Thursday, January 17, 2019

கடல்பயணங்கள்... நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ, Never !!

நலமா ?! கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கும் மேலாக கடல்பயணங்கள் நங்கூரமிட்டு ஒரு ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்தது, படகின் சிறப்பு என்பது கடலின் உள்ளே பயணம் செய்வதே அன்றி நிறுத்தப்பட்டு இருப்பதல்ல என்பதை பல பல நண்பர்களும் சொல்லியவண்ணம் இருந்தனர். எதனால் நான் இந்த பயணத்தை தள்ளி போட்டுக்கொண்டே வந்தேன் என்று யோசித்து பார்க்கும்போது, என்ன காரணம் சொன்னாலும் அது சரியானதாக இருக்காது என்றுதான் தோன்றுகிறது ! 



பயணங்களை நான் எழுதவில்லையே தவிர, பயணங்கள் நிறுத்தப்படவில்லை ! ஒவ்வொரு முறையும் புதிய பயணம் செல்லும்போதும் எனது உள்ளே இருக்கும் அந்த மிருகம் விழித்துக்கொண்டு தேட தொடங்குவதை நான் எவ்வாறு மறுப்பது ?! யாரும் கேட்காமல் விட்டு இருந்தால், இந்த கடல்பயணங்கள் மீண்டும் வராமலேயே சென்று இருக்கலாம், ஆனால் இவர்களின் அன்பினால் மட்டுமே இன்று அந்த உற்சாகம் மீண்டு வந்து இருக்கிறது, இந்த சமயத்தில் சில நண்பர்களை நான் நினைவு கூற விரும்புகிறேன், இவர்கள்தான் எப்போதும் என்னை எழுத தூண்டி கொண்டே இருந்தனர் எனலாம்...

- SN ராஜ்குமார் : இவர் சென்னையில் இருந்தாலும், ஒவ்வொரு முறையும் என்னை தொடர்ப்பு கொண்டு கடல்பயணங்கள் தொகுப்பை புத்தகமாக வெளியிட முயற்சி மேற்கொண்டு வருகிறார். விரைவில் சாத்தியமாகும் என்று தோன்றுகிறது.

- சத்தியா : "ஹாலிடே டைம்ஸ்" என்னும் மதுரை பதிப்பில் என்னுடைய கட்டுரைகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளி வரும்போது, அதனை வாட்ஸாப்ப் மூலம் தெரியப்படுத்தி, என்னை எழுத தூண்டியவர்.

- ராஜசேகர் : என்னுடைய கம்பெனியிலேயே வேலை செய்யும் இவர், எப்போது பார்க்கும்போதும் பழைய கட்டுரைகளை நினைவு கூர்ந்து, எழுதுங்கள் என்று சுவைபட உரிமையோடு சொல்லியவர்.

- ரமணி சார் : நான் சந்தித்த மனிதர்களில் மிகவும் அருமையானவர். இன்றும் இவரது உற்சாகம் என்னை எழுத தூண்டுகிறது.

- சௌந்திரபாண்டியன் : எனது குடும்பத்தில் ஒருவராக மாறியவர், எப்போதும் தொடர்பில் இருந்துக்கொண்டு என்னை எப்போது எழுத ஆரம்பிப்பீர்கள் என்று உரிமையோடு கடிந்து கொள்பவர்.

- கோவிந்தராஜ் : வாட்ஸஅப்ப் மூலம் உரிமையோடு எழுத சொல்லி என்னை உற்சாகமூட்டியவர்.

- கோபிசெட்டிபாளையம் பிரவீன், சகோதரி அர்ச்சனா ராஜேஷ், பாண்டிச்சேரி ராதா மோகன், தஞ்சாவூர் செந்தில்குமார் பாலகிருஷ்ணன், சென்னை அசோக் குமார், திருமால் அண்ணா, மனோகரன் நல்லசாமி, இன்னும் பலர்...



மீண்டும் தொடங்கும் இந்த பயணத்தில், சில இடங்களில் என்னுடைய அலுவல் காரணமாக தொய்வு ஏற்படலாம், ஆனால் மீண்டும் மீண்டு வருவேன் என்று நம்புகிறேன். இந்த கடல்பயணங்கள் மீண்டும் உற்சாகத்தோடு தொடரும் இந்த தருணத்தில், எல்லோருக்கும் என் இனிய நன்றிகள்.... உங்களுக்கு சுவையோடு எழுதுவதில் அதை காண்பிக்கிறேனே !!



Labels : Kadalpayanangal, 2019, starting, food, travel, suresh, suresh kumar

15 comments:

  1. Season 2 starts.... clap clap clap

    ReplyDelete
  2. ஆஹா மகிழ்வான செய்தி வாழ்த்துக்கள்.(மிருகம் என்கிற சொல்லுக்கு மாற்றாக தேவதை என இருக்கலாமோ ஏனெனில் அது எதிர்மறைக்கானது)

    ReplyDelete
  3. Welcome back for the second innings,we are waiting

    ReplyDelete
  4. வாருங்கள்... அன்புடன் வரவேற்கிறேன்...

    ReplyDelete
  5. Daily I'm visiting your page for such update,good luck..

    ReplyDelete
  6. Welcome back Suresh Kumar sir! I thought you have totally discontinued blogging after progressing into new portal and magazine. I feel your personality is best displayed here (in kadalpayanangal) only. Please continue to introduce more unique foods of Tamilnadu.

    ReplyDelete
  7. Ungal blog bookmark seithu vaarathil irandu moondru muraiyaavathu puthithaaga ethaavathu eluthiyirukireergalaa ena paarthu vanthen. Meendum elutha pogiren endru solli iruppathu miguntha magizhchi alikkirathu.

    ReplyDelete
  8. Welcome Back Sir, really missed you a lot. Please never stop writing. I am a big fan of your travels

    ReplyDelete
  9. தெய்வமே ரொம்ப நன்றி நீங்கள் திரும்ப எழுத தொடங்கியமைக்கு வாழ்த்துக்கள் அதோடு பீட்லியில் feedly தெரியுமாறு செய்து விடுங்கள் நணப்ரே

    ReplyDelete