"ஆச்சி நாடக சபா" என்ற இந்த தலைப்பில் உலகத்தில் இருக்கும் மிக பிரம்மாண்டமான மேடை நாடகங்கள் (அங்கு இந்தி மியுசிகல் என்பார்கள்) என்பதை தந்து வருகிறேன் என்பதை அறிவீர்கள், இதனுடைய நோக்கமே சினிமா, ஸ்பெஷல் எபக்ட்ஸ் என்று பிரம்மாண்டம் வந்து மேடை நாடகங்கள் அழிந்துக்கொண்டு இருக்கும்போது, இந்த உலகில் அது இன்னும் உயிரோடு, சிறப்பொடு இயங்கி கொண்டுதான் இருக்கிறது என்று சொல்ல வேண்டும் என்பதை. ஒரு டிக்கெட் குறைந்தபட்ச விலையே 3000 ரூபாய் எனும்போது, கொஞ்சம் யோசிக்கத்தான் செய்வோம், ஆனால் பார்த்துவிட்டு வெளியே வரும்போது அது கொஞ்சம் கொரைச்சலோ என்று எண்ண தோன்றும். இந்த தலைப்பில் இப்படி நிறைய ஷேர் செய்துள்ளேன்..... இன்று "வோர்ல்ட்ஸ் அவே" மியுசிகல் !!

சர்கியு டியு சொளில் (Circue Du Soleil) என்பது ஒரு கனடா நாட்டு நாடக கம்பெனி. ஒரு சிறிய கதையை, நமது பிரம்மாண்ட டைரக்டர் ஷங்கர் எடுத்து மேடை நாடகமாக போட்டால் எப்படி இருக்கும் ? அப்படிதான் இருக்கும் இந்த மேடை நாடகங்களும்.... ஒரு சிறிய கதை, மேடையில் பிரம்மிக்க வைக்கும் பிரம்மாண்டம், மிக பெரிய மியூசிக் என்று நம்மை ஆச்சர்யபடுதுகின்றனர்.
மேலே இருக்கும் "வோர்ல்ட்ஸ் அவே" மியுசிகல் என்பது ஜேம்ஸ் கமேரூன் அவர்கள் இயக்கி இருக்கும் ஒரு மேடை நாடகம், இதை பார்க்கும்போது நீங்கள் வாயை பிளப்பது உறுதி. இது போல் ஒரு தமிழ் நாடகம் எப்போது வருமோ !!
Labels : Suresh, Kadalpayanangal, Aachi Nadaga sabha, worlds bes shows, worlds away musical, broadway musical, Circue du Soleil
No comments:
Post a Comment