Wednesday, August 5, 2015

ஓர் இனிய தொடக்கம்.... YummyDrives.com !!

மூன்று வருடங்களுக்கு முன்பு ப்ளாக் என்பதை எழுதும்போது, அது எனது வாழ்க்கையில் என்ன வகையான மாற்றத்தை கொண்டு வரபோகிறது என்று அறியாமல் இருந்தேன்...... இன்று அது ஒரு இனிய மாற்றத்தை கொண்டு வந்து இருக்கிறது என்று நினைக்கும்போது, வியப்பாக இருக்கிறது ! மிக சிறந்த நண்பர்களையும், தகவல்களையும், தருணங்களையும் தந்த இந்த உலகிற்கு என்னால் என்ன செய்ய முடியும் என்று யோசித்தபோது கிடைத்த விடைதான் இந்த..... YummyDrives.com !!


சிறந்த சுவையான உணவுகளை பற்றி எழுதும்போது, அதை படிக்கும் சிலர் என்னை தொடர்ந்து கேட்கும் கேள்வி என்பது.....
  1. இந்த தளம் ஆங்கிலத்தில் இல்லையா ?
  2. ஒரு ஊருக்கு சென்றுவிட்டு, உங்களது தளத்தில் சென்று அங்கு என்ன உணவு நன்றாக இருக்கும் என்று தேடுவதும், அந்த தகவல் கிடைப்பதும் சிரமமாக இருக்கிறது.
  3. இது போன்ற உணவு மற்றும் பயணம் பற்றி எழுதும் வலைபதிவர்கள் யார் 
இதற்க்கு நான் விடையே இந்த புதிய தளமான YummyDrives.com !!


இந்த புதிய தளம் என்பது ஆங்கிலத்தில் இருக்கும், ஒரு உணவகம் அல்லது பயணம் பற்றிய மிக சுருக்கிய தகவல்கள், நிறைய படங்கள், அந்த இடத்தின் கூகிள் மேப் என்று உங்களுக்கு தேவையான அத்தனை தகவல்களும் கிடைக்கும். இதில் நீங்கள் விரும்பி படிக்கும் அனைத்து உணவு மற்றும் பயணம் பற்றி எழுதும் பிரபல வலைபதிவர்களின் பதிவுகள் அவர்களின் அனுமதியோடு பிரசுரிக்கபடுகிறது. நீங்களும் தகவல்களை இந்த தளத்திற்கு சமர்ப்பிக்கலாம்.... மிக எளிதாக ! உங்களுக்காக ஆண்ட்டிராயிட் செயலியும் அறிமுகபடுதபட உள்ளது, இதனால் நீங்கள் எங்கு சென்றாலும் மிக எளிதில் அந்த இடத்தின் உணவுகளை பற்றி தெரிந்து கொள்ளலாம் !! இது மட்டும் அல்ல, இன்னமும் உண்டு... பிரபல வலைபதிவர்களான திரு.கேபிள் சங்கர் மற்றும் கோவை நேரம் ஜீவா அவர்களும் என்னோடு இந்த பயணத்தில் இருக்கின்றார்கள் என்பது நான் மிகவும் பெருமைப்படும் விஷயம்.


உங்களை அன்போடு இதன் வெளியீட்டு விழாவிற்கு அழைக்கிறேன், இது உங்களுக்காக அமைக்கப்பட்ட மேடை..... சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் !

இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்,
No.6, Mahavir Complex, Munusamy Salai,
K.K.Nagar, Chennai, Tamil Nadu 600078
Phone:044 6515 7525

நாள் : 14 - ஆகஸ்ட் - 2015, வெள்ளிகிழமை 
நேரம் : மாலை ஆறு மணி 
Labels : Suresh, Kadalpayanangal, yummydrives, launch, others, cable sankar, kovai neram, Jeeva

28 comments:

  1. ஃபேஸ்புக்கில் பார்த்தபோதே என்ன விவரம் என்று அறிந்துகொள்ள ஆவலாயிருந்தேன். வாழ்த்துகள் பாஸ்.

    ReplyDelete
  2. நல்லதொரு முயற்சி! சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. நல்லதொரு முயற்சி! சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. வர நினைத்திருக்கிறேன்
    வாழ்த்துக்களுடன்....

    ReplyDelete
  5. ருசிகரமான தொடக்கம்..... மனம் நிறைந்த வாழ்த்துகள் சுரேஷ்.

    ReplyDelete
  6. நல்லதொரு பணி...
    பாராட்டுகள்...

    ReplyDelete
  7. மிகச் சிறந்த முயற்சி.. தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பலனளிக்கும்! :-) தளம் சிறப்படைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் நண்பரே ....

    ReplyDelete
  9. வாழ்த்துகள் சார்

    ReplyDelete
  10. அட்டகாசம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. My best wishes to you Bro...

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள்!!! வாழ்த்துக்கள்!!! வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் சுரேஷ்...i ll try to come.

    ReplyDelete
  14. வாவ்.... சூப்பர்ண்ணே... புதிய முயற்ச்சி வெற்றிபெற வாழ்த்துகள்... ஆப் லிங் குடுங்கண்ணே...!

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள்!!! வாழ்த்துக்கள்!!

    Copy and WIN : http://ow.ly/KNICZ

    ReplyDelete
  16. அடுத்த வெள்ளியன்று சந்திப்போம்...

    ReplyDelete
  17. நல்லதொரு தொடக்கம். வாழ்த்துக்கள். அறுசுவை உணவுடன் நல்லதொரு பயணம்

    ReplyDelete
  18. நல்ல முயற்சி. வாழ்த்துக்கள் சுரேஷ். உங்களது பதிவுகளில் கொடுக்கும் தகவல்கள், உங்களது ரசனை மற்றும் உழைப்பு குறித்து ஒவ்வொரு பதிவை படிக்கும் போதும் வியப்பது என் வழக்கம்.

    கண்டிப்பாக yummydrives தளம் எல்லோருக்கும் பயன்படும். குறிப்பாக இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இந்தியாவிற்கு விடுமுறையில் வந்து தமிழ்நாட்டின் குறுக்கும் நெடுக்கும் பயணம் செய்யும் எனக்கு கண்டிப்பாக உதவும். கிரிஷ்

    ReplyDelete
  19. நல் வாழ்த்துக்கள் நண்பர்களே...!

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. Dear friends,
    Good Post. I am a regular reader of tamil Indali, when we will see the indali again, Is there any alternative for Indali.

    ReplyDelete
  22. Good Going. Keep it up. A pleasant surprise. I came here after a very long time.

    நன்று. நன்று. ஸிறப்பு ஸிறப்பு. மகிழ்ச்சி.

    http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/

    ReplyDelete