Monday, June 8, 2015

அறுசுவை - பீடா.... பல வகை !!

பீடா..... நான் எட்டாவது படிக்கும்போது திருச்சி பஸ் ஸ்டான்ட் பக்கத்தில் இருந்த காஞ்சனா ஹோடேலில் அம்மாவுக்கும், எனக்கும் பிரியாணி வாங்கி கொடுத்துவிட்டு, வெளியே ஏப்பத்துடன் வந்து அப்பா ஒரு ஸ்வீட் பீடா வாங்கினார். அதுவரையில் நான் எத்தனையோ முறை இது போன்ற கடைகளை பார்த்து இருந்தாலும், முதல் முறையாக என்ன அது என்று நோக்கினேன். நான் பார்ப்பதை அறிந்து கொஞ்சமாக பியித்து தந்தார்..... ம்ம்ம்ம்ம் ஒரு வெற்றிலை இவ்வளவு சுவையாக இருக்குமா என்ன ! பின்னர் பத்தாவது படிக்கும் போது, ஒரு முறை நண்பர்கள் ( மாப்பிள்ளை பெஞ்ச் நாங்கள் !) எல்லோரும் வெளியில் சாப்பிட்டு விட்டு வெளியே வரும்போது எங்களது செட்டில் பிஞ்சிலேயே பழுத்த ஒருவன் பீடா வாங்கினான், உனக்கும் வேண்டுமா என்றபோது ஒரு ஸ்வீட் பீடா என்றேன்..... ஏண்டா நீயெல்லாம் இன்னும் வயசுக்கு வரவே இல்லையா என்பது போல பார்த்து, நான் இன்னொரு பீடா சொல்றேன் ட்ரை பண்ணு என்று சொல்லி 120 ஒன்று என்றான். நான் அதை வாயில் போட போகும்போது மற்ற நண்பர்களும் வயசுக்கு வரவேண்டும் என்று என்னிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பியித்து, கடைசியில் எனக்கு மிஞ்சியது என்பது தக்கனூண்டுதான். அதை சாப்பிட்டதில் இருந்து தலை சுற்றியது, ஒரு வழியாக வகுப்பிற்கு வந்து வாட்டர் பாட்டில் எடுத்து மூஞ்சியை பல முறை அலம்பி பெஞ்சில் சென்று உட்கார்ந்து இருந்தோம்...... வகுப்பில் அன்று இங்கிலீஷ் டீச்சர் வந்து ஏன் கணக்கு பாடம் எடுத்தார் என்பது இன்று வரை எனக்கு புரியாத புதிர் !! அன்று மட்டும் என்னை பார்த்து இருந்தால், நீங்கள் மந்திரிச்சு விட்ட கோழியை இதுவரை பார்த்ததில்லை என்றால் என்னை பார்த்து தெரிந்து கொண்டு இருக்கலாம். அப்படி வாழ்க்கையில் பீடா என்பதில் ஸ்வீட் பீடா, 120, 320, 420 என்று மட்டுமே எண்ணி இருந்த என்னை அதிலும் வெரைட்டி உண்டு என்று பொடனியில் தட்டியது இந்த கடை !!



அலுவல் விஷயமாக ஹைதராபாத் பயணம் செய்யும்போது எல்லாம், வழியில் நிறைய இடங்களில் பான் ஷாப் என்று நிறைய உண்டு. பெங்களுரிலும் சில இடங்களில் ஹைதராபாத்தி பான் என்று உண்பது உண்டு. அப்படி என்ன அதில் இருக்கிறது என்று தோன்றியது, அதை பற்றி நண்பரிடம் விசாரித்ததில் மீண்டும் நான் வயசுக்கு வரவில்லையோ என்பது போலவே பார்த்து, அதை பற்றி நீ தெரிந்து கொள்ள டிம்மி பான் பேலஸ் சென்று வா என்றார். சிகந்திராபாத்தில் PG  ரோடு என்னும் இடத்தில் (கூகிள் செய்தால் வரலாறே கிடைக்கும்) இருக்கிறது இந்த கடை, சிறிய கடைதான் உள்ளே நுழைந்தால் கலர் கலராக, ரகம் ரகமாக பீடா வைத்து இருக்கின்றனர் !


நம்மூரில் எல்லாம் ஒரு சிறிய கடை இருக்கும், அங்கே சென்று ஸ்வீட் பீடா போட்டாலே நம்மை ஏதோ டாஸ்மாக் சென்று வந்தது மாதிரி பார்ப்பார்கள். ஸ்வீட் பீடா என்று கேட்டவுடன் அவரது முன்னால் இருக்கும் டப்பாவில் இருந்து ஒவ்வொன்றாய் எடுத்து போட ஆரம்பிப்பார், அது என்னது என்று தெரியுமா........ தெரியாதவர்கள் இந்த வீடியோ பாருங்கள், இது ஸ்வீட் பீடாவுக்கு மட்டும்தான், வேறு வகையை எல்லாம் சொன்னால் இந்த பதிவுகள் போதாது.
குறிப்பு : இது டிம்மி பான் பேலஸ் கடை அல்ல, பீடா செய்யும் குறிப்பே சுவாரசியத்திற்கு !!


உள்ளே நுழைந்து என்ன பீடா சாப்பிடலாம் என்று யோசித்துக்கொண்டு இருக்கும்போதே ஒரு கண்ணாடி பெட்டியுனுள் விதம் விதமாக வைத்து இருந்தனர், நானெல்லாம் பீடா என்பதை ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு என்று பார்த்துவிட்டு இத்தனை வகையா, எதை எடுப்பது என்று தெரியாமல் முழிக்க, அவரோ ஒரு வேளை இவருக்கு ஸ்பெஷல் ஜர்தா பீடா வேண்டும் போல என்று சார் உங்களுக்கு வேண்டிய பீடா இவர் தருவார் என்றார்..... அவர் ஏதோ உடுப்பி ஹோடேலில் மெனு வாசிப்பதை போல கட கடவென சொல்லிக்கொண்டே போக எனக்கு இங்கே தலையை சுற்றியது, முடிவில் அவ்வளவு மூச்சு வாங்கி சொல்லியவரிடம் ஒரு ஸ்வீட் பீடா என்று மட்டும் சொன்னேன், என்னை முறைத்து விட்டு பட படவென இப்போது திட்ட ஆரம்பித்தார், அப்புறம்தான் தெரிந்தது அவர் என்னை திட்டவில்லை ஸ்வீட் பீடாவில் இருந்த வகையை சொன்னார் என்று !! கடைசியில் ஒரு மீனாக்ஷி பீடாவும், ஒரு மில்க் சாக்லேட் பீடாவும் வாங்கி கொண்டேன்.







இந்த மீனாக்ஷி (ஏம்பா, நான் சரியாதான் பீடா பேர் சொல்றேனா ?!) பீடாவை வாயில் போட்டவுடன் ஒரு சிறிய காரமும், அதே சமயம் இனிப்பும் தெரிந்தது. அப்போதுதான் கவனித்தேன் பீடாவினுள் வைக்கப்படும் பாக்கே ஒரு பத்து வகை இருந்ததை, அந்த கடையை சுற்றி கவனிக்கும்போதுதான் தெரிந்தது அத்தனை வகை பீடா சாமான்கள் இருந்ததை. பீடான்னா சும்மா இல்லை பாஸ்! அப்புறம் இந்த மில்க் சாக்லேட் பீடா இருக்கே, முதலில் கடிக்கும்போது சாக்லேட் சாபிடுவது போலதான் இருக்கும், அடுத்த கடிக்கு பீடாவை கடிக்கும்போது அதனுள்ளே இருக்கும் குல்கந்துவும் இந்த சாக்லேட்டும் கலந்து ஒரு அருமையான சுவையை குடுக்கிறது. ஏம்பா, தமிழ்நாட்டில் வெறும் நாலைந்து வகையை வைச்சு எமாதரீங்களே !!






அடுத்து அவர்கள் மெனு கார்ட் (பீடாவுக்கு மட்டும் சார் !) பார்த்தேன், அடேங்கப்பா எத்தனை வகை. அதில் என்னை மிகவும் கவர்ந்தது கடைசியில் இருந்த பீடா வகை..... ஹனிமூன் ஸ்பெஷல், டேய்... அதில் என்னதைடா கலப்பீங்க ?! அடுத்த முறை செல்லும்போது கண்டிப்பாக சென்று வாரங்கள்.




Labels : Suresh, Kadalpayanangal, arusuvai, beedaa, pan, scendrabad, hyderabad, pan palace, Dimmy's pan palace, best pan, variety of pan, beeda, must try, tasty, dessert

9 comments:

  1. யம்மாடி...! இப்பவே கண்ணை கட்டுதே...! பீடாவில் இத்தனை வகைகளா...?

    ReplyDelete
  2. Hi.. So amazing..
    Did you watch "Sutralam Savaikalam" program in News7 channel. If not, watch that program in youtube.
    In that program they are showing most of Samas's hotels and also "Oor special" in various places.

    ReplyDelete
  3. வடக்கில் பீடா பிரபலம் என்றாலும் இந்த ஹைதராபாத் பானில் இத்தனை வகை!

    தில்லியில் கூட கனாட் ப்ளேஸ் பகுதியில் ஒரு பிரபல பீடா கடை இருக்கிறது. அங்கேயும் பல விதங்களில் பீடா கிடைக்கிறது. எப்போதாவது சென்று அது பற்றி எழுதுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பீடா பற்றி மேலும் தகவல் ? Ravi

      Delete
  4. Suresh,
    Let us know how to get all hotels for a particular city.

    ReplyDelete
  5. Suresh,
    The label based search is not working. how to get links for hotels on a specific city that you have covered.

    ReplyDelete
    Replies
    1. Hi Balachandar, thanks for reading my blog and your comments. It is now by google only you can find the required data from my blog with the keywords.
      But a good news is, I am remodelling the blog now, and you will soon find the hotels very easily.
      Keep following for more informtation and easy search !

      Delete
  6. திருநெல்வேலி ராம்ஜி ஸ்வீட் பீடா அறுசுவை உணவுக்கு பின் மேலும் சுவைக்க தூண்டுவது ராம்கி ஸ்வீட் பீடா தொடர்புக்கு 9025670828

    ReplyDelete
  7. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஸ்வீட் பீடா, பான் பீடா சுவைக்க பனரஸ் பான் வாலா, புதுரோடு, பழைய நகராட்சி அருகில் - பாா்ட்டி ஆா்டா்கள், உங்கள் வீட்டு விஷேங்களுக்கும் நோிலும் - Call - 9842196141



    ReplyDelete