Wednesday, June 24, 2015

ஊர் ஸ்பெஷல் - விருதுநகர் எண்ணை பரோட்டா !!

விருதுநகர்.... இந்த வார்த்தையை கேட்டாலே காமராஜர் பெயர்தான் எனக்கு நினைவுக்கு வரும், ஆனால் பலருக்கும் நினைவுக்கு வருவது என்பது எண்ணை பரோட்டா !! சிறு வயதில் இருந்து தோசை என்பது குழந்தைகளுக்கு பிரியம் என்றாலும், கொஞ்சம் விவரம் வந்துவிட்டால் அவர்களுக்கு பரோட்டாதான் மிகவும் பிடிக்க ஆரம்பிக்கும். எப்போதுமே பரோட்டா என்றால் அந்த மிருவான தன்மைதான் நினைவுக்கு வரும், அதில் சால்னா போட்டு ஊற வைத்து அடிப்பது என்பது பலருக்கும் பரம்பரை பழக்கம், இதில் நான் காலேஜ் படிக்கும்போது முதல் முறையாக எனது நண்பன் ஒருவன் பரோட்டா சாப்பிடலாம் என்று அழைத்து போக, அங்கே நுழையும்போதே ஒரு குழிவான தோசை கல்லில் வடை போன்று போட்டுக்கொண்டு இருந்தார்கள், உள்ளே சென்று உட்கார்ந்து ரெண்டு பரோட்டா என்று சொல்ல எனக்கு நான் பார்த்த வடையை வைத்தார்கள், அதன் பின்னர் அதற்க்கு சட்னி வைக்காமல் சால்னா ஊற்றும்போது வேண்டாம் என்று சொல்ல, எனது நண்பன்தான் அதை ஊற வைத்து சாப்பிடுவது எப்படி என்று பாடம் எடுத்தான். முதன் முறையாக பரோட்டா இப்படியும் இருக்கும் என்று தெரிந்த நாள் அது...... அன்று முதல் அந்த எண்ணை பரோட்டா கிடைக்கும்போது எல்லாம் கொண்டாட்டம்தான் !!விருதுநகர் (Virudhunagar), தமிழ்நாட்டிலுள்ள விருதுநகர் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். விருதுநகரின் பழைய பெயர் விருதுப்பட்டி ஆகும். இங்கு உணவுப் பொருட்கள் வியாபாரமும், மலைத்தோட்ட விளைப்பொருட்கள் வியாபாரமும் பெரிய அளவில் நடைபெறுகின்றன. உயர்ரக கருங்கண்ணிப் பருத்தி பல ஊர் ஆலைகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதியாகிறது. நல்லெண்ணெய்,மிளகாய் வற்றல் முதலியனவும் இங்கிருந்து ஏற்றுமதியாகின்றன. இங்கிருந்து தொடர்வண்டி மூலம் வெளியிடங்களுக்கு ஏராளமான சரக்குகள் அனுப்பப்படுவதால், இங்குள்ள தொடர் வண்டி நிலையத்தில் மிக நீளமான நடைமேடையும் சரக்கு ஏற்ற வசதியாக தனி வசதியுடன் கூடிய பகுதியும் அமைக்கப்பட்டுள்ளன. இதன் சிறப்பு என்பது பெருந்தலைவர் காமராஜர் பிறந்த ஊர் மற்றும் "வியாபார நகரம்" என்று சொல்லப்படும் இந்த ஊரில் ரிலிருந்து நல்லெண்ணெய், பருப்பு, மல்லி போன்ற பொருட்களும் ஏற்றுமதி ஆகின்றன.பலசரக்கு வணிகத்திற்கு விலை நிர்ணயிக்கும் ஊராக இருக்கிறது. இதை எல்லாம் விட உணவு பிரியர்களின் எண்ணை புரோட்டா எனும் உணவுக்கு இந்த ஊர் சிறப்பு பெற்றது.  
பரோட்டா (Parotta or Paratha) என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது பாக்கிசுத்தான்,வங்காளதேசம்நேபாளம்இந்தியாஇலங்கைமலேசியாசிங்கப்பூர்இந்தோனேசியா போன்ற நாடுகளில் கிடைக்கிறது. இதனை இலங்கையில் பராட்டா என்றும், இந்தோனேசியாவில் ப்ராத்தா என்றும் அழைக்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது. சிலோன் பரோட்டா, காயின் பரோட்டா, மலபார் பரோட்டா, வீச்சு பரோட்டா, மதுரை பரோட்டா என்ற பல வகை இருந்தாலும், இந்த பொரிச்ச எண்ணை பரோட்டாவிற்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு !!


விருதுநகரில் எண்ணை பரோட்டா சாப்பிட வேண்டும் என்று யாரை கேட்டாலும் கை காட்டுவது என்பது பர்மா கடையைத்தான். முன்பு சிறிய கடையாக இருந்தது இன்று பள பளவென்று பெரிய கடையாக மாற்றி இருக்கின்றார்கள், உள்ளே நுழைந்தால் ஒரு சினிமா ஹால் உள்ளே நுழைந்தது போன்று ஒரு பீலிங். 
உட்கார வைத்து இலை போட்டு என்ன வேண்டும் என்று ஒரு மெனு கார்ட் கொடுக்கின்றனர். நடப்பது, ஊர்வது, பறப்பது, நெளிவது, நீந்துவது என்று எல்லாமே ஒரு மெனு கார்டில் அடக்கமாகி இருக்கிறது. நான் ரெண்டு எண்ணை பரோட்டா என்று சொல்லிவிட்டு அடுத்து என்ன சொல்வது என்று மெனு கார்டை பார்க்கும் முன்பே இன்னைக்கு இது ஸ்பெஷல் என்று ஒரு லிஸ்ட் சொல்லி அதில் இருந்து தேர்ந்து எடுக்க சொல்வது கொஞ்சம் கடுப்பை தருகிறது, மீண்டும் அவரை ஒதுக்கிவிட்டு மெனு கார்டை பார்க்கும்போது அவர் விடாமல் அது கொண்டு வரட்டுமா, இது கொண்டு வரட்டுமா என்பது எந்த வகையில் வரும் என்று தெரியவில்லை. முடிவில் ஒரு சிக்கன் மசாலா, மட்டன் சுக்கா, ஆம்பலேட் எல்லாம் சொல்லிவிட்டு சுற்றிலும் பார்க்க ஆரம்பித்தோம்.... நல்ல பெரிய ஹோட்டல், இதே போன்று பை-பாஸ் பக்கத்தில் இருக்கிறது என்றும், ஆனாலும் இந்த கடை இருந்த இடம்தான் முதலில் ஆரம்பித்தது என்றனர். முடிவில் எங்களது இலையில் அந்த பொன்னிறமான அந்த எண்ணை பரோட்டா வந்து இறங்கியது.பரோட்டா சாப்பிடுவது என்பது ஒரு தெய்வானுபவம் என்பது அதை ருசித்து சாப்பிட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். அதுவும் இந்த எண்ணை பரோட்டா சாப்பிடுவது என்பதற்கு ஒரு தனி பக்குவம் வேண்டும் ! முதலில் அந்த பரோட்டாவை பார்க்கும்போது மிகவும் கடினமாக இருக்கிறதே என்று தோன்றும், ஆனால் நல்ல நாட்டு கோழியை நல்லெண்ணெய் விட்டு, கையால் அரைத்த மசாலாவை போட்டு இந்த சால்னா செய்து அதில் எண்ணை மிதக்க மிதக்க கொண்டு வந்து, நன்கு கலக்கி அந்த பரோட்டா மீது ஊற்றும்போது, குழந்தையின் சிரிப்புக்கு மயங்குவது போல அந்த எண்ணை பரோட்டா அப்படியே இளகி போவதை காணலாம். முதன் முதலில் எடுத்து சாப்பிடுவது கொஞ்சம் கரக் மொறுக் என்று இருந்தாலும் அடுத்து சிறிது நேரத்தில் அது நன்கு ஊறியவுடன் அந்த  சால்னாவின் சுவையை அப்படியே கொண்டு இருக்கும். இப்போது ஒவ்வொரு வாய்க்கும் மிக மிருதுவான பரோட்டா ஆகி இருக்கும். மீண்டும் அந்த மேஜிக் பார்க்க ஆசைப்பட்டு எண்ணை பரோட்டாவை கண்டிப்பாக வாங்கி சாப்பிடுவீர்கள்.சிலருக்கு அந்த எண்ணை பரோட்டாவை சாப்பிடும்போது அந்த எண்ணை ஒற்றுக்கொள்லாமல் போகலாம். எண்ணையில் ஊறியதால் அப்படி இருப்பதால், நாங்கள் அடுத்து தோசை மற்றும் பொரிச்ச நாட்டுக்கோழி வாங்கி சாப்பிட்டோம். நான் இந்த எண்ணை பரோட்டா என்பதை பல முறை, பல கடைகளில் வெவ்வேறு தருணங்களில் சாப்பிட்டு பார்த்துவிட்டு எழுதுகிறேன்.... அது வரையில், பர்மா கடையில் கிடைக்கும் பரோட்டாவில் எண்ணை கொஞ்சம் அதிகமே, அதுவே நீங்கள் அங்கு இருக்கும் மற்ற ரோட்டர கடைகளிலும், பஸ் ஸ்டான்ட் பக்கத்தில் இருக்கும் கடைகளில் கிடைப்பதை சாப்பிட்டால் அப்படி தெரியாது. ஆனாலும், பல மக்களின் சாய்ஸ் என்பது இந்த பர்மா கடை மட்டுமே !!இதை சாப்பிட மக்கள் பக்கத்து ஊரில் இருந்து எல்லாம் வருகிறார்கள், சாயங்காலம் ஆனால் இங்கு கூட்டம் அலை மோதுகிறது. யாரிடம் கேட்டாலும் இந்த எண்ணை பரோட்டா கதையை பற்றி பல விதமாக சொன்னாலும், ஆரம்பத்தை கண்டு பிடிக்க முடியவில்லை.... ஆனாலும் என்ன, சுவை ரிஷி மூலம் அறியாது அல்லவா !!

Labels : Suresh, Kadalpayanangal, oor special, district special, tamil nadu, food tour, viruthupatti, virudhunagar, oil parotta, prata, ennai parotta, seepu parotta, famous parotta, amazing taste, unique

8 comments:

 1. அட.டகாசமான பதிவு பாஸ்!

  ReplyDelete
 2. குழந்தையின் சிரிப்புக்கு மயங்குவது போல... அடடா...! என்ன வர்ணனை...

  எண்ணெய்...! ஐயோ...!

  ReplyDelete
 3. எண்ணை பரோட்டா சாப்பிட்டுவிட்டு அப்படியே "தெப்பம் அருகே கணேசர் மார்க்கில் மசாலா சோடாவை" குடித்தால் தான் பரோட்டா உண்ட திருப்தி (எவ்வ்வ் ).

  ReplyDelete
 4. பரோட்டா பிடிக்காதவர்களே இல்லை போலிருக்கிறது! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 5. பரொட்டாவை விட உங்கள் வர்ணனை அருமை.நான் சைவமாக மாறியதால் இப்போது இவற்றை சாப்பிடுவதில்லை

  ReplyDelete
 6. கரண்டி ஆம்லெட் விருதுநகரின் இன்னொரு சிறப்பாகும்

  ReplyDelete
 7. யேமன் எனும் அரபு தேசத்திலிருந்து இது முஸ்லீம்கள் மூலம் இலங்கைக்கு வந்தது.இப்போ பரோட்டா 30 வருடங்களின் முன் இதன் பெயா் வீச்சுரொட்டி. யேமனில் இப்போ பரோட்டாவை விட மு்டடபாத் என்பது தான் பிரசித்தம்.

  ReplyDelete
 8. Children like to eat protta often.It is also called as Rotti in some places.

  ReplyDelete