி மாஸ், பெப்பர் மாஸ் மற்றும் கோல்டன் மாஸ் என்று எல்லாமுமே பரோட்டாவை சைடு டிஷ் ஆக்கிவிட்டது எனலாம். பெயர்க்கு ஏற்றார் போல பெப்பர் தூக்கலாக பெப்பர் மாசும், முட்டையில் தக்காளி போட்டு வேறு விதமாக வெட்டி கோல்டன் மாஸ் என்பதும், முட்டையை பொடி பொடியாக வெட்டி அதில் குழம்பு ஊற்றி வெங்காயம் போட்டு பிரட்டிய பொடி மாஸ் என்பதும் வெறும் முட்டையாக இருந்தது ஒரு சுவையான பல வகையான முட்டை மாஸ் ஆகி நம்மை சிறைபிடிக்கிறது என்பது நிஜமே. அடுத்த முறை புதுக்கோட்டை செல்பவர்கள் கண்டிப்பாக புதுக்கோட்டையில் முட்டை மாஸ் சாப்பிட்டு விட்டு செல்லுங்கள் !


Labels : Suresh, Kadalpayanangal, arusuvai, oorum rusiyum, oor special, district special, district taste, pudukkottai, muttai mass, egg mass, famous dish, tasty

14 comments:

 1. Slurpppp.....antha waterfalls padikira engaluke vanthuchu....

  ReplyDelete
 2. நன்று. தினமும் தங்களது வலைப்பூவை திறந்து பார்காத நாளே இல்லை. இன்றாவது தலைவர் பதிவு போட்டிருப்பாரா என பார்த்துகொள்வேன்

  ReplyDelete
 3. முட்டை மாஸ் போட்டு அதன் செய்முறையும் போட்டு பொருத்தமாக படமும் போட்டு முட்டையை மாஸ் ஹீரோ ஆக்கிவிட்டீர்கள்பா.. அருமை,,, நானும் வீட்டில் செய்து என் பிள்ளைகளுக்கு தர முயல்கிறேன்... என்ன ஒன்னு சால்னா சுவையாய் செய்வதில் தான் முட்டை மாஸ் ரெசிப்பியின் ரகசியமே அடங்கி இருக்கிறதுன்னு நினைக்கிறேன்...

  ReplyDelete
 4. மைதா மாவில் செய்த பரோட்டா உடம்புக்கு கெடுதல் என்று
  சொல்கிறார்களே

  ReplyDelete
 5. புதுக்கோட்டை முத்துபிள்ளை கடையில்
  பலமுறை சாப்பிட்டிருக்கிறேன்
  நன்றி நண்பரே
  தம 1

  ReplyDelete
 6. எங்கள் ஊரின் பிரபலங்களில் ஒன்றான முட்டை மாஸ் பற்றி எழுதியதுபார்த்து மகிழ்ந்தேன். அருமை நன்றி நண்பரே. படங்களில் சிலைஸ் இன்னும் ஷார்ப்பாக இருப்பதாகப் பார்த்துப் போட்டிருக்கலாம். பச்சை முட்டை மாஸ், மற்றும் வெள்ளைக்கரு மாஸ் (கொலஸ்ட்ரால் காரணமாக மஞ்சள் கரு நீக்கப்பட்டது) ஆகிய வகைகளும் உண்டு. அடுத்த முறை வரும்போது சொல்லுங்க, அந்த சில வகைகளை அறிமுகப்படுத்தி வைக்கிறேன்.

  ReplyDelete
 7. சூப்பர்........ நிச்சயம் ட்ரை பண்ணனும்.....

  ReplyDelete
 8. வணக்கம்
  இந்தியா வருகிறோம் நிச்சயம் புதுக்கோட்டைக்கு பயணம் உள்ளது சாப்பிட்டு பார்க்கிறோம்.. தகவலுக்கு நன்றி.
  தங்களின் பதிவு இந்தியா வருபவருக்கு ஒரு வழிகாட்டி..
  எனது பக்கம் கவிதையாக வாருங்கள்.
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஈழம்...: ...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 9. அன்றாடம் பயன்படுத்தும் முட்டையில் இத்தனை ருசியா?

  ReplyDelete
 10. புதுக்கோட்டை முட்டை மாஸ்....

  சாப்பிட்டு எஞ்சாய் பண்ணுங்க பாஸ்.....

  ReplyDelete
 11. முத்துப்பிள்ளை காண்டீன் வடக்கு ராஜவீதியில் இருக்கிறது. எதிரே டவுன் ஹால்.முனிசிபல் ஆபிஸ் தெற்கு ராஜவீதியில் . மேப் OK. பழனியப்பா கார்னர் என்று கேட்டு வர வேண்டும். (ஒரு காலத்தில் பழனியப்பா தியேட்டர் இருந்ததால் அந்தப் பெயர்)

  ReplyDelete
 12. ஊர் ஸ்பெஷல் - புதுக்கோட்டை முட்டை மாஸ் !! - அற்புதம். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி கடல் பயணங்கள்

  ReplyDelete