Tuesday, January 12, 2016

பயணம் தொடர்கிறது !

நலமா ?! நீண்ட பெரிய இடைவெளி உருவாகிவிட்டது... புது வேலை, நிறைய அலுவல்கள், எனது குடும்பம், அவர்களுக்காக நேரம் செலவழித்தது,  எனக்கான தனிமை, YummyDrives.com ஆரம்பம், அதற்க்கான வேலைகள் என்று இந்த இடைவெளி சற்று அதிகமாகவே ஆகிவிட்டது எனலாம். ஒவ்வொரு பயணத்தின் போதும் ஓய்வு என்பது அவசியமே, ஆனால் இந்த ஓய்வு என்பது எனது எழுத்துக்களுக்கு மட்டுமே இருந்ததே அன்றி எனது சுவையான பயணத்திற்கு இல்லை... ஆதலால் எழுதுவதற்கு அதிகம் இருக்கிறது என்பது உங்களுக்கு சந்தோசம் கொடுக்கும் செய்திதானே !!



நான் எழுதாமல் இருந்தபோது, தினமும் எனது தளத்திற்கு வந்து சென்று, பின்பு உரிமையோடு கோபித்துக்கொண்டு, சில சமயங்களில் திட்டியும், செல்ல மிரடல்களோடும் என்னை எழுத தூண்டிய நண்பர்களுக்கு நன்றி கூறுகிறேன் ! இப்போது இந்தியா முழுவதும் பயணம் செய்யும் வாய்ப்பு கிட்டி இருப்பதால் இன்னும் சுவையான பயணமாக இருக்கும்.


இந்த வருடமும் மேலே சொன்னது போல நிறைய வேலைகள் இருந்தாலும், அந்த சோம்பேறித்தனத்தை மட்டும் கொஞ்சம் ஒதுக்கி வைத்து கண்டிப்பாக எழுத வேண்டும் என்று முனைப்போடு இருக்கிறேன், அதை நிச்சயம் செய்வேன் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. வாருங்கள்... நாளையில் இருந்து ஒரு இனிய பயணத்திற்கு தயாராவோம் !


நன்றி.... மீண்டும் சுவைக்க வருக :-)

13 comments:

  1. வருக வருக... பயணங்கள் முடிவதில்லை என்று ஒரு தொடர்பதிவு இப்போது நடந்து கொண்டிருக்கிறது...

    ReplyDelete
  2. We are waitingggggg

    ReplyDelete
  3. வணக்கம்
    தொடருங்கள் அண்ணா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. தொடருங்கள்.
    எங்களுக்க தலைவாழை விருந்து படையுங்கள்.
    பசியுடன் காத்து இருக்கிறோம்.
    வாழ்க வளமுடன்.
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete
  5. ராஜஸ்தானி சாப்பாடு மாதிரி இருக்கிறது? தொடருங்கள்.

    ReplyDelete
  6. yes indeed, we missed you.. welcome back! Thanks, Ganesh

    ReplyDelete
  7. welcome back senior... அதென்னவோ இப்படி blogல் படிக்கவே சௌகரியமாக இருக்கிறது... வாங்க வாங்க...

    ReplyDelete