Friday, February 3, 2017

அறுசுவை - தேள் வறுவலும், கருப்பு அரிசி சோறும் !!

என்னதான் நாம தமிழ்நாடு முழுக்க சுற்றி சுவையான உணவு பற்றி எழுதினாலும், அல்லது இந்தியா முழுக்க சுற்றி உணவுகளை பற்றி எழுதினாலும், அமெரிக்கா பர்கர், இத்தாலியன் பாஸ்தா, ஜப்பான் நூடுல்ஸ் என்று அங்கேயே சென்று ருசித்து எழுதினாலும்.... இந்த சமூகம் நம்மையும் ஒரு உணவு ரவுடிதான் என்று ஏற்றுக்கொள்ள மறுக்கிறது ! நாம சாப்பிடறது எல்லாமே தேவை இல்லாத ஆணிதான் என்று கூறிக்கொண்டு, நீ சீனா போயிருக்கியா, அங்க பாம்பு கறி சாப்பிட்டியா, தேள் சாப்பிட்டு இருக்கியா.... ஆமாம்னு சொல்லு, நாங்க உன்னை உணவு காதலர் அப்படின்னு ஒத்துக்குறோம் அப்படின்னு சொல்றாங்க. அட போங்கடா.... நானும் ரவுடிதான், எல்லாரும் பாத்துக்க நான் இன்னைக்கு இட்லியும் கெட்டி சட்னியும் சாப்பிட்டேன், பார்த்துக்க, பார்த்துக்க என்று வான்டெட் ஆக கூறிக்கொண்டு பதிவுகள் எழுதிக்கொண்டு இருந்தேன்..... ஆனாலும், கடைசியில என்னையும் அரசியல் பண்ணி தேள் வறுவல் சாப்பிட வைச்சிட்டீங்களே.... நியாயமாரே !!இந்த முறை சீனா செல்கிறேன் என்று தெரிந்தபோதே, சீன உணவுகள் எங்கு கிடைக்கும் என்று பார்த்து வைத்துக்கொண்டேன். இதுவரை 15 முறை சென்று இருக்கிறேன், இதுவரை நாய், பன்றி, பாம்பு, கழுதை, நத்தை, முயல், பல பல வகையான மீன்கள் என்று பலவற்றை தின்று இருந்தாலும், இந்த தேள் மற்றும் மற்ற உயிரினங்களை தின்றது இல்லை. சீனா என்றதுமே அங்கே இந்த விஷ பூச்சிகளை எல்லாம் தின்பார்களே என்று சொல்லி கேட்டு இருக்கிறேன், ஆனால் ஒவ்வொரு முறை செல்லும்போதும் அதை சுவைக்க முயலவில்லை. இந்த முறை பெய்ஜிங் சென்று இருந்தேன், அங்கே இந்த மாதிரி உணவுகள் எங்கே கிடைக்கிறது என்று எல்லோரிடமும் கேட்டபோது கூறிய பதில்...... வாங் பியூ ஜியாங் தெருவுக்கு செல்லுங்கள் என்பதே !!பெய்ஜிங் நகரத்தின் நடுவே அமைந்த தியான் மென் சதுக்கத்தில் இருந்து சிறிது தூரத்தில் அமைந்துள்ளது இந்த தெரு. அலங்கார வளைவுடன் ஆரம்பிக்கும் இந்த சிறிய தெருவின் ஆரம்பம் முதல் முடிவு வரை சீனாவின் எல்லா விதமான பாரம்பரிய உணவுகளும் கிடைக்கிறது. தெருவில் நுழைந்தவுடன் முதல் கடையிலேயே மூன்று சிறிய தேள்களை ஒரு குச்சியில் குத்தி வைத்திருக்கின்றனர், கொஞ்சம் உற்று பார்த்தால் தேள் அசைகிறது..... அட, நன்னாரி பயலுகளா, உசிரோடவா இதை பொரிச்சு தருவீங்க !! சாப்பிடும்போது தொண்டையில் கொட்டிட்டா நான் எப்படிடா அங்க மருந்து போட முடியும் ?!கருப்பா இருக்கிற அரிசி... சாப்பிடலாம், நல்லா இருக்கு !என்னதான் வீராவேசமாக தேள் சாப்பிட வேண்டும் என்று கிளம்பினாலும், அந்த தேள் அசைவதை பார்த்தவுடன் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடினேன். அடுத்த கடைகளில் முட்டைகளை போன்று ஒன்று இருந்தது, அது அந்த ஊர் கடலை போல ! இனிமேல் எழுத முடியாது.... டைரக்ட் ஆக்ஷன் தான் !!

அவங்க ஊரு அவியல் போல இருக்கு !

கடலை போல கொரிச்சிக்கிட்டே இருக்காங்க இதை !

இது சாப்பிடற ஒன்றுதான், ஆனால் எந்த மிருகம்னு தெரியலை !


பன் மாதிரி இருக்கே, அப்படின்னு பார்த்தால் உள்ளே பன்றி இறைச்சி ! 

இது மாட்டின் லெக் பீஸ் !!

நைட்ரோஜென் போட்ட கூல் ட்ரிங்க்ஸ்... குடிச்சா புகைதான் எல்லா துவாரத்திலும் !

சீனாவில் பொதுவாகவே உணவை வேக வைத்தே சாப்பிடுகின்றனர். கொஞ்சமே கொஞ்சம் அரிசியை மட்டும் சிறிய கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு, நிறைய கறியையும், காய்கறிகளையும் எடுத்து உண்கின்றனர். காரத்திற்கு வினிகரில் கொஞ்சம் சிவப்பு மிளகாய் போட்டு வைத்து இருப்பதை ஒரு வாய் வைத்துக்கொள்கின்றனர். கடல் உணவுகளை மட்டும் சொன்னால் இரு பகுதிகளாக எழுத வேண்டி இருக்கும்.... பிஞ்சு நண்டு, ஆக்டோபஸ், பெரியத்தில் இருந்து சிறிய மீன், சிப்பி என்று எல்லாவற்றையும் ருசித்து சாப்பிடுகின்றனர் !


எல்லாமே மீன்தான்.. ஆனா அதுக்கு பேரு வைக்கலை !!

ஆக்டோபஸ் பொரியல் !

நண்டு பஜ்ஜி !

சீனாவின் பைன் ஆப்பிள் கேசரி ?!

லெக் பீஸ் வேணுமா ?! பீப் லெக்.....

முட்டைல கூட கறி போட்டு இருக்காங்க !

சீனா இட்லி..... டிம் சம் !!

கலர் கலரா ஜெல்லி !

குவா, குவா வாத்து.... பொரிச்சு சாப்பிட ரெடியா !

இனி, நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அண்ணன் அவர்கள் தேள் வறுவல் சாப்பிட்டு காண்பிப்பார்கள்.... எல்லோரும் கை தட்டுங்க ! இங்கே நான் மட்டும் இல்லை, உலகத்தின் பல மூலையில் இருந்து வந்த பலரும் சாப்பிட விரும்பியது இதைத்தான். இதை எல்லாம் சாப்பிடுவீங்களா என்று ஆபிசில் இருந்த ஒருவரிடம் கேட்டேன், அதெல்லாம் இல்லை, ஆனால் வேணும்னா சாப்பிடலாம் தப்பில்லை... அப்படின்னு குழப்பிட்டார். பத்து கடை ஏறி இறங்கி, கடைசியா நல்ல வயசுக்கு வந்த தேளா பார்த்து, 32 - 26 - 36 என்று இருந்த ஒன்றை குலசாமி பேரை சொல்லி கொண்டாடா என்று தைரியமாக சொன்னேன் (பாடி ஸ்டராங்..... பேஸ்மென்ட் கொஞ்சம் வீக்), அவரும் உயிரோடு இருந்த தேளை அப்படியே எண்ணையில் போட்டு, கொஞ்ச நேரத்தில் எடுத்து போட்டு உப்பும் காரமும் கொஞ்சம் தூவி தந்தார்...... தேள் வறுவல் சாப்பிடலாம் வாரீங்களா !!


கருந்தேள்..... சார், எஸ்சுஸ் மீ !

வண்டுகள் ரெடி..... என்னடா, டிபன் ரெடி மாதிரி சொல்றீங்க !!

 டேய், நாங்க எல்லாம் ஸ்டார் பிஷ் அழகுக்கு மட்டும்னு நினைச்சோம் !

சார், என்னோட சின்ன வயசுல எனக்கு பட்டப்பேரு "தட்டான்" .... என்னையும் பொரிச்சிடாதீங்க !

தேள் வறுவல் கையில் வந்ததில் இருந்து, அதுவும் சிறிது நேரத்திற்கு முன்பு வரை எனது முன் கை, கால்களை அசைத்துக்கொண்டு இருந்த ஒன்றை சாப்பிட போகிறோம் என்றபோது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. முடிவில் மனதை தயார்படுத்திக்கொண்டு ஒரு தேளை வாயில் வைத்து கடித்தேன், எண்ணையில் பொரித்து இருந்ததால் கருக் - மொறுக் என்று இருந்தது. ஒரு இடத்தில மட்டும் சதை கொஞ்சம் மாட்டியது, பின்னர் எல்லாமே மொறு மொறுதான்..... சுவையும் இருந்ததால், அடுத்து இருந்த ரெண்டு தேளுமே சடுதியில் காலியானது. டேய்.... நானும் ரவுடிதாண்டாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடாடா !!! 
video

Labels : Suresh, Kadalpayanangal, China foods, Scorpion, snake, Chinese food, World food, China, Global food

9 comments:

 1. ஒரு உயிரினத்தையும் விட்டு வைக்க மாட்டார்கள் போல... யப்பா...!

  நீங்க பக்கா ரவுடி பாஸ்...!

  ReplyDelete
 2. சாப்பிட்டதற்கு அப்புறம் பேஸ்மெண்ட் - ம் ஸ்ட்ராங்காக ஆயிருக்கும் என நினைக்கிறேன்.

  ReplyDelete
 3. ninga sapdura video kaatinal thana naan nambuwen

  ReplyDelete
 4. விட்டுட்டு போயிட்டிகளேப்பு...

  ReplyDelete
 5. நினைக்கவே குமட்டுகின்றது வயிறு நீங்க சிங்கம் தல)))

  ReplyDelete