பெங்களுருவில் இருந்து மதுரை செல்லும்போதெல்லாம், சேலம் தாண்டும்போதுதான் உணவு இடைவேளை வரும். அப்போதெல்லாம், சேலத்தில் எங்கு உணவு நன்றாக இருக்கும் என்று தேடுவது வழக்கமாக இருந்து கொண்டு இருந்தது. அப்போதெல்லாம் சேலத்தில் இருக்கும் எனது ப்ளாக் விரும்பியான திருமதி.அர்ச்சனா ராஜேஷ் அவர்களது நினைவு வரும். சேலத்தில் இருக்கும் சுவையான உணவுகளை அவ்வப்போது எனக்கு அறிமுகம் செய்வதும், எங்கு சென்றாலும் கடல்பயணங்கள் தளத்தை அந்த உணவகத்தில் அறிமுகபடுதுவதிலும் என்று இருக்கும் இவரை இதுவரை சந்திக்க முடிந்ததில்லை. ஒரு முறை சேலம் சென்று கொண்டு இருக்கிறேன் என்று முகபுத்தகத்தில் போட்டபோது, உடனடியாக போன் செய்து அவரது சகோதரர் டாக்டர் சரவணன் அவர்கள் என்னை சந்திக்க ஆவலோடு இருப்பதாக தெரிவித்தார். சேலம் விநாயகா மிஷன் காலேஜில் பணிபுரியும் இன்றைய எனது நண்பருமான இவரை அன்று சந்தித்தபோது ரொம்ப நாள் பழகியவர் போல பழகினார், எங்களை ஒரு நல்ல உணவகத்திற்கு கூட்டி சென்றார் அதுதான் ஹோட்டல் உஷாராணி !!

சேலம் பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில், கோயம்புத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் காக்காபாளையம் முன்னர் ஒரு U டர்ன் செய்தால் இளம்பிள்ளை ஊருக்கு செல்லும் ரோட்டில் சென்றால் வரும் ஒரு ஊர் என்பது இந்த வேம்படிதாளம். சேலத்தில் கிடைக்காத நல்ல உணவகமா, இவ்வளவு தூரம் செல்ல வேண்டுமா என்று நீங்கள் கேட்க முடியாத அளவுக்கு இங்கு உணவின் சுவை இருக்கிறது. ஊருக்குள், மெயின் ரோட்டிலேயே கடை இருப்பதால் இரண்டு பக்கமும் மதிய நேரத்தில் கார் பார்க் செய்யப்பட்டு இருக்கும், அப்போதே தெரிந்துவிடும் இந்த ஹோட்டல் எத்தனை பேருக்கு பிடிக்கும் என்பதை !
உள்ளே உட்கார்ந்து சாப்பிட இடம் கிடைப்பது குதிரை கொம்பு என்பதால், நிறைய பேர் பார்சல் செய்துக்கொண்டு சென்று காரிலோ அல்லது பக்கத்தில் இருக்கும் தோப்பிலோ உட்கார்ந்து சாப்பிடுவதை பார்க்கலாம். உள்ளே இடம் கிடைத்து உட்கார்ந்தவுடன் ஒரு பெரிய வாழை இலையை உங்களது முன் போடும்போது, ஒரு 10% பசி பறந்துவிடும். வெளியே இருக்கும்போதே பலரும் பிரியாணியை பார்சல் செய்து வாங்கி போவதும், பலர் போன் செய்து எனக்கு பிரியாணி எடுத்து வைத்துவிடுங்கள் என்று சொல்வதும், வெளியே பலரும் அட்வான்ஸ் புக்கிங் செய்வதும் என்று இருப்பதை பார்க்கும்போதே இன்று பிரியாணிதான் என்று மனதில் முடிவாவதை தடுக்க முடியாது. சிக்கன் பிரியாணி என்று சொன்னவுடன் சூடாக எண்ணை பளபளப்புடன் வைக்கவும், கொஞ்சம் ரைத்தா வையுங்கள் என்று கேட்கும்போதே மூளை வறுவல், நாட்டு கோழி பெப்பர் வறுவல், மட்டன் சுக்கா என்று வைத்துவிட்டு காடை, புறா வேண்டுமா என்று கேட்க.... நாங்கள் இதையே எப்படி சாபிடுவது என்று யோசித்து கொண்டு இருந்தோம் !
நண்பர் டாக்டர் சரவணன் அவர்களுக்கு எனது இனிய நன்றியை உரித்தாக்குகிறேன். தமிழகத்தில் இப்படி தெரியாமல் இருக்கும் ஹோட்டல் நிறைய இருக்கிறது, இப்படி நண்பர்கள் அறிமுகபடுதுவதாலேயே இது இன்னும் பலருக்கும் சென்று சேருகிறது. இனிமையான சந்திப்பு, உணவு என்று அந்த சந்திப்பு இன்னும் நினைவில் இருக்கிறது. மீண்டும் ஒரு முறை செல்வோம் நண்பரே ! நன்றி !!
ஒரு வேளை நாம் நமது நண்பர் டாக்டர் சரவணன் உடன் சென்றதால் அப்படி ஒரு கவனிப்பு என்று இருக்குமோ என்று அடுத்தவர்களை பார்த்தால், அங்கும் அவர் அப்படித்தான் கவனித்து கொண்டு இருந்தார். பொதுவாக நமது வீட்டிற்க்கு உறவினர்கள் வந்தால் சாப்பாட்டை போதும் போதும் என்று சொன்ன பின்னரும், மெலிஞ்சிடீங்க நீங்க நல்லா சாப்பிடுங்க என்று அடுத்த முறை அவர் வருவதற்கு யோசிக்கும் அளவுக்கு கவனிப்போமே... இங்கும் இவர் அப்படிதான் கவனித்தார், கொஞ்சம் அசந்தால் நெப்போலியன் அவரது தம்பிக்கு ஊட்டுவார் இல்லையா, அது போல ஊட்டி விடுவாரோ என்று யோசிக்கும் அளவுக்கு ரொம்பவே பாசமாக கவனித்தார். பிரியாணியில் பெப்பர் கொஞ்சம் கூடவே இருக்க, அதனோடு நாட்டு கோழியும், மூளையும் என்று அருமையான காம்பினேசன். பசியோடு சென்றால் திருப்தியோடு வரலாம்.
பஞ்ச் லைன் :
சுவை - அருமையான, சுவையான பிரியாணியும், மட்டன், சிக்கன் அயிட்டங்களும் என்று ஒரு ஹோமிலி சுவை.
அமைப்பு - ஒரு சிறிய உணவகம்தான், பொதுவாக உள்ளே உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்றால் கொஞ்சம் நேரம் ஆகும்.
பணம் - விலை ஒருவருக்கு சுமார் 250 ரூபாய் ஆனது !!
சர்வீஸ் - அருமையான, வீட்டில் விருந்தினர்களுக்கு கிடைக்கும் வரவேற்ப்பு.
அட்ரஸ் :
அட்ரஸ் :
Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, salem, tasty biriyani, off Salem - Coimbatore road, vembadithalam, homely mess, not to miss
சூப்பரப்பு... ரொம்ப நாள் கழித்து வந்தாலும் , நல்ல ஒரு உணவகத்தை அறிமுக படுத்தி விட்டீர்கள். அடிக்கடி பதிவு போடுங்க தல..
ReplyDeleteSuresh Please suggest Some superb Veg Hotel In Salem. Every time when i cross salem, i always searching for good veg hotel. Please exclude A2B from your list :)
ReplyDeletemadras rathna cafe nearnew bus stand,krishna bavan between palace theater and town railway station.most of the hotels are above average.
Deleteபட்டிக்காட்டில் இருந்தாலும் உஷா ராணி ரேட் என்னவோ ஸ்பென்சர் ரேட்தான்.
ReplyDeleteஅய்யா பதிவுகள் அதிக இடைவெளி... தொடர்ந்து போடவும் ... நன்றி
ReplyDeleteஅய்யா பதிவுகள் அதிக இடைவெளி... தொடர்ந்து போடவும் ... நன்றி
ReplyDeleteஅய்யா பதிவுகள் அதிக இடைவெளி... தொடர்ந்து போடவும் ... நன்றி
ReplyDeleteஇருமுறை சென்றுள்ளேன் ஜி...
ReplyDeleteமிகவும் அருமையான பதிவு!!! உங்கள் தேடல் தொடரட்டும்!!!! மதிய நேரத்தில் படிக்கும் போது நாவில் எச்சில் ஊறுகின்றது............இந்த உணவகத்தை அறிமுகப்படுத்திய நண்பர் சரவணன் அவர்களுக்கு நன்றி!!! விரைவில் சுவைத்து பாக்க வேண்டும்!!!!!!
ReplyDeletenice.......
ReplyDeletebeing a resident of salem still i have not visited this hotel on seeing your blog my mouth started watering i ll pay visit.really very nice blog
ReplyDeleteTry to Selvi mess opp to Selam bus stop. Very very tasty
ReplyDelete