நம்ம ராசி எப்படின்னா, ஒரு ஊருக்கு புதுசா போனா நாமளே நினைச்சாலும் வழக்கமானதை சாப்பிட முடியறதில்லை.... ஒரு வித்தியாசமான, ருசியான உணவை அறிமுகம் செஞ்சிடறாங்க... சுழி அப்படி !! இந்த முறை கரூர் சென்று இருந்தேன், அங்கு எங்கு நல்ல உணவு கிடைக்கும் என்று கேட்டதற்கு எல்லோரும் எங்கு நல்ல சிக்கன் கிடைக்கும், மட்டன் கிடைக்கும், பரோட்டா கிடைக்கும் என்றுதான் சொன்னார்கள், சரி அதையே சாப்பிடலாம் என்று கிளம்பினோம். அப்படி நண்பருடன் சென்று கொண்டு இருந்தபோது, அவரது நண்பரை வழியில் பார்த்தோம், அவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது என்னுடைய கடல்பயணங்கள் தளம் பற்றியும், நான் உணவை வேட்டையாடுவது (?!) பற்றியும் சொல்ல, அவரோ அப்படி என்றால் நீங்கள் செட்டி கடைக்கு கூட்டிக்கிட்டு போங்க என்று சொல்ல, நண்பரோ.... அட ஆமாம் மறந்தே போச்சு என்றார். முடிவில் அங்கு சென்றபோது ஒரு மிக வித்யாசமான அனுபவம் கிடைத்தது, நான் மீண்டும் குழந்தை பருவதிர்க்கே சென்றேன் என்றால் மிகை ஆகாது !!
கரூரில் இருக்கும் ஒரு முக்கியமான தெரு என்பது ஜவஹர் பஜார் என்பது, அந்த தெருவின் முடிவில் இருக்கும் கருப்பாயி கோவிலுக்கு சிறிது முன்பு ஒரு சிறிய கடையாக இருக்கிறது செட்டி கடை, அந்த கடைக்கு வெளியில் இருக்கும் போர்டு R.ரெங்கநாதன் கரம் கடை என்று சொன்னாலும், செட்டி கடை என்பதுதான் அடையாளம். தூரத்தில் இருந்து பார்க்கும்போதே அங்கே குழந்தைகளும், பெரியவர்களும் நிற்ப்பதை பார்த்து என்ன இருக்கமோ என்று பார்க்க வைத்தது, அங்கு சென்று உண்டவுடன்தான் தெரிந்தது இது வேற மாதிரி என்று !!
பொதுவாகவே இன்று சிறிய பெட்டி கடைகள் அல்லது தின்பண்டம் விற்கும் கடைகளை பார்த்தாலே லேஸ் சிப்ஸ், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பிஸ்கட், அடைக்கப்பட்ட ஜூஸ் என்று எல்லாமே நமக்கு பதப்படுத்தப்பட்ட கெமிக்கல் உணவு வகைகளே கிடைக்கின்றது. சிறு வயதில் கிடைத்த அந்த மொறு மொறு மைசூர் பாகு, இலந்தை வடை, ஆரஞ்சு மிட்டாய், பல்லி மிட்டாய், முறுக்கு, இலந்தை பொடி, கொடுக்காபுளி, தட்டை வடை, கோலி சோடா என்று இங்கு அதிகம் கிடைபதில்லை. எறும்பு வருது, யாரும் சாபிடறதில்லை,ஒடம்புக்கு வந்துடும் என்று விதவிதமான காரணங்கள். இதனால் காற்றும், பிளாஸ்டிக் சுற்றியும் வைக்கப்படும் பலவும் சுமார் ஆறுமாதத்திற்கு பயன்படுத்தலாம் என்று வருகிறது, அப்படியென்றால் அதில் என்னவெல்லாம் கலந்து இருப்பார்கள் என்று சொல்ல தேவை இல்லை. செயற்கை சுவையையே சாப்பிட்டு வரும் நமக்கு ஒரு இயற்கை சுவையை சுவைக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் !
சீம் பால் கட்டி ! |
பீட்ருட், கடலை, கேரட் போட்ட கரம் ! |
இலந்தை வடை ! |
காராமான செட்டு ! |
கடையின் உள்ளே நுழைந்து பார்க்கும் போதே வியப்பில் புருவம் உயர்கிறது, சிறு குழந்தையாகிறோம். ஒரு இலந்தை வடை குடுங்க என்று கேட்டு அந்த நுனி நாக்கில் நக்கி, அதன் சுவை மூளையை விட மனதை வேகமாய் அடைந்து முகத்தில் ஒரு ஜோதி தெரிகின்றது. பின்னர், எனது முன்னால் இருந்ததை பார்த்து இது என்ன கட்டி கட்டியாய் இருக்கு என்று கேட்க அது சீம் பால் கட்டி என்று தெரிய வரும்போது, எனது அம்மா பால்காரரிடம் கன்னு போட்டுடுச்சா என்று அக்கறையாய் கேட்டு கொஞ்சம் சீம் பால் கொண்டு வாங்க என்று பால்காரரிடம் கேட்டு, அதில் திரட்டி செய்து தந்தது யாபகம் வருகிறது, அது போலவே இங்கு ஒன்றை எடுத்து வாயில் வைத்து கடிக்க, இந்த இயற்கையின் சுவையை யாரால் வெல்ல முடியும் என்றே தோன்றுகிறது. அடுத்து வெங்காய செட்டு, மோரு, கார கடலை, புளிப்பு முறுக்கு என்று சரமாரியாக இறங்க ஆரம்பிக்கிறது. டேய் போதும்டா என்று இழுத்து செல்லும்போதுதான் உணர்கிறேன் அவ்வளவு உண்டும் வயிறு புடைக்கவில்லை, இன்னும் அதே லைட் பீலிங்..... உண்மையிலேயே அந்த காலத்திற்கு சென்று வந்தேன் எனலாம் !!
அடுத்த முறை கரூர் செல்லும்போது இங்கு சென்று வாருங்கள், அந்த குழந்தை பருவத்திற்கு சென்று வர முடியும் ! இந்த கடைக்கு எதிரே, சற்று தள்ளி இன்னொரு கடையும் இருக்கிறது, அங்கும் நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள்.
Labels : Suresh, Kadalpayanangal, Arusuvai, Karur, Chetty kadai, Childhood snacks, Tamil nadu, go back to old days, yummy food
கரூர் போக வேண்டி இருக்கிறது
ReplyDeleteஒரு கை பார்த்துவிடுகிறேன்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
சுவையான கரம். சுவாரஸ்யமான கரம்.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteபார்த்தவுடன் ஆசை வந்து விட்டது வருகிறோம் இந்தியா வரும்போது பார்க்கலாம்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நீங்கள் வர்ணித்த விதம் சுவையோ சுவை...
ReplyDeleteகரூர் போகும்போது சுவைத்துவிட வேண்டியதுதான். வழக்கம்போல் அருமையான பதிவு!
ReplyDeleteஉங்கள் பதிவில் இருந்து தேவை இல்லாத ஒரு மென்பொருள் பார்க்கிறவர்களின்
ReplyDeleteகணினிக்கு தரவிறங்க முயற்சிக்கிறது .முதலும் ஒரு முறை எழுதியிருக்கிறேன் ,மல்வெயர் அல்லது அட்வெயர் ஆக இருக்கலாம் .சிலவேளைகளில் வைரஸாக கூட இருக்கலாம் .தேவை இல்லாத சில இணைப்புகளை உங்கள் பதிவில் இருந்து நீக்குங்கள் .பதிவு அருமை .மிகுதி பின்னர் .
உணவை ரசித்து சாப்பிடுவது ஒரு கலைதான் !
ReplyDeleteஆகா! அருமை.இலந்தைவடை சாப்பிட்டதே இல்லை.
ReplyDeleteஆகா! அருமை.இலந்தைவடை சாப்பிட்டதே இல்லை.
ReplyDeleteA short history of the shop / shop-owners would have been more nice & interesting to know.. Hope you can fetch this & include the info in your future posts.. Thanks, Ganesh Babu, Bangalore
ReplyDelete